Global Business News

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,147
Likes
3,170
Location
India
சர்வதேச சந்தையில் முதலிடம் பிடித்த ஜியோபோன்

சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.



ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளி பெண் நியமனம்





அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சிஎஃப்ஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவரா (39) முதல் முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திவ்யா சூர்யதேவரா நிறுவனத்தின் கார்ப்பரேட் பைனான்ஸ் பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். ஜெனரல் மோட்டார்ஸின் தலைமை நிதி அதிகாரியாக தற்போதுள்ள சக் ஸ்டீவன்ஸ் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இவரைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு திவ்யா சூர்ய தேவரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிறந்த சூர்யா தேவரா, சென்னைப் பல்கலைக் கழகத்தில் வர்த்தகப் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,801
Location
Germany
ஃபைன் ஆர்கானிக்ஸ் ஐபிஒ இன்று முதல் ஆரம்பம்!

ஃபைன் ஆர்கானிக்ஸ் (Fine Organics) ஐபிஒ இன்று தொடங்கி 22-ம் தேதி வரையில் நடக்கிறது.

ஃபைன் ஆர்கானிக்ஸ் (Fine Organics) ஐபிஒ இன்று தொடங்கி 22-ம் தேதி வரையில் நடக்கிறது. ஃபைன் ஆர்கானிக்ஸ் (Fine Organics), சிறப்புத் தன்மைகொண்ட கெமிக்கல் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம், பிளாஸ்டிக், பெயின்ட், இங்க், அழகுசாதனப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களைத் தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனம், 387 வகையான பொருள்களைத் தயாரிக்கிறது. அதன் வருவாயில் 73 சதவிகிதத்தை பிளாஸ்டிக் வர்த்தகப் பிரிவிலிருந்தும், மீதமுள்ளவற்றை உணவுப் பொருள்கள் தயாரிப்பு வர்த்தகத்தின் மூலமும் பெறுகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கெமிக்கல்களைத் தயாரிக்க பல்வேறு மூலப்பொருள்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத கால இதன் நிகர விற்பனையில், மூலப்பொருள்கள் வாங்கியதற்கான செலவு 64 சதவிகிதமாக உள்ளது.

இந்த நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாடு நிறுவனங்களிடம் இருந்து மூலப்பொருள்களை வாங்குகிறது. மூலப்பொருள்களின் விலையில் மாற்றம் ஏற்படும்போது, அது நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்த நிறுவனத்துக்கு 603 நேரடிப் பயனாளிகள் இருக்கின்றனர். இதில் குறிப்பாக, நுகர்வோர் பொருள்கள் தயாரிக்கும் இந்துஸ்தான் யூனி லீவர், பார்லே போன்றவை வாடிக்கை நிறுவனங்களாக உள்ளன. மேலும், 67 நாடுகளில் 127 விநியோகதஸ்கர்கள் உள்ளனர்.

ஃ பைன் ஆர்கானிக்ஸ் நிறுவனத்துக்கு மும்பை அருகே மூன்று தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள், ஆண்டுக்கு 64,300 டன் கெமிக்கல்ஸ் தயாரிக்கும் திறன்கொண்டவை.

இந்த நிறுவனத்தின் வருவாய் 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 5 ஆண்டுகளில் 9.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 30 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 9 மாத காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் நிகர லாபம் முறையே ரூ.581 கோடி, ரூ.61 கோடியாக உள்ளன. இந்த நிறுவனம், 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு ஒரு பங்கிற்கு ரூ.30 டிவிடெண்ட் ஆக வழங்கியுள்ளது. 2017 -ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒன்பது மாதங்களில், இந்த நிறுவனம் பங்கிற்கு ரூ.45 டிவிடெண்டாக அறிவித்தது.

ஃபைன் ஆர்கானிக்ஸ் நிறுவனம் இன்று பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்குகிறது. இன்று தொடங்கி மூன்று நாள்களுக்கு பங்கு வெளியீடு நடைபெறுகிறது. இந்த நிறுவனம் விலை நிர்ணயத்தின் மேல் இறுதியில் ரூ.2,400 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.