Granny remedies - பாட்டி வைத்தியம்

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1
Paati-Vaithiyam.jpg


* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.


 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,091
Likes
106,984
Location
Atlanta, U.S

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#5
பெண்கள் மருத்துவம்

கர்ப்பிணிகளுக்கு

1. கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும்.

2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க
3. சுத்தமான திடம் கோரோசனையைப் பாலில் கலக்கி காய்ச்சிய பின் சாப்பிட்டு வந்தால் நன்கு பால் சுரக்கும். இதை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், பலமும் பெரும்.

4. முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சமைத்து உண்டு வந்தால் தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்.

கண் உறுத்தல்
5. குங்குமப் பூவை தாய்ப்பாலில் இழைத்து கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்ணில் நீர் வருவது, கண் உறுத்தல் முதலான கண் வியாதி குணமாகும்.


வாய்ப்புண்

1. சுமார் இருபது மணத்தக்காளி இலையை காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு அத்துடன் ஓரு டம்ளர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

2. அகத்திக் கீரையுடன் தேங்காய், பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதை உணவுடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப் புனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதுடன் கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

பேன் தொல்லை

3. பாகற்காயிலிருந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற விட வேண்டும். பிறகு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.


இடுப்பு பிடிப்பு
இடுப்புப் பிடித்துக்கொண்டால் உட்காருவதற்கும், எலும்புவதற்கும் கஷ்டமாக இருக்கும். முருங்கைக் கீரையுடன் உப்பைச் சேர்த்து சாறு எடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்பு பிடிப்பு விட்டுப் போகும். மூன்று வேலை இதைச் செய்தால் நல்ல குணம் தெரியும்.


வயிற்றுப் பூச்சி
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். பூச்சிகளை வெளியேற்ற வேப்பிலையை இடித்துச் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து வேளைக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.


சீதபேதி குணமாக
பசும்பாலை சுண்டக் காய்ச்சி அதில் மூன்று ஸ்பூன் கசகசாவை அரைத்துக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இதில் 50 கிராம் நெய் சேர்த்து மூன்று வேலை சாப்பிட்டால் சீதபேதி நின்றுவிடும்.

தலைவலி
இஞ்சிச் சாறு 25 மில்லியுடன் 250 மில்லி பால் கலந்து அடுப்பில் வைத்து நன்றாகத் காய்ச்ச வேண்டும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். தலைவலிக்கான அறிகுறி இருக்கும் போதே இதைச் சாப்பிடுவதால் முன்கூட்டியே தலைவலி வராமல் தடுக்கலாம்.


வயிற்றுப் போக்கு
வசம்பைத் தீயில் சுட்டு கரியாக்கி தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும்.


பித்த வெடிப்பு
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் சுண்ணாம்பைச் செர்த்துகுழைக்க வேண்டும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகி விடும்.

உடல் சூடு தணிய
அதிமதுரம் 25 கிராம் எடுத்துக்கொண்டு வெந்நீர் விட்டு அரைத்துத் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட உடல் சூடும் தணிந்து விடும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை உட்கொள்ள வேண்டும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#6
பத்தியத்தின் பெருமை!

ஒரு நோய் நீங்குவதற்கு, சீரான சூழ்நிலையில், உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச் சாப்பிடும்போது, அந்த நோய் வந்ததற்கான காரணங்களைத் தவிர்த்து, மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு மற்றும் செயல்களில் கொண்டுவரும் மாற்றத்தால், மருந்து தன் சக்தியைச் சரியாகக் காட்டி, நோயிலிருந்து விரைவில் நம்மைவிடுவிக்கிறது. பத்திய முறைகளைக் கையாளாமல், மருந்தை மட்டும் சாப்பிட்டால், அதை அதிக அளவில் அதிக நாட்கள் சாப்பிட வேண்டிய கட்டாயநிலை ஏற்படுகிறது. சில சமயம் மருந்தினால் ஏற்பட வேண்டிய நல்ல பலன்களும் கிடைக்காமற் போகக் கூடும். சுருக்கமாகச்சொன்னால் மருந்தின் முழு வீரியத்தையும் உடல் ஏற்பதற்குப் பத்தியம் உதவுகிறது. மேலும் மருந்தின் குணம் முழுவதையும் உடல் ஏற்று, நோயை அகற்ற வழி செய்கிறது.

நம் முன்னோர் நோய் வந்துவிட்டால் உணவு, உடை, பாவனைகளில் அதற்கு எதிரான மாற்றங்களைச் செய்து, மருந்தை மிகவும் குறைந்த அளவில் மட்டுமே சாப்பிட்டனர். இயற்கையை மதித்து அவர்கள் செயல்பட்டதால், மருந்துகளால் பின்விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை அப்படியில்லை. "நான் காபி, டீ சூடாகத்தான் அருந்துவேன். காரம், புளி, உப்புதான் அதிகம் சாப்பிடுவேன். என் ஆபிஸ் சூழ்நிலை அப்படி. ஆனால் என் குடல் அல்சர் நோயை நீக்கித் தாருங்கள்' என்று கூறி மருத்துவனின் கடமையைப் பெரிதாக்குகின்றனர். ஆயுர்வேதம் இந்த விஷயத்தை, நோயுற்றவன் பத்தியமிருந்தால் மருந்தால் ஆவதென்ன?நோயுற்றவன் பத்தியமில்லாதிருந்தால் மருந்தால் ஆவதென்ன? என்று கேட்கிறது. அதாவது பத்தியமிருந்தால் மருந்தின் தேவையே இல்லாமல் இயற்கையே தன்னைச் சீரமைத்துக் கொள்ளும். பத்தியம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டு, நோய்க்கான மருந்தைத் தேடினால், உடல் நோயிலிருந்து விடுபடும் சூழ்நிலை ஏற்படாது. மருந்து எத்தனை சாப்பிட்டாலும் பயன் தராததால், மருந்தால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதையே மருந்தால் ஆவதென்ன? என்று வினவுகிறது.

நோயுற்றவன் இன்ன இன்ன உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்று கூறி அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதால் உணவுக் குழாய், உணவை ஏந்திச் செல்லும் ரசாயனங்கள், ரத்தக் குழாய்கள் முதலியவை சரியாக இயங்க உதவி அவற்றுக்குக்கேடு விளைவிக்காதவண்ணம் பாதுகாப்பதே பத்தியம் எனப்படுகிறது. அதற்கு மாறுபட்டது அபத்தியம். பத்திய உணவைச் சாப்பிடுவதால் உடல், தான் இழந்த சமநிலையை அடைந்து, அதேநிலையில் நிலைத்து, சமநிலை இழக்காது திடப்படுத்திவிடுகிறது.

ஒரு சிறு உதாரணத்தினால் பத்தியத்தின் பெருமையை விளக்கலாம். பிசுபிசுப்புடன் நீர் வெளியேறி, எரிச்சலும் அரிப்பும் சேர்ந்து ஓர் உபாதையை தோலில் ஒருவருக்கு ஏற்படுத்தினால், அதைக் குணப்படுத்த ஆயுர்வேத க ஷாய மருந்தாகிய படோல கடு ரோஹிண்யாதி, நல்ல மருந்தாகும். ஆனால் அதே நபர், கெட்டியான புளித்த தயிர் சாதத்தை நல்லெண்ணெயில் கடுகு தாளித்துச் சாப்பிட்டால், நோய் குணமாவதில்லை. அதற்குக் காரணம் புளித்த தயிர், குடலில் பிசுபிசுப்பை அதிகரித்து, தோலின் வழியாக வெளியேற்றுவதால், க ஷாயத்திற்கும் தயிருக்கும் மட்டுமே சண்டை நடக்குமே தவிர, க ஷாயத்திற்கும் நோய்க்கும்நடப்பதில்லை. புளித்த தயிரின் மேலுள்ள ஆடையை அகற்றி, அதில் அரைப் பங்கு தண்ணீர் சேர்த்து, மத்து வைத்துக் கடைந்து,வெண்ணெய் அகற்றி, அந்த வறண்ட மோரை அவர் உணவாக ஏற்றால், உட்புறக் குழாய்களின் பிசுபிசுப்பை அகற்றி, வறளச்செய்கிறது. இங்கு க ஷாய மருந்தின் வீர்யம் விரைவாக உட்புறக் குழாய்களின் வழியாக,தோலில் சேர்க்கப்பட்டு நோயை எளிதாகக் குணப்படுத்திவிடும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#7
உடல் அரிப்பு, வியர்வை நாற்றம் தீர... மருத்துவ டிப்ஸ்

அருகம்புல்லை ஒன்றிரண்டாக நசுக்கி, ஒரு கைப்பிடி எடுத்து 10 மிளகு சேர்த்து 4 டம்ளர் நீர் ஊற்றி 1 டம்ளராக வற்ற வடித்து, இளஞ்சூட்டில் பனங்கற்கண்டு சேர்த்துத் தினம் இருவேளை பருகிவர, இரத்தம் சுத்தமாகும்; உடல் அரிப்பு, நமைச்சல்,வியர்வை நாற்றம், வெள்ளை ஆகியன தீரும்.
(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#8
* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும்
.
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.

* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.

* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.

* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,368
Location
Chennai
#10
“ நீர்க்கடுப்புக்கு

சீரகம்

சோம்பு

வெந்தயம்

சின்ன வெங்காயம்

கொத்தமல்லி விதை

இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து அரைச்சு மோர் அல்லது தயிர்ல கலந்து குடிக்கலாம். இல்லாட்டியும் இதையெல்லாம் பொடியாக்கி தேனிலும், நெய்யிலும் கலந்து சாப்பிடலாம். நீர்க்கடுப்பு உடனே குணமாயிடும்...”

“வேனல் காலத்துல நெறயா தண்ணி குடிக்கணும்...”
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.