Grannys Beauty Tips - பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள்..

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க…


உங்கள் பாட்டி தனது பழம்பெருமை குறித்து சொன்னால் சற்று நேரம் காது கொடுத்துக் கேளுங்கள். ஏனெனில் அவர் சொல்வது அனைத்தும் உண்மை. அழகிய சருமம், கூந்தல், நகங்களை பராமரிக்க செலவு அதிகமாகும். அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆயினும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட அழகுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இவை முழுவதும் முழுக்க முழுக்க இயற்கையான மூலிகைகளால் ஆனவை. பளபளக்கும் கூந்தல், ஆரோக்கியமான ஸ்கால்ப், பொலிவற்ற சருமம் ஆகியவற்றைப் பெற சில பன்னாட்டு அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கண்களில் கருவளையத்தை நீக்க வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்துப் பார்த்திருப்பீர்கள். கருவளையத்தை நீக்க எண்ணற்ற க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கருவளையங்கள் நீங்குவது கனவு தான் எனக் கருதுகிறீர்களா? அல்லது அவற்றை முயற்சி செய்து பார்க்கத்


துணிவில்லையா? அப்படியானால், ஸ்பானிஷ் பெண்களைப் பின்பற்றுங்கள். மெல்லியதாக சீவிய உருளைக்கிழங்கைப் பயன்படுத்துங்கள். அதிலும் அவற்றை கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். கண்களுக்குக்ழ் உள்ள இரத்த நாளங்களை மென்மையாக்கி, கருவளையம் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று உண்டென்றால் அது செல்லுலைட் தான். செல்லுலைட்டை நீக்க முடியாது என்று தான் பலர் நம்புவார்கள். பிரேசில் நாட்டுப் பெண்கள் தமது உடலில் மணலைக் கொண்டு தேய்த்துக் கொள்வார்கள். செல்லுலைட்டைப் பொருத்தவரையில், டிரை பிரஷ் செய்வது மிகச்சிறப்பானது. இது இயற்கையானதும் கூட. எனவே செல்லுலைட்டுக்கு குட்பை சொல்ல வேண்டுமென்றால், மணலைத் தேய்த்துக் கொள்ளுங்கள்.

அழகுபடுத்திக் கொள்வதற்கு ஏராளமாக செலவு செய்ய வேண்டுமென்பதில்லை. அதிக நேரம் செலவிட வேண்டுமென்பதில்லை. நமது சமையலறையிலுள்ள எளிய சமையல் பொருட்களே நம்மை நாமே, அழகுபடுத்திக் கொள்ள உதவப் போதுமானவை. கிரேக்க மற்றும் இத்தாலியப் பெண்கள், வெடிப்புற்ற உதடுகளை சரி செய்ய ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். வறண்ட மற்றும் அரிப்பூட்டும் சருமத்தைக் குணப்படுத்த இது மிகச்சிறந்த தீர்வாகும். மேலும் இது சருமத்தையும் உதடுகளையும் கண்டிஷன் செய்து பளபளக்கவும் செய்யும். முதுமையைத் தள்ளிப் போடும் தன்மை வாய்ந்த சருமம் வேண்டுமா?

சீனர்கள் செய்வதைப் போல வெள்ளைத் தேநீர் பருகுங்கள். பொடோக்ஸ், ஃபில்லர் மற்றும் கொலாஜன் போன்ற ஃப்ரீ ரேடிக்கல்களைப் பற்றிய கவலையே பட வேண்டாம். பொடுகினால் அவதிப்படுகிறீர்களா?

நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய்யை சில சொட்டுக்கள் கலந்து பயன்படுத்துங்கள். பிறகு பொடுகுக்கு குட்பை தான். இருந்தாலும் நறுமணமிக்க ஆயிலைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வேண்டுமானால் ஸ்கால்ப்பில் சில சொட்டுக்கள் விட்டு மசாஜ் செய்யுங்கள். ஸ்காண்டிநேவியன் பெண்கள் மாசு மருவில்லாத பளபளப்பான சருமத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஏராளமான ஊற்று நீரைப் பருகுவார்கள். அவ்வப்போது முகத்தினையும் நீரால் கழுவிக் கொள்வார்கள். சருமப் பராமரிப்புக்கு நீர் ஒரு முக்கியமான காரணியாகும். குளிக்கும் போது நீராவியால் முகத்தினை சுத்தப்படுத்துவது, முகத்திலுள்ள அடைபட்ட சருமத் துவாரங்களை திறக்க உதவும். அத்துடன் துவாரங்களில் இருக்கும் மாசுக்களையும் நீக்கும். ஆகவே முகத்தில் நீராவிப் படுமாறு செய்து பின் குளிர்ந்த நீரால் அடிக்கவும். அதிலும் குளிர்ந்த நீரால் இருபது முறை அடிப்பது நல்ல பலனைத் தரும்.

டொமினிகன் ரிபப்ளிக்கில் உள்ள பெண்கள் தமது நகங்களை வலுவூட்ட பின்பற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

பூண்டு! ஆம். பூண்டு தான் நகங்களை வலிமைப்படுத்தும் இயற்கைப் பொருளாகும். அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா? பூண்டினை உரித்து நசுக்கி நீங்கள் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் பாட்டிலில் போட்டு விடுங்கள். ஏழு அல்லது எட்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு இந்த நெயில் பாலிஷினை உங்கள் நகத்தில் பூசிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஒரு மாதிரி வாசனை வந்தாலும், உடையாத நகத்தினை குறைந்த செலவில் பெறும் சிறப்பான முறை இது.
 
Last edited:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
very interesting and useful information. thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#4
பகிர்வுக்கு நன்றி
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.