Greed of Schools & Pride of Parents affects the students-பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரி&#298

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரின் தற்பெருமை!

வட சென்னையின் பிரபலமான தனியார் பள்ளி அது. அங்கு 9ம் வகுப்பு படிக்கும் 20க்கும் அதிக மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு அவசரக் கடிதம் வந்தது. பதறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடிய பெற்றோருக்கு கூல்ட்ரிங்க்ஸ் தந்து உபசரித்த பள்ளி நிர்வாகம், ஒவ்வொரு பெற்றோரையும் தனித்தனியாக அழைத்தது. ‘உங்கள் மகனின் கல்வித்திறன் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை...’‘எழுத்தில் பிரச்னை உள்ளது...’
‘படிப்பில் பிரச்னை உள்ளது...’
‘சரியான நேரத்துக்கு வருவதில்லை...’


இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி மாற்றுச் சான்றிதழை வாங்கிச் செல்லுங்கள் என்று சொன்னது. கொதித்துப்போன பெற்றோர், அங்கேயே ஒன்றுகூடி தர்ணா செய்ய, சரி போகட்டும்... சிறப்பு வகுப்பு வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மாதம் 700 ரூபாய்... என்று சொல்ல, அழுதுவிட்டு வந்தார்கள் பெற்றோர்.

தி.நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது இதை விட அபத்தம். தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 5ம் வகுப்பில் இருந்து இப்போது வரை அந்தப்
பள்ளியில்தான் படிக்கிறான். 8ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று 9ம் வகுப்பில் நுழைந்த சில மாதங்களில், அவன் அம்மா தமிழ்ச்செல்விக்கு அழைப்பு. சில பாடங்களில் அவன் தேர்ச்சி பெறவில்லை, உங்கள் பையனுக்கு ஐக்யூ டெஸ்ட் செய்ய வேண்டும் என்றார்கள். உடனடியாக ஒரு உளவியல் மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றார் தமிழ்ச்செல்வி. கொஞ்சம் சத்துக்குறைபாடு இருக்கிறது. அதுதான் எழுதுவதில் பிரச்னையாக இருக்கிறது.

மற்றபடி ஆல்ரைட் என்று சர்டிஃபிகேட் கொடுத்தார் மருத்துவர். அதைப் பள்ளியில் சமர்ப்பித்தார் தமிழ்ச்செல்வி. ஆனாலும், உங்க பையனுக்கு ஸ்பெஷல் கிளாஸ் அவசியமா இருக்கு. ஸ்பெஷல் டீச்சர்ஸ் கிளாஸ் எடுப்பாங்க. மாசம் 1,000 ரூபாய் ஃபீஸ் என்று சொன்னார்கள். தமிழ்ச்செல்வி ஏற்றுக்கொண்டார். சில மாதங்கள் கழித்து, மீண்டும் தமிழ்ச்செல்வியை அழைத் தது பள்ளி நிர்வாகம். இந்த முகவரியில் டிஸ்லெக்ஷியா மருத்துவ முகாம் நடக்கிறது. உங்கள் பையனை அழைத்துச் சென்று சோதித்து சான்றிதழ் பெற்று வாருங்கள் என்றார்கள். பதற்றத்தோடு மகனை அழைத்துச் சென்றார் தமிழ்ச்செல்வி.

பல்வேறு சோதனைகளை செய்து பார்த்த நிபுணர், நோ பிராப்ளம் என்று சான்றிதழ் தந்து விட்டார். அதையும் பள்ளி யில் சமர்ப்பித்தார் தமிழ்ச்செல்வி.
சில வாரங்கள் கழித்து மீண்டும் தமிழ்ச்செல்விக்கு அழைப்பு. சரியான நிபுணரால் அந்தச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. நாங்கள் சொல்கிற சோதனைக்கூடத்துக்கு பையனை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்கள் தருகிற சான்றிதழை வாங்கி வாருங்கள் என்றார்கள். இனி நடந்ததை தமிழ்ச்செல்வியே சொல் கிறார்.

“அவங்க சொன்ன லேப்புக்குப் போனேன். லேப் மாதிரியே தெரியலே. சின்ன அறைதான்... ஒரே ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். போனவுடனே, பள்ளி பேரைச் சொல்லி, ‘அங்கிருந்து அனுப்பினாங்களா’ன்னு கேட்டுச்சு அந்தப் பொண்ணு. ‘ஆமா’ன்னு சொன்னேன். பையனை எந்த சோதனையும் செய்யாம, ஒரு பேப்பர்ல ரிசல்டை எழுதிக் கொடுத்திடுச்சு. அதை ஸ்கூல்ல கொண்டு போய் கொடுத்தவுடனே, உங்க பையனுக்கு கற்றல் குறைபாடு இருக்கிறதா ரிப்போர்ட் வந்திருக்கு. அதனால வேற எதாவது ஸ்பெஷல் ஸ்கூல்ல சேத்துக்குங்க. இங்கே வச்சிருக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ரொம்பவே பதற்றமாகிடுச்சு... ‘எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க’ன்னு சொல்லிட்டு, வேறொரு எக்ஸ்பர்ட்டுக்கிட்ட டெஸ்ட் பண்ணினப்போ, அவங்களும் ‘எந்தப் பிரச்னை யும் இல்லை’ன்னு சொல்லிட்டாங்க. அவங்க கொடுத்த சர்டிஃபிகேட்டையும் ஸ்கூல்ல கொடுத்தேன்.

அதை வாங்கிப் பார்க்கக் கூட இல்லை. உங்க பையனை இங்கே வச்சுக்க முடியாது... டி.சி.யை வாங்கிட்டுப் போயிடுங்கன்னு உறுதியாச் சொல்லிட்டாங்க.
அஞ்சு வருஷமா இங்கேதானே படிக்கிறான். அப்போவெல்லாம் அவனுக்கு கற்றல் குறைபாடு இல்லையான்னு கேட்டப்போ, அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நைன்த்ல பையனை வச்சுக்க முடியாது. எங்க ரிசல்ட் பாதிக்கும்னு சொல்றாங்க. பையன்கிட்ட விசாரிச்சப்போ, என்னை மாதிரியே நாலைஞ்சு ஸ்டூடன்டை வீட்டுக்கு அனுப்ப முயற்சி பண்றாங்கம்மான்னு சொன்னான். அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுச்சு... 10ம் வகுப்புல 100 சதவிகித ரிசல்ட்டுக்காக சரியா படிக்காத மாணவர்களை கழிச்சுக் கட்டுறாங்கன்னு... நல்லாப் படிக்கிற பசங்களை வச்சுக்கிட்டு 100 சதவிகித ரிசல்ட் காட்டுறதுல என்ன சார் சாதனையிருக்கு?’’ - கண்கலங்கக் கேட்கிறார் தமிழ்ச்செல்வி.

இப்படித்தான் இருக்கிறது பல தனியார் பள்ளிகளின் செயல்பாடு. சேர்க்கும்போதே, சுமாராகப் படிக்கும் மாணவர் களை கழித்துக் கட்டி, நன்றாக படிக்கும் மாணவர்களைச் சேர்ப் பது... ராப்பகலாக அவர்களைக் கசக்கிப் பிழிந்து, மனப்பாடம் செய்ய வைத்து 100 சதவிகிதம் ரிசல்ட் காட்டுவது... அதையே பெரிதாக விளம்பரம் செய்து பெற்றோரை ஈர்ப்பது... இதுதான் பெரும்பாலான தனியார் பள்ளிகளின் வணிக யுத்தி.

100 சதவிகிதம் தேர்ச்சி என்ற தாரக மந்திரம் பெற்றோரை வசீகரித்து இழுக்கிறது. முதல்நாள் இரவே, கொசுவர்த்தி, போர்வை சகிதம் பள்ளியின் வாயிலில் படுத்து, காத்திருந்து விண்ணப்பம் வாங்கத் தூண்டுகிறது. ஏப்ரல் மாதம்தான் விண்ணப்பம் வழங்க வேண்டும் என்று அரசு தெளிவாக உத்தர விட்டும் கூட அதை சிறிதும் மதிக்காமல் பிப்ரவரி, மார்ச்சிலேயே விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவித்து விடுகின்றன பல பள்ளிகள். பள்ளி வாசலிலேயே ராத்தங்கி விண்ணப்பம் பெறும் பெற்றோரின் முகத்தை பத்திரிகைகளில் பார்க்க பரிதாபமாக இருக்கிறது.

மற்ற பள்ளிகளை விட தங்கள் பள்ளி பெயரெடுக்க வேண்டும், தேர்ச்சியில் முதன்மை பெறவேண்டும் என்ற வெறியில், மாணவர்களை படிப்பாலும் எழுத்தாலும் மூச்சுத் திணற வைத்து அவர்களின் சிந்தனையின் மீது அதிகொடூரத் தாக்குதலை நிகழ்த்துகின்றன சில தனியார் பள்ளிகள். துரதிர்ஷ்டவசமாக, பெற்றோர் விரும்பியே தங்கள் குழந்தை களை அந்தப் பள்ளிகளில் தள்ளுகிறார்கள்.

உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத துயரம் இந்தியாவில்... குறிப்பாக தமிழகத்தில். ஏற்றத்தாழ்வற்ற சம சமுதாயத்தையும், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தும் அரசியல் சாசனத்தைதின் அடிப்படையில் ஆளப்படுகிற இந்நாட்டில்தான் ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற ஏற்றத்தாழ்வு. இங்குதான் கல்விக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

தமிழகத்தில் ஏறக்குறைய 11 ஆயிரம் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு ஆண்டு இண்டு இடுக்கு விடாமல் புதிது புதிதாக பள்ளிகள் முளைத்துக் கொண்டும் இருக்கின்றன. சிறு கட்டிடத்தில் தொடங்கப்படுகிற தனியார் பள்ளிக்கூடங்கள் சில வருடங்களிலேயே மாட மாளிகைகளாகி விடுகின்றன. அரசின் விதிமுறைகள், கண்காணிப்புகள், ஆணைகள் எதுவுமே இவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் விருப்பத்துக்கேற்ப பாடத்திட்டம், விதிமுறைகள், வகுப்பறைகள்... யாரும் கேள்வி கேட்கமுடியாது. குறிப்பாக பெற்றோர்...

அடிமைகளைப் போல அடங்கிப் போகத்தான் வேண்டும். “தனியார் பள்ளிகளின் ஆதிக்கம்... அதை நாடி ஓடுகிற, இரவு பகல் பார்க்காமல் பள்ளியின் முகப்பிலேயே
படுத்துறங்கி காத்திருந்து பிள்ளைகளைச் சேர்க்கிற பெற்றோரின் மனோபாவம், அரசுப்பள்ளிகளின் நிலை... இவை அனைத்துமே ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. பல கோணங்களில் இவற்றைப் பார்க்க வேண்டும். பிரபலமான ஒரு பள்ளியில் தம் பிள்ளையைச் சேர்ப்பதில் பெற்றோரின் தற்பெருமை முன்னணியில் நிற்கிறது.

என் பிள்ளை இந்தப் பள்ளியில் படிக்கிறான் என்று சொல்வதில் அவர்களுக்குப் பெருமை. இந்தத் தலைமுறை ஸ்டேட்டஸ் சிம்பல் நாடி அலைகிற தலைமுறையாக இருக்கிறது. அது குழந்தைகள் விஷயத்திலும் எதிரொலிக்கிறது. தனியார் பள்ளிகள் பெரும் முதலீட்டை விளம்பரங்களில் கொட்டுகின்றன. 100 சதவிகித தேர்ச்சி என்ற மாயையை முன்னிறுத்தி செய்யப்படும் அந்த விளம்பரங்கள் பெற்றோரை மயக்குகின்றன. அரசாங்கப் பள்ளிகள் மீதான அவநம்பிக்கை அந்த வணிகத்தை முக்கியத்துவப்படுத்துகிறது.

இன்று மனித அறங்கள் மீதான நம்பிக்கை பொய்த்துக்கொண்டே வருகிறது. வாழ்க்கைமுறை அலட்சியமாகி விட்டது. பணம் இன்று எளிதாகக் கிடைக்கிறது. அது எல்லா நியாயங்களையும் மாற்றி விட்டது. பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பதில் இந்தத் தலைமுறை தடுமாறுகிறது. பெரும் பணத்தைக் கொட்டி தங்கள் பிள்ளை வேர்வை சிந்தக்கூடாது என்று ஏ.சி. வகுப்பறை இருக்கிற பள்ளிகளில் சேர்க்கிறார்கள். தனி டாய்லெட் வேண்டும் என்கிறார்கள். கதவு, ஜன்னல் சாத்தப்பட்ட ஒரு சிறு ஏ.சி. அறைக்குள் வெளியுலக ஞானமோ, சமூக அறிவோ இல்லாமல் தங்கள் குழந்தை வதங்குவதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு நேரமில்லை. ஐ.ஐ.டி., எம்.பி.ஏ., அண்ணா பல்கலைக்கழகம், வருட சம்பளம் 20 லட்சம் ரூபாய் என எல்கேஜி யில் சேர்க்கும்போதே குழந்தைக்கான எதிர்காலத்தை தீர்மானித்து விடுகிறார்கள். குழந்தைக்கு எதில் விருப்பம் இருக்கிறது, எதில் திறமை இருக்கிறது என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.

தங்கள் கனவை பிள்ளைகளின் மீது திணிப்பதும் ஒரு வகையில் வன்முறைதான். ‘படி, படி’ என்று குழந்தைகளை வதைத்து, வீட்டையும் பள்ளிக் கூடமாக்கி மனப்பாடம் செய்யும் எந்திரமாக அவர்களை மாற்றி விடுகிறார்கள். அப்படி மனப்பாடம் செய்து நிறைய மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களால் உயர்கல்வியில் முதல் செமஸ்டரையே தாக்குப்பிடிக்க முடியவில்லை. கல்விச் செலவை ஒரு முதலீ டாகக் கருதுகிறது இன்றைய தலைமுறை. 30 வயதில் படித்து வேலைக்குச் சென்று வட்டியோடு அதை திருப்பி எடுத்து விடலாம் என்கிற கனவு. எங்கள் காலத்தில், குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்த பையன், பத்தோ, பதினொன்றோ படித்த கையோடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்குப் போய் சம்பாதித்து அக்கா, தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைத்து, தம்பியைப் படிக்க வைத்து, அப்பாவுக்கு வைத்தியச் செலவு செய்து குடும்பத்தையே கட்டிக் காத்ததெல்லாம் நடந்தது.

இன்று, படிக்கிற காலத்திலேயே அண்ணன்-தம்பிகளுக்குள் ஒற்றுமை இல்லை. சம்பாதிக்க ஆரம்பித்ததும் பெற்றோரையே தேவையில்லாத பொருட்களாக கருதத் தொடங்கி விடுகிறார்கள். உறவுகளை மதிப்பதில்லை. மன உளைச்சல், கோபம் என இந்த தலைமுறை ஏகப்பட்ட சங்கடங்களை சுமந்துகொண்டே திரிகிறது.

அந்தக்காலக் கல்வி அன்பு, ஒற்றுமை, நம்பிக்கை, மனிதாபிமானம் அனைத்தையும் பாடத்தின் வழியாக போதித்தது. இன்று தானென்ற அகங்காரத்தையும் வன்மத்தையும்தான் கல்வி போதிக்கிறது. சமூகத்தின் அகப்புறங்களை கற்றுத்தருவதற்குப் பதிலாக ஸ்டேட்டஸ் வாழ்க்கையைத்தான் கற்றுத் தருகிறது. அதனால் முதியோர் இல்லங்கள் அதிகமாகி வருகின்றன.

அல்லது படிப்பை முடித்துவிட்டு திருமணம் முடித்து மனைவியையும் அழைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு கிளம்பி, வீட்டையே முதியோர் இல்லமாக மாற்றி விடுகிறார்கள். தன்னம்பிக்கை இல்லாத, போட்டியை எதிர்கொள்ளத் திராணியற்ற பலமில்லாத ஒரு தலைமுறையைத்தான் தனியார் பள்ளிகளும், வரம்புக்குள் வராத நம் கல்வி முறையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய போக்கு எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை... என்று வருந்துகிறார் கல்வியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான பத்மாவதி விவேகானந்தன்.

100 சதவிகித தேர்ச்சியை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்யும் பள்ளிகளின் பின்னணி பெற்றோருக்குத் தெரிவதில்லை. பணத்தைக் கொட்டிக் கொடுத்து, பிள்ளையை சேர்த்துவிட்டால் முடிந்ததென்று நினைக்கிறார்கள். 9ம் வகுப்பும் 10ம் வகுப்பும் தனித்தனி வகுப்பல்ல. ஒரு கோர்ஸ்... ஒரு குறிப்பிட்ட பாடம் இரண்டு வகுப்பிலும் பாதி பாதி இடம் பெற்றிருக்கும். 11ம் வகுப்பும் 12ம் வகுப்பும் கூட அப்படித்தான். தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு பாடங்களை நடத்துவதே இல்லை. கல்வி யாண்டின் முதல் 3 மாதங்கள் மட்டும் 9, 11ம் வகுப்புப் பாடங்களை நடத்துவார்கள். அதன்பிறகு 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பாடங்கள்தான். ஒரே வகுப்பை இரண்டாண்டுகள் படிக்கச் செய்தே பெரும்பாலான பள்ளிகள் 100 சதவிகிதத்தை எட்டுகின்றன.

9ம் வகுப்பையும் 11ம் வகுப்பையும் படிக்காமல் +2 தேர்ச்சி பெறும் மாணவர்கள் அதன் பலனை உயர்கல்வியில் அனுபவிக்கிறார்கள். பொறியியல், மருத்துவம் எதுவாகினும் முதலாமாண்டு பாடங்கள் 9, 11ம் வகுப்பு பாடங்களையும் பின்பற்றியே அமைகின்றன. அதை புரிந்துகொள்ள முடியாமல்தான் நிறைய மாணவர்கள் அரியர் வைக்கிறார்கள்.

100 சதவிகித ரிசல்ட் சாதாரணமாக கிடைத்து விடுவதில்லை. குழந்தைகளின் இயல்பைச் சிதைத்து, அவர்கள் உறக்கத்தை, உணவை, மகிழ்ச்சியைத் தின்றே கிடைக்கிறது. அதுவும் விடுதிக் குழந்தைகள் பாவம்... அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுப்பிப் படிக்கச் செய்கிறார்கள். இரவு 11 மணி வரை பாடப்புத்தகங்கள் அவர் களை முடக்கிப் போடு கின்றன.

100 சதவிகிதம் தேர்ச்சி என்ற தாரக மந்திரம் பெற்றோரை வசீகரித்து இழுக்கிறது. முதல்நாள் இரவே, கொசுவர்த்தி, போர்வை சகிதம் பள்ளியின் வாயிலில் படுத்து, காத்திருந்து விண்ணப்பம் வாங்கத் தூண்டுகிறது.

கல்விச் செலவை ஒரு முதலீடாகக் கருதுகிறது இன்றைய தலைமுறை. 30 வயதுக்குள் படித்து முடித்து, வேலைக்குச் சென்று வட்டியோடு அதை திருப்பி எடுத்து விடலாம் என்கிற கனவு...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,164
Likes
83,728
Location
Bangalore
#2
Re: Greed of Schools & Pride of Parents affects the students-பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரி&

மிகவும் உண்மையான கருத்து .

ஆனால் இந்த 100 % Result என்கிற தாரக மந்திரம் , அரசுப் பள்ளிகளையும் விட்டு வைக்கவில்லை .

நேற்று , ஒரு டவுனில் , ஒரு அரசுப் பள்ளியில் , இதே காரணத்துக்காக, 5 மாணவர்களை பத்தாம் வகுப்பு அரசுத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை .

இவர்கள் எல்லாரும் எப்போது திருந்துவார்கள் ??
 
Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: Greed of Schools & Pride of Parents affects the students-பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரி&

நல்ல அலசல்,இந்த டர்சேர் தாங்காம வடபழனியில் ஒரு மாணவன் தற்கொலைக்கு முயன்று இருக்கான்.இன்னிக்கி அவனுக்கு எக்ஸாம்.ரொம்ப வேதனையா இருக்கு.
 
Joined
Mar 3, 2015
Messages
9
Likes
12
Location
madurai
#4
Re: Greed of Schools & Pride of Parents affects the students-பிள்ளைகளை பந்தாடுது பெற்றோரி&

padippin perumaiyum purinthu padikkavum therinthale parents,teachers,mukkiama students kastapada thevai illai.tamil kalantha english porutthukonga:fear:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.