Guidance for Pregnant Women - கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்களில&

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#1
மகப்பேறு மருத்துவம் பற்றி அன்னூர் என்.எம். மருத்துவமனையின் துணை நிர்வாகி மற்றும் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மஞ்சுளா நடராஜன் விழிப்புணர்வளிக்கிறார்.



தாய்மை அடையும் பெண்களிடம் கருவுற்றிருக்கும்போது உடல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. சென்ற வாரம் முதல் மூன்று மாதங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் உடல் நல மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி பார்த்தோம். இன்று இரண்டாவது மூன்று மாதங்களில் ஏற்படும் உடல் நல மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் பற்றி பார்ப்போம்.

உணவு முறை:

கர்ப்பிணிப் பெண்ணிற்கு நான்காவது மாதத்தில் வாந்தி வருவது நின்றுவிடும். எனவே, இந்தக் காலத்தில் அதிகமான சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அவரவருக்கு தகுந்தவாறு அதாவது, தங்களின் உடல் வாகிற்கு ஏற்றவாறு மருத்துவரின் ஆலோசனைபேரில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில்தான் ரத்தத்தில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, மருத்துவரை அணுகி தொடர் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

வியாதிகள் மற்றும் கைகால் வீக்கம் இருந்தால் அதற்கேற்றவாறு உணவுமுறையில் மாற்றம் செய்யவேண்டும். மேலும் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் நான்காவது மற்றும் ஐந்தாவது மாதங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். எடை தேவைக்கு அதிகமாக கூடியிருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? என்று பார்ப்பதற்காகவும், வயிற்றின் அளவு மற்றும் குழந்தையின் துடிப்பு எவ்வாறிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவும் மாதாமாதம் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

ஸ்கேன் பரிசோதனை:

ஐந்தாவது மாதத்தில் எடுக்கப்படும் ஸ்கேன் மிகவும் முக்கியமானதாகும்.இதன்மூலம் குழந்தையின் வளர்ச்சியை துல்லியமாக பார்க்கலாம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சியில் ஏதேனும் அபாயகரமான நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பிருந்தாலோ அல்லது உறுப்புகள் ஏதேனும் சரியாக வளர்ச்சி அடையாமலிருந்தாலோ மருத்துவ ஆலோசனையின் பேரில் கருவை கலைத்துவிடுவது நல்லது.

அதாவது கருவிலிருக்கும் குழந்தைக்கு பிறந்தும் உயிர்வாழத் தேவையான வாய்ப்பு இல்லாமலிருந்தால் கருவைக் கலைத்துவிடலாம். எனவே இந்த காலத்தில் எடுக்கப்படும் ஸ்கேனானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் ஹீமோகுளோபின் அளவு, சர்க்கரையின் அளவு, உப்புச் சத்தின் அளவு சரியான அளவில் உள்ளதா மற்றும் தொற்று வியாதிகள் ஏதேனும் உள்ளதா என்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மருத்துவ பரிசோதனை முறை

கடைசி மாதவிடாய் நாளிலிருந்து 28 வாரங்கள் முடிய மாதம் ஒரு முறையும், 28 வாரங்களிலிருந்து 36 வாரங்கள் முடிய இரண்டு வாரத்திற்கு ஒரு முறையும், 36 வாரங்கள் முதல் வாராவாரமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வேறு ஏதேனும் வியாதிகளோ அல்லது தொந்தரவுகளோ இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#2
Re: Guidance for Pregnant Women - கர்ப்பிணிகளுக்கு மூன்று மாதங்களி&#29

Useful guidance for pregnant women, thanks Uma.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.