Guide your Teenage Daughters- பருவ வயது பெண் குழந்தைகளை பு

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=2]பருவப் (டீன் ஏஜ்) பெண்களே!, அவர்களின் அம்மாக்களே![/h]பருவப் (டீன் ஏஜ்) பெண்களே! அவர்களின் அம்மாக்களே! நீங்கள் (உங்கள் மகள்) விழி ப்புணர்வுடன் இருக்க* மருத்துவர் ஷர்மிளா கூறும் சில ஆலோசனைகள்

பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்க ளைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறா ர்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண் டும், அது பயப்படுகிற விஷய மல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனி மையில் விட்டுச் செல்லாதீர்கள்.

பூப்பெய்துதல் என்பது பெண்களு க்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண் கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வய துக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங் கள் மகளுக்கு எச்சரிக்கவேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பத ற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: பருவப் (டீன் ஏஜ்) பெண்களே!, அவர்களின் அம்ம&#

டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்…..

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம் பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றி யும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக் குக் கற்றுக் கொடுங்கள்.

குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவ தோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர் கள்.

குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண் டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக் கிறது என்ற எண்ணத்தைக் குழந்தை க்கு உண்டாக்கும்.

குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்ற வற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத் துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவா கிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்க ளைப் புரிய வைக்கலாம்.

என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல் லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேக ங்களை அம்மாவாகிய உங்க ளைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத் தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்

உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிறபோ தே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்துங்கள்.

உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற் றியும் சொல்லிக் கொடுங்கள்.

நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.


யாரும் அவளது அந்தரங்க உறுப் புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தை ப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண் ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்து டன் தொடுவதற்கும் உள்ள வித்தியா சத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறை யோ தவறாகத் தெரிந்தால் உடனடி யாக உங் களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங் களில் அவ ளைக் குற்றம் சொல்லா மல், அவளு க்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங் கள்.

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்க ளிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரி டமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல் லுங்கள்.

சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொ ம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணு றை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பர ங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம்குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறு த்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங் களை நாசுக் காக நீங்கள் விளக்கலாம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: பருவப் (டீன் ஏஜ்) பெண்களே!, அவர்களின் அம்ம&#3006

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் தவறானது

இந்தக் காலத்துப் பெண் குழந் தைகள் எட்டு, ஒன்பது வயதிலே யே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதை யெல்லாம் எடுத்துச் சொல் ல வேண்டும்.

பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல் பான ஒன்றே என்றும் சொல்லிக் கொ டுங்கள். அதை ஒரு சீரியஸான விஷய மாக நினைத்துக் கொள்ள வேண்டிய தில்லை என்பதை விளக்குங்கள்.

பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப் படவோ, தயங்கவோ வே ண்டிய தில்லை. ஆபத்தான சூழ்நிலைக ளிலிருந்து அவள் தன்னை க் காப் பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.
படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த் தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவன மின்மை போன்ற அறி குறிகள் உங்கள் மகளிடம் தென் பட்டால் அலட்சியம் செய்யாதீர் கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந்தாலு ம்கூட இந்த அறிகுறிகள் இருக் கக் கூடும்.

தவிர்க்கமுடியாமல் உங்கள் மகள் அப்படிஏதேனும் பாலியல் பலாத் காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத்திட்டாதீர்கள். என்னநடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமை யாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கா ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்பு ணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மக ளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர் த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Re: பருவப் (டீன் ஏஜ்) பெண்களே!, அவர்களின் அம்ம&#3006

பெண் வயசுக்கு வந்தாச்சா…. ?

உடல் மாற்றங்கள்:

பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறைமாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷய ங்களைப்பொறுத்து அந்த வயது கூடவோ, குறையவோ செய்யலா ம். ரொம்பவும் வெப்பமான சூழலி ல் வாழும் பெண்கள் தாமதமா கவே பூப்பெய்துகிறார்கள் என்று தெரிகிறது.

பெண்ணின் 13-வது வயதில் சினைப் பையில் சினைமுட்டைகள் வளரத் தோன்றும். இது ஆணின் உயிரணுவுடன் சேர்ந்து கரு முட்டையானால், கரு தங்கி வளர்வதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்கும். அப்படி இணையாமல் போகிறபோது கருப்பையினுள் கருத்தரிப்பிற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலை யத் தொட ங்கும். அப்படிக் கலைகிற போது ரத்த நாளங்களில் இருந்து இரத் தம் கசியும். இத்துடன் சேர்ந்து கருப்பையின் உள்வரிச் சவ்வுப் பகுதி யும், சிதைந்த சினை முட்டையும், கருப்பையின் முகப்பின் வழியே வடிந்து, பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். இதை யே மாதவிலக்கு என்கிறோம்.

மாதவிலக்கு சுழற்சியானது நான்கு வாரங்களுக்கு ஒரு முறையோ , 28, 29 நாட்களுக் கொரு முறையோ, மாதம் ஒரு முறையோ வரு ம். ஒரு பெண்ணின் வாழ் நாளில் சுமார் 400 முறைகள் மாத விடாய் வரும். மாத விலக்கின் போது வெளியேறும் இரத் தத்தின் அளவும், மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் பெண் ணுக்குப் பெண் வேறுபடும்.
பூப்பெய்தும் காலத்து முதல் அறிகுறியாக பெண்ணின் உடலில் சிலபகுதிகள் உருண்டு, திரண்டு காணப்படும். மார்பகங்கள், இடுப்பு மற் றும் தொடைகள் லேசாகப் பருக்கும். அக்குள், பிறப்புறுப்பு பகுதிக ளில் ரோம வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும். மேலுதடு, மார்பகங்க ளைச் சுற்றி, வயிற்றில் கூட சில பெண்களுக்கு மெல்லிய ரோம வளர்ச்சி தெரியும்.

ஆண்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், சீபம் சுரக்கும் சுரப்பியை யும், வியர்வை சுரப்பியையும் தூண்டுவதன் விளைவால் பூப்பெய்தும் பருவத்துப் பெண்களின் முக த்தில் வலியுடன் கூடிய பருக்கள் தோன்ற லாம். அதைக் கிள்ளாமல், அழுத்தாமல் அப்படியே விடுவ தே பாதுகாப்பானது. இல்லா விட்டால் அவை முக த்தில் நிரந்தரக் கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் ஏற்படுத்தி விடும்.

பள்ளியிலோ, வீட்டிலோ நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் மகள் பூப்பெய்தினால், இரத்தப் போக்கை க் கண்டு பயப்படாமலிருக்கவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள். நாப்கின் உபயோகிக்கக் கற்றுக் கொடுங்கள்.

மாத விடாய் பற்றி அவளாகக் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பாம ல் உண்மையான பதில்களைச் சொல்லுங்கள். இதில் தயக்கத்துக் கோ, கூச்சத்துக்கோ அவசியமே இல்லை.

மனமாற்றங்கள்:
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்வி கள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.

செக்ஸ் தொடர்பான சந்தேகங்கள், குழப் பங்கள் உருவாகும். அவற் றுக்கு விடை தேடும் ஆர்வம் அதிகரிக்கும்.

எல்லோரும் தன்னையே கவனிக்கிற உணர்வு ஏற்படும்.

தன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையும், ஆண்களைப் பற்றி எழு ம் சந்தேகங்களையும் யாரிடமாவது பகிர்ந்துகொள்ளத் தோன்றும்.

பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற் கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனா ல் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.


By Dr.ஷர்மிளா
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
பெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்சமீப காலமாக பெற்றோர், குழ்ந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி. பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம்.

குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை சுற்றி ஓடுகின்றனர். மற்றொன்று தன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இன்றைய வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பருவ வயது பெண் குழந்தைகளுடன் நல்ல உறவை வைத்து கொள்ள சில வழிமுறைகளை பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

உங்கள் பெண் குழந்தைகளோடு நண்பர்களாக பழகுங்கள், வாழ்வியல் குறித்து பேசுங்கள், முக்கியமாக இல்லறத்தைப் பற்றி பேசுங்கள். இதை பற்றி மற்றவர்கள், சமூக வலைதளம் மூலம் தவறாக தெரிந்து கொள்வதை விட நீங்களே அதை பற்றி விரிவாக புரிய வைப்பது நல்லது. உங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து பழகுங்கள்.

படிப்பு, உடை, உணவு மட்டுமின்றி, உணர்வுகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். முக்கியமாக பெண் பிள்ளைகளுக்கு சமூக வலைதளம் பற்றியும், அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எடுத்து கூறுங்கள். ஒவ்வொரு தாயும், பெண் குழந்தையிடம் உடல் உணர்வுகளைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும்.

அப்போது இந்த வயதில் ஏற்படும் எல்லை மீறல்களை தடுக்க முடியும். இன்று நாளுக்கு நாள் புதிதாய் ஓர் இளம் மங்கையின் நிர்வாணப் படம் வாட்ஸ்அப்பில் உலாவி வருகிறது. அதுவும் பள்ளி செல்லும் பிள்ளைகள். காதல் என்று கூறி ஏமாற்றப்படுகின்றனர்.

இதில் இந்து அவர்களை காக்க பெண்மையை பற்றியும், நானம், கூச்சம், காதல் பற்றிய தெளிவாக கூறுங்கள். தாத்தா, பாட்டி எனும் உறவுகளை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களே குழந்தைகள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
Teenage Girls -பெண்களின் வாழ்க்கையில் டீன் ஏஜ்

பெண்களின் வாழ்க்கையில் டீன் ஏஜ்


பெண்களின் வாழ்க்கையில் டீன் ஏஜ் என்பது வசந்தகாலம் போன்றது. பொதுவாக, 13-19 வயது வரையிலான பருவத்தை டீன் ஏஜ் என்கிறோம். இந்த, டீன் ஏஜ் பருவம் பெண்களின் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

இந்த காலகட்டத்தில், பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாறுதல்களை சந்திக்கின்றனர். அதனால், தாய்மார்களாகிய நீங்கள், குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு கவனித்து கொண்டீர்களோ அதே போல், இந்தப் பருவத்திலும், கவனிக்க வேண்டியது அவசியம். தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும்.

உடல் உறுப்பு வளர்ச்சி மாற்றத்தால், உணர்வுப்பூர்வமாக பலவிதமான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதனால், இந்த பருவத்தில் எல்லாருக்கும் இப்படித்தான் உடல் வளர்ச்சி இருக்கும். பெற்றோர் எடுத்துக் கூறுவது அவசியம். அதோடு, வெளியிடங்களில், தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்களின், டீன் ஏஜ் பெண்களுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி மனம் விட்டு பேச வேண்டும். இது, அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், தாயுடனான நெருக்கத்தையும், பாசத்தையும் மேம்படுத்தும்.

இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்சனைகளால் டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிடமாட்டார்கள். இதனால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப்படுத்துவதுடன், ஹீமோகுளோபின் அளவை, 10-க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு, ஆரோக்கியம் ஆகியவை மேம்படும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
lovely post. the need for the hour.....

we must also educate teenagers :-

1) not to be out of house in dark hours. (it is for their safety.avargal urimaiyai parippadhu alla).
2) not to tlalk with strangers.
3) not to involve in chats, fb,twitter,etc., with unknown guys.
4) not to trust relatives,drivers,gardener etc., when they are alone.
5) to speak out boldly.
6) to be aware of good touch and bad touch.
7) not to be involved in taking selfie.
8) not to indulge out of hours with friends too much.
9) to get more acquainted with family functions rather than parties.
10) to avoid drugs.:thumbsup
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.