Gynecomastia Surgery - ஆண்களை அச்சப்படுத்தும் மார்பு வளர்ச

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆண்களை அச்சப்படுத்தும் மார்பு வளர்ச்சி


சர்ஜரி புதுசு

ஆண்மையில் பெண்மையும் பெண்மையில் ஆண்மையும் ரசிக்கக்கூடியவைதான் என்றாலும், எல்லா விஷயங்களிலும் அல்ல. பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கானதைப் போன்ற மார்பு வளர்ச்சி இப்போது பெரும் பிரச்னையாக இருக்கிறது.

ஆண்களின் மார்பு வளர்ச்சி கைனகோமாஸ்டியா (Gynecomastia) என்று சொல்லப்படுகிறது. இவர்கள் நவீன அறுவை சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வை அடையலாம்’’ என்று கூறுகிறார் சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையின் தலைமை காஸ்மெடிக் சர்ஜன் டாக்டர் கார்த்திக் ராம்.

“ஆண்களின் மார்பு இயற்கையில் தட்டையானவை. அதனால் சற்று பெரிதாக மார்புடைய ஆண்கள் பலர் முன்னிலையில் சங்கடமாக உணர்கின்றனர். இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்து சற்று தளர்வான ஷர்ட்டுகளையே அணிந்து கொள்கின்றனர். அப்படி அணிந்தாலும் சிலருக்கு மறைக்க முடியாத அளவுக்கு மார்பு வளர்ச்சி இருக்கும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

விளையாடும்போதும், நீச்சல் போன்று திறந்த வெளிகளில் செய்யக்கூடிய பயிற்சிகளை செய்யும் போதும் சுதந்திரமாக ஈடுபட முடியாமல், யாரேனும் நம்மை கேலி செய்வார்களே என்ற பயம் அவர்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.பருவ வயதில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பால் ஏற்படுவதே கைனகோமாஸ்டியா.

பரம்பரை காரணமாகவும், சில மருந்துகளின் ஒவ்வாமையாலும் கூட ஏற்படும். சிலருக்கு மார்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் படிவதாலும் மார்பு வளர்ச்சி ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையின் மூல காரணத்தை ஆராய்ந்த பின்னரே சிகிச்சை முறையை தேர்வு செய்வோம்.

உடற்பயிற்சிகள் வாயிலாகவோ, உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாகவோ இப்பிரச்னையை சரி செய்ய முடியாது. உடற்பயிற்சிகள் மார்பு சுரப்பிகள், தசைகளை தூண்டி அதைச் சுற்றிலும் அதிக கொழுப்புகள் சேர வழிவகுக்கிறது. இந்த மார்பு சுரப்பிகளை நவீன அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுகிறோம்.

எளிதாக சரிசெய்ய முடிவதாலும், தன்னம்பிக்கை இழந்த இவர்களை விரைவில் மீட்கவும் அறுவை சிகிச்சையே விரைவான, நீடித்த தீர்வு.முன்பு இந்த அறுவை சிகிச்சையில் 7 முதல் 10 இன்ச் அளவுக்கு மார்பில் கோடுகள் கிழித்து செய்யப்படும். அதனால் சிகிச்சைக்குப் பிறகு தழும்பு தெரியும். இப்போது அதிநவீன லைப்போசக்*ஷன் டெக்னிக் பயன்படுத்தி 4 மில்லிமீட்டர் அளவு மட்டுமே சருமத்தில் ஓட்டை போட்டு, அதன் மூலம் தேவையற்ற கொழுப்புகளையும் சுரப்பிகளையும் அகற்றி விடுகிறோம்.

இதை டே கேர் அறுவை சிகிச்சையாக செய்வதால், அன்று மாலையே நலமுடன் வீடு திரும்பிவிடலாம். சிகிச்சைக்குப் பின் பெரிய அளவில் வலி இருக்காது என்பதால், உட்கார்ந்து செய்யும் வேலைகளில் இருப்பவர்கள் சிகிச்சை முடிந்த 3 நாட்களில் பணியைத் தொடரலாம். கடுமையான பணிகளில் உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வேலைக்கு போகலாம். இந்த அறுவை சிகிச்சை முடிந்த 8 வாரத்துக்குப் பிறகு மருத்துவர் கொடுக்கும் இறுக்கமான உள்ளாடை ஒன்றை அணிந்து அதற்கு மேல் சட்டை அணிந்து கொள்ள வேண்டும்.

இதன்மூலம் சர்ஜரியால் ஏற்பட்ட வீக்கம் வற்றிவிடும். வீக்கம் வற்றிய பிறகு மற்ற உடைகளை அணியலாம்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடிப்படையான மருத்துவ முறைகளை மட்டும் பின்பற்ற சொல்லிக் கொடுப்போம். மனநல ஆலோசனைகளும் வழங்கப் படும். அவர்களின் மனநிலையையும் தொடர்ந்து கண்காணித்து வருவோம்.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பிரச்னையை சரி செய்தாலும், சமூகத்தை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறோம்.’’
பருவ வயதில் உள்ள ஆண்களுக்கு ஏற்படும் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்பால் ஏற்படுவதே கைனகோமாஸ்டியா. பரம்பரை காரணமாகவும், சில மருந்துகளின் ஒவ்வாமையாலும் கூட ஏற்படும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Gynecomastia Surgery - ஆண்களை அச்சப்படுத்தும் மார்பு வளர்&#2

Really very useful information! thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.