Had any Pregnancy Discomforts ?

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#1
Hi Moms and Moms – to be, a893b11d108dc9e9bf8d3b6cc9fc5239.jpg


நாம் கருவுற்று இரு(க்கும்)ந்த போது, நமக்குப் பல வித அறிகுறிகள் அல்லது கர்ப்பகால கஷ்டங்கள் பலவற்றையும் நாம் அனுபவித்து இருப்போம் ,.

உதாரணத்துக்கு, vomitting , குழம்பு ரசம் போன்றவை கொதிக்கும்போது , அந்த வாசனை பிடிக்காமல் போகும்/ அப்போது மேலோட்டமாக குமட்டும் ...ஆனால் வாமிட் வராது. தூக்கம் வந்து கொண்டே இருக்கும் . drowsiness இருக்கும் .தலைசுற்றல் இருக்கும் . வித்தியாசமாக எதையாவது(ஐஸ் கட்டி , களிமண் , சாம்பல் , புளிப்புச்சுவை) சாப்பிடத் தோன்றும் .மார்பக வலி , உறுத்தல் , கால் வீங்குதல் , மலச்சிக்கல்.

இந்தப் பத்து மாதங்களும் (ஒன்பது ) இவை ஏதாவது உங்களுக்கு இருந்ததா ?

அப்படி இருந்து இருந்தால் , அதை எப்படி எதிர் கொண்டு , ஏதாவது தீர்வு கண்டுபிடித்து , கடைப்பிடித்தீர்களா ? என்பனவற்றை எல்லாம், இங்கே பகிர்ந்து கொண்டால் , நிறைய கருவுற்று இருக்கும் தாய்மார்களுக்கு , follow செய்ய உதவியாக இருக்கும் .

குழந்தை உதைப்பது , நகர்வது இவைகளை எப்போது உணர்ந்தீர்கள்? குழந்தையின் தலை திரும்பும்போது எப்படி இருந்தது , அப்போது என்ன செய்தீர்கள் , இவைகளையும் விவரிக்கவும் .

இவை ஒவ்வொருவருக்கும் மாறுபடும் . எல்லாருக்குமே இப்படி தான் இருக்க வேண்டும் என்று இல்லவே இல்லை .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#2
எனக்கு , இவற்றில் ஒன்று இரண்டைத் தவிர வேறு எந்தக் கஷ்டமும் இல்லை .மார்பக வலி மட்டும் இருந்தது . குழம்பு , ரசம் கொதிக்கும் போது , மிக லேசாகக் குமட்டும் . அது கூடப் பெரிதாக இல்லை .(not noticeable).

அப்போதெல்லாம் , Pregnancy Home test kit எல்லாம் இல்லை . சோ, 45 நாட்களுக்குப் பிறகு , டாக்டர் கிட்ட போய் urine டெஸ்ட் எடுத்து , செக் செய்துதான் confirm செய்தது .

6 மாதத்தில் , குழந்தை நகர்வது , மிக மெலிதாகத் தெரிந்தது . 7 மாதங்களுக்குப் பிறகு , மெதுவாக உதைப்பதை உணர முடிந்தது . அப்போது அந்தக் குட்டிக் கால் , என் வயிற்றின் மேல் பாகத்தில், மெலிதாகத் தெரியும் .

ஒன்பதாம் மாதத்தில் , குழந்தையின் தலை திரும்பியது . அதாவது cervix இல் fix ஆகும் . அப்போது பயங்கர வலி உண்டானது . உடனே என் அம்மா , பெருஞ்சீரகத்தை (சோம்பு ) கஷாயம் வைத்துக் கொடுத்தார் . உடனே சிறிது நேரத்தில் வலி நின்று விட்டது . இது பிரசவம் வரை மேலும் 2 அல்லது 3 முறை கூட நிகழும் .

இது ரொம்ப முக்கியம் . சில தாய்மார்களே , இதைத்தான் பிரசவ வலி என்று நினைத்துக் கொண்டு , ஹாஸ்பிடல் கூட்டிச் சென்று விட்டு , டாக்டர் , வீட்டுக்குத் திரும்ப அனுப்பி விடுவார் (எனக்குத் தெரிந்தே , இது நிறைய நடந்து இருக்கிறது ).

ஆகவே , இந்த சீரகக் கஷாயம் குடித்தும் , தொடர்ந்து வலி இருந்த போது மட்டுமே , ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனேன் நான் .

இப்போது உங்கள் அனுபவங்களைச் சொல்லி , மற்ற பலருக்கும் உதவி புரியுங்கள் தோழிகளே .
 
Last edited:

Rudhraa

Commander's of Penmai
Moderator
Joined
Apr 26, 2012
Messages
1,886
Likes
3,735
Location
The World
#3
hi Jayanthy good thread..


Here is my mine, I confirmed my pregnancy by HCG kit. That was really very happiest moment in my life. I still have the kit too with me as a memory!

After that went to hospital for confirmation and the correct placement. (This is must friends, since Tubal pregnancy may also happen, it leads to severe problems too).

I too don't have major discomforts like vomit or pains.

I had Swelling in my foot due to water retention and itching in my leg. Thats the only discomfort I had.

for swelling they checked BP regularly but since it was normal throughout my pregnancy no worries.

For itching they gave me one oinment to apply over the legs.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#4
கர்ப்பவதிகளுக்கு மிகவும் உபயோகப்படக்கூடிய திரியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி ஜெயந்தி.

எனக்கும் கர்ப்ப காலத்தில் பெரிதாக எந்த பாதிப்பும் இருந்தது இல்லை. எல்லா உணவும் உட்கொள்ள முடிந்தது. Vomitting sensation அறவே கிடையாது.

எனக்கு 5 மாதத்தில் குழந்தை வயிற்றில் வளைய வருவதை உணர முடிந்தது. அந்த உணர்வு விவரிக்க முடியாது ஒரு இன்ப உணர்வு.

ஆனால் 7 வது மாதத்தில் எனக்கு உடம்பெல்லாம் அலர்ஜி வந்து அரிக்க ஆரம்பித்து rashes வந்து விட்டது. பிறகு டாக்டரிடம் சென்று மருந்து வாங்கி உபயோகித்த பின் சரியாகிவிட்டது.

இது மாதிரி யாருக்கேனும் அனுபவம் நேர்ந்ததா தோழிகளே?

இந்த நேரத்தில் PB-யை மட்டும் control-அ வெச்சுக்கனும். இல்லை என்றால் சிரமம் தான்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,728
Location
Bangalore
#5
Sumathi and Rudhraa,

Thank you very much for sharing your experiences.

Will be very useful for the moms - to be.
 
Joined
Jan 31, 2015
Messages
1
Likes
0
Location
chennai
#7
Re: Had any Pregnancy Discomforts ? stomach pain during pregnancy

hi i am 5 month pregnant. i feel stomach pain these days in the left side. is this common pregnancy problem or what? i have thyroid problem. doctor given Mefacid spas tablet. can i take this tablet? will it be harmful for my child?
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.