Hair care tips in Tamil - தலைமுடி பாதுகாப்பு அவசியம்

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#1
*தலைமுடி பராமரிப்பு மிகவும் அவசியமானது, நீங்களும் தலைமுடியை பராமறீகறிங்க தானே எந்த மாதிரி பராமறீகறிங்க.
தினமும் ஷாம்பூ போட்டு தலை குளிக்கிறீங்களாஅப்படி பராமறிக்க கூடாது
கூந்தலுக்கு கேடு விளைவிக்ககூடிய செயல் இது போல வேறெதுவுமில்லை
குளிக்கும் போது கவனிக்கவேண்டியவை


1.ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்து கொள்ளகூடாது.அப்படி செய்தால் தலையில் அப்பிக்கொள்ளும்


2.தினமும் ஷாம்பூ போட்டு குளித்தால் நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை வந்துவிடும்

3,தலைகுளிக்கும் போது ஷாம்பூவை தலையில் அப்படியே வைத்து தேய்க்க கூடாது.சிறிதளவு தண்ணீர் உற்றி கலக்கிய பிறகு தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.இப்படி செய்தால்தான் நீங்க எதிர் பார்க்கற நல்ல பலனை பெறமுடியும்.இல்லையேல் ஆபத்து தான் தலைமுடிக்கு விளையும்
கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சில டிப்ஸ்:


1.என்னதான் அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக்கூடாது.டவலால் நன்கு துடைத்து ஈரம் போய் தலைமுடி காய்ந்த பின்பு நல்ல தரமான சீப்புகளால் தலைசீவ வேண்டும்


2.வாரம் இரண்டு முறையாவது தலை குளிக்க வேண்டும்


3.மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்


4.இரவு படுக்கும்முன் கூந்தலை மென்மையாக வாரிவிட்டு படுக்க வேண்டும்.இது தலைமுடி நன்கு வளர உதவும்


5.அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல வேண்டுமானால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே உபயோகிக்கலாம்


6.கூந்தலை ப்ளீச் செய்வது கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.
நரைத்துப் போகிறது தவிர்க்க எளிய சிகிச்சை முறை:


*இப்போதெல்லாம் பத்து, பதினோரு வயது குழந்தைகளுக்குக்கூட நரைத்துப் போகிறது. இதைத் தவிர்க்கவும் எளிய சிகிச்சை முறை ஒன்றைச் சொல்கிறார் சந்தியா செல்வி..


1. ‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.


2. இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’


source:dinakaran.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Dear Swathi, you have very nice suggestions to be followed for maintaining our hair. thanks
 

swaga2008

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 16, 2011
Messages
2,350
Likes
5,607
Location
USA
#7
Hey Hey Swathi! Hi - Fi :tea:

QUOTE=swaga2008;455694]u r welcome karthi...yes Nanum olunga than maintain panerean pa...:cheer::cheer:
[/QUOTE]

Ha h aha itho koduthuta pochu...:tea:..pathu ma tea cup break Aida poguthu..hot a Vera iruku,,he he he
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.