Hair Care tips

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்பேர்ப்பட்ட பெண்ணும் அழகு தேவதையாக மிளிர்வார்கள். இப்படிப்பட்ட கூந்தல் வேண்டுமானால் முறையான பராமரிப்பு அவசியம்.
எண்ணை தடவப் போறீங்களா?
தேங்காய் எண்ணையை எப்போதும் தலைமுடியின் இயல்புக்கேற்ப தடவ வேண்டும். கேசம் எண்ணைப் பசையுடன் இருந்தால் வாரம் ஒரு முறை மட்டுமே எண்ணை தடவினால் போதும். வறண்ட கூந்தல் என்றால் தலைக்கு எண்ணை தேய்த்த பிறகுதான் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
எண்ணைப் பசையுள்ள தலைமுடியில் எண்ணையை தலைமுடி வேர்க்கால்களில் தடவாமல் மேற்புறமாக தடவ வேண்டும்.
ஏனென்றால் வேர்க்கால்களில் இயற்கையிலேயே எண்ணை சுரக்கிறது. ஒருவேளை திரும்பவும் நீங்கள் எண்ணை தடவினால் அதிகப்படியான எண்ணை சுரப்பைக் கொடுக்கும்.
எண்ணை பசை முடியா?
உங்கள் தலைமுடி அதிக எண்ணைப் பசையுடையதாக இருந்தால் ஷாம்புவில் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு குளிக்க வேண்டும். கூந்தலில் எண்ணையை அதிக நேரம் தடவி வைக்கக் கூடாது. தலைக்கு குளிப்பதற்கு 2 மணி நேரம் முன்பு எண்ணை தடவினால் போதும்.
வறண்ட கூந்தலில் வாரம் 2 முறை எண்ணை தடவலாம். வறண்ட சருமமாக இருந்தால் எண்ணையை சிறிது சூடுபடுத்தி முடியின் வேர்க்கால்களில் தடவ வேண்டும்.
எண்ணை தடவுவது எப்படி?
எண்ணை தடவுவதற்கு முன்பு கூந்தலை நன்றாக சிக்கெடுக்கவும். இதனால் சருமத்தின் மீது படிந்துள்ள உயிரற்ற திசுக்கள் மற்றும் தூசிகள் வெளியேற்றப்படும்.
சீப்பினால் வாரிய பிறகு கூந்தலின் இயல்புக்கேற்ப ஸ்பாஞ்ச் கொண்டு வேர்கால்களில் அல்லது தலைமுடியின் நுனிப்பகுதியிலும் லேசாக சூடுபடுத்தப்பட்ட எண்ணையால் நன்றாக மாலிஷ் செய்யவும்.
மாலிஷ் செய்வதால் தலையின் சருமப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அதோடு ரத்தக் குழாய்கள் சீரடைகின்றன.
கைவிரல்களை சிப்பு போல பயன்படுத்தி மாலிஷ் செய்ய வேண்டும் .எண்ணை இல்லாமல் தலையை குளுமைப்படுத்த குளிர்ந்த நீரில் ஸ்பாஞ்சை நனைத்து தலை சருமத்தின் மீது தேய்க்கவும்.
எண்ணையை தலை மீது கொட்டிய பிறகு விரலால் லேசாக பிடித்து நாலாபுறமும் அழுத்தி மாலிஷ் செய்யவும்.
என்னென்ன நன்மைகள்?
தலைமுடியை அடிக்கடி மாலிஷ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் இவை.
இரவில் மாலிஷ் செய்வதால் நாள் முழுவதும் ஏற்படும் களைப்பு உடனே மாயமாகும்.
தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்கள் இரவில் மட்டும் தலைமுடிக்கு கைவிரல்களால் லேசாக மாலிஷ் செய்யவும். தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.
தலைமுடிக்கு மாலிஷ் செய்வதால் தலைக்கு மட்டுமல்ல கண் மற்றும் காதுக்கும் நன்மை ஏற்படுகிறது.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#3
கருப்பு தலைமுடி வெள்ளையாகி கலங்க வைக்கிறதா?

அரை கிலோ நல்லெண்ணையை காய்ச்சி இறக்கியதும், அதில் 50 கிராம் பச்சை கறிவேப்பிலையை போட்டு மூடி விடுங்கள். மறுநாள் இந்த எண்ணையை மிதமாக சூடு பண்ணி, தலையில் நன்றாக தேய்த்து சியக்காய் போட்டு அலசுங்கள்.

வாரம் இருமுறை இப்படி குளித்து வர, நரைமுடிகள் கருமைக்கு மாறிவிடும். இளநரைக்கு இன்னொரு சிகிச்சை... ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து அந்த சாறில், 3 டீஸ்பூன் வெந்தய பவுடரை கலந்து தலைக்கு "பேக்" போட்டு, காய்ந்த பிறகு அலசுங்கள். வாரம் ஒருதடவை இப்படி செய்து வந்தால், சிக்கிரமே இளநரை நீக்கிவிடும்.

பிசுபிசுப்பை போக்க

கறிவேப்பிலை, கொட்டை நீக்கிய நெல்லிக்காய், செம்பருத்திப் பூ.. மூன்றையும் சமஅளவு எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன், வடித்த கஞ்சியை கலந்து தலையில் நன்றாக தேய்த்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இப்படி செய்தால் போதும் "பிசுபிசுப்பு" போய்விடும்.

கறிவேப்பிலையில் ஒரு "ஆஹா பேஸ்ட்..."

மருதாணி - 1 பிடி, கறிவேப்பிலை - 1 பிடி, செம்பருத்தி இலை - 1 பிடி, கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டை - 4... இவற்றை முந்தைய நாளே ஊற வையுங்கள். மறுநாள் அரைத்து, தலைக்குத் தேய்த்து அலசுங்கள். இப்படி, வாரம் ஒரு முறை செய்தால் போதும். தலை சுத்தமாகி, கூந்தலில் வாசனைத் தூக்கும்.

"ஜெல் சிகிச்சை"

சோற்று கற்றாழை "ஜெல்"லுடன் சம அளவு கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அந்த விழுதை "பேக்" போட்டு 15 நிமிடம் கழித்து தலையை அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த "பேக்" போட்டுப் பாருங்கள். தலை குளிர்ச்சியாவதுடன், முடி வளர்ச்சியும் தூண்டப்பட்டு "கருகரு"வென வளர ஆரம்பிக்கும்.

தலை அரிப்புக்கு

சுருள் பட்டை - 10 கிராம், பிஞ்சுக்கடுக்காய் - 10 கிராம், வெந்தயம் - 10 கிராம், கறிவேப்பிலை - 10 கிராம், செம்பருத்தி பூ - 10 கிராம், ரோஜா மொட்டு - 10 கிராம்... இவற்றை ஓரிரண்டாக அம்மியில் நசுக்கிக் கொள்ளுங்கள். பிறகு, அவற்றை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, பத்து நாட்கள் வெயிலில் வைத்து எடுங்கள். இந்த எண்ணெயை தினமும் தடவி வர சகல பிரச்னைகளும் தீர்ந்து, முடி ஆரோக்கியமாக இருக்கும்.
 

kaveri

Friends's of Penmai
Joined
Aug 6, 2011
Messages
177
Likes
106
Location
madurai
#4
Thank u for haircare tips raji..
I'm going to try above methods fr whit hair problem
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.