Hair Pack Coconut Milk - தேங்காய் பால் ஹேர் பேக்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
தேங்காய் பால் ஹேர் பேக்
தேங்காய் பால் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள். ஒரு தேங்காயை நன்கு அரைத்து, அதில் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலைக்கு குளிக்கும் போது தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போல் இருக்கும.வேண்டுமெனில் இதனை ஷாம்பு போட்டு குளித்தப் பின்னரும் போடலாம். இதனால் கூந்தல் நன்கு மென்மையுடன் இருக்கும்.

தேங்காயை அரைத்து பால் எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளித்தால், அதில் உள்ள எலுமிச்சை சாறு கூந்தல் உதிர்தலை தடுத்து, ஸ்கால்ப்பில் இருக்கும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

அதுமட்டுமின்றி எலுமிச்சை சாறு பொடுகுத் தொல்லையை போக்கும். மேலும் இதில் உள்ள தயிரும் கூந்தலுக்கு ஏற்ற ஒரு பொருள். எனவே இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் உதிர்தலோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

வெந்தயப் பொடியில் தேங்காய் பால் ஊற்றி, பேஸ்ட் செய்து, கூந்தலில் தடவி, 4-5 நிமிடம் மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், கூந்தலுக்கு கண்டிஷனர் போட்டது போன்று மென்மையாக, பட்டுப் போன்று மின்னும்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Super Coconut milk hair pack idea you have given Sir. Thank you very much Sir
 

Anusekaran

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 18, 2013
Messages
1,479
Likes
3,997
Location
chennai
#3
தேங்காய் பால் ஹேர் பேக் மிகவும் பயனுள்ளதாக உள்ளது........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.