Hair tips for healthy hair

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
முடி அடர்த்தியாக வளர :-
ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.
சரிவிகித உணவு:
ஒரு ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவு இயற்கையாகவே உங்கள் முடி தொகுதி அதிகரிக்க மிகவும் முக்கியமானது. உங்கள் உணவில் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், வைட்டமின் பி, சி, துத்தநாகம், இரும்பு மற்றும் செம்பு ஆகியவை அடங்கும். சரிவிகித உணவு உங்கள் மயிர்க்கால்கள் வலுப்படுத்தும் மூலம் முடி வளர்ச்சி ஊக்குவிக்கும்.








 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
பகிர்வுக்கு நன்றி ராஜி .
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#6
Hair tips

சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும்போதும் மண்டை ஓட்டுப் பகுதித் தோலை (Scalp) விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள்.

ஷாம்பூ, சோப்பு வகைகளுக்கு `டாட்டா' சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.

உணவில் கீரை, முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் திராட்சை, பே*ரி*ச்சை போன்றவைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவில் பால் குடிப்பதை மறக்க வேண்டாம்.

கூந்தலில் அழுக்கு, சிக்கு சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் சுத்தமான நீரிலேயே கூந்தலை கழுவ வேண்டியது அவசியம். குளிர்ந்த அல்லது இளம் சூடான தண்ணீரையே பயன்படுத்துங்கள்.

டென்சனைக் குறையுங்கள். மகிழ்வோடு இருங்கள். அகத்தின் மகிழ்ச்சி முகத்தில் மட்டுமல்ல முடியிலும் தெரியும்.

வாசனைத் திரவியங்கள், பாடி ஸ்பிரே போன்றவைகளைத் தவிருங்கள்.

அடிக்கடி தலைவலியா? அலட்சியப்படுத்தாதீர்கள். டாக்டரிடம் காட்டுங்கள். தலைவலியால் முடி உதிர்வது நிச்சயம்.

.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.