Happy Fathers Day Paa!!

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,460
Likes
148,284
Location
Madurai
#1
Father the word itself contains lots of emotions in it. He is like a tree under the shadow of whom a child feels most secured. Even in the worst situation of our life when whole world is against us, we have a sense of security that our father will understand our problem and will support us till the end.

Let's get together and make that special Man feel loved and tell him whenever we can that "He has made our life so pleasant and wonderful that that no one absolutely no one can take his place ever, I love you Dad and will always do."

fathers-day-canada.jpg


I will tell you about someone.
Ten times as old as I,
Who has a heart that is
As large as the sky.

He tells me lovely stories
Almost every night,
And supports me whenever
With anyone I have a fight.

He is calm and cool
With lots of grace,
There is always a smile
On his handsome face.

Full of joy is he
And also very wise,
He appears to me
God in disguise.

I call him my Guru
I think he is truly great,
He has taught me always to love
And never ever to hate.

I love him much more
Than anyone ever can,
In my little life
He is the special man.

There is no place lovelier
On the world map,
Than my darling Daddy’s
Secure and safe lap.

Without my dear Daddy
I feel like an Empty,
In every birth of mine
Please God make me his DD(Darling Daughter).

Happy Father's Day!! Cheers :)
 

jash

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 8, 2013
Messages
12,762
Likes
37,271
Location
madurai
#2
hi frnds

happy fathers day

father is the

first teacher

first friend

first hero

first inspiration

first rolemodel

in our life

all fathers are a real hero to their family

happy fathers day to all

i like u dad verymuch.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#3
விந்தையான உலகமைய்யா இது,
தந்தையார் தினமாம்
உலகம் கொண்டாடுது. நாளை.

கருவறையில் உருவாக
கருவியானவர் அவர்.
தந்தையர் தினமெனக் கூறி
வருடமொரு முறை மட்டும்
வாழ்த்திடல் நிறையாமோ?

அவர் கூறும் வார்த்தை மதியாது
நொந்திட வைத்தல் முறையாமோ?
வயதான காலத்தே பெரும் சுமை எனக் கருதி,
வரும் நாட்களில் மறந்திடுவோமோ
பெரும் பொறுப்பு முதியோர் இல்லத்திற்கென்றே!!

பெற்ற தந்தையை, சொத்தென போற்றி பேணும் இளம் தலைகளே!
வருடம் ஒருமுறை அல்ல
தினம் தினம் உம்மை வாழ்த்திடும்
முதியோன் ஒருவன் இங்கே.

விந்தையான உலகமைய்யா இது.!

:pray:

(Ramanian)
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#4
அப்பா

என் பிஞ்சு கால்கள்
விளையாடிய
விளையாட்டு மைதானம்
அப்பாவின்
மார்பும் முதுகும் !!! ♥


graphics-fathers-day-322350.gif

 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#6
[h=5]ஆண்மையுள்ள எல்லோராலும் குழந்தை பெற
முடியும்,
அன்புள்ள சிலரால் மட்டுமே தந்தையாக
முடியும்,!![/h]
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#7
வியப்பாக இருக்கிறது
விரிந்திருக்கும் இவ்வுலகில்
நானும் ஒரு பாகமென!!
விழிவிரியப் பார்க்கிறேன்
வழித் தடங்களின்
பின்னோக்கிய பார்வையில்
விழிபதித்து மீள்கையில்
அழியாத சுவடுகளாய்
கடந்துவந்தப் பாதையை!!

கல்லெடுத்து அடித்த அடியில்
தலையில் குருதிவர
வலக்கையால் பொத்திக்கொண்டு
அழுதுசென்ற முனீஸ்வரன்!
அடுத்த மணித்துளியில்
தந்தையுடன் சேர்ந்துவர
மனம் பதைத்துப் போகையில்!!

மருத்துவச் செலவு பார்த்து
என்னய்யா இது!
சிறுபிள்ளைகள் சண்டையில்
நமக்கென்ன வேலையிங்கே! எனச் சொல்லி
உருட்டிய கண்களால்
மிரட்டிச் சென்ற தந்தையை!!

உடன்படித்தோரின் தந்தையர் பலர்
அலுவலகம் சென்று வருகையில்!! என்னவரோ
அதிகாலை கிளம்பிச்சென்று
நாளெல்லாம் மிதிவண்டி அழுத்தி
அலுப்பு மட்டுமே மிஞ்சி
எனக்கான பண்டத்துடன் திரும்புகையில்!!

படபடக்கும் பட்டாசுக்காய்
பகல்முழுதும் காத்திருந்து - நான்
சோர்ந்துபோய் உறங்கிவிட!
தூக்கத்தில் எனை எழுப்பி
முன்தின இரவுப் பொழுதில்
தோளில் எனைச் சுமந்துகொண்டு
பைநிறைய வாங்கிவந்த தீபாவளி!!

கைவண்டி நிரப்பியிருந்த
நெல்மணி மூட்டையெல்லாம்
இறக்கியங்கே வைத்துவிட்டு
அன்றைய தின கூலிக்காய்
எண் கால் இரண்டு - நா முக்கா மூணு என
அறியாத வாய்ப்பாட்டை
இயல்பாய் சொன்ன போதினிலே!!

ஆசிரியர் எனையழைத்து
அப்பாவைக் கூட்டிவா என்றதும்
பதைத்துப் போன நானோ!
கூட்டி வந்த பின்னே - என்னய்யா
இத்தேர்வில் உங்கள் மகன்
வகுப்பிலேயே முதல்மாணவன் - என்றதும்
இரக்கமும் வேகமும் பார்த்த கண்கள்
உதிர்ந்த சிறு பனித்துளியை
கண்டு நான் கலங்கிய போதினிலே!!


அப்பா என்றொரு வார்த்தையில் தான்
எத்தனை மந்திரங்கள்
சொல்லிக்கொண்டே இருக்கலாம்
சொல்லத்தான் சொற்களில்லை!!


உன் விரல்பிடித்து இன்னும்
ஊர்வலம் வந்திட ஆசைதான் நெஞ்சுக்குள்
என்ன நான் செய்திடுவேன்
காலம் எனும் மாயன் உனை
கடத்திக் கொண்டு விட்டானே!!

இதுவும் ஓர் விந்தைதான்
உன்னுருவில் என் மகனை
அச்சுபிசகாது காண்கிறேன்
அவன் விரல் பிடிக்கையிலே
அன்று நான் பிடித்தவிரல்
கையகத்தில் உணர்கின்றேன்!
அன்று அறிந்த சொல்லுக்கு - இன்றுதான்
அருஞ்சொற்பொருள் காண்கிறேன்!!


அப்பா.....
இன்னுமொரு பிறப்பிருந்தால்
மீண்டும்
தந்தையாக வருவாயா?!!
 

sudhavaidhi

Guru's of Penmai
Joined
May 20, 2011
Messages
6,171
Likes
15,033
Location
Muscat
#8
தந்தையே


மழலையில்
விளையாடியதில்லை
என்னோடு !!!

பள்ளிப் பருவத்தில்
பாடங்கள்
சொல்லித் தந்ததில்லை !!!

கல்லூரிக் காலத்தில்
தோழனாய்
பழகியதில்லை !!!

இருந்தும்
என்
ஆதர்சம் நீதான்!!!

கவலை
இன்றி நான் வாழ
பாசத்தை அடக்கினாய் !!!

நான் சுகமாய்
வாழ
நீ சுகத்தை மறந்தாய் !!!

தலைவனாய்
திட்டமிடக் கற்றேன்
உன்னிடம் !!!

தந்தையே
என்
ஆதர்சம் நீதான்!!!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#10
[h=5]ஒரு தந்தை மகளுக்கு உலகை அறிமுகப்படுதுகிறார்.
மொழியை,உணர்வை,சிரிப்பை,சந்தோஷத்தை,உறவை..அனைத்தையும்...

அவளின் வலியை தன் வலியாக உணர்வார். தலையில் காயம் பட்ட மகளுக்காக தன் முடியை துறந்த அப்பா...

அறிவை போதிக்க மகளுடன் மணிக்கணக்கில் அளவாளிய அப்பா..

உறவுகளை,நட்புகளை அறிமுகபடுத்தி உணர்வை ஊட்டிய அப்பா..

மேடைகளை, புத்தகங்களை அறிமுகப்படுத்தி மொழியை ஊட்டிய அப்பா..

விளையாடி,களித்து பேசி சந்தோஷத்தை ஊட்டிய அப்பா..

கையில் தாங்கி, பொத்தியும், அணைத்தும் பாதுகாப்பையும் ,அன்பையும் காட்டிய அப்பா..

அத்தனையும் செய்த அப்பா..எதுவுமே செய்யாத மகளாய் குற்ற உணர்வை கொடுத்து விட்டு செல்ல உனக்கு மனசு வந்தது எப்படியப்பா ?

தந்தைகளை தவற விட்ட மகள்கள் தனிமையாக விடப்பட்டவர்கள்.

மிஸ் யூ அப்ப்பப்பா.[/h]
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.