Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மருத்துவக் குணங்கள் நிறைந்த பார்லி

பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி.

குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில இருந்திருக்கிறது.

இதய நோயாளிகளுக்கு பார்லி அற்பு தமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது.

பார்லியில் பீட்டா க்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டா க்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும். அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்னைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்.

நம் உடலிலுள்ள நிணநீர் சுரப்பிகள்தான், உடலின் நீர்ச்சத்துப் பராமரிப்புக்குக் காரணம். அது அடைக்கப்பட்டால் உடலில் தண்ணீர் தேங்கிவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் இந்த நிணநீர் சுரப்பிகள் அடைபடுவதால், தேங்கிய நீர்ச்சத்தை வெளியேற்ற பார்லி கொடுக்கப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய எக்லாம்சியா (ணிநீறீணீனீஜீsவீணீ) பிரச்னைக்கும் பார்லியே முதல் மருந்து. அவர்களுக்கு ரத்தத்தில் புரதச் சத்து அதிகமாகி, கை, கால்களில் வீக்கம் காணப்படும். பார்லி தண்ணீர் கொடுப்பதன் மூலம் அது சரியாகும்.

என்ன இருக்கிறது? 100 கிராமில்

ஆற்றல் 336 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் 69.6 கிராம்
புரதம் 11.5 கிராம்
கொழுப்பு 1.3 கிராம்
கால்சியம் 26 மி.கி.
பாஸ்பரஸ் 215 மி.கி.

ஸ்பெஷல் ரெசிபி

பார்லி புலாவ்

என்னென்ன தேவை?

பார்லி - 100 கிராம், கேரட், பீன்ஸ், பட்டாணி எல்லாம் சேர்த்து - கால் கிலோ, வெங்காயம் - 1, நாட்டுத் தக்காளி - 1, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1, தயிர் - 1 டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி - 1 கைப்பிடி, மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
எண்ணெய் காய வைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தயிர் சேர்த்து மேலும் வதக்கவும். எண்ணெய் கக்கிக் கொண்டு வரும் போது, தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கிளறி, பார்லியும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும். ஒன்றுக்கு 2 தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து, கொதிக்கும் போது புதினா, கொத்தமல்லி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, குக்கரில் வைத்து வெயிட் போட்டு, குறைந்த தணலில் வைக்கவும். விசில் வர வேண்டாம். 10 நிமிடங்கள் வைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

பார்லி சூப்

என்னென்ன தேவை?
பார்லி - 1 டேபிள்ஸ்பூன், பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் - கால் கிலோ, பூண்டு (விரும்பினால்) - 5 பல், சூப் கியூப்ஸ் அல்லது ரெடிமேட் சூப் பவுடர் - சிறிது, மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப, கொழுப்பு நீக்கிய பால் - சிறிது.

எப்படிச் செய்வது?
பார்லியை 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரை வேக்காடு வெந்ததும், நீளநீளமாக நறுக்கிய காய்கறிகள், பூண்டு சேர்க்கவும். காய்கறிகள் ரொம்பவும் குழைவாக வேகாமல் பார்த்துக் கொள்ளவும். சூப் கியூப்ஸ் அல்லது இன்ஸ்டன்ட் சூப் பவுடர் சேர்த்துக் கொதித்ததும், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, பால் விட்டுப் பரிமாறவும். இந்த சூப்பை பார்லியுடன் சேர்த்தோ, சேர்க்காமலோ குடிக்கலாம்.


பார்லி பொங்கல்
என்னென்ன தேவை?
உடைத்த பார்லி - 1 கப், பாசிப்பருப்பு - கால் கப், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை - சிறிது, நெய் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

பார்லியையும் பாசிப்பருப்பையும் வெறும் கடாயில் லேசாக தனித்தனியே வறுத்து, சிறிது நேரம் ஊற வைக்கவும். நெய் சூடாக்கி, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, பார்லி, பாசிப்பருப்புக் கலவையும் சேர்த்து ஒன்றுக்கு 3 அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக வைக்கவும். சூடாகப் பரிமாறவும்.


 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

சத்துப்பட்டியல்: பார்லி


பார்லி (வாற்கோதுமை) சத்துமிக்க தானிய வகைகளில் ஒன்று. இன்று நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகளின் பிரதான உணவு வகையில் ஒன்றாகவும், ஆரோக்கிய விரும்பிகளின் உணவுப் பட்டியலிலும் தவறாமல் இடம் வகிக்கிறது. இதிலுள்ள சத்துக்களை அறிவோம்...

* பார்லி மிதமான ஊட்டம் தரக்கூடியது. 100 கிராம் பார் லியில் 270 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* நூறு கிராம் பார்லியில் 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவும். குடல் பகுதியில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் இந்த நார்ச்சத்துக்களை எளிதில் கரையத்தக்க கொழுப்பு அமிலமாக மாற்றி வழங்கும். அது 'பியூட்ரிக் அமிலம்' எனப்படும். இது உடற்செல்களுக்கான அத்தியாவசிய எரிபொருளாகும்.

* நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் புரப்பியானிக் அமிலம், அசிட்டிக் அமிலம் எனப்படும் இரு கொழுப்பு அமிலங்களையும் உருவாக்குகிறது. தசை மற்றும் நுரையீரல் செல்களின் எரிபொருளாக இவை பயன்படும். இந்த புரப்பியானிக் அமிலம்தான் ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் செயலிலும் பங்கெடுக்கிறது.

* பார்லியில் உள்ள 'பீட்டா குளுகான்' எனும் நார்ப் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை பித்தநீருடன் கலந்து, கழிவுப் பொருட்களுடன் சேர்த்து அகற்றிவிடுகிறது.

* பார்லியில் 'வைட்டமின் பி' (நியாசின்) நல்ல அளவில் காணப்படுகிறது. அதிக அளவில் பார்லியை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, இதயவியாதியான கார்டியோ வாஸ்குலார் பாதிப்புக்கு நியாசின் எதிர்ப்பு ஆற்றல் வழங்கும். மேலும் கெட்ட கொழுப்புகளான லிப்போ புரோட்டின் மற்றும் கொலஸ்டிராலின் அளவையும் கட்டுப்படுத்தும். ஒரு கப் பார்லி சாப்பிட்டால் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய 'வைட்டமின் பி' சத்தில் 14.2 சதவீதம் கிடைக்கும்.

* உடலுக்கு அத்தியாவசியமான தாதுப் பொருட்கள் சிறந்த அளவில் காணப்படுகிறது. செலினியம் தினசரி அளவில் 52 சதவீதமும், டிரிப்டோபான் 37.5 சதவீதமும், தாமிரம் 31.4 சதவீதமும், மாங்கனீசு 31 சத வீதமும், பாஸ்பரஸ் 23 சதவீதம் உள்ளன.

* காலை உணவில் பார்லியை அதிகமாக சேர்த்து வர இதய பாதிப்புகளை வெகுவாக கட்டுப்படுத்தலாம். 40 வயது கடந்த பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு நன்மை வழங்கக் கூடியது பார்லி. மார்பக புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் தரும்.

* மிகுதியாக காணப்படும் மக்னீசியம், 300 நொதிகளை தூண்டும் துணைக்காரணியாக செயல்படுகிறது. இன்சுலின் சுரப்பதை தூண்டுவதால் நீரிழிவு பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது. பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் தருவதாகவும் உள்ளது.

வழக்கமாக பார்லி சேர்த்துவந்தால் ஆஸ்துமா பாதிப்புகள் அண்டாது. பார்லி தோற்றத்தில் கோதுமையின் சாயலில் இருக்கும். இதனை அப்படியே வேக வைத்து அரிசி சாதம்போல சாப்பிடலாம்.

கோதுமையைப் போலவே மாவாக அரைத்து சப்பாத்தி, கூழ், தோசை, இட்லி என பல உணவுப் பண்டங்கள் தயாரித்து ருசிக்கலாம். பார்லி மாவு கலந்து கேக், இனிப்பு வகைகள் செய்து சாப்பிடலாம். பார்லி சூப் உடலுக்கு தெம்பு தரும். இதயத்துடிப்பு சீராகும். மதுபானம் தயாரிப்பில் நொதித்தலுக்கு பார்லி உதவுகிறது.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

[TABLE="width: 100%"]
[TR]
[TD]
[TABLE="width: 100%"]
[TR]
[TD="class: newsSection2, align: justify"]மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும். 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.

[/TD]
[/TR]
[TR]
[TD="class: newsSection2, align: justify"]பார்லி கஞ்சி
பார்லியை வெறும் வானொலியில் வறுத்து அதிலேயே நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து பின் வடிகட்டி பருகவும்.


பயன்கள்
கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள். கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து. இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும்.


பார்லி சப்பாத்தி
பார்லி மாவு, கோதுமை மாவு, உப்பு போட்டு தேவையான அளவு சூடான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி தோசை கல்லில் போட்டு சுட்டால் சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.


பயன்கள்
இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து சாப்பிட்டால் உடல் பருமனிலிருந்து விடுபடலாம். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிப்பதற்கு இந்த சப்பாத்தி சிறந்த மருந்தாகும்.
[/TD]
[/TR]
[/TABLE]
[/TD]
[/TR]
[/TABLE]
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

பார்லி அரிசி உணவு உடலுக்கு உகந்தது

பார்லி அரிசியில் பல வகையான சத்துப் பொருள்களும், சர்க்கரையும் அடங்கியுள்ளது. ஊட்டச்சத்து மிகுந்த பார்லி உடல் வலிமைக்குப் பெரிதும் உதவுகிறது.பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக் கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான “டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன.கஞ்சி தயார் செய்ய பார்லி அரிசியைக் கொதிக்க வைக்கும் போது இந்தச் சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறிவிடுகின்றன.

பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள்.
தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும்.

உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.கோதுமையிலும், ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும் தயாரிக்கும் பொழுது அவைகளிடத்திலிருக்கும் நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன.

ஆனால் பார்லியில் பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து எந்த வகையான தயாரிப்பு முறையிலும் அழிவதில்லை.
இதுதான் பார்லியின் சிறப்புக் காரணம். இது உடம்பில் இருக்கிற சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பார்லியில் இருக்கும் நார்ச்சத்து சக்திமிக்கது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

பார்லி தண்ணீர் – உங்கள் இரகசிய எடை இழப்பு கருவி

நீங்கள் கண்ணாடியைப் பார்த்து உங்கள் வயிறு தட்டையாக இருக்க விரும்பினால, இங்கே ஒரு இயற்கையான மருந்து நீங்கள் எடை இழக்க, குறிப்பாக உங்கள் தொப்பையை சுற்றி, சொல்லப் பட்டிருக்கிறது.

பார்லி எப்படி எடை இழப்பில் உதவுகிறது?

பார்லி கரையும் மற்றும் கரையாத நார்சத்துக்கு சிறந்த ஆதாரமாகும்., இந்த குணம் உங்கள் வயிற்றில் அது இருக்கும் போது விரிவடைய உதவுகிறது, அதன் மூலம் நீங்கள் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பியிருப்பதாக உணர்வீர்கள். அது உங்கள் மலச்சிக்கலைத்தளர்த்துகிறது மற்றும் (ஆயுர்வேதம் படி,உங்கள் வயிற்றில் நச்சு கழிவுகள்) முத்துகளை அழிக்க அல்லது உங்கள் வயிற்றில் சுவர்களில் ஒட்டியுள்ள விடும்.கழிவு விஷயத்தை வெளியேற்ற உதவுகிறது.இந்த தானியம்உங்கள் உடலில் நச்சு மற்றும் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றஉதவுகிற டையூரிடிக் பண்புகள் கொண்டது

இந்த தீர்வை எப்படி உபயோகிப்பது

இரண்டு மேசைக் கரண்டி பார்லி விதைகளை எடுத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் அதனுடன் சுமார் 2 லிட்டர் நீர் ஊற்றி சேர்க்கவும். இந்தக் கலவையை உருட்டல் கொதிநிலை வரும் வரை வைக்கவும். ஒரு மூடியை பாத்திரத்தின் மேல் மூடி அதை சமைய உதவவும். உங்கள் எடை இழப்பு பானம் தயாராக இருக்கிறதா என்று அறிந்து கொள்ள நல்ல வழி நீர் நிறம் மாறுகிறதா என்பதைப் பார்ப்பது தான். (அது இறுதியில் ஒரு இளஞ்சிவப்பு நிறத்திற்குமாறும்) மற்றும் விதைகள்,என்று கசிவதாகவும்மற்றும் பெரியதாக இருக்கும்.

இப்போது நீரை வடிகட்டவும். தினமும் நாள் முழுதும் இந்த நீரை தொடர்ச்சியாக குடித்து விளைவுகளைப் பாருங்கள். பார்லி நீரின் சுவை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், இதனுடன் ஒரு எலுமிச்சையின் சாறு, சிறிது உப்பு மற்றும் தேனை சேர்த்து சுவையாக்கவும்.இந்தக் கலவை எடை இழப்பைத் தவிர, நீர்போக்கைத் தடுக்கவும், சிறுநீர் பாதை தொற்றுநோய்தொடங்குவதைத் தடுக்கவும், மற்றும் உங்கள் உடலை கோடை வெப்பத்தில் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

பார்லி தண்ணீர் குடியுங்கள்!

கைக் குழந்தைகளுக்கு நோயாளிகளும் மட்டுமே பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு
முறையாவது அருந்த வேண்டும்.இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.

அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ் உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவைநிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது.மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும் பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது மூன்று வேளையாவது குடிப்பது நல்லது.

மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள்.தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்திகிடைக்கும்.

இதற்க்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்துகொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடைகுறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரைதினமும் அருந்துங்கள்.

கர்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில் கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும்
ஒரு கப் குடிக்க வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

பருமனைக் குறைக்கும் பார்லி!

நரம்பை வலுப்படுத்தும் பார்லி!
––––––––––––––––––––––––––
மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில், பார்லி கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு.

ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில், 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும். 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும், இரும்பு சத்தும், தாராளமான அளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட, பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.

பார்லி கஞ்சி


செய்முறை
பார்லியை வெறும் வானொலியில் வறுத்து, அதிலேயே நீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் உப்பு சேர்த்து, கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து, பின் வடிகட்டி பருகவும்.

இதனால் ஏற்படும் பயன்கள்
கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு, காலில் சுரம் ஏற்பட்டால், நீர் நன்கு போவதற்காக தருவார்கள். கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு, இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து. இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம், நரம்புகள் வலுப்படும்.

பார்லி சப்பாத்தி செய்முறை
பார்லி மாவு, கோதுமை மாவு, உப்பு போட்டு, தேவையான அளவு சூடான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் இந்த மாவை சப்பாத்திகளாக உருட்டி, தோசை கல்லில் போட்டு சுட்டால், சத்தான பார்லி சப்பாத்தி ரெடி.

இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து சாப்பிட்டால், உடல் பருமனிலிருந்து விடுபடலாம். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிப்பதற்கு, இந்த சப்பாத்தி சிறந்த மருந்தாகும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

சத்தான பார்லி கஞ்சி
தேவையான பொருட்கள்:

முழு பார்லி - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

• முதலில் பார்லியை சுத்தம் செய்து பொன் வறுவலாக வறுத்துக் ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.

• அடுப்பில் குக்கர் வைத்து அதில் பொடித்த பார்லி, உப்பு, தண்ணீர் சேர்த்து 5 விசில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

• சத்தான பார்லி கஞ்சி ரெடி

• வயிற்றுப் போக்கு ஆகும் குழந்தைகளுக்கு இது மாமருந்தாகும். காய்ச்சலின் போது இதை அருந்தலாம்.

• குழந்தைகளுக்கு கொடுக்கும் போது இதில் உப்புக்கு பதிலாக கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.
 

spmeyyammaisp06

Citizen's of Penmai
Joined
May 3, 2011
Messages
664
Likes
827
Location
chennai
#9
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

nice,
thank you frnd
 

Dangu

Ruler's of Penmai
Joined
Oct 7, 2014
Messages
10,950
Likes
13,720
Location
CHROMEPET
#10
re: Health benefits of Barley -பார்லியின் மருத்துவ குணங்கள்

Very useful info. Thanks Lakshmi.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.