Health Benefits of Beetroot - ஆரோக்கியப் பெட்டகம்: பீட்ரூட்

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#1


பீட்ரூட்டின் நிறம், மணம், குணம் என எல்லாமே அதை ருசிக்கத் தூண்டுபவை. செக்கச் சிவந்த அதன் நிறத்தைப் பார்த்து, ‘பீட்ரூட் சாப்பிட்டா ரத்தம் ஊறும்’ என்கிற அளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருப்போருக்கு பீட்ரூட்டின் அறியப்படாத பக்கங்களையும் காட்டி, சாப்பிட வைக்கும் இங்கே பகிரப்பட்டிருக்கும் தகவல்கள்!

‘‘பீட்ரூட் ஆசியா, வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்ந்து வரும் பண்டைய காயாகும். அந்த காலத்தில் பீட்ரூட்டின் கீரையை மட்டுமே சாப்பிடுவார்கள். பீட்ரூட் பல முறைகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதை ஜூஸ் ஆக செய்தால் அதில் தானாக இனிப்பான சுவை வரும். அந்த ஜூஸில் சில மூலிகைகளைச் சேர்த்தும் பருகலாம். பீட்ரூட் பல காலங்களாக மருத்துவ நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்காக உபயோகப் படுத்தப்படுகிறது. இதன் சிவப்பு நிறம் மற்றும் இனிப்புச் சுவையினால் சிறுவர் முதல் முதியவர் வரை எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

பீட்ரூட்டை சாலட், சூப், ஊறுகாய், பொரியல், கூட்டு மற்றும் குழம்புகளில் சேர்த்துக்கொள்ளலாம் பீட்ரூட்டின் கீரையை உண்ணலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆம்... அதை நீங்கள் சாதரணமாக மற்ற கீரைகளைச் சமைப்பது போலவே வேக வைத்தோ, பொரியலாகவோ, கூட்டாகவோ உண்ண லாம்...’’


‘‘பீட்ரூட் இதயத்துக்கு நன்மை செய்யும் காய். இதில் உள்ள தனிப்பட்ட நிறமி ஆன்ட்டிஆக்ஸிடன்டுகள் (Pigment Antioxidants) இதய நோய்களுக்கு பாதுகாப்பளிக்கின்றன. இது உடலில் உள்ள கொழுப்பின் (Cholesterol) அளவை குறைக்கும். அதோடு, வயதான தோற்றம் அடையும் தன்மையை குறைக்கும் திறன் கொண்டது. பீட்ரூட்டில் அதிகமான சர்க்கரை அளவு இருந்தாலும், இதை நீங்கள் வாரத்தில் 2 அல்லது 3 தடவை உண்ணலாம். இதன் கீரையை அதைவிட அதிகமாகவும் உண்ணலாம்.
 
Last edited:

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#2
பீட்ரூட்டும் ரத்த அழுத்தமும்

பீட்ரூட் ஜூஸ் குடித்த சில மணி நேரங்களில், அது அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும். ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் (100 கிராம்) ரத்த அழுத்தத்தை 45 புள்ளிகள் குறைக்கும் திறன் கொண்டது என்று பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர். மாரடைப்பு வரும் ஆபத்தைக் குறைக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இதில் உள்ள அதிக நைட்ரேட் அளவு நைட்ரிக் ஆக்ஸைடு எனும் வாயுவை உற்பத்திச் செய்கிறது. அந்த வாயு ரத்த நாளங்களை விரியச் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

இன்னும் சத்துகள் ஏராளம்...

பீட்ரூட்டில் பீட்டசயனின் என்னும் நிறமி (Pigment) உள்ளது. இதுவே பீட்ரூட்டின் நிறத்துக்குக் காரணம். இந்த பீட்டசயனின் ஒரு ஆன்ட்டிஆக்ஸிடன்டும் கூட. ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள உயிரணுக்களின் சேதத்தைத் தவிர்க்கும். இந்தக் காயில் உள்ள மூலப் பொருளான betaine உயிரணுக்களை பாதுகாத்து, அலர்ஜியை தடுத்து, உடல் உறுப்புகளைப் பாதுகாத்து செயல் திறனையும் அதிகரிக்கிறது. பீட்ரூட்டில் ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி (நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்), நார்ச்சத்து, மாங்கனீஸ் (எலும்புகள், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றுக்கு நல்லது), பொட்டாசியம் (ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு உதவும்) போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

இது உடலில் ரத்தம், உயிரணு உற்பத்தி மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் அளிக்கிறது. இதில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. ஃபோலிக் ஆசிட் கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு கருவின் முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு அவசியம்...

Spina bifida என்னும் முதுகுத்தண்டு குறைபாட்டையும் தடுக்கும். பீட்ரூட் இரும்புச் சத்து நிறைந்தது... ரத்த சோகையை நீக்கவல்லது... கர்ப்ப காலத்தில் சோர்வை நீக்கும். இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. குடல் இயக்கங்களை அதிகரித்து மலச்சிக்கலை தடுக்கும். ஆன்ட்டிஆக்ஸிடன்ட் என்சைம்களை அதிகரித்து வெள்ளை அணுக்களையும் பெருக்கி, தொற்று நோய்களை தடுக்கும்.

பீட்ரூட்டில் சக்திவாய்ந்த தாவர ஊட்டச்சத்துகள் (Phytonutrients) உள்ளன. இவை புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. ஆய்வுகளில், பீட்ரூட்டில் உள்ள பீட்டானின் (Betanin) நிறமி புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டில் உள்ள பீட்ட சயனின் (Betacyanin) நிறமியும் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் திறன் கொண்டது.

 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#3
எப்படித் தேர்ந்தெடுப்பது?

பீட்ரூட் மென்மையாகவும் திடமான தோலுடனும், சிவப்பாக இருக்க வேண்டும். அதன் கீரை கரும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். பீட்ரூட்டின் மேல் பகுதிகளில் செதில் இருந்தால் வாங்கக் கூடாது.

சருமத்துக்கு உதவும் பீட்ரூட் சாறு


பீட்ரூட், சருமத்துக்கு மிகவும் நல்லது. சரும ஆரோக்கியத்தை அதிகரித்து தோலுக்கு சரியான ரத்த ஓட்டத்தை அளித்து தேவையான ஊட்டச் சத்தை வழங்குகிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை களைத் தவிர்க்கலாம். முகப்பரு மற்றும் கட்டிகள் வராது. இது ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும். பீட்ரூட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் தோலில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் வருவதை தவிர்க்கும். பீட்ரூட் ஜூஸ் உடலுக்குத் தேவையான நிறைய ஊட்டச்சத்துகளை கொண்டது. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நன்றாக முடி வளர்வதற்கும் உதவுகிறது. பீட்ரூட்டின் சாறு தலைக்கு தேவையான ஈரப்பதத்தை தந்து, தலை வறண்டு போவதை நிறுத்தும். பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுதலை தரும். விளையாட்டு வீரர்களுக்கு!

பீட்ரூட் சாற்றை விளையாட்டு வீரர்கள் குடித்தால், அது அவர்களுக்கு அதிக சகிப்புத் தன்மையை தந்து, ஆட்டத் திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் ஜூஸ் விளையாட்டு வீரரின் வலிமையையும் விளையாடும் திறனையும் அதிகரிக்கும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால்? பீட்ரூட் ஜூஸ் ஒரு diuretic. அதாவது, அது உடலில் இருந்து நீரை வெளியேற்றும் திறன் கொண்டது. அளவுக்கு அதிகமாக பீட்ரூட் ஜூஸ் குடித்தாலே ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் மற்றும் பலவீனம் தரும். வீரியம் அதிகம் உள்ள பீட்ரூட் ஜூஸ் (தண்ணீர் சேர்க்காதது) குடித்தால், அது வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.

பீட்ரூட் கீரையை உண்ணுங்கள்!

பீட்ரூட் கீரையும் பெரும்பயன் கொண்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீட்ரூட் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்தும் உள்ளன. பீட்ரூட் கீரையின் ஊட்டச்சத்து மதிப்பு பீட்ரூட்டைக் காட்டிலும் அதிகம். பீட்ரூட் கீரையில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை உறுதியாக்கி ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னையைத் தடுக்கும். இக்கீரை அல்சீமரை தடுக்கும் வகையிலான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் இதுவரை பீட்ரூட் கீரையை உபயோகப்படுத்தவில்லை என்றால், இன்றே ஆரம்பியுங்கள். அதை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து உண்ணலாம்.
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#4
ஸ்பெஷல் ரெசிபி

பீட்ரூட் - சோயா பாஸ்தா

என்னென்ன தேவை?
கோதுமை பாஸ்தா - 2 கப், சோயா மீல் - 500 கிராம், காய்கள் - 1 கப் (கேரட், செலரி, கீரை, குடை மிளகாய். இதில் பீட்ரூட் கீரை பயன்படுத்தப்
பட்டுள்ளது), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், தக்காளி சாஸ் - 2 டேபிள்ஸ்பூன், சில்லி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன், தனியா தூள், சீரகத் தூள், பெருஞ்சீரகத் தூள் - தலா 1 டீஸ்பூன், கரம் மசாலா - ஒரு சிட்டிகை, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு.

எப்படிச் செய்வது?

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் தண்ணீரில் பாஸ்தா சேர்த்து, அதனோடு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

2. அது வேகும் நேரத்தில், ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, வெங்காயத்தையும் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து, வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

3. அதன் பிறகு சோயா மீலை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

4. செய்து வைத்துள்ள கலவையில் தக்காளி சாஸ், சில்லி சாஸ் மற்றும் எல்லா மசாலா தூள்களையும் சேர்க்கவும்.

5. 2 நிமிடத்துக்குப் பிறகு பீட்ரூட் கீரை அல்லது துருவிய பீட்ரூட் மற்றும் எல்லா காய்களையும் சேர்த்து, நன்றாக கிளறி, சிறிது நேரம் வேகவைக்கவும்.

6. கடைசியாக இந்தக் கலவையுடன் பாஸ்தா சேர்த்து நன்றாகக் கிளறவும். பின்னர் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#5
பீட்ரூட்- மாதுளை ஜூஸ்

என்னென்ன தேவை?


பீட்ரூட் - 1, மாதுளை - 1, எலுமிச்சை ஜூஸ் - 1 டேபிள்ஸ்பூன் (அல்லது பாதி எலுமிச்சை), சர்க்கரை / தேன் - 2 அல்லது 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

1. பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோல் உரித்து, சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் வைக்கவும்.

2. மாதுளையை வெட்டி அதன் பழத்தை எடுத்து பீட்ரூட்டுடன் சேர்க்கவும்.

3. அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

4. அதனை வடிகட்டவும்.

5. அதை எலுமிச்சைப்பழச் சாறுடன் சேர்த்து, சர்க்கரை மற்றும் இன்னும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

6. குளிர்ந்த புத்துணர்வு தரும் ஜூஸ் ரெடி.
 

umasaravanan

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2013
Messages
3,241
Likes
8,722
Location
THENI
#6
பீட்ரூட் சட்னி

என்னென்ன தேவை?

பீட்ரூட் - 1, சாம்பார் வெங்காயம் - 3, பூண்டு - 2, துருவிய தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன், புளி - ஒரு சிறிய உருண்டை, உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க...

கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி விதை - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5.

தாளிக்க...

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

1. பீட்ரூட்டை நன்றாகக் கழுவி, தோல் சீவிக்கொண்டு, சிறுதுண்டுகளாக வெட்டிக்
கொள்ளவும்.

2. ஒரு கடாயில் சாம்பார் வெங்காயம், பூண்டு, புளி, நறுக்கிய பீட்ரூட் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து 5-10 நிமிடங்களுக்கு வதக்கவும்.

3. இன்னொரு கடாயில் ‘வறுத்து அரைக்க’ கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து, பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.

4. அதனை ஆறவிடவும்.

5. ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

6. சமைத்து வைத்திருக்கும் பீட்ரூட் மற்றும் தேங்காய் கலவையை மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

7. வேறு பாத்திரத்துக்கு மாற்றவும்.

8. சட்னியை தாளித்துப்பரிமாறவும்.

சத்துள்ள ஆரோக்கியமான சட்னி இது. இட்லி, தோசை, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்துப் பரிமாறலாம். இதை ரொட்டியில் ஜாம் போல தடவியும் உண்ணலாம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Thanks Uma for sharing all these benefits and other tips of beetroots
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.