Health benefits of Dates - ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து ப&#

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#1
ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை...!

பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது.

தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப்பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.

பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

பாலுடன், ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இள*ம் பெ*ண்க*ள் பெரு*ம்பாலானவ*ர்களு*க்கு இர*த்த சோகை உ*ள்ளது. இதனா*ல் குழ*ந்தை*ப் பேறு காலக*ட்ட*த்*தி*ல் பா*தி*ப்பு ஏ*ற்படு*கிறது.

இதனை*த் த*வி*ர்*க்க பே*ரி*ச்ச*ம் பழ*த்தை உ*ட்கொ*ள்ளு*ங்க*ள் இர*த்த சோகையை*ப் போ*க்*கி*க் கொ*ள்ளு*ங்க*ள்.

வளரு*ம் குழ*ந்தைகளு*க்கு பே*ரி*ச்ச*ம் பழ*ம் கொடு*த்து வ*ந்தா*ல் அது அவ*ர்க*ளி*ன் ஆரோ*க்*கியமான வள*ர்*ச்*சியை உறு*தி செ*ய்யு*ம் எ*ன்ப*தி*ல் ஐய*மி*ல்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.




 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: Health benefits of Dates - ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து &#298

You have brought the wonderful benefits of Dates! thank you!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.