Health benefits of drumstick leaves - முருங்கை ஒரு அற்புத விருட்சம்

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
வசதி படைச்சவங்களுக்கு குங்குமப்பூ, வசதியில்லாதவங்களுக்கு முருங்கைப் பூ’ - இப்படி ஒரு வசனமே உண்டு
' முருங்கைக்கு இன்னொரு பெயர் கிழவி. 'பிரம்ம விருட்சம், கற்பகத் தரு’னு சொல்வாங்க. உச்சந்தலையிருந்து உள்ளங்கால் வரைக்கும் எங்க பிரச்னை இருந்தாலும் முருங்கை, அதை சரிசெஞ்சிடும்.
உடல் சோர்வு, நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைபாடுன்னு அத்தனைக்கும் முருங்கைப் பூ நல்ல மருந்து.
மூணு முருங்கைப் பூவைக் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைச்சிக்கணும். ஒரு டம்ளர் பால்ல, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு சுண்டக் காய்ச்சி, கருப்பட்டி சேர்த்து ராத்திரியில் குடிச்சிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவே இருக்காது.''
''.
புருஷன் பொண்டாட்டிக்குள்ள இருக்கிற தாம்பத்தியப் பிரச்னையைக்கூட முருங்கை தவிடுபொடியாக்கிடும்.
அந்த அளவுக்கு அற்புத விருட்சம்.
முருங்கைக் கீரைச் சாறை கர்ப்பிணிப் பொண்ணுங்க குடிச்சிட்டு வந்தால், கருப்பையின் மந்தத்தன்மை போய், பிரசவம் எளிமையாகிரும்.
தாய்ப்பால் சுரப்பைக்கூட இது அதிகப்படுத்தும்.
சிறுநீரைப் பெருக்கும்.
கால் வலி இருந்தா, முருங்கைக் கீரைப் பொரியல் செஞ்சு சாப்பிடலாம். சட்டுன்னு குணமாயிரும்.
நல்ல ஜீரணசக்தியும் கொடுக்கும்.
கீரையோட பருப்பைக் கடைஞ்சு மூணு நாளைக்குச் சாப்பிட்டா, கீழ் மூட்டுல வலி இருந்த இடம் தெரியாம ஓடிரும்.
ஆனா என்ன, வயித்துப் பிரச்னை வந்தாலும் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.
'அந்தக் காலத்துல ராஜாக்கள், போர் வீரர்களுக்கு முருங்கைக் கீரையைத்தான் உணவாத் தருவாங்களாம். அவங்க உடல் பலம் அதிகரிச்சு, எதிரிகளோட போரிடுவாங்க
'. முருங்கைக் கீரையை வேகவைச்சு அதோட சாறைக் குடிச்சிட்டு வந்தா... உடல் சூடு குறையும்.
உஷ்ணத்துனால ஏற்படுற மந்தம், உட்சூடு, கண் கோளாறு, நாள்பட்ட மலச்சிக்கல், காக்கா வலிப்பு, சர்க்கரை நோய் எல்லாமே சரியாயிரும்.
அதிக சதை, மூட்டு வலி, சளி, இருமல்கூட குறைஞ்சிடும்.
நோயே நெருங்கவிடாமச் செய்ற சக்தி முருங்கைக்கு இருக்கு வாசம்பா.
கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டா, ரத்த சோகை போயி, உடம்புல நல்ல ரத்தம் ஊறும். பல்லு நல்லா வலுவாகிடும்.
தோல் வியாதி வராது.''
'' 'மாடு... வீட்டுக்குச் செல்வம். முருங்கை... தோட்டத்துக்குச் செல்வம்.’
'', ரெண்டு நாளா நெஞ்சுல சளி கட்டிருக்கு. அதுக்கு முருங்கையில மருந்து இருக்கா?!''
''முருங்கைக் கீரையை நல்லா நறுக்கி உப்புப் போட்டு வேகவெச்சு, அதுல ஒரு ஸ்பூன் மிளகு, உப்பு, ஒரு வெங்காயம், தக்காளி சேர்த்து சூப் மாதிரி செஞ்சு சாப்பிடலாம். ஆஸ்துமா, நெஞ்சு சளினு சுவாசக் கோளாறுப் பிரச்னை சரியாயிரும்.
பித்த வாயு, கடுமையான ரத்த சீதபேதி, வயித்துப் புண், தலைவலி, மலச்சிக்கல், வாய்ப்புண் எல்லா நோய்க்கும் முருங்கை நல்ல மருந்து.
வாரத்துல ரெண்டு நாள் முருங்கைக்காயை வேகவெச்சு கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.''


'முருங்கைப் பிஞ்சை, சின்னச் சின்னதா நறுக்கி நெய்ல வதக்கிச் சாப்பிட்டு வந்தா, ரத்தத்துல சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகமாயிரும்
'' நிஜமாவே, முருங்கை ஒரு அற்புத விருட்சம்தான்
movie.-"siruvar malar
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Really very useful information you have shared about the medicinal benefits of முருங்கை. thank you!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#3
முருங்கையின் பலன்கள் அருமையாக உள்ளன
 

jbsk

Friends's of Penmai
Joined
Jul 19, 2013
Messages
255
Likes
427
Location
bangalore
#4
really an useful infomation.
 

Divyakala

Commander's of Penmai
Joined
May 15, 2012
Messages
1,071
Likes
3,117
Location
Chennai
#5
Interesting Sir..
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.