Health benefits of Lemon-எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் ம&#299

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.

இதனால் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும். குளிர்காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எக்காரணத்தால் வந்தாலும் சரி எலுமிச்சை சாறு பருகுவதால் காய்ச்சல் விரைவில் தணிகிறது என்கிறார்கள் ஸ்பெயின் நாட்டு மருத்துவர்கள். எலுமிச்சை சாற்றை ஒன்றுக்கு 4 பங்கு என நீர் சேர்த்து கலந்து பெண் உறுப்பைக் கழுவுவதால் நோய்க் கிருமிகள் அழிக்கப்பட்டு ஆரோக்கியம் உண்டாகும்.

இது கடைத் தெருவில் விற்கும் ரசாயனக் கலவைகளான மருந்தை விட பாதுகாப்பானது. மேலும் நம்பகமானது. ஏனெனில் எலுமிச்சை சாறு மிகச்சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி எரிச்சலை உண்டாக்காததும் கூட. வயிற்றுக் கோளாறு, சீரணக்கோளாறு, என்பது அனைவருக்கும் மிகப் பொதுவான ஒன்றாகும்.

அந்நிலையில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறும் சர்க்கரையும் சேர்த்துப் பருகுவதால் பல்வேறு வயிற்றுப் பிரச்சினைகளுக்கும் விடிவு ஏற்படுகின்றது. நம் உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்த எலுமிச்சை சாறு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன் செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்கின்றது.

அடிபட்டதாலும் உராய்வதாலும் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வெளியாகும் போது சில துளிகள் எலுமிச்சை சாற்றை காயங்களின் மேல் விடுவதால் உடனடியாக ரத்தம் வீணாக வெளியேறுவது தடுக்கப்படும். எலுமிச்சைசாற்றை நேரடியாக காயங்களின் மேல் ஊற்றாமல் ஒரு பஞ்சு உருண்டையில் நனைத்து காயங்களுக்கு மேல் வைத்து கட்டுப் போடலாம்.

இதனால் ரத்தம் நிற்பது மட்டுமின்றி தொற்றுக் கிருமிகள் தாக்காமல் விரைவில் ஆறிவிடும். பல்வேறு மருத்துவங்கள் செய்தும் பலன் அற்ற நிலையில் பரிதவிக்கும் பாலுண்ணி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலுமிச்சை ஒரு வரப்பிரசாதமாகும்.

ஒரு குச்சியில் பஞ்சைச் சுற்றி காது சுத்தப் படுத்தப்பயன்படும் பட்ஸ் என்னும் குச்சியை எலுமிச்சை சாற்றில் நனைத்து பாலுண்ணிகளின் மேல்படும் படி மேற்பூச்சாகப் பூசிவர நாளடைவில் பாலுண்ணிகள் எலுமிச்சை சாற்றில் கலந்துள்ள அமிலச் சத்தால் கரைந்து விடும். இடைவிடாமல் தொடர்ந்து சிலநாட்கள் இப்படிச் செய்வதால் நிச்சயமான பலன் உண்டாகும்.

ஆஸ்துமா நோயாளிகள் ஒத்துக் கொள்ளாத உணவுப் பண்டங்களைத் தவிர்த்து அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் ஆஸ்துமா என்னும் கொடிய இரைப்பு நோயினின்று விடுதலை பெறலாம். பொதுவாக ஆஸ்த்துமா நோயாளிகள் உணவு உண்பதற்கு முன் இரண்டு மேஜைக் கரண்டி எலுமிச்சை சாறு பருகுவதோடு படுக்க போகும் முன்னும் இதுபோலப் பருக வேண்டும்.

ஒரு புழுவினுடைய பயணத்தைப் போல இருந்து நம் குடல் உண்ட உணவைத் தாம் சுருங்கி விரிவதால் செரிமானம் செய்து கழிவாக வெளித் தள்ளுகிறது. இந்த சுருங்கி விரியும் செயலை ஊக்குவிப்பதாக எலுமிச்சை சாறு விளங்குகிறது. முறையான செரிமானத்துக்கும் அழுக்குகள் வெளியேற்றத்துக்கும் அன்றாடம் காலையில் எழுந்ததும் ஒரு சிறு எலுமிச்சம்பழச் சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் மேற்சொன்ன நன்மைகள் ஏற்படும்.

எலுமிச்சை சாறு ஈரலின் செயல்பாட்டை செம்மைப்படுத்த வல்லது. மேலும் ரத்தத்தில் உள்ள அமில உப்பை (யூரிக் ஆசிட்) இது கரைப்பதோடு தேவையற்ற நச்சுக்களையும் போக்கவல்லது. ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் ஈரலிலுள்ள நச்சுக்கள் வெளியாகி விடும்.

எலுமிச்சை சாற்றில் மிகுந்துள்ள விட்டமின் சி சத்து மற்றும் ப்ளேவனாய்ட்ஸ் குளிர்க்காய்ச்சல் மற்றும் சளி பிடிக்கக் காரணமான நோய்க் கிருமிகளை எதிர்த்து தடுத்து நிறுத்துகிறது. எலுமிச்சை சாறு தொடக்கத்தில் ஒரு அமிலத்தைப் போல தோன்றிடினும் அது ஆல்க லைன் சத்தாக செயல்பட்டு உடலினுடைய நீர்ச்சத்தை சமப்படுத்த உதவுகிறது.

எலுமிச்சை சாற்றில் கலந்துள்ள சிட்ரிக் அமிலம் பித்தப்பையிலுள்ள கற்களைக் கரைக்க உதவுவதோடு சிறுநீரக கற்களையும் கரைக்க உதவுகிறது. மேலும் உடலில் பல பகுதிகளிலும் சுண்ணாம்புச் சத்து படிவத்தை தடுக்க உதவுகிறது. எலுமிச்சை சாற்றிலுள்ள விட்டமின் சி சத்து நோய் ஏற்படுவதற்கும் வயது முதிர்வதற்கும் காரணமான சில இரசாயன மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது.

எலுமிச்சை சாறு வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொன்று வெளியேற்ற வல்லது. போதிய பிராண வாயு இல்லாத போதும் மூச்சு விட சிரமமாக இருக்கும் போதும் மிக உயர்ந்த மலை மீது ஏறும் போதும் எலுமிச்சைச் சாறு அதை ஈடு செய்யும் வகையில் புத்துணர்வு தருகிறது.

இமயத்தின் உச்சியில் கால் பதித்த முதல் மனிதரான எட்மண்ட் ஹிலார் தன்னுடைய வெற்றிக்குக் காரணம் எலுமிச்சம்பழத்தையே சேரும் என்று சொல்லியுள்ளது குறிப்பிட்டுள்ளார். எலுமிச்சை சாறு மிக வலிய நோய்க் கிருமிகளை தாக்கி அழிக்க வல்லது. மரணத்தைத் தரக்கூடிய மலேரியா, டீப்தீரியா டைபாய்டு, காலரா போன்ற நோய்க்குக் காரணமான கிருமிகளை எளிதில் வெளியேற்றி ஆரோக்கியத்தை நிலைநிறுத்த வல்லது.

எலுமிச்சை சாற்றில் விட்டமின் பி சத்து நிறைந்து உள்ளது. ரத்த நாளங்கள் இதனால் பலப்படுத்தப்பட்டு அவற்றிலிருந்து கசிகின்ற ரத்தம் தடை செய்யப்படுகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் இதனால் குறைக்கப்பட்டு சமநிலை கொண்டு வரப்படுகின்றது. எலுமிச்சை சாறு கண்களுக்கும் ஆரோக்கியம் தரவல்லது.

பல கண்நோய்களை இது போக்க வல்லது. குறிப்பாக சர்க்கரை நோயால் கண் நரம்புகள் மற்றும் விழித்திரைகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகின்றது. எலுமிச்சை சாற்றில் உள்ள ரூட்டின் சத்து இதற்கு உதவுகிறது. எலுமிச்சை சாறு புற்றுநோயைக் கூட தடுக்க வல்லது. அல்லது குணப்படுத்தவும் வல்லது.

எலுமிச்சையில் 22 விதமான மருத்துவ தத்துவங்கள் அடங்கியுள்ளன. இவை புற்று நோயை குணப்படுத்த உதவுபவை. குறிப்பாக எலுமிச்சை சாற்றிலுள்ள லிமோனின் என்னும் எண்ணெய் சத்துவம் புற்றுநோய்க்குக் காரணமான செல்வளர்ச்சியை தாமதப்படுத்தக் கூடியது எனலாம். உலகில் உள்ள உணவுப் பொருள்களிலேயே எலுமிச்சையில் தான் செல்களுக்கு போதிய சக்தியைத் தரும் வகையில் எதிர் ஊட்டச்சத்து அமைந்துள்ளது.

இது ஆரோக்கியத்தை நிலைபெறச் செய்வது. எலுமிச்சை சாற்றில் நார்ச்சத்து உள்ளது. இச்சத்து பெருங்குடலின் ஒரு பகுதியை நன்கு செயல்பட உதவுகிறது. மேலும் பலமான நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது. எலுமிச்சை சாறு ஜீரண உறுப்புகளுக்கு பலம் தருவதோடு பித்த நீர் உற்பத்திக்கு துணையாக நிற்கிறது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Health benefits of Lemon-எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் ம&

Thanks for sharing.
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#3
Re: Health benefits of Lemon-எலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் ம&

good sharing....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.