Health Benefits of Radish - கிட்னீல கல் வரும்னு பயமா? கவலைய விடு&#2969

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
இன்றைய காலக்கட்டத்தில் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளாமல் துரித உணவுகளில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.பிறகு வயிற்றில் பிரச்சனை, சிறுநீரக்கத்தில் கல் என தினந்தினம் மாத்திரைகளை சாப்பிடும் நிலை தான் ஏற்படுகிறது.ஆனால் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்றால் ஒரே வழி காய்கறிகள் தான். அதிலும் முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் அரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றி பயம் இல்லாமலும் வாழலாம்.முள்ளங்கியில் இரண்டு வகை உண்டு.1.சிகப்பு முள்ளங்கி2.வெள்ளை முள்ளங்கி.இதில் சிகப்பு முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. மேலும் சுவைக்காக சேர்க்கப்படுவது.முள்ளங்கியின் மகத்துவங்கள்
முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும்.சிறுநீரக்கத்தில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.
நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.முடி உதிர்வதைத் தடுத்து, நன்கு வளர்ச்சியடையச் உதவும்.இறைப்பைவலி, வயிற்றுவலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டுவந்தால், தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும். குரல் இனிமையாகும்.முள்ளங்கியைத் தட்டிச்சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.முள்ளங்கி விதையை வெயிலில் காய வைத்து நன்கு தட்டி தேன் கலந்து லேகியமாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இரவில் தூங்கப்போகும் முன்பு கொஞ்சம் சாப்பிட்டு பால் அருந்தி வந்தால் நீண்ட நேரம் தாம்பத்திய சுகம் பெற முடியும்.
 

bharathi saravanan

Commander's of Penmai
Joined
Nov 10, 2014
Messages
1,612
Likes
3,223
Location
Chennai
#2
Re: கிட்னீல கல் வரும்னு பயமா? கவலைய விடுங்க

useful information thanks for sharing
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.