Health Hazards of Wearing Jeans-ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ஆண்களும் ஜீன்ஸ் அணியக் கூடாது!
உடையும் உடலும்
தன் வயதுக்கே உரித்தானகுறும்புத்தனங்களோடு துள்ளித்திரிய வேண்டிய பள்ளிக் குழந்தைகளுக்கு டை கட்டி, ஷூ அணிந்து கொள்ள நிர்ப்பந்திக்கிறோம். இளம்பருவத்தினர் தொடங்கி நடுத்தர வயதினர் வரையிலும் ஜீன்ஸின் மோகம் பரவிக்கிடக்கிறது. கார்பரேட் நிறுவனங்கள் ஷூ அணிந்து, டை கட்டி டக் இன் செய்து கொள்வதை தங்களது உடைக்குறியீடாக வைத்திருக்கின்றன. ‘கதரையே உடுத்துவோம்’ என்கிற சொல்லை தாரகமந்திரமாகக் கொண்டிருந்த இந்தியாவின் இப்போதைய உடைக் கலாசாரம் இதுதான்.

இவையெல்லாம் மேற்கத்திய நாடுகளின் மீதான மோகத்தில் விளைந்தவை. மேற்கத்திய சுற்றுலா பயணிகள் கூட நம் நாட்டுக்கு வரும்போது தளர்வான ஷாட்ஸ், டிஷர்ட் அணிந்திருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். குளிர்ப் பிரதேசங்களான அந்நாட்டு உடைகளை ஏ.சி.மற்றும் மின்விசிறிகளின் தயவின்றி வாழ முடியாத வெப்ப நாட்டில் வாழும் நாம் அணிவது சரியா? ‘மிகத் தவறு’ என்கிறது மருத்துவத்துறை. சரும நோய் மருத்துவர் வானதி திருநாவுக்கரசு இது குறித்துவிளக்குகிறார்.

“வெப்பமான தட்பவெப்ப நிலையில் நம் உடலில் இருந்து அதிக அளவில் வியர்வை வெளியாகும். நாம் உடுத்தும் உடை வியர்வையை உறிஞ்சக்கூடிய தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்பதால் நம் நாட்டுக்கு ஏற்ற உடை என்றால் அது பருத்திதான். பருத்தி உடைகள் அணிந்தாலும் சாயம் போகாதபடியான தரமான உடை களை அணிய வேண்டும். ஏனெனில், வெளியேறும் சாயத் தால் textile dermatitis எனும் சரும நோய் ஏற்படும். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடை களை அணியும்போது சுரக்கிற வியர்வை வெளியேறாமல், அதிலிருந்து பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி, படர்தாமரை போன்ற சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

நிக்கல் அலர்ஜி உள்ளவர்கள் ஜீன்ஸ் அணியும்போது அதன் பட்டனில் இருக்கும் நிக்கல் உலோகம் பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்கள் இறுக்கமானஉள்ளாடைகளை அணியும் நிலையில் தட்பவெப்பநிலை அதிகரித்து விந்து உற்பத்தி குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. உள்ளாடைகளில் உள்ள எலாஸ்டிக் இறுக்கமாக தோலோடு ஒட்டியிருப்பதால் தேமல் போன்றவை ஏற்படும். தளர்வான காட்டன் உள்ளாடைகளை அணிவதே நல்லது. பெண்கள் விரும்புகிற லெக்கிங்ஸ் உடையிலும் காட்டன் வகைகளை அணியலாம்.

குழந்தைகளுக்கு நாப்கின் உபயோகிப்பதில் கூட கவனம் தேவை. எந்த நாப்கினையும் மூன்று மணி நேரத்துக்குள் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சரும அலர்ஜி ஏற்படும்.

நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு தோல்தான். அதனைப் பராமரிக்க தினம் இரு வேளை குளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளலாம். மனிதர்களின் தோலில் இயற்கையாகவே 5.5 ஜீபி Balance (அமிலம் மற்றும் காரத்தன்மை விகிதம்) அளவிலான அமிலத்தன்மை இருக்கிறது.

இந்த அமிலத்தன்மை கிருமித்தொற்றுகளைத் தடுக்கும். இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சோப்புகளில் 7 ஜீபி அளவுக்கு மேல் அமிலத்தன்மை இருக்கின்றன. அவையெல்லாம் தோலுக்கு உகந்தவையல்ல.

சோப் வாங்கும்போது 7 ஜீபி அளவுக்கும் குறைவான சோப்பாக பார்த்து வாங்க வேண்டும். தோலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும் வரையில்தான் கெட்ட பாக்டீரியாக்களின் தாக்குதல் இருக் காது. ஆன்டிபயாட்டிக் சோப் உபயோகிக்கும்போது அவை தோலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழித்து விடுவதால் கெட்ட பாக்டீரியாக்களின் தாக்குதல் ஏற்படும்.

முடிந்த வரை தளர்வான காட்டன் உடைகளை அணிவதுதான் நமக்கு ஏற்றது. குறிப்பாக ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, டஸ்ட் அலர்ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய Atopic Diathesis
பிரிவினருக்கு தோல் நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என்பதால், இவர்கள் காட்டன் உடைகள் உடுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

ஷூ அணிவதும் நமக்கு உகந்ததல்ல. நீண்ட நேரம் ஷூ அணியும்போது விரல் இடுக்குகளில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு அதை குணப்படுத்துவது கடினமாகி விடும். துவைக்காத சாக்ஸை பயன்படுத்தும்போது வியர்வையின் மூலம் உற்பத்தியான கிருமிகளின் தாக்குதல் ஏற்படும். உணவு, உடை, வாழ்க்கைமுறை எல்லாம் நமது வாழிடத்தின் சூழலுக்கு ஏற்றபடிதான் அமைய வேண்டும். நமது சூழலுக்கு பொருந்தாத எதுவுமே கேடுதான்” என்கிறார் வானதி.

‘‘ஜீன்ஸ் போன்ற
இறுக்கமான
உடைகளை
அணியும்போது
சுரக்கிற வியர்வை
வெளியேறாமல்
அதிலிருந்து
பாக்டீரியாக்கள்
உற்பத்தியாகி
படர்தாமரை
போன்ற
சரும
நோய்கள்
ஏற்படும்
வாய்ப்புகள்
அதிகம்...’’

‘‘ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, டஸ்ட் அலர்ஜி ஆகியவற்றை உள்ளடக்கிய ATOPIC DIATHESIS பிரிவினருக்கு சரும நோய்கள் அதிகளவில் ஏற்படும்...’’
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.