Health tips -அழகு மனமும், உடலும்

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#1
அழகு மனமும், உடலும் :-
========================

இந்த திர்யினை இன்று துவங்குகிறேன்.
படித்த, தெரிந்த, நான் உபயோகிக்கும் சில , பல
டிப்ஸ் பெண்மை வாசகிகளுக்கு பயன் பெறட்டுமே என்ற நல்லெண்ணத்தில் !!!

விஞ்ஞான பூர்வமான அணுகுமுறை இருக்கும்....
பிடித்தால் படியுங்கள் !!!
படித்தால் கடைபிடியுங்கள் !!!
கடைப்பிடித்தால் நன்மை மட்டுமே கிட்டும் !!!
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#3
Re: அழகு மனமும், உடலும்

கண்களின் கீழ் கருவளையங்கள் :-
=================================

1) வயதை மிகைப்படுத்தி காட்டும்.
2) முக கவர்ச்சியை பாதிக்கும்.

ஏன் தோன்றுகிறது ?
====================

1) வெய்யிலின் தாக்குதல்
2) மேனி கறுப்பாகிறது வெப்பத்தினால்.
3) தூக்கமின்மை
4) களைப்பு
5) சத்து குறைவான உணவு
6) ஒவ்வாமை
7) தோல் தோற்று நோய்கள்.
8) பரம்பரை
9) வயது
10) அதிக அளவில் அல்ட்ரா வையலெட் கதிர்கள் தாக்கினால்
உடலில் மரபு அணுக்கள் பாதிக்கப்பட்டு, தோல் திசுக்கள்
உற்பத்தி செய்யும் ரசாயனப் பொருட்கள் மாறுபடுகின்றன.
11) இந்த அல்ட்ரா வையலெட் கதிர்கள் போலிக் அமிலத்தை சிதைத்து அதன் குறைவை ஏற்படுத்துகின்றன. சூரிய ஒளியின் பாதிப்பை குறைக்க சருமம் சில நடவடிக்கைகள் எடுக்கின்றது.
12) சருமத்தின் மேல் பகுதி கடினமாகி அல்ட்ரா வயலெட்
கதிர்கள் ஊடுருவாமல் தடுக்கிறது.
13) மெலனின் என்னும் தோல் நிறத்தை கொடுக்கும் பொருள்
உற்பத்தி அதிகம் ஆவதால், தோளின் கருமை நிறமும்
அதிக கருமை ஆகிறது.
14) ஆயுர்வேதம் வாத பித்த தோஷங்களின் குறைபாடுகளால்,
கண் கருவளையங்கள் உண்டாகின்றன என்கிறது.

............இவை காரணங்கள் ஆகலாம்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#4
Re: அழகு மனமும், உடலும்

பச்சை வெங்காயத்தை தயிரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும்.வயிற்று உபாதைகளும் நீங்கும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#5
Re: அழகு மனமும், உடலும்

நாக்கில் ருசி தெரியாவிட்டால், நார்த்தங்காயை மென்று
துப்பி விட்டு, பிறகு சாப்பிட்டால் ருசி தெரியும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#6
Re: அழகு மனமும், உடலும்

உங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்:-
*****************************************************************************
உங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உள்லேடுப்பதன் மூலம் கட்டாயம் உங்கள் உடலேடையை அதிகரிக்க முடியும்
வேர்க்கடலை வெண்ணெய்
******************************************
வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட் உடன், தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
முட்டை
*************
அனைவருக்குமே முட்டையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது என்பது தெரிந்தது தான். அத்தகைய முட்டையை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு அதிகமான அளவு புரோட்டீன், வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் போன்றவை கிடைத்து, உடல் எடையும் அதிகரிக்கும்.
வெண்ணெய்
********************
அனைவரும் வெண்ணெயை தினமும் சாப்பிட்டால் உடல் பருமனடையும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் வெண்ணெயை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும் தான். ஆனால் தினமும் சாப்பிட்டால், அது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே எப்போதாவது சாப்பிட்டால் போதுமானது
ஜூஸ்
**********
உடல் ஆரோக்கியமாகவும், எடை அதிகரிக்கவும், சில பவுண்ட் உடலுக்கு தேவைப்படுகிறது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடல் எடையும் அதிகரிக்கும்.
கோதுமை பாண்
**************************
தானியங்களில் நிறைய கலோரிகள் உள்ளன. அதிலும் கோதுமையில் அதிகமாகவே உள்ளது. ஆகவே பாண் வாங்கும் போது, கோதுமை பாணிநை வாங்கி சாப்பிட்டால், ஆரோக்கியத்துடன் எடையும் கூடும்.
ஓட்ஸ்
***********
காலையில் சாப்பிட ஓட்ஸ் மிகவும் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவு. அதிலும் இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் உடலில் சீரான இரத்த ஓட்டம் இருப்பதோடு, உடலும் பருமனடையும்.
தயிர்
*********
பழங்களை விட, தயிரில் 118 கலோரிகள் இருக்கின்றன. ஆகவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை விரைவில் அதிகரிக்கும்.
வாழைப்பழம்
**********************
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மட்டுமில்லை, குறைந்தது 100 கலோரிகளும் உள்ளன. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்லது.
உருளைக்கிழங்கு
**************************
கார்போஹைட்ரேட் மற்றும் காம்ப்ளக்ஸ் சுகர் அதிகம் உள்ள உருளைக்கிழங்கை, வேக வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீக்கிரம் அதிகரிக்கும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
Re: அழகு மனமும், உடலும்

உடல் ஆரோக்கியத்துக்கு சில எளிய வழிகள்
******************************************************************
தினமும் 6 - 8 க்ளாஸ் தண்ணீர் குடித்தால் நல்லது. மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைவிடவும், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது. உணவுக்குப் பின்னர் அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்
கண்டிப்பாக தினமும் 15 நிமிடம் நமக்காக ஒதுக்கு உடற்பயற்சி செய்ய வேண்டும். காலை அல்லது மாலை சிறிது தூரம் வாக்கிங் போக வேண்டும். உடல் புத்துணர்ச்சிக்கும், தேவையற்ற டாக்சின்கள் உடலிலிருந்து வெளியேறவும் இது நல்லது.
கூடுமானவரையில் நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ளலாம்.
இரவில் மிதமான உணவு சாப்பிட வேண்டும். அதிகப்படியான உணவு ஜீரணமாக சிரமம் கொடுக்கும். சாப்பிடவுடன் தூங்கக்கூடாது. தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே தொலைக்காட்சியை நிறுத்திவிட வேண்டும். சிறிது நேரம் இசை கேட்கலாம், அல்லது ஒரு குட்டி வாக் போகலாம்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#8
Re: அழகு மனமும், உடலும்

உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள்
*********************************************************************
தினமும் காலையோ அல்லது மதியமோ ஒரு கிண்ணம் தட்டைப் பயிறால் செய்த சுண்டலை சாப்பாட்டிற்கு முன்பாகச் சாப்பிடவும். இதில் உள்ள துத்தநாக உப்பு லெப்டின் என்ற இயக்குநீரை தாராளமாகச் சுரக்க வைக்கும். இந்த இயக்குநீர் இரத்தத்தில் நிறைய இருக்கும்போது மூளைக்கு `சாப்பிட்டது போதும்' என்ற சமிக்ஞையைத் தந்துவிடும். எனவே அதிகம் பசிக்காது. குறைவாகச் சாப்பிட்டாலும் நன்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிகம் சாப்பிட மனமும் அறிவும் விரும்பாது.
காலையோ அல்லது மதியமோ சாப்பிடும் இந்த காராமணி (தட்டைப்பயிறு) சுண்டலே போதும். முடிந்தால் மதியம் சாதத்தில் பாசிப்பருப்புக் கூட்டும் சேர்த்துக் கொள்ளலாம். உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் இந்த இரண்டு உணவுகளால் விரைந்து அதிக எடையைக் குறைத்துவிடலாம்.
சுண்டலும் பருப்பும் பசி எடுக்காதபடி தவிர்ப்பதால் ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் எரிந்துவிடும். அதிகம் சாப்பிட ஆசை இருந்தாலும் இந்த இரு உணவுகளும் சாப்பிட முடியாமல் தடுத்துவிடும்.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#10
Re: அழகு மனமும், உடலும்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் மன ஓய்வு!
***************************************************************
ஓய்வு என்பது நாம் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுத்து வேறு சில விசயங்களில் மனதை ஈடுபடுத்துவதாகவும். உடலுக்கு ஓய்வு உறக்கம் என்றிருந்தாலும் மனதை சஞ்சலமின்றி ஓய்வாக வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உளவியலாளர்கள்.
ஓய்வான மனநிலை மகிழ்சியான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஓய்வு எடுப்பதன் மூலம் பயம், மன அழுத்தம் போன்றவைகளிலிருந்தும் விடுதலைப் பெறலாம். இது நோயை விரட்டி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது. எனவே எவ்வாறு ஓய்வு எடுப்பது என்று தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம்.
மன அமைதி தரும் யோகா
****************************************
தியானம், யோகா செய்தல் மிகவும் நல்லது. இது மனதை புத்துணர்ச்சியாக்குகிறது. யோகா வகுப்புகளுக்கு செல்ல இயலாத நிலையில், வாரம் ஒரு முறை யோகா புத்தகம் அல்லது சிடி போட்டு பார்த்து செய்து வந்தால் மனம் உடல் இரண்டும் நல்ல ஓய்வு நிலையை அடையும் வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் உளவியலாளர்கள்
அதிகாலையில் அமைதி
**************************************
அதிகாலையில் விழித்தெழுவது மன அமைதிக்கு வழிவகுக்கும். அதிகாலை 5 மணிஅளவில் எழுந்து வீட்டின் அமைதியான நிலையை 5 அல்லது 10 நிமிடங்கள் உணர வேண்டும். அதேபோல் இரவு உறங்க செல்வதற்கு முன் முழு தினமும் நடந்த நல்லவை தீயவை என்று அனைத்தையும் மனக்கண்முன் கொண்டு வருவதன் மூலம் மனம் முற்றிலும் தூய்மைப் பெற்று ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
மனதை லேசாக்கும் இசை
***************************************
இசையானது மனதை வருடி லேசாக்கும் தன்மையுடையது. விருப்பப்பட்ட பாடலைக் கேட்பது, ஒரு சில பாடலுக்கு நடனம் புரிதல் போன்றவையால் எத்தகைய பிரச்சனைகளையும் சந்திக்கும் அளவுக்கு மனம் பக்குவம் அடையும். காமெடி படங்கள், சிரிப்புக்காட்சிகள் பார்த்து மனம் விட்டு சிரிப்பதன் மூலம் பதற்றமான நிலை நீங்கி மனம் ஓய்வு பெறும்.
உடல் ஆரோக்கியத்திற்கு மூலக்காரணம் மனமே, எனவே மனதையும் உடலையும் ஓய்வு நிலையில் வைத்திருக்கும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
 
Thread starter Similar threads Forum Replies Date
N Healthy and Nutritive Foods 1
sumathisrini Skin Care 1
sumathisrini Health 0
Meenapt Health 0
sumathisrini Health 0

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.