Health tips for Women-நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏற

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
கணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர்.

பெண்கள் வயதுக்கு வந்ததும், இடுப்பு எலும்பு வலுவாக உளுத்தங்களி, உடல் உஷ்ணத்தைக் குறைக்க மணத்தக்காளி, உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, வலுவைக் கூட்ட கொள்ளு எனப் பெண்களுக்கு பிரத்யேகமான சமையல் அம்மாவின் கைமணத்தில் மணக்கும். ஆனால், இன்றைய டீன் ஏஜ் பெண்களோ, நம் பாரம்பரிய உணவுச்சத்துக்களின் மகத்துவம் தெரியாமல், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர்.

இதனால், இளம் வயதிலேயே ஒபிசிட்டி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். நாம் நன்றாக இருந்தால்தான், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க முடியும் என்பதை, ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். மாதவிடாய், கர்ப்பம், தாய்மை, மெனோபாஸ் என, உடலின் மாற்றங்களை எதிர்கொள்ள, பெண்களுக்கு அதிக பலமும் சக்தியும் தேவை.

அந்த சத்துக்களை உணவின் மூலமே பெற முடியும். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு இவை ஐந்தும், தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பெண்களின் உடல் நலனுக்கு அவசியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுவை கண்டிப்பாக எடுத்து கொள்ள வேண்டும்.
 

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#2
நகரத்து பெண்களை விட கிராமத்து பெண்கள் ஒரு சில கொள்கைகளில் உறுதியாக இருப்பார்கள். அதில் கணவன் சாப்பிட்டவுடன், சாப்பிடுவது என்பது இன்று வரை அவர்கள் கடைபிடித்து வரும் கொள்கையாகும்.

சில பெண்கள் வீட்டு வேலைகளை இழுத்துபோட்டு செய்து விட்டு சரியான நேரத்திற்கு சாப்பிட மாட்டார்கள். வீட்டு வேலை காரணமாக நேரம் தாண்டி விட்டால் அவ்வேளைக்குரிய உணவையே தவிர்த்து விடுவார்கள்.

இது பொதுவாக பல பெண்களின் குணமாகும். நேரத்திற்கு உணவு அருந்தாமையாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு உண்டாகிறது.

இதுபோல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாலும், சரியான நேரத்திற்க்கு சாப்பிடாமல் இருப்பதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது.

பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும். ஆனால் அது சீற்றம் கொள்ளும்போது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது.

அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது.

இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது.

இது போல பிரச்சினைகளை தவிர்க்கவும் ஆரோக்கியமாக மூட்டுவலியின்றி வாழவும், பெண்கள் சரியான நேரத்திற்க்கு சாப்பிடவேண்டும். குறிப்பாக வயதான பெண்கள் மூட்டுவலியால் அதிகம் அவதிப்படுவர், இவர்கள் தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் சரியான நேரத்திற்க்கு சாப்பிட பழகி கொள்ளவேண்டும்.

வெறும் மருத்துவ சிகிச்சை மட்டும் முழுமையாக பலன் தராது. இது போல விஷயங்களில் பெண்கள் தங்களை மாற்றிகொண்டால் மட்டுமே மூட்டுவலி போன்ற நோய்களில் இருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: Health tips for Women-நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு ஏ&#2

Thanks for the tips
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.