: Healthy and Nutritive Foods

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மா?
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய உணவுகள்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது. ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி,சிலருக்கு குழந்தைக்கு எப்போது திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு எப்போது திட உணவுகளை கொடுப்பதென்று சந்தேகம் இருந்தால், கீழே கொடுத்துள்ள அறிகுறிகளைக் கொண்டு அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.
வாயில் உணவுகளை வைக்கும் போது அதை துப்பாமல், வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தால், அதுவும் திட உணவுகளை கொடுக்கலாம் என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.
குழந்தை பிறக்கும் போது இருந்த எடையுடன், தற்போதுள்ள எடையை சோதித்து பார்க்கும் போது, எடையானது இரண்டு மடங்கு அதிகமாக இருந்தால்,திட உணவுகளைக் கொடுக்கலாம் என்று அர்த்தம்.
மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை கொடுத்து வந்தால், அவர்களது வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, குழந்தையும் ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும்.
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது,அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.
பூசணிக்காயைக் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதிலும் இனிப்பு பூசணிக்காயை குழந்தைக்கு கொடுத்தால்,பற்கள் வளரும் போது ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.
நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.
ஆப்பிள் குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
மீன் மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
கோதுமை பிரட் குழந்தை பசியாக இருக்கும் போது, அவர்களுக்கு ஒரு துண்டு கோதுமை பிரட்டை கொடுத்தால், குழந்தையின் குடலியக்கமானது சீராக செயல்படும்.
செரில் நிறைய குழந்தைகளுக்கு நல்ல ஃப்ளேவர்டு செரில்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல சுவைமிக்க ஃப்ளேவர்டு செரில்களை, பாலுடன் சேர்த்து காலை வேளையில் கொடுத்தால், குழந்தை அந்நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் செயல்படும்.
சிக்கன் சிக்கன் உடலின் வெப்பத்தை தூண்டிவிடும் உணவுப் பொருளாக இருந்தாலும், இதனை வாரம் ஒரு முறை அளவாக கொடுத்து வருவது நல்லது.
முட்டை குறிப்பாக நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.
ஓட்ஸ் பற்கள் வளரும் நிலையில் உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகளில் ஒன்று தான் ஓட்ஸ். இதனால் குழந்தையின் ஈறு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
அவகேடோ அவகேடோவை பாதியாக வெட்டி, அதில் உள்ள கூழ் போன்ற பகுதியை மசித்து, குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் செரிமானம் தடையின்றி நடைபெறும்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.