Healthy Milk and Unhealthy Butter - பால் உறவு, வெண்ணெய் பகை

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
நம்முடைய பாரம்பரிய உணவு வெண்ணெய், நெய். புராணக் கதைகளில் இருந்தே வெண்ணெய், நெய் போன்றவற்றுக்கு தனி இடம் உண்டு. ஆனாலும், இவற்றை அனைவரும் சாப்பிடலாமா? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? உணவில் நெய் சேர்த்துக்கொள்வதால் கொழுப்பு அதிகரித்து மாரடைப்பு வருமா என்பது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொல்கிறார் தேனி பொது மருத்துவர் ராஜ்குமார்.


'எந்தஓர்ரு உணவையும் அளவோடு எடுத்துக்கொண்டால் பாதிப்பு இல்லை. வெண்ணெய், நெய் இரண்டுமே கொழுப்புதான். வளரும் குழந்தைகளுக்கு உணவில் வெண்ணெய், நெய் சிறிதளவு சேர்த்துக்கொள்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கும் செரிமானப் பிரச்னை ஏற்படலாம்.'


குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா?


'மிகமிக குறைவாகக் கொடுக்க வேண்டும். பொதுவாக ஐந்து வயது வரை கால் டீஸ்பூன் அளவில் கொடுக்கலாம். இருப்பினும், உடல் பருமனாக உள்ள குழந்தைகளுக்கு முற்றிலும் தவிர்ப்பது நல்லது.'


முதியவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?


'50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவு அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாய்களில் படிந்து, குழாயின் சுருங்கி, விரியும் தன்மை குறைந்துவிடும். இதனால் மாரடைப்பு ஏற்படலாம். மேலும், உடலில் இதயம், தலை, கால் ஆகிய மூன்றும் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். தலையில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும்போது பக்கவாதம் ஏற்படலாம். காலில் கொழுப்புக் கட்டிச் சேரும்போது, காலுக்கு தேவையான ரத்த ஓட்டம் செல்லாமல் காலையே எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.'


பால் சத்தான உணவு. ஆனால் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய், நெய் மட்டும் ஏன் உடலுக்கு கேடு?


'பாலில் கால்சியம், வைட்டமின் டி, ஈ மற்றும் தாது உப்புக்கள் அதிகம். குழந்தைகளின் எலும்புக்கும், பல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இது மிக அவசியம். இதனால்தான் குழந்தைகளையும், பெண்களையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் பால் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தபிறகு கிடைக்கும் மோர்கூடச்
சத்தானதுதான். ஆனால், வெண்ணெயும், நெய்யும் கொழுப்புச் சத்து கொண்டவை சுருக்கமாகச் சொல்வதென்றால் வெண்ணெய் குறைக்கப்பட வேண்டியது, நெய் தவிர்க்கப்பட வேண்டியது
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#9

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.