Healthy Tips to follow while Taking FOOD -உணவு உண்ணும்போதுகடைபிடிக்க வேண்&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

டாக்டர்.திருநாவுக்கரசு


அதிக மார்க் எடுத்தும் ரொம்ப நாட்களாக ஆசைப்பட்ட 220 சி.சி பைக்கை அப்பா வாங்கித் தரவில்லையே என்ற கோபத்தில், முதல் நாள் இரவு சாப்பாட்டுத் தட்டை விட்டெறிந்தான் சுரேஷ். மறுநாள், தன் மகன் சுரேஷ் விரும்பிய பைக்கை சர்ப்ரைஸாக வீட்டுக்கு கொண்டுவந்து நிறுத்த, அன்றைய தினமே தனது நண்பர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் வைத்தான் சுரேஷ்.

இந்த சிறிய நிகழ்வில் இருந்து ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். அது உணவுக்கும் மனசுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே. உடல் எடையைக் கூட்ட, குறைக்க விரும்புபவர்கள் என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் இலக்கை அடையவே முடியாமல் போவதற்கும் உணவு, மனசு தான் காரணம். ''உணவைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், பலர் தங்களுக்கே தெரியாமல் சிலவகை நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்'' என்கிறார் மனநல ஆலோசகர் திருநாவுக்கரசு.

'மன அமைதி கிடைப்பதற்கு மிகவும் முக்கியம் உணவு. பொதுவாக மனிதனுக்கு கோபம் ஏற்பட்டால், அந்தக் கோபத்தை தீர்த்துக் கொள்வது உணவின் மூலமாகதத்தான். பசி இருந்தும் சாப்பிடாதவர்கள், பசி இல்லாவிட்டாலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள், இந்த இரண்டு வகை மனிதர்களுக்குமே ஆபத்து காத்திருக்கிறது.

உணவுக்கு அடிமையானவர்கள்:

பசிக்காமலேயே சிலர் எந்த உணவையும், எப்போது கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாளைக்கு 5,000 15,000 கலோரி வரை உணவுகளை உண்ணுவார்கள். இவர்களைத்தான் உணவுக்கு அடிமையானவர்கள் (Compulsive overeating disorder) என்று அழைக்கிறோம். இவர்களுக்கு எப்போதும் வயிறுநிறைந்தே இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். 'போதும்’ என்ற மன நிறைவே வராது.

இது, ஒரு வகையான உணவு போதை. மேலும், இவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாமல், கொழுப்புச் சத்துள்ள உணவுகளை மட்டும் அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.

உணவு உண்ணுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை, உணவுப்பொருளை வேகமாக சாப்பிடுவது, தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது, தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தம் அதிகரித்தல், திடீர் உடல் கூடுதல், உடலின் நிலைத்தன்மை குறைதல், முறையான உணவுப்பழக்கம் இன்மை இவையே உணவுக்கு
அடிமையாவதற்கான அறிகுறிகள்

.


இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச்சத்து, மூச்சுத்திணறல், ஸ்ட்ரோக், கீல் வாதம், சிறுநீரகத் தொந்தரவுகள் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

உளவியல் பிரச்னைகளின் காரணமாகவே இந்த நோயில் பலரும் சிக்குகின்றனர். இவர்கள் பெரும்பாலும் எந்த வேலையிலும் கவனம் செலுத்த மாட்டார்கள். அவர்களின் கவனத்தைத் திசை திருப்பி டயட் கவுன்சலரின் அறிவுரைப்படி உணவை உண்டுவரச்செய்து, 24 மாதங்கள் வரை மனநல மருத்துவரின் கண்காணிப்பில் வைக்க வேண்டும். தினமும் தியானம், யோகா போன்ற மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

பொதுவாக, உணவு எவ்வளவு ருசியானதாக இருந்தாலும் உடல் சக்திக்குத் தேவையான அளவு மட்டுமே உண்ணவேண்டும், உணவை அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடக் கூடாது என்ற புரிதல் இருந்தால் உணவுக்கு அடிமையாவதைத் தவிர்க்கலாம். உணவில் கவனம் வைத்தால், உளவியல், உடலியல் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

''உணவுக்கு அடிமையாகும் பிரச்னைக்கு முக்கியக் காரணம் ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய போதிய தெளிவின்மைதான்'' என்கிறார் உணவு ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி.

''என்ன சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிடவேண்டும்? இந்த மூன்று கேள்விகளுக்கும் விடை தெரிந்துகொண்டால் போதும், நோய்கள் வராமல் தடுக்கலாம். ஏற்கனவே நோய்க்கு ஆட்பட்டவர்களும் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

என்ன சாப்பிடவேண்டும்?

காலை எழுந்தவுடன் ஒரு கப் கிரீன் டீ அல்லது நீராகாரம் குடிக்கவும்.

காலை உணவில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு, சூப், இளநீர், மோர் போன்ற திரவ உணவுகளையும், பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மதிய உணவில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

மாலையில் வேகவைத்த பருப்புகள், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, சிறிய துண்டு வெல்லம், பழங்கள், இஞ்சி டீ போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

இரவு உணவு எளிதில் செரிக்கக்கூடிய ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.

தூங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு, 150 மி.லி பால் குடிக்க வேண்டும்.

அவரவர் உடல்நலத்துக்கு ஏற்ற உணவு வகைகளை மருத்துவரைக் கலந்தாலோசித்து உண்ண வேண்டும்.

கொழுப்புச் சத்துள்ள உணவுகளில் கலோரி அதிகம். இவை, வயிற்றை நிறைக்காது. உண்ட திருப்தி உணர்வையும் தராது.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால், எளிதில் வயிற்றை நிறைத்துவிடும்.

உங்களுக்குப் பிடித்த கொழுப்பு, சாட் உணவுகளை வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடுங்கள்.அனோரெக்சியா நெர்வோசா:

பசி இருந்தாலும்கூட இவர்கள் சாப்பிடமாட்டார்கள். பெரும்பாலும், இளம் பெண்கள் அதிகம் பேர் தங்களது உடல் எடையைக் குறைக்கிறேன் என்கிற நினைப்பில் சாப்பிடவே மாட்டார்கள். சாப்பிடுவதைக் குறைத்து கொண்ட ஒருசில மாதங்களில் மிகவும் மெலிந்து காணப்படுவார்கள். இவர்கள் அனொரெக்சியா நெர்வோசா (anorexia nervosa) என்ற உணவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். தோலில் நிறம் மாறுதல், தலைமுடி உதிர்தல், டயரியா, மலச்சிக்கல், இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகள் இவர்களுக்கு வர வாய்ப்பு உண்டு. மேலும், இவர்களுக்கு உடனடியாக மனநல ஆலோசனையும், டயட் கவுன்சலிங்கும் தேவை. மனநல சிகிச்சைக்குப் பிறகு டயட் கவுன்சலர் அறிவுரையின்படி, ஒரு நாளைய உணவுத் தேவையான 1,500 கலோரியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து ஒரு நாளைக்கு 3,500 கலோரி வரை தொடர்ந்து சில நாட்களுக்கு உண்ண வேண்டும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
Re: உணவுக்கு அடிமையாக வேண்டாமே!

எப்போது சாப்பிட வேண்டும்?

நம் உடலுக்கு உணவின் அளவைவிட, கலோரியின் அளவுதான் மிக முக்கியம்.

உடல் உழைப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு 2000 2500 கலோரி வரை உணவு தேவை.

உடல் உழைப்பு குறைந்த வேலையில் இருப்பவர்களுக்கு 1500 2000 கலோரி தேவை.

ஒருவர் தனது பி.எம்.ஐ மதிப்பைத் தெரிந்துகொண்டால்தான், அவருக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை அறிய முடியும்.

பொதுவாக உணவை மூன்று வேளையாகப் பிரித்துக் கொள்ளாமல், ஆறு வேளையாகப் பிரித்துக் கொண்டு உண்ணவும்.

ஒவ்வொரு வேளை உணவு உண்ணும்போதும், வயிறு 60 சதவிகிதம் மட்டும் நிரம்பி இருக்குமாறு சாப்பிட வேண்டும்.

உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே இரவு உணவை முடித்துவிட வேண்டும்.


எப்படி சாப்பிடவேண்டும்?

பழங்களை நன்றாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். பழச்சாறாக அருந்தக் கூடாது.

ஒரு நாளைக்கு உணவு உட்கொள்வதற்கு, குறைந்தபட்சம் 75 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணும்போது, நன்றாக மென்று கூழ் போலாக்கி, விழுங்க வேண்டும்.

சாப்பிடும்போது கட்டாயம் வேறு ஏதேனும் வேலைகளைச் செய்துகொண்டோ, அரட்டை அடித்துகொண்டோ சாப்பிடுவது கூடாது.

நண்பர்கள், குடும்பத்தினரோடு சேர்ந்துதான் சாப்பிட வேண்டும். எப்போதும் தனியாக சாப்பிடக் கூடாது.

உடற்பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க வேண்டும் என, ஒரே நாளில் உணவின் அளவை மிகவும் குறைத்துவிடக் கூடாது. உடற்பயிற்சியை மெள்ள மெள்ள அதிகரித்து, உணவின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குறைக்க வேண்டும்.

அதிகப்படியான உணவு உட்கொள்பவர்கள்:

உடல்பருமனாக இருக்கும் சிலர், உடல் எடையைக் குறைக்க, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்கள் வரை கடுமையான டயட்டைக் கடைப்பிடித்து, ஒரு நாளைக்குத் தேவையான 1,500 2,000 கலோரி அளவைவிட குறைவாக உண்ணுவார்கள். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே, ஏதேனும் ஒரு மனதுக்குப் பிடித்த உணவுப்பொருளின் வாசனையில் மயங்கி அடுத்த சில நாட்களுக்கு 4,000 5,000 கலோரி அளவுக்கு உணவை, வெளுத்துக்கட்டுவார்கள். இவர்களே, 'பெட்’ (Binge EATING DISORDER
) எனப்படும் அதிகப்படி யான உணவுகளை உட்கொள்ளும் மன நோய்க்கு உள்ளானவர்கள். இவர்களுக்கு உடல் எடையைக் குறைத்து, ஃபிட்டாக இருக்க வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்குமே தவிர, எடை குறையாது. டயட்டில் இருந்தாலும் உடல் எடை குறையவில்லையே என்ற மனக்கவலையில் இருப்பார்கள். இவர்களால் எந்த வேலையிலும் முறையாக கவனம் செலுத்த முடியாது. மன நல ஆலோசனை மூலமே இவர்களைக் குணப்படுத்த முடியும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#4
Healthy Tips to follow while Taking Food -வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு &#

வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்கு தண்ணீர் எதிரி..சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம். தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுநடுவே தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது அரைமணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டும்.


சிலர் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு ஒரு டம்ளர் தண்ணீரை அருந்தி விட்டுச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும். இந்த அமிலம்தான் உணவை ஜீரணிக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். வயிற்றில் உணவை ஜீரணம் செய்வதற்காக சுரந்துள்ள அமிலத்தைத் தண்ணீர் குடித்தால் அது நீர்த்து விடும் (டைலூட்). வயிற்றில் இருக்கும் அமிலத்தை நீர்த்த பிறகு நாம் என்னதான் நல்ல உணவை நல்ல முறையில் சாப்பிட்டாலும் அது ஜீரணம் ஆகாது. எனவே, தண்ணீர் குடித்தவுடன் யாராவது உங்களைச் சாப்பிட அழைத்தால் நான் இப்பொழுது வர மாட்டேன். இப்பொழுதுதான் தண்ணீர் குடித்து அமிலத்தை அணைத்துள்ளேன். எனவே, ஒரு அரை மணி நேரம் கழித்துச் சாப்பிட வருகிறேன் என்று கூற வேண்டும். ஒவ்வொரு முறை சாப்பிட உட்காரும் பொழுதும் கடந்த அரை மணி நேரத்தில் தண்ணீர் குடித்தோமா என்று யோசிக்க வேண்டும். எனவே, சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நாம் சாப்பிடுகிற உணவு பிரமாதமாக ஜீரணமாகும்.


சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படி குடித்தாலும் ஜீரணம் கெட்டு விடும். சாப்பிடும் பொழுது நன்றாக உணவைப் பற்களால் மென்று கூடிந போல செய்து எச்சில் கலந்து சாப்பிடுபவர் களுக்கு நடுவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாது.


சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது. நம்மில் பலபேர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்ற விதத்தில் தண்ணீர் குடிக்கிறோம். இதுவும் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டும்.


சாப்பிடுவதற்கு முன்பு அரைமணி நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும். சாப்பிட்ட பிறகு அரை மணி நேரம் ஆக மொத்தம் 1½ மணி நேரம் தண்ணீர் குடிக்கக் கூடாது. 1½ மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் எப்படி இருப்பது? இந்த நேரத்தில் விக்கல், சிக்கல், தாகம், தொண்டை வறண்டு போதல், நாக்கு வறண்டு போதல், உணவு காரமாக இருத்தல் போன்ற சிக்கல்கள் வரும் பொழுது எப்படித் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என்று சிலர் மனதில் சந்தேகம் எழலாம்.


உணவு காரமாக இருந்தால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும். நமது நாக்கு உணவு காரமாக இருக்கிறது என்று நம்மிடம் பேசுகிறது. நமது நாக்கு தண்ணீர் குடியுங்கள் என்றா கூறியது? உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைப்பதற்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக்கூடாது. எனவே, உணவு காரமாக இருக்கும் பொழுது தேவைப்பட்டால், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி காரத்தைக் குறைக்க வேண்டுமே தவிர தண்ணீர் குடிக்கக் கூடாது. ஜீரணம் நடக்கும் பொழுது எண்ணெய் சென்றால் கூட ஒழுங்காக ஜீரணம் ஆகும். ஆனால், தண்ணீர் சென்றால் ஜீரணத்தைக் கெடுக்கும். எனவே, உணவு காரமாக இருந்தால் காரத்தைக் குறைக்க மாற்று வழி யோசியுங்கள். தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.


சாப்பிடும் பொழுது விக்கல் சிக்கல் வந்தால் என்ன செய்வது ? முதலில் சாப்பிடும் பொழுது விக்கல், சிக்கல் ஏன் வருகிறது என்று பார்ப்போம். சாப்பிடும் பொழுது கவனம் உணவில் வைத்து சாப்பிடுபவர் எவருக்கும் விக்கல், சிக்கல் வராது. நமது மூளைக்கும், அதாவது மனதிற்கும் உடலிலுள்ள உறுப்புகளுக்கும் வேகஸ் என்ற நரம்பு இணைப்பாக உள்ளது.


சாப்பிடும் பொழுது உணவைப் பற்றிய எண்ணம் மட்டுமே மனதில் இருந்தால் இந்த நரம்பு ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளையும் ஒழுங்காக வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கும். திடீரென நமது மனது குடும்பம், வியாபாரம் அல்லது வேறு நபரைப் பற்றி சிந்திக்கும் பொழுது இந்த நரம்பிற்குக் குழப்பம் ஏற்படும். வயிற்றில் ஜீரணம் சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா ? அல்லது இவர் மனம் யோசிக்கும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட சுரப்பி சுரப்பதா என்ற குழப்பம் ஏற்படும் பொழுது வருவதுதான் விக்கல் சிக்கல். விக்கல் சிக்கல் வரும் பொழுது நாம் பொதுவாகக் கூறுவதுண்டு, யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்று. கண்டிப்பாக யாரும் உங்களை நினைக்கவில்லை. நீங்கள் யாரையாவது நினைத்தால் மட்டுமே விக்கல், சிக்கல் வரும். எனவே, சாப்பிடும் பொழுது நமது கவனம் உணவில் இருக்கும் வரை யாருக்கும் விக்கல் சிக்கல் வராது.
தொண்டை தாகமாக இருந்தால் நாக்கு வறண்டு போனால் என்ன செய்வது? இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஒரு வேளை தாகமோ, தொண்டை வறட்சியோ அல்லது விக்கல் சிக்கல் வந்தாலோ, தண்ணீர் குடிக்கலாம். ஆனால், அதற்கு ஒரு அளவு உண்டு. நாம் குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று சேராத அளவுக்கு குறைவாக குடிக்க வேண்டும்.

தொண்டை தாகமாக இருக்கிறது என்றால் தொண்டைக்கு அளவாகவும், நாக்கு வறண்டு போயிருந்தால் நாக்குக்கு அளவாகவும் குடிக்க வேண்டும். அதாவது உதடு, வாய், நாக்கு, உணவுக் குழாய் முதல் நெஞ்சுக் குழி வரை தண்ணீர் செல்லும் அளவிற்குக் குடிக்கலாம். நெஞ்சு குழிக்குக் கீழே வயிறு உள்ளது. குடிக்கும் நீரின் அளவு வயிற்றில் சென்று விழக் கூடாது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி, வயிற்றில் நடக்கும் ஜீரணத்திற்குத் தண்ணீர் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


எனவே, சாப்பிடுவதற்கு முன்பாக வயிற்றில் சேராத அளவிற்கு ஒரு கால் டம்ளர் தண்ணீரை லேசாக வாயை நனைத்துக் கொள்ளலாம். உணவு சாப்பிடும் பொழுது நடுவே ஒரு வேளை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால்மட்டுமே மீண்டும் கால் டம்ளர் வயிற்றில் நீர் சென்று விழாத அளவிற்குக் குடித்துக் கொள்ளலாம். இதே போல் சாப்பிட்டு முடித்தவுடனே நம்மில் பலர் ஒரு டம்ளர், ஒரு சொம்பு என்று நீர் அருந்துகிறோம். தயவு செய்து அப்படிக் குடிக்காதீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு கால் டம்ளர் முதல் அரை டம்ளர் வரை குறைவாக வாயைக் கொப்பளித்து முழுங்கும் அளவிற்கு குடித்தால் போதும், பிறகு ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள். அரை மணி நேரத்திற்குப் பிறகு தாராளமாக இரண்டு டம்ளர் அல்லது ஒரு சொம்பு வீதம் குடித்தால் ஜீரணத்திற்கு எந்த ஒரு கெடுதலும் ஏற்படாது.


எனவே, சாப்பிடுவதற்கு முன்பு அரை மணி நேரமும், சாப்பிடும் பொழுதும், சாப்பிட்ட பிறகு அரை மணி நேரமும் முடிந்த வரை தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் அளவு குறைவாகக் குடித்துக் கொள்ளுங்கள்.


பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பாக வலது கையில் ஆள் காட்டி விரலையும், கட்டை விரலையும் ஒன்று சேர்த்து மற்ற மூன்று விரலையும் நீட்டி உள்ளங்கையில் நீர் விட்டு உதட்டால் மணிக்கட்டு ரேகையில் வாய் வைத்துக் கொண்டு உறிஞ்சி குடிப்பது வழக்கம். இதற்கு ஜலபரிஷேஸனம் என்று பெயர். இப்படி உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்காதீர்கள், வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது என்று நம் முன்னோர்கள் டெக்னிக்ளாக பிரச்சாரம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக நல்ல பழக்கம் (ஆச்சாரம்) என்று சில பழக்கம் வழக்கங்களை நமக்கு கற்றுக் கொடுத்துச் சென்றுள்ளார்கள். எனவே, சாப்பிடும் பொழுது ஒரு வேளை தேவைப்பட்டால் இந்த முறையில் மூன்று முறை நீரை உறிஞ்சிக் குடிப்பதன் மூலமாக வயிற்றில் உள்ள அமிலத்தைக் காப்பாற்ற முடியும்.


பிராமணர்கள் மற்றும் ஆச்சாரம் என்ற வார்த்தை பயன்படுத்திய உடன் இந்த சிகிச்சை இந்து மதம் சம்பந்தப் பட்டது என்று தயவு செய்து ஒரு முத்திரையைக் குத்தி விடாதீர்கள். இந்தச் சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. நோய்களுக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிகிச்சைக்கும், மதங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

நல்ல பழக்கங்கள் எந்தக் கலாச்சாரத்திலும் எந்த மதத்திலும் இருந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம்.


எனவே, ஜீரணத்தின் பொழுது, தண்ணீர் எவ்வாறு தடையாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு இனி தண்ணீரின் அளவைக் குறைத்து ஜீரணத்தை அதிகப்படுத்துங்கள்.


நாம் பொதுவாக ஒரு மருத்துவரிடம் சென்றால் ஒரு மாத்திரையைக் கொடுத்து சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடுங்கள் என்று கூறுவார். சாப்பிடும் பொழுது கவனத்தை சாப்பாட்டில் வையுங்கள் என்றால் நீங்கள் என்ன செய்கிறீர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும். சாப்பிட்டவுடன் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சாப்பிடும் பொழுது கவனத்தை மாத்திரையின் மீதே வைத்துச் சாப்பிடுகிறோம். சாப்பிட்டு முடித்தவுடன் ஓடிச் சென்று மாத்திரையை வாயில் போட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கிறோம். இந்த மருந்து மாத்திரைகள் நோயைக் குணப்படுத்துகிறதோ, இல்லையோ ஆனால் அந்த மருந்து மாத்திரைக்காக நாம் சாப்பிடும் தண்ணீர் ஜீரணத்தைக் கெடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறது.


எனவே, மருந்து மாத்திரையை முடிந்த வரையில் சாப்பிடாமல் தவிருங்கள். சில நேரங்களில் மருந்து மாத்திரை நமக்குத் தேவைப்படுகிறது. அப்பொழுது சாப்பிட வேண்டும். என்ற அப்படி இருக்கும் பொழுது உணவு சாப்பிட்டு முடித்தவுடன் மாத்திரை சாப்பிடாதீர்கள். ஒரு அரை மணி நேரம் காத்திருந்து பிறகு மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடியுங்கள். அந்த நீர் ஜீரணத்தைக் கெடுக்காது.


சிலர் நான் சாப்பிடும் பொழுதுதான் மாத்திரை சாப்பிடுவேன். அரை மணி நேரம் காத்திருந்து சாப்பிட என்னால் முடியாது. இதற்கு வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்றால் குழம்பு சாப்பாடு சாப்பிடும் பொழுது அதில் மாத்திரையை கலந்து பிணைந்து சாப்பிட்டு விடுங்கள் உங்களுக்கு தண்ணீர் தேவைப்படாது.


Healer's Basker
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#5
பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.

பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடவேண்டும்.

- ஹீலர் பாஸ்கர்

உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்துப் பொருள்களும் தரமான பொருளாக ரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.


உணவை இப்படி சாப்பிட வேண்டும்; அப்படி சாப்பிட வேண்டும்; இதைச் சாப்பிட வேண்டும்; அதைச் சாப்பிட வேண்டும்; இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்லபடியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து “நாங்க ரெடி. உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி ரத்தத்தில் கலக்குவதற்குத் தயார்” என்று உடல் நம்மிடம் பேசும் பாஷைதான் பசி.


பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வோர் உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக மாறுகிறது. நம் சிகிச்சையில் மிக, மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு. நேரம் நேரத்திற்கு யார் யார் எல்லாம் ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களோ உங்களுக்கு எல்லாம் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு.


உதாரணமாக காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும் செய்யவில்லை. பெரிதாக உடலுக்கு நீங்கள் எந்த உழைப்பும் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். பகல் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இரண்டு மணியாகிவிட்டது சாப்பிடலாம் என்று நினைக்கிறோம். ஆனால் பசிக்கிறதா என்று யோசித்தோமா என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் ரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு பகல் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும்.


ஏற்கெனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது.


உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான். இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத் தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும்? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரண்டு மணிக்குச் சுரந்து விடும். இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப் போகும். எனவே, பசி எடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரம் நேரத்திற்குச் சாப்பிட்டால் நோய் வரும். பசி எடுத்துச் சாப்பிட்டால் நோய் வராது. வந்த நோயும் குணமாகும்.


ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்று யார் கண்டுபிடித்த சட்டம் இது? சிலருக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். சிலருக்கு உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறதோ அப்பொழுதுதான் நீங்கள் உணவைச் சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகுதான் சாப்பிடவேண்டும்.


“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்த பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கும் மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிகமுக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். இந்த ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடைக்கும்.


ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம். எல்லாராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள். போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு உணவு இடைவேளை, இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒரு வேளை அப்பொழுது பசி இல்லையென்றால் என்ன செய்வது என்று கேள்வி வரும். மீண்டும் சொல்கிறேன். சில நேரங்களில் பசி இல்லாமல் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் நம்மால் முடிந்த இடங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே, தயவு செய்து பசி எடுத்த பிறகு மட்டுமே உணவை உண்ணுங்கள்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#6
சாப்பிடும்பொழுது கவனம் சிதறும் எந்த வேல&

சாப்பிடும்பொழுது கவனம் சிதறும் எந்த வேலையையும் செய்யக்கூடாது.

- ஹீலர் பாஸ்கர்நாம் சாப்பிடும் பொழுது நம் கவனம், எண்ணம், மனம், உணவில் மட்டுமே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திற்கும் செல்லாத அளவுக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். டி.வி. பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, பேசுவது, செல்போனில் பேசுவது, மற்றவர்கள் பேசுவதைக் கவனிப்பது, வியாபாரத்தைப் பற்றி யோசிப்பது போன்ற செயல்கள் நம் எண்ணத்தை உணவிலிருந்து திசை திருப்பிவிடும். எனவே இது மட்டுமல்லாமல் உணவிலிருந்து மனத்தை வேறு ஏதாவது விஷயத்திற்குச் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி சிதறும் எந்த விஷயத்தையும் நாம் சாப்பிடும்பொழுது செய்யக்கூடாது.


சாப்பிடும்பொழுது டி.வி. பார்க்கக் கூடாது.
நாம் சாப்பிடும் பொழுது டி.வி. பார்த்தால் அந்த உணவு சரியாக ஜீரணம் ஆகாது. கண்தானே டி.வி. பார்க்கிறது? வயிறு ஜீரணம் செய்ய வேண்டியது தானே? என்று கேட்கலாம். நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சி நேராக மனத்திற்குச் சென்று மனம் அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது. அப்பொழுது அந்த விஷயம் சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கின்றன. மற்ற ஜீரண சுரப்பிகள் சுரப்பதில்லை. டி.வி.யில் ஒரு நாடகத்தைப் பார்த்துக்கொண்டு கண்ணில் கண்ணீருடன் சோகமாக சாப்பிடும் நபருக்கு ஜீரண சுரப்பி சுரப்பதில்லை. கண்ணீர் சுரப்பி சுரக்கும் பொழுது ஜீரண சுரப்பி சுரக்காது. நம் உடலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, தயவு செய்து டி.வி.சீரியல் பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள். டி.வி.யில் வரும் நாடகங்கள் கோபம், டென்ஷன், பயம், தில்லுமுல்லு, ஏமாற்று வேலை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையே காட்டுகின்றன. இந்தக் கதைகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிடும் பொழுது உடலில் எதிர்மறை சுரப்பிகள் சுரக்குமே தவிர ஜீரண சுரப்பிகள் சுரப்பதில்லை.


டி.வி.யில் ஒரு படம் பார்த்துக்கொண்டு சாப்பிடுகிறீர்கள் என்றால் நாம் அந்தப் படத்தின் ஹீரோவாகவோ அல்லது ஹீரோயினாகவோ மாறிவிடுவோம். அப்பொழுது அந்தப் படத்தின் எந்த மாதிரி உணர்ச்சி சம்பந்தப்பட்ட காட்சிகள் தெரிகிறதோ நம் உடலிலும் அது சம்பந்தப்பட்ட சுரப்பிகள் மட்டுமே சுரக்கும். எனவே, படம், சீரியல் போன்ற எதையும் பார்க்கவேண்டாம். மேலும், படம், சீரியல் மட்டுமல்ல டி.வி.பார்த்துக் கொண்டு சாப்பிடவே கூடாது. ஏனென்றால் நம் கவனத்தை டி.வி.யில் வரும் காட்சிகள் சிதறடிக்கும். டி.வி.யில் செய்தி பார்த்துக் கொண்டே சில பேர் சாப்பிடுவார்கள். சில நேரங்களில் குண்டு வெடித்து 50 பேர் பலி என்ற செய்தியைக் காட்டும் பொழுது சில கோரக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டு சாப்பிட்டால் அந்த உணவு ஜீரணமாகாது.

எனவே, சாப்பிடும் பொழுது டி.வி.புரொஜக்டர், ஹோம் தியேட்டர், டிவிடி பிளேயர் போன்ற எதையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சிகளில் தோன்றும் அருவறுப்பான, கோரமான, சோகமான காட்சிகள் நம் மனத்தைப் பாதித்து ஜீரண சக்தியைக் கெடுக்கின்றன. நாம் சாப்பிடும் பொழுது சாப்பாட்டைப் பற்றி மட்டுமே கவனிக்க வேண்டும் என்று ஏற்கெனவே பார்த்தோம். எனவே டி.வி. என்பது நம் கவனத்தைச் சிதறடிக்கும் ஒரு பொருள். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது டி.வி. பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.


சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்கக் கூடாது.
சிலர் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு ஜீரணம் ஒழுங்காக ஆகாது. ஏனென்றால் நாம் புத்தகம் படிக்கும் பொழுது நம் கண், மூளை, எண்ணம், மனம் அனைத்தும் புத்தகத்தில் நாம் படிக்கும் விஷயங்களிலேயே இருக்கும். அப்பொழுது நம் மனம் ஜீரண சுரப்பிகளைச் சுரக்க வைப்பதற்குக் கட்டளையிடாது. சிலர் புத்தகத்தைப் படித்துக் கொண்டு சாப்பிடும் பொழுது திடீரென உணவைப் பார்த்து எங்கே இட்லியைக் காணோம் என்று கேட்பார்கள்.

அந்த அளவுக்கு நாம் எவ்வளவு சாப்பிட்டோம், எப்படி சாப்பிட்டோம், உதட்டை மூடிச் சாப்பிட்டோமா, சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தோமா என்று ஒன்றுமே தெரியாது. இப்படி புத்தகம் படித்துக் கொண்டு சாப்பிடுபவர்கள் அனைவருக்கும் எல்லாவித நோய்களும் வரும். எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது புத்தகம் படிக்காதீர்கள்.

சாப்பிடும் பொழுது பேசக் கூடாது.


சாப்பிடும் பொழுது நம்மில் பலர் பேசிக் கொண்டே சாப்பிடுகிறோம். இப்படிச் சாப்பிடும் பொழுது பேசுவதால் அந்தச் சாப்பாடு சரியாக ஜீரணமாகாமல் தரம் குறைந்த சர்க்கரை, தரம் குறைந்த கொழுப்பு போன்ற பொருள்களை உருவாக்குகிறது. சாப்பிடும் பொழுது பேசினால் என்ன தவறு என்று கேட்டால் பேசுவதற்காக வாயைத் திறக்கும் பொழுது வாய்க்குள் காற்று நுழைந்து விடுகிறது.

உணவு, எச்சில் இரண்டும் ஒன்று சேர்ந்து ஜீரண வேலையைச் செய்து கொண்டிருக்கும் பொழுது காற்று உள்ளே செல்வதால் ஜீரண வேலை கெடுகிறது. வாயில் நடக்கும் ஜீரணத்திற்குக் காற்று எதிரி. சாப்பிடும் பொழுது உதட்டை மூடி மெல்ல வேண்டும் என்று ஏற்கெனவே பார்த்தோம். சாப்பிடும் பொழுது நாம் பேசினால் அந்த விதிமுறையை நாம் கடைப்பிடிக்க முடியாது.


மேலும், நாம் பொதுவாகச் சாப்பிடும் பொழுது என்ன விஷயம் பேசுகிறோம்? குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், வியாபாரத்தில் ஏற்படும் பிரச்னைகள் கோபம், வருத்தம், டென்ஷன், பயம் போன்ற தேவையில்லாத விஷயங்களைப் பற்றித்தான் அதிகமாகப் பேசுகிறோம்.


இப்படிச் சாப்பிடும் பொழுது தேவையில்லாத விஷயங்களை யோசிக்கும் பொழுது நம் உடலில் சில வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு ஜீரண வேலை தடைபடுகிறது. உடனே நல்ல விஷயங்களைப் பேசிக் கொண்டு சாப்பிடலாமா என்று கேட்கக் கூடாது. ஏனென்றால் சாப்பிடும் பொழுது பேசினால் உதடு பிரியும் பொழுது காற்று உள்ளே செல்கிறது. எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள்.


நம் வீட்டில் யாராவது விருந்தாளி வந்தால் உடனே அவர்களுக்குப் பலகாரம், டீ, காபி, கூல்டிரிங்ஸ் போன்றவற்றைச் சாப்பிடக் கொடுத்து அவரிடம் உரையாடிக் கொண்டிருக்கிறோம். விருந்தாளிகள் நம் வீட்டில் அரை மணி நேரம் இருந்தால் அந்த அரை மணி நேரமும் அவர்கள் வாயில் ஏதாவது மென்று கொண்டே நம்மிடம் பேசிக் கொண்டிருப்பது சட்டமா?

இப்படி நம் வீடு தேடி வரும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு நாம் பலகாரங்களைக் கொடுத்துச் சாப்பிட வைத்து, சாப்பிடச் சாப்பிட நம்மிடம் பேச வைத்து அவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் நமக்கு என்ன சந்தோஷம் இருக்கிறது? எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சாப்பிடாதீர்கள். யார் யாரெல்லாம் பேசிக் கொண்டே சாப்பிடுகிறார்களோ அவர்களுக்குப் பலவிதமான நோய்கள் இருக்கும். இல்லையென்றால் கூடிய சீக்கிரம் வரும்.


இன்றைய காலத்தில் யாராவது இருவர் ஏதாவது ஒரு விஷயத்தை சிறிது நேரம் பேச வேண்டும் என்றால் இருவர் நடுவில் சாப்பிடுவதற்கு ஏதாவது ஒரு நொறுக்குத் தீனி இருக்கும். அதைச் சாப்பிட்டுக் கொண்டேதான் பேசுகிறார்கள். வியாபாரிகள் சிலர் பகல் உணவிற்கு ஓட்டலுக்கு அழைத்து அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசுகிறார்கள். பல இலட்சம் ரூபாய் வியாபாரம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நம் கவனம் உணவில் இருக்குமா? அந்த உணவு விஷமாகத் தானே மாறும்?

எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சாப்பிடாதீர்கள். ஒரு வேளை சாப்பிடும் பொழுது அத்தியாவசியமாக, அவசியமாக ஏதாவது பேச வேண்டும் என்றால் வாயில் உள்ள உணவைப் பற்களால் நன்றாக மென்று கூழ் போல் செய்து விழுங்கிய பிறகு அடுத்த வாய் உணவை வாய்க்குள் அனுப்புவதற்கு நடுவில் பேசிக் கொள்ளலாம். முடிந்தவரை சாப்பிட ஆரம்பித்து முடியும் வரை எதுவும் பேசாமல் சாப்பிட்டால் மிக மிக நல்லது.


சரி. மற்றவர்கள் பேசுவதையாவது கேட்கலாமா என்றால் அதுவும் கூடாது. ஏனென்றால் நாம் சாப்பிடும் பொழுது மற்றவர்கள் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தால் நம் எண்ணம் அவர் பேசும் அந்த வார்த்தையில் இருக்குமே தவிர உணவில் இருக்காது. அப்பொழுதும் ஜீரணமாகாது. எந்த வீட்டிற்குச் சென்றாலும், எந்த ஓட்டலுக்குச் சென்றாலும், சற்று வேடிக்கை பாருங்கள். அனைவரும் சாப்பிடும் பொழுதுதான் எல்லா விஷயத்தைப் பற்றியும் பேசுகிறார்கள். தயவு செய்து சாப்பிடும் பொழுது பேசாதீர்கள். பேசும் பொழுது சாப்பிடாதீர்கள்.

நாம் பேசாமல் சாப்பிட்டால்தான் நம் கவனம் முழுவதும் உணவில் இருக்கும். கவனம் உணவில் இருந்தால் மட்டுமே ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சுரப்பிகளும் சுரந்து நம் உணவை நல்ல பொருள்களாக மாற்றி ரத்தத்தில் கலக்க முடியும்.


சாப்பிடும் பொழுது செல்போனில் பேசக் கூடாது.
சாப்பிடும் பொழுது நம்மில் பலர் செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடுகிறோம். இது ஜீரணத்தை மிகவும் கெடுக்கும் கெட்ட பழக்கமாகும். ஏனென்றால் நாம் செல்போனில் எந்த விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறோமோ நம் கவனம் முழுவதும் எண்ணம் முழுவதும் மனம் முழுவதும் அந்த விஷயத்தைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நம் உடலில் ஜீரண சுரப்பிகள் எதுவுமே சுரக்காது. அப்பொழுது நாம் சாப்பிடும் சாப்பாடு மலமாகவோ அல்லது விஷமாகவோ மாறுகிறது. தவிர ரத்தமாகவும், நல்ல தாது உப்புகளாகவும் மாறுவதில்லை.


சாப்பிடும் பொழுது செல்போன் பேசிக் கொண்டு சாப்பிடுபவர் அனைவருக்கும் பல நோய்கள் கண்டிப்பாக இருக்கும். இதற்கு எந்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டாலும் அவர்களைக் குணப்படுத்த முடியாது. எனவே, தயவு செய்து சாப்பிடும் பொழுது செல்போனில் பேசாதீர்கள். ஒரு 5 நிமிடத்திற்கு சைலன்ட்டிலோ அல்லது ஸ்விட்ச் ஆப் செய்து விட்டோ சாப்பிடுங்கள். இப்படி சாப்பிடும் பொழுது செல்போனில் பேசாமல் சாப்பிடுவதால் நம் உணவு நன்றாக ஜீரணமாகி பல நோய்களைக் குணப்படுத்தும் மருந்தாக மாறுகிறது.

 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#7
எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?

எதைச் சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?

- ஹீலர் பாஸ்கர்எல்லா வைத்தியர்களும், எது நல்ல உணவு? எது, எது கெட்ட உணவு? என்று ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள். இந்த நோய்க்கு இது சாப்பிடக் கூடாது. அந்த நோய்க்கு அதைச் சாப்பிடக் கூடாதென்று பலரும் பலவிதமாகக் கூறுவார்கள். ஆனால் நம் சிகிச்சையில் அப்படி எதுவுமில்லை. நாம் சாதாரணமாக சாப்பிடும் அனைத்து உணவுகளையும் சாப்பிடலாம். பூமிக்குக் கீழே விளையும் உணவு வகைகளைச் சாப்பிடக்கூடாதென்று சிலர் கூறுவார்கள். பல பேர் பூமிக்குக் கீழே விளையும் பொருள்களைச் சாப்பிடாமல் இருப்பீர்கள். இப்படியே சாப்பிடாமல் இருந்தால், சிறிது நாள் கழித்துப் பூமிக்கு மேல் விளையும் உணவுகளை சாப்பிடக்கூடாதென்று கூறுவார்கள். அப்பொழுது என்ன செய்வீர்கள்?


உணவில் மொத்தம் இரண்டு வகைதான் உள்ளன. பூமிக்கு கீழே ஒன்று, பூமிக்கு மேலே ஒன்று. இப்படி யார், யாரோ சொல்வதை தயவுசெய்து கேட்க வேண்டாம். பூமிக்குக் கீழே கேரட், உருளைக்கிழங்கு விளைகிறது. இதைச் சாப்பிட்டால் என்னவாகும்? பூமிக்குக் கீழேயுள்ள உணவுகளில் எந்தக் குறையும் கிடையாது. அதை உங்களுக்குச் சாப்பிடத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்பதே கேள்வி. உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற உணவுகளைச் சாப்பிடாதீர்கள் என்று கூறுகிறார்கள். அதைத் தாராளமாகச் சாப்பிடலாம். நமக்கு ஒன்றும் ஆகாது. தவறு பூமிக்குக் கீழேயா? அல்லது மேலேயா? என்பதே கிடையாது. நமக்குச் சாப்பிடத் தெரியுமா? அல்லது தெரியாதா? என்பதில் உள்ளது.


நாம் உருளைக்கிழங்கைச் சாப்பிடும்பொழுது அது வாயில் சரியாக அரைபடாமல் சரியாக ஜீரணமாகாமல் வயிற்றுப் பகுதிக்குச் செல்கிறது. வயிற்றிலும், ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் குடலுக்குச் செல்கிறது. பிறகு பல உறுப்புகளைத் தாண்டி மலமாக வெளியே வருகிறது. நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு வாயிலும், உருளைக் கிழங்காகவே வயிற்றிலும், உருளைக் கிழங்காகவே குடலிலும், உருளைக் கிழங்காகவே மலம் வரை வந்து விழுந்தால் இதற்கு உருளைக் கிழங்கு பொறுப்பா? அல்லது நாம் பொறுப்பா? பூமிக்குக் கீழே விளையும் பொருள்களை நாம் ஒழுங்காக ஜீரணம் செய்வதற்கு வழிமுறை தெரியவில்லை என்பதற்காக, பூமிக்கு கீழே விளையும் பொருள்களைத் தவறு சொல்வது, எந்தவிதத்தில் நியாயம்? எனவே, நாம் மேலே கூறியுள்ள சில முறைகளின்படி உணவுகளைச் சாப்பிடுவதால் கண்டிப்பாக நல்ல முறையில் ஜீரணமாகும்.


எனவே, இனிமேல் பூமிக்குக் கீழே விளையும் உணவுகளையும் தாராளமாக சாப்பிடலாம். சிலருடைய மலத்தில் பருப்புகள், கடுகு போன்ற பொருள்கள் இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது? ஒரு முழு பருப்பும், கடுகும் ஜீரணமாகாமல் வாயிலிருந்து மலம் வரை நேரடியாக பைபாஸ் வழியாக வருகிறதென்றால் இது பருப்பின் குறையா? நம் குறையா? எனவே தயவு செய்து உணவுகளின் மேல் தவறு கூறாதீர்கள்.


இனிப்பு சாப்பிடாதீர்கள், சர்க்கரை நோய் வருமென்று கூறுகிறார்கள். இனிப்பை ஓரமாக வைத்து விடுங்கள். உப்புச் சேர்த்துக் கொண்டால் பி.பி. அதிகமாகும் என்று கூறுகிறார்கள். உப்பை ஓரமாக வைத்து விடுங்கள். புளி சேர்த்துக் கொண்டால் மூட்டு, முழங்கால் வலிக்குமென்கிறார்கள். இனி புளியைச் சாப்பிடாதீர்கள். பூமிக்குக் கீழ் விளையும் பொருள்களைச் சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்கள். அதையும் ஓரமாக வையுங்கள்.

கத்தரிக்காய் சாப்பிட்டால் தோலில் நோய் வரும் என்கிறார்கள். கத்தரிக்காயை ஒதுக்குங்கள். தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வரும் என்று கூறுகிறார்கள். எனவே நாம் தக்காளியை ஒதுக்குகிறோம். எண்ணெய்ப் பலகாரம், தேங்காய் சாப்பிட்டால் கொழுப்புக் கட்டிகள் வருமென்று கூறுகிறார்கள். எனவே நாம் எண்ணெய்ப் பலகாரம் தேங்காயையும் சாப்பிடுவது கிடையாது. ஊறுகாய் சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள். ஊறுகாயும் சாப்பிடுவதில்லை.

காரம் அதிகமானால் உடலில் நோய் வரும் என்கிறார்கள். எனவே, நாம் காரத்தையும் சேர்த்துக் கொள்வதில்லை. கசப்பு மற்றும் துவர்ப்பான பொருள்களை ஏற்கெனவே நாமாக யாரும் சேர்த்துக் கொள்வது கிடையாது. சமைத்த உணவு சாப்பிடும்பொழுது பழங்கள் சேர்த்துக் கொள்ளக் கூடாதென்று கூறுகிறார்கள். எனவே நாம் பழங்களையும் தொடுவதில்லை.


இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் கூறி சாப்பிடக் கூடாதென்று கூறுகிறார்களே நாம் எதைத் தான் சாப்பிடுவது? இப்படி மருத்துவர்கள் கூறும் ஒவ்வொரு பொருளையும், நீங்கள் ஒதுக்க ஆரம்பித்தால் கடைசியில் எதையுமே சாப்பிட முடியாது. பட்டினி கிடந்து நாம் சாக வேண்டியது தான். எனவே, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். வழக்கமாக நாம் உண்ணும் உணவு அனைத்தையும் தாராளமாகச் சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது என்கிற பொருள்கள் மிக மிகக் குறைவு.


நம் சிகிச்சையின் படி சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோய் குணமாகும். ரத்த அழுத்த நோயாளிகள் அவரவர் நாக்கு எவ்வளவு உப்பு கேட்கிறதோ அந்த அளவு உப்பு சாப்பிட்டால் மட்டுமே பிபி. குணமாகும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் வெள்ளைச் சர்க்கரை என்பது ஒரு விஷம்.

கரும்பாலையில் வேலை செய்யும் எவரும் வெள்ளைச் சர்க்கரையைச் சாப்பிட மாட்டார்கள். ஏனென்றால், வெள்ளைச் சர்க்கரையில் (அஸ்கா), (சீனி) சல்பர், என்ற ஒரு கொடிய விஷம் கலக்கப்படுகிறது. எனவே வெள்ளைச் சர்க்கரை என்ற விஷத்தைத் தவிர்த்து நாட்டுச் சர்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், பஞ்சாமிர்தம், சப்போட்டா பழம், தேன் போன்ற இனிப்புகளைத் தாராளமாக நிறையவே எடுத்துக் கொள்ளலாம். அதே போல் பி.பி உள்ளவர்கள் பொடி உப்புச் சேர்த்துக் கொண்டால் தான் பிரச்னை. ஆனால் கல் உப்பு மற்றும் இந்து உப்பு எனப்படும் பாறை உப்புகளைத் தாராளமாகச் சாப்பிடலாம். அவை பிபியை குணப்படுத்தும்.


வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக் கிழங்கு சாப்பிடக்கூடாதென்று கூறுவார்கள். பிரச்னை உருளைக்கிழங்கில் கிடையாது. உருளைக்கிழங்கை ஒழுங்காக ஜீரணம் செய்யவில்லை யென்றால் வாயுத்தொல்லை உண்டாகும். ஆனால் நாம் உருளைக் கிழங்கை எப்படிச் சாப்பிட வேண்டுமென்ற வழிமுறைகளில் ஒழுங்காகச் சாப்பிட்டால் அது வாயுத் தொல்லையைக் குணப்படுத்தும், எனவே, வாயுத் தொல்லை உள்ளவர்கள் உருளைக் கிழங்கு சாப்பிடுவது மூலமாக நம் (சிகிச்சையின் முறைப்படி) கண்டிப்பாக வாயுத் தொல்லையைக் குணப்படுத்தலாம். கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் நோய் வருமென்று கூறுவார்கள்.

உண்மையில் கத்தரிக்காய் சாப்பிட்டால்தான் தோல்நோய்கள் குணமாகும். கத்தரிக்காயில் தோலுக்குத் தேவையான தாதுப்பொருள்களும், உப்புகளும் உள்ளன. கத்தரிக்காயை சரியான முறையில் ஜீரணம் செய்யாமல் சாப்பிடுவதால் கத்தரிக்காயிலுள்ள தோலுக்குத் தேவையான சத்துப் பொருள்கள் அரைகுறை ஜீரணத்துடன் ரத்தத்தில் கலந்து அது தோலுக்குச் செல்லும்பொழுது தோலில் நோய் ஏற்படுகிறது. எனவே கத்தரிக்காயை நாம் முறைப்படி நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலமாக கத்தரிக்காயைச் சாப்பிட்டே தோல் நோய்களைக் குணப்படுத்தமுடியும்.

இதுபோல, எந்த நோய்க்கு எதைச் சாப்பிட வேண்டாமென்று கூறுகிறார்களோ, அதை சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக அது நமக்கு மருந்தாகச் செயல்படுகிறது. எந்தப் பொருளை நாம் சரியாக ஜீரணம் செய்யவில்லையோ அந்தப் பொருளிலுள்ள தாதுப் பொருள்கள் சில குறிப்பிட்ட உறுப்பிற்குச் செல்ல வேண்டியவை. எனவே, அந்த உறுப்பில் சில நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் உலக வைத்தியர்கள் அந்தப் பொருளைச் சாப்பிடாதீர்கள் என்று ஒரேயடியாகக் கூறிவிடுகிறார்கள்.


அதனால் நோய் பெரிதாகிறதே தவிர குறைவது கிடையாது. எனவே எந்த நோய்க்கு எதை சாப்பிடக்கூடாதென்று கூறுகிறார்களோ, அதைச் சரியான முறையில் சாப்பிடுவதன் மூலமாக நாம் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நம் சிகிச்சையில் இதைச் சாப்பிடக்கூடாது. அதைச் சாப்பிடக்கூடாதென்று பெரிய லிஸ்ட் எதுவும் கிடையாது. நாம் வழக்கமாக சாப்பிடும் அனைத்து உணவுகளையும் தாராளமாகச் சாப்பிடலாம்.


மூன்று நேரமும் அசைவ உணவும், கொத்து புரோட்டா, ஓட்டல் உணவுகள் ஆகியவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்தது கிடையாதா? அதே சமயம் மூன்று நேரமும் தயிர் சாப்பாடு மட்டும் சாப்பிட்டு கேன்சர் வந்த நோயாளியை நீங்கள் பார்த்தது கிடையாதா? இயற்கை உணவு மட்டுமே சாப்பிட்டு சிறுநீரகம் கெட்டுப் போன நபர்களை நீங்கள் பார்த்தது கிடையாதா? சற்று யோசியுங்கள். எதைச் சாப்பிடுகிறோம்? என்பது முக்கியமல்ல. எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதே மிக மிக முக்கியம். எனவே ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வோர் ஊரிலும் உணவின் வகைகள் வேறுவேறாக உள்ளன.

எனவே இதைச் சாப்பிடக்கூடாது, அதைச் சாப்பிட வேண்டுமென்ற ஒரு கட்டுப்பாடு ஒரு குறிப்பட்ட ஊரில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் மட்டுமே சில காலத்தில் மட்டும் செல்லுபடியாகுமே தவிர உலக அளவில் பார்க்கும் பொழுது எதைச் சாப்பிட்டாலும் சரிசயான முறையில் சாப்பிடுவதன் மூலமாக நம் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே நம் சிகிச்சை முறையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் சரியான முறையில் ஜீரணம் செய்வதற்கான வழிமுறையில் கையாள்வது அவசியம்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#8
குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் ப&

குளித்தால் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக் கூடாது.

- ஹீலர் பாஸ்கர்நாம் பல பேர் குளித்தவுடன் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறோம். குளித்தவுடனே சாப்பிட்டால் சாப்பாடு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. குளித்தபின் குறைந்த பட்சம் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகுதான் சாப்பிட வேண்டும். அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு தான் குளிக்க வேண்டும்.


நம் உடல் 24 மணி நேரமும் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், செல்களும் 98.4 டிகிரி பாரென்ஹீட் வெப்ப நிலையில் (37 டிகிரி Centigrade) இருக்கும். நாம் குளிர்ச்சியான நாட்டிற்குச் சென்று அங்கே 10 டிகிரி வெப்ப நிலை இருந்தாலும் நம் உடலில் தெர்மா மீட்டர் வைத்து அளந்து பார்த்தால் நம் உடலில் 37 டிகிரி தான் இருக்கும். அதே சமயம் சூடான ஒரு நாட்டிற்குச் சென்று அங்கே 50 டிகிரி 60 டிகிரி வெப்பம் இருக்கும்போது நம் உடலில் தெர்மா மீட்டர் வைத்துப் பார்த்தால் நம் உடலில் 37 டிகிரி இருக்கும். இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் மனித உடலின் வெப்ப நிலை 37 டிகிரி சென்டிகிரேட் (98.4 டிகிரி பாரென்ஹீட்). உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அனைத்து மக்களுக்கும் இதே வெப்ப நிலைதான்.


ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களுக்கும் ஒவ்வொரு மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் ஒவ்வொரு வெப்பநிலை இருக்கும். எனவே தான் சில மிருகங்கள் குளிர்ச்சியான பிரதேசங்களில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர்வாழ்கின்றன. எனவே மனிதனின் உடல் வெப்பநிலை 37 டிகிரி. நாம் குளிர்ச்சியான இடத்திலோ அல்லது வெப்பம் அதிகம் உள்ள இடத்திலோ இருந்தாலும் நம் உடலில் உள்ள மூவேப்ப மண்டலம்(Tripple Warmer) என்ற உடல் உறுப்பின் வேலை என்னவென்றால் நம் உடல் வெப்பத்தை சீராக 37டிகிரி வைப்பதற்கு முயற்சி செய்துகொண்டே இருப்பது தான்.


எனவே நாம் குளிக்கும் பொழுது அது சாதாரணத் தண்ணீர் அல்லது சுடு தண்ணீர் எதுவாக இருந்தாலும் அது உடம்புக்கு மட்டும் அல்லது தலைக்கு குளித்தாலும், ஆற்றிலோ, குளத்திலோ, பாத்ரூமிலோ இப்படி எதுவாக இருந்தாலும், குளித்தால் நம் உடலின் வெப்ப நிலை மாறுபடுகிறது. வெப்பநிலை மாறியவுடன் உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பானது உடனே வேலை செய்து நம் உடலில் மீண்டும் 37 டிகிரி கொண்டு வருவதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கும். இப்படி உடல் வெப்ப நிலையைச் சரிசெய்து கொண்டிருக்கும் பொழுது நம் உடலில் ஜீரண உறுப்புகளுக்கு சக்தி கிடைக்காது. எனவே குளித்தவுடன் சராசரியாக ஒரு 45 நிமிடங்களுக்கு நம் உடலில் மூவேப்ப மண்டலம்(Tripple Warmer) வேலை செய்வதால் நம் உடலுக்கு ஜீரண சுரப்பிகள் வேலை செய்வதற்கு சக்தி இருக்காது. எனவே தயவு செய்து குளித்த உடனே சாப்பிடாதீர்கள். குளித்து முடித்தவுடன் ஒரு 45 நிமிடம் காத்திருந்து பிறகு சாப்பிடுங்கள். நீங்களே இதை சோதனை செய்யலாம். குளித்தவுடன் சாப்பிட்டுப் பாருங்கள். அன்று வயிறு கடினமாகவும், அசௌகரியமாகவும் இருக்கும்.


அதே போல் சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மட்டுமே குளிக்க வேண்டும். ஏனென்றால் சாப்பிடும் சாப்பாடு குறைந்த பட்சம் ஜீரணமாகி ரத்தமாக மாறுவதற்கு இரண்டரை மணி நேரம் ஆகிறது. சிலருக்கு ஒரு மணி நேரத்திலேயே ஜீரணமாகும். சிலருக்கு ஐந்து மணி நேரமாகும். சுமாராக சராசரியாக இரண்டரை மணி நேரமாகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சாப்பிட்டவுடனே அரை மணி நேரத்தில் குளித்தால் உடனே உடலில் உள்ள உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்பு உடல் வெப்பத்தைச் சரி செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது நம் உடலில் உள்ள அனைத்து சக்திகளும் இந்த உடல் வெப்பக்கட்டுப்பாட்டு உறுப்புக்கு மட்டுமே செலவாகுமே தவிர ஜீரணச் சுரப்பிகளுக்குக் கிடைக்காது. இதையும் நீங்கள் சோதித்துப் பார்க்கலாம். சாப்பிட்ட உடனே ஒரு நாள் குளித்துப் பாருங்கள். அன்று ஜீரணக் கோளாறு ஏற்படும். வயிறு மந்தமாக இருக்கும். தலைவலி வரும். எனவே சாப்பிட்டால் தயவு செய்து இரண்டரை மணி நேரத்திற்கு குளிக்க வேண்டாம்.


எனவே சாப்பிட்டால் இரண்டரை மணி நேரத்திற்குக் குளிக்கக்கூடாது. குளித்த பிறகு உடனே சாப்பிடக்கூடாது. குறைந்த பட்சம் 45நிமிடங்கள் காத்திருக்க வேண்டும்.


சிலர் எனக்குப் போன் செய்து கேட்கிறார்கள். ‘நான் காலை எட்டு மணிக்குத்தான் படுக்கையிலிருந்து எழுவேன். 9மணிக்கு நான் அலுவலகத்தில் இருக்க வேண்டும். இந்த நிலைமையில் நான் எப்படி குளித்த பிறகு 45நிமிடம் காத்திருப்பது?’ என்று கேட்கிறார்கள். 8மணி வரை சோம்பேறித்தனமாகத் தூங்கியது உங்கள் தவறு. நமக்குத் தேவை என்றால் நாம் சீக்கிரம் எழுந்திருந்தாக வேண்டும். 9மணிக்கு அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்று உங்கள் உடம்பிற்குத் தெரியாது. நீங்கள் எவ்வளவு உயர் அதிகாரியாக இருந்தாலும், எவ்வளவு பெரும் பணக்காரராக இருந்தாலும் அது உடலுக்குத் தெரியாது. உடலுக்குச் சில விதி முறைகள் உண்டு. எனவே தயவு செய்து எந்தக் காரணத்தையும் கூறாமல் இந்த விதிமுறைகளை நாம் பின்பற்றுவதற்கு நம்மை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே யோசியுங்கள்
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#9
சாப்பிடும் பொழுது ஏப்பம் வந்தால் என்ன செ

சாப்பிடும் பொழுது ஏப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
- ஹீலர் பாஸ்கர்ஏப்பத்தில் பல வகைகள் உள்ளன.

1. பசி ஏப்பம்,
2. ஜீரண ஏப்பம்,
3. அஜீரண ஏப்பம்.

பசி எடுக்கும் பொழுது நமக்கு ஏப்பம் வரும். ஏனென்றால் வயிற்றில் பசி எடுக்கும் பொழுது ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலத்திற்கு ஏதாவது சாப்பிட வேண்டும். இல்லையென்றால் சிறிது நேரம் இந்த அமிலம் காத்திருக்கும். அமிலம் சுரந்து சாப்பிடாமல் இருந்தால் அந்த அமிலம் நீர்த்துப் போக ஆரம்பிக்கும். அப்பொழுது அமிலம் நீர்த்துப் போய் அது ஏப்பமாக வெளிவரும். எனவே இது பசி ஏப்பம் ஆகும். பசி எடுக்கும் பொழுது சாப்பிடுவதற்கு முன்பாக ஏப்பம் வந்தால் நம் வயிறு நம்மை எச்சரிக்கிறது.

உடனே சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது என்று புரிந்து கொண்டு உடனே நாம் ஏதாவது உணவைச் சாப்பிட வேண்டும். உடனே சாப்பிட முடியாவர்கள் ஏதாவது பழங்களைச் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரத்திற்குப் பசியைத் தள்ளிப் போடலாம். இனி கண்டிப்பாக இரண்டு மணி நேரத்திற்கு நம்மால் சாப்பிட முடியாது என்ற நிலை இருக்கும் பொழுது அரைலிட்டர் தண்ணீரைக் குடித்து அந்த அமிலத்தை நாமே அணைத்து விட்டால் நமக்கு அல்சர் என்ற நோய் வருவதற்கு வாய்ப்பில்லை. எனவே பசி எடுத்தால் ஓர் ஏப்பம் வரும். அந்த ஏப்பத்தைப் புரிந்து கொண்டு உடனே சாப்பிட வேண்டும். அல்லது நிறைய நீர் குடித்து நம் வயிற்றைக் காப்பாற்ற வேண்டும்.


சாப்பிடும் பொழுது ஏப்பம் வரும். இந்த ஏப்பத்தின் பொருள் நாம் நன்றாக சாப்பிட்டதால் ஒழுங்காக ஜீரணம் ஆகிறது என்று பொருள். அப்பொழுது வரும் ஏப்பத்திற்குக் காரணம் என்னவென்றால் வயிற்றின் மேலே ஒரு கதவும், கீழே ஒரு கதவும் இருக்கும். வாயில் சாப்பிடும் சாப்பாடு உணவுக்குழாய் வழியாக வயிற்றின் உள்ளே நுழைவதற்கு ஒரு கதவு இருக்கும். இந்தக் கதவு உணவு உள்ளே சென்றவுடன் மூடிவிடும்.

சாப்பிட்ட பின் தலைகீழாக நிற்கும் பொழுது உணவு வாய் வழியாக வெளியே வராமல் இருப்பதற்கு இந்தக் கதவு தான் காரணம். இந்தக் கதவு உணவை உள்ளே மட்டுமே செலுத்தும். மீண்டும் வெளியே செலுத்தாது. சில ஆபத்துக் காலங்களில் வாந்தி வரும் பொழுது மட்டுமே அது திறக்கும். அதே போல் வயிற்றுக்குக் கீழே முடிவில் வயிற்றிலிருந்து சிறு குடலுக்குச் செல்ல ஒரு கதவு உள்ளது. இந்தக் கதவும் உணவைக் கீழ் நோக்கி மட்டுமே அனுப்பும். மேல் நோக்கி அனுப்ப அனுமதிக்காது.

நம்மில் சிலருக்கு சாப்பிடும் பொழுதே ஏப்பம் வரும். இதன் காரணம் வயிற்றின் கீழே உள்ள கதவு திறந்து நாம் சாப்பிட்ட சாப்பாடு நன்றாக ஜீரணமாகிய பிறகு அது வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குத் தள்ளப்படும் பொழுது வயிற்றில் ஒரு காலியிடம் உருவாகும். இந்தக் காலியிடத்தை நிரப்புவதற்காக வயிற்றுக்குக் காற்று தேவைப்படும். அந்தக் காற்றை வாய் வழியாக உறிஞ்சுவதற்காக வயிற்றின் மேற்பக்கக் கதவு திறந்து காற்றை உள்வாங்கும். இந்தச் சப்தம்தான் ஏப்பம்.


நாம் சாப்பிடும் பொழுது சாப்பிட, சாப்பிட ஏப்பம் வந்தால், நாம் நன்றாக ஒழுங்காக முறையாக சாப்பிடுகிறோம் என்று பொருள். எனவே சிலருக்கு நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தைத் தெளிவு படுத்துகிறோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏப்பம் வந்தால் நம் வயிறு சாப்பாடு போதும் என்று சொல்கிறது என்று பொருள்.

எனவே சாப்பிடும் பொழுது ஏப்பம் வந்தால் நாம் உணவு சாப்பிடுவதை நிறுத்தி விடலாம். ஆனால் முதல் ஏப்பம் வந்தவுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் என்று நாம் ஏற்கெனவே டி.வி.டிகளில் கூறியிருப்போம். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்படுகிறது. சிலருக்கு குறைந்த அளவு சாப்பிட்டவுடனேயே ஏப்பம் வந்து விடுகிறது. ஆனால் மீண்டும் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர்களுக்குப் பசி ஏற்படுகிறது.

ஆனால் அவர்கள் அப்பொழுது மறுபடியும் சாப்பிடுவது கிடையாது. நம் சிகிச்சையில் முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்திவிட வேண்டும் என்றும் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும் என்று இரண்டு விதிகள் உள்ளன. முதல் ஏப்பம் வந்தால் சாப்பாட்டை நிறுத்தி விட்டால் கண்டிப்பாக மீண்டும் பசித்தால் சாப்பிட வேண்டும். ஆனால் பலர் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் மறுபடியும் பசி எடுத்தால் சாப்பிடுவது கிடையாது.


எனவே முதல் ஏப்பம் வந்தால் உடனே நிறுத்திவிட வேண்டும் என்ற விதியை வீட்டிலேயே இருக்கக்கூடிய, நினைத்தால் சாப்பிடக்கூடிய சூழ்நிலை உள்ளவர்கள் மட்டுமே தயவு செய்து பயன்படுத்துங்கள். சிலர் வேலைக்குச் செல்பவர்கள் காலை எட்டு மணிக்கு இரண்டு இட்லி சாப்பிட்டவுடன் ஏப்பம் வந்துவிடும். உடனே நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

ஆனால் 12மணிக்கு நன்றாகப் பசிக்கும். ஆனால் அவர்கள் 2மணிக்குத் தான் உணவு இடைவேளை கொடுப்பார்கள். இந்த நிலையில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இனி கூறுகிற இரண்டு முறைகளில் உங்களுக்கு எது சாத்தியப்படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றுங்கள். 1.முதல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்த வேண்டும். ஆனால் பசி எடுத்தால் உடனே கண்டிப்பாக மீண்டும் சாப்பிட வேண்டும். 2.ஏப்பத்தைப் பற்றிக் கவலைப் படாமல் ஏப்பம் வந்தால் உணவை நிறுத்தாமல் உங்களுக்கு மனத்திற்குப் பிடித்தது போல ஆசை தீரச் சாப்பிடுங்கள். ஆனால் மறுபடியும் பசி எடுக்கும் வரை காத்திருந்து மீண்டும் அடுத்த வேளை உணவைச் சாப்பிட வேண்டும்.


சிலருக்கு சாப்பிட்டபின் ஒரு மணி நேரம் அல்லது 2மணி நேரம் கழித்து ஏப்பம் வரும். இதற்குக் காரணம் அஜீரணம். அதாவது வயிற்றுக்குச் சென்ற உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் பல மணி நேரமாக வயிற்றில் இருந்து புளித்து கெட்டுப் போய் அதிலிருந்து வரும் கெட்ட காற்று தான் இந்த ஏப்பத்திற்கான காரணம். இது புளித்த ஏப்பம்.

எனவே யாருக்குப் புளித்த ஏப்பம் வருகிறதோ நீங்கள் உணவை ஒழுங்காக சாப்பிடவில்லை என்று புரிந்து கொண்டு தயவு செய்து இனிமேல் முறையாக சாப்பிடக் கற்றுக் கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#10
"சுவையை ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்&

"சுவையை ரசித்து, ருசித்துச் சாப்பிட வேண்டும்"நாம் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவிலும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. இந்த சுவை நாக்கால் மட்டுமே ஜீரணிக்க முடியும். வயிற்றுக்குச் சுவையை ஜீரணிக்கத் தெரியாது. எனவே ஒரு உணவை வாயில் வைத்தவுடன் அதில் சுவை நிறையாக இருப்பது தெரிகிறது. பிறகு மெல்ல மெல்ல அந்தச்சுவை காணாமல் போய்விடுகிறது. அப்பொழுது நாம் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அந்தச்சுவையைக் கிரகித்து சக்தியாக மாற்றுகின்றன. சுவையை இரசிக்காமல், ருசிக்காமல் ஒரு வேளை விழுங்கினால் அந்த சுவை வயிற்றால் ஜீரணிக்க முடியாது. ஏனென்றால் வயிற்றுக்குச் சுவையை ஜீரணம் செய்யத் தெரியாது. பொருளை மட்டுமே ஜீரணம் செய்யத் தெரியும். நாக்கால் ஜீரணிக்கப்பட முடியாத ஒரு சுவை மலமாக மட்டுமே போகும்.

எனவே உள்ளச் சுவைகளைச் சத்தியாக மாற்ற வேண்டும் என்றால் ஒரு உணவில் உள்ள அனைத்து சுவைகளையும் இரசித்து, ருசித்து அந்த சுவை சப்பை ஆகும் வரை சுவையற்றுப் போகும்வரை வாயில் வைத்திருக்க வேண்டும். நாம் ஒரு உணவை விழுங்குவதற்கு முன் அதில் சுவை கண்டிப்பாக இருக்கக்கூடாது. இப்படி சுவைத்துச் சாப்பிட்டால், சுவை மூலமாகக் கிடைக்கும் பிராண சக்தியும், பொருளினால் உருவாகும் பிராண சக்தியும், இரண்டு பிராண சக்தியும் நமக்குக் கிடைக்கும். எனவே உணவைச் சாப்பிடும்பொழுது மென்று சுவைத்து முழுவதும் சுவையற்ற பிறகே விழுங்க வேண்டும். வாழ்வோம் ஆரோக்கியமாக!!

 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.