Heart Problems & Medicines -இதய நோய்மருந்துகள்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
இதய நோய்மருந்துகள்

உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் இன்றியமையாதவை என்றாலும் ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் பாய்வதும், அதனால் அந்தந்த உறுப்புக்குத் தேவையான சத்துகளையும் ஆக்ஸிஜனையும் வெப்பத்தையும் செலுத்தும் இதயம் மிக முக்கியமான உறுப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே...இதய நோய்களை அதன் வடிவ அமைப்பிலோ (Anatomy Septal defects vascular defects), உட்கூறிலோ (Internal Anatomy Infection specified) பிறவியிலோ (Congenital) அதன்பின் ஏற்படும் நடைமுறை (Acquired) மாற்றங்களை - நோய்களை முதல் வகையாக (Anatomical malformation) பிரிக்கலாம்.

இதயத்துக்கு ரத்தம் செல்லும் 3 முக்கியமான ரத்தக்குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் வரும் நோய்களே இரண்டாவது வகை. இந்த நோய்களால் இதயம் ஒரு வலுவான தசைகளாலான மோட்டார் பம்பாக செயல்பட முடியாமல் போகும். இதயத் துடிப்பு (Heart beat), அதன் வேலையை (Heart rate Function) செய்ய முடியாமல் போவதை உள்ளடக்கியதே மூன்றாவது வகை.

முதல் வகை நோய்கள்...

இதயத்தின் 4 அறைகளுக்கு இடையில் அதன் தடுப்புச் சுவர்களில் இரு மேல் அறைகளுக்கு நடுவில் ஏற்படும் துவாரம் பிறப்பின் போது அடையாத (ASD Atrial Septal Defect) நோய், இரு கீழ் அறைகளுக்கு நடுவே ஏற்படும் துவாரம் பிறப்பின்போது அடைக்காத நோய் (VSD Ventricular Septal Defect) இதனால் இடதுபுறம் செல்லும் நல்ல ரத்தம் வலதுபுறம் செல்லும் கெட்ட ரத்தத்துடன் கலக்க நேரிடும்.

இதயத்தின் 4 வால்வுகளுக்கு (Mitral valve, Aortic valve, Tricuspid Valve, The pulmonary valve) ஏற்படும் அதிக சுருக்கம், அதனால் ரத்தம் இதயத்தி லிருந்து வெளியேற முடியாமல் இதயத்தின் சுவர்கள் வீங்குவதும் பின் செயல் இழப்பதும் (Cardiomyopathy), அதனால் உறுப்புகளுக்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் போவதும். இதயத்தின் சுவர்கள் வீங்குவது என்பதும் இதயத்தின் தசைகள் விரிந்து சுருங்கும் தன்மையை இழந்து, அது செயல் இழப்பதே (Heart Failure).

இது பொதுவாக பிறப்பிலேயே இருப்பதால் பிறக்கும் குழந்தைகள் நீல நிறமாக மாறி விடுவார்கள். நல்ல ரத்தம் உடலுக்குக் கிடைக்காததால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. அவ்வாறு நீலமாக மாறாமல், சற்று தாமதமாக நோயை வெளிக்காட்டும் குழந்தைகளும் உண்டு. இது போன்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, பால் அருந்தாமை, வியர்வை, மயக்கம், எடை குறைவு என தாய்மார்கள் உணர்ந்து மருத்துவரிடம் வர வாய்ப்பு இருக்கிறது. ரத்தக்கொதிப்புக்கு ஒழுங்காக மருந்து எடுக்காமல் போகும்போது இடது கீழ் அறை வீங்கி அதனால் இதயம் செயல் இழக்கக்கூடும். இந்நோய்களுக்கு அறுவை சிகிச்சை முறைகளே தீர்வு - இதய மாற்று அறுவை சிகிச்சை உள்பட.

இரண்டாவது வகை...

இதயத்துக்கென ரத்தம் செல்லும் 3 முக்கியமான ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இதயத்தின் வலிமை மிகுந்த தசைகளை மையோகார்டியம் என்கிறோம். இதற்கு ரத்தம் அயோர்டா (Aorta) எனப்படும் முக்கிய ரத்தக்குழாயிலிருந்து வலதுபுறமாக வலது இதய ரத்தக்குழாய் (RCA Right Coronary Artery), இடதுபுறமாக இடது இதய ரத்தக்குழாய் (LCA Left Coronary Artery) என இரண்டாகப் பிரிந்து இதயத்தின் எல்லா தசைகளுக்கும் ரத்தம் செல்கிறது. எங்கேனும் அடைப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதிக்கு ரத்தம் செல்லாமல் அந்தத் தசை இறந்து போவதையே மாரடைப்பு என்கிறோம்.

கோபம், எரிச்சல், கத்துதல், வருத்தம் போன்ற உணர்ச்சிகளின் போதும் உடலின் எல்லா ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்கும்போது அந்த இடத்தில் கொழுப்பு படர்ந்து இருந்தால், மெதுவாக ரத்தம் அந்த இடத்தை கடக்கும்போது கட்டியாக உறைய லாம். அல்லது உடலின் வேறு பகுதிகளில் இருந்து வரும் ரத்தக்கட்டி (Blood Clot), அந்த இடத்தைத் தாண்ட முடியாமல் அடைப்பு ஏற்படும்.

இப்படி அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பின் அறிகுறிகளாக நடு நெஞ்சுவலி, வலது, இடது நெஞ்சுவலி, நெஞ்சை அழுத்துவது போன்ற மாரடைப்பு வலி, நடந்தால், மாடிப்படி ஏறினால் வரும் வலி, கழுத்து வலி, பல் வலி, இடது தோள்பட்டை வலி, இது தோள்பட்டையிலிருந்து இடது கை முழுவதும் வரும் வலி, மேல்வயிறு வலி, மூச்சடைப்பு, திடீரென்று நெஞ்சுவலியுடன் வரும் வியர்வை, மயக்கம் போன்ற எல்லா அறிகுறியுடனோ, ஏதாவது ஒரு அறிகுறியுடனோ இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது மிக முக்கியம்.

இ.சி.ஜி. (ECG Electro Cardiogram) பரிசோதனை மூலம் கண்டுகொள்ளப்படும் இந்நோயை, இதய தசைகள் இறந்து போவதைத் தெரிவிக்கும் என்சைம் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யலாம். ஆஞ்சியோகிராம் மூலம் இதயத்தின் எந்தக் குழாய், எவ்வளவு உள்ளளவு, எவ்வளவு நீளம் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, அந்த ரத்தக்குழாயை விரிக்கும் ஸ்டென்ட் (Stent) மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கலாம்.

ஆஸ்பிரின் (Aspirin), குளோபிடக்ரெல் (Clopidogrel) போன்ற வாய்வழி மருந்துகள் மூலம் ரத்தக்குழாயின் அடைப்பை சரி செய்யவும், ரத்தக்கட்டியைக் கரைக்கவும் முடியும். நரம்பு வழியாக ஸ்டெரப்டோகைனஸ் (Streptokinase), அல்டேப்ளேஸ் (Alteplase), லோ மாலிக்குள் ஹெப்பாலின் (Low Molecule Hepalin) போன்ற மருந்துகளை செலுத்தும்போது ரத்தக்கட்டிகளை கரைக்கலாம். இதன் பின், கொழுப்பு படிந்து சுருங்கிய ரத்தக்குழாய்களை ஸ்டென்ட் மூலமாகவோ, நல்ல ரத்தக்குழாய்களை வேறு இடத்திலிருந்து எடுத்து அடைப்புகளுக்கு முன்னும் பின்னும் தைத்து பைபாஸ் செய்வதன் மூலமாகவோ நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.

அவசர சிகிச்சைகளின் போது நைட்ரோ கிளிசரின் மருந்துகள் மூலம் தற்காலிகமாக அடைப்பை விரிப்பதற்கு உதவுவார்கள். ரத்தக்குழாய்கள் அதிகமாக விரிவடையும் போது ரத்தக்கொதிப்பு குறையும் வாய்ப்பு இருக்கிறது.Antiplatlet Drugs, Aspirin Clopidogrel போன்றவை உறைந்த ரத்தக்கட்டிகளை கரைக்க பயன்படுகின்றன. தினம் இம்மருந்துகளை உட்கொண்டு, ரத்தக்கட்டிகள் உருவாகாமல் செய்து, மாரடைப்பு, பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கலாம்.

இதயநோய் உள்ளவர்களுக்கும், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், 40 முதல் 50 வயது உள்ளவர்களுக்கும் இது வாழ்நாள் முழுக்கத் தரப்படுகிறது. ஆஸ்பிரின் மிக பரவலாக பயன்படுத்தப்படும் மருந்தானாலும், சிலருக்கு இரைப்பை புண் (Ulcer) ஏற்படுத்தும். இரைப்பையில் ரத்தக்கசிவு கூட வரலாம். நோயாளிகளின் பக்கவிளைவு களைப் பொறுத்து மாற்று மருந்தாக Clopidogrel மட்டுமோ அல்லது இரைப்பை புண்ணாகாமல் இருக்கும் மருந்துடனோ தருவார்கள்.

மூன்றாவது வகை

இதயம் துடிப்பது சம்பந்தமானவை. இதயத் துடிப்பு என்பது இதயம் விரிவது, சுருங்குவது... இதயம் விரியும்போது இடது மேல் அறையில் (Left atrium) நுரையீரலிருந்து ஆக்ஸிஜனுடன் வரும் நல்ல ரத்தம் இடது கீழ் அறைக்குச் (Left Ventricle) சென்று விடும். அதே வேளையில் வலது மேல் இதயம் விரியும் போது ரத்தம் இதயத்துக்கு மேலிருந்தும் இதயத்துக்குக் கீழிருந்தும் (சிறுநீரகம், ஈரல் வழியாக சுத்தமடைந்து), வலது மேல் அறைக்குள் (Right Atrium) வந்த பிறகு, வலது கீழ் அறைக்குச் சென்று (First ventricle) அங்கிருந்து நுரையீரலுக்கு சுத்திகரிப்புக்காக சென்று விடும்.

இப்படி, ஒரு இதய துடிப்பில் சுருங்கும் போதே, ரத்தம் வலது கீழ் அறைக்கு சென்று, அங்கிருந்து நுரையீரலுக்கும் சுத்திகரிப்புக்காக சென்று விடும்... வலது கீழ் இதயத்திலிருந்து நுரையீரலுக்கும், இடது இதயத்திலிருந்து உடலின் பெரிய நல்ல ரத்தக்குழாயான அயோர்டா (Aorta) உள்ளும் செலுத்தப்படுகிறது.

இந்த இதயத் துடிப்பை (Heart Rate) ரத்தக் குழாய்களில் உணருவதையே நாடித்துடிப்பு (Pulse Rate) என்கிறோம். இதயம் நன்கு துடிப்பதையும், அதை பல்வேறு இடங்களில் பரிசோதிப்பதன் மூலம், எல்லா இடங்களுக்கும் ரத்தம் சீராகப் பரவுவதையும், ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்பதையும் நாடித்துடிப்பின் மூலம் அறியும் மருத்துவர்கள் ரத்தக்கொதிப்பை (BP) ஓரளவு சொல்லமுடியும். கருவுற்று இருப்பதை எல்லாம் சொல்ல முடியாது!

நோயாளியும் 75% தனது துடிப்பு மாற்றங்களை உணர முடியும். இதயத்தின் மேல் அறைகள் தனியாக வேகமாகத் துடிப்பதை (Atrial Fibrillation), இதயத்தின் கீழ் அறைகள் தனியாக வேகமாகத் துடிப்பதை (Ventricular Fibrillation) என்கிறோம். அதிவேகமாகத் துடித்தால், Defibrillator மூலமாக ஷாக் கொடுத்து உயிரைக் காப்பாற்ற முடியும். சில மருந்துகள் (Beta Blockers) மூலமும் இதயத்தின் துடிப்பைக் குறைக்க முடியும். திடீரென ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க இதயத்துடிப்பு திடீரென அதிகப்படும்போது, குறைப்பதற்கு தோலின் கீழே இதயத்தின் அருகிலேயே Defibrillator பொருத்தப்படுகிறது.

இதயம் மிக மெதுவாக (<60/minute) துடிக்கும் போது பேஸ்மேக்கர் மூலமாக இதயத் துடிப்பை கூட்டும் கருவிகளும், தோலின் கீழ் இதயத்தின் அருகிலேயே பொருத்தப்படுகின்றன. இதயத் துடிப்பு மேல் அறையிலிருந்து கீழ் அறைக்குக் கடக்கும் போது ஏற்படும் தடையை 'ஹார்ட் பிளாக்' என்கிறோம். இதயம் நன்றாக துடிப்பதற்கு, இதயம் வேலை செய்ய மறுப்பவர்களுக்கு (Heart Failure), மிகக்குறைந்த அளவில் Digoxin தர ஆரம்பித்து, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் என்று தேவையைப் பொறுத்து கூட்டிக் கொண்டு செல்லுவார்கள்.

ரத்த அளவைக் குறைப்பதற்கு நீரை வெளியேற்றும் Diuretics Frusemide Torsemide மருந்துகள் தரப்படுகின்றன. இதயம் வேகமாகத் துடிப்பதைக் குறைப்பதற்கு Metoprolol, Atenolol, Propranolol மருந்துகள் குறைந்த அளவில் தரப்படுகின்றன. இதுவரை நாம் பார்த்தவை 40 வயதுக்கு மேல் வரும் பல்வேறு நோய்களுக்கு பரவலாக தரப்படும் மருந்துகள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளே.

டாக்டர் மு.அருணாச்சலம் 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
[TABLE]
[TR]
[TD="colspan: 2"]
ரத்தக்கொதிப்பு மருந்துகள்

ரத்தக்கொதிப்பு என்பது அதிக ரத்த அழுத்தமே. ரத்த அழுத்தம் (Blood Pressure) என்பது உடலின் மிக வலிமையான தசைகளாலான (மோட்டார் பம்பு) இதயம் உடலின் எல்லாப் பாகங்களுக்கும் ரத்தத்தை - சுமார் 5 லிட்டர் ரத்தக்குழாய்களின் வழியாகச் செலுத்தும்போது உண்டாகிறது. இதயத்தினால் அழுத்தப்பட்டு ரத்தக்குழாய்களில் பாயும் போது அதன் சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இந்த ரத்த அழுத்தத்தினால் மட்டுமே, இதயத்திலிருந்து உயரத்தில் இருக்கும் மூளைக்கும், கணுக்காலுக்கும், கால் விரல்களுக்கும் சீராக ரத்தம் பாய முடிகிறது.ரத்த அழுத்தம் என்பது 2 எண்களாக பதிவு செய்யப்படுகிறது. அதிகமாக இருக்கும் எண் முதலிலும், குறைவாக இருக்கும் எண் இரண்டா வதாகவும் குறிப்பிடப்படுகிறது. ரத்த அழுத்தத்தை இதயம் சுருங்கும் போது இதயத்தி லிருந்து நுரையீரலுக்கும் உடலுக்கும் ரத்தம் வெளியேறும் போது இதய அறைகள் வெற்றிட மாகும் போது, ரத்தக்குழாய்களின் மீது ஏற்படும் தாக்கத்தை systolic blood pressure என்கிறோம்.

இதைப் போலவே புதிய ரத்தம் நுரையீரலிலிருந்தும் உடலிலிருந்தும் இதய அறைகளுக்குள் நுழையும் போது, இதயம் தளர்ச்சியாகி ரத்தம் இதயத்தை நிரப்பும் போது ரத்தக்குழாய்களில் ஏற்படும் தாக்கத்தையே இதயம் விரியும் ரத்த அழுத்தம் diastolic blood pressure என்கிறோம். Optimal/Normal blood pressure எனப்படும் சாதாரண ரத்த அழுத்தம் 130/95 என்று குறிப்பிடப்படும். ரத்த அழுத்தம் இந்தக் குறியீட்டுக்கு 130/95 கீழே இருக்கும் வரை சரியாக இருக்க வேண்டிய அளவாகும். இதற்கு மேல் கூடும் போது, அதை ரத்தக்கொதிப்பு (Hyper Tension) என்கிறோம்.

Prehypertension: 120/80 139/89
High Blood Pressure: 140-160/95-100
Hypertensive Crisis: > 160/110
உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?


கோபமாக இருப்பவர்களுக்கும், வருத்தமாக இருப்பவர்களுக்கும், குண்டாக இருப்பவர்களுக்கும் மட்டுமே ரத்தக்கொதிப்பு வருவது இல்லை. 40 வயதுக்கு மேல் வரும் நோய்களில் 95 சதவிகிதம் ரத்தக்கொதிப்பே. குண்டாக இருப்பவர்கள் எல்லோருக்கும் ரத்தக்கொதிப்பு வருகிறதா? இல்லை! ஆனால், ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் எடை குறைப்பதால் ரத்தக்கொதிப்பும் குறைகிறது என்பது உண்மை. பாரம்பரியம் ஒரு காரணம். ஆல்கஹால், புகைப்பழக்கம் ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்துகிறது என்பது மருத்துவ உண்மை.

உடல் உழைப்பு இல்லாதவர்கள், உடற்பயிற்சியே இல்லாதவர்களுக்கும் ரத்தக்கொதிப்பு வருகிறது. அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு 3 மாதம் தூக்கமே இல்லாத ஆண்களுக்கும் 6 மாதம் தூக்கம் இல்லாத பெண்களுக்கும் ரத்தக்கொதிப்பு அல்லது சர்க்கரை நோய் வருகிறது என்பது மருத்துவ ஆய்வு. உடலில் நீரை இழுத்து வைக்கும் சக்தி உடையது உப்பு. இதனால் ரத்தத்தில் திரவ அளவு கூடி ரத்தக்கொதிப்பைக் கூட்டும். எனவேதான் ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்கும் உப்பைத் தவிர்க்க நோயாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காரணம் பலவாக இருக்கலாம். ஏன் என்று தெரியாமலும் இருக்கலாம். ஆனால், ரத்த அழுத்தம் அதிகமாகும் போது, சுகாதாரமான நல்ல ரத்தக்குழாய்களில் தசைகளும், அதைச்சுற்றி விரிந்து சுருங்கும் திசுக்களும் கொண்ட ரத்தக்குழாய்களில், நாள்பட ரத்த அழுத்தம் அதிகமானால் P.V.C. பைப் போல ரத்தக்குழாய்கள் அப்படியே இல்லாமல் விரிந்து பாதிப்புக்கு உள்ளாகின்றன.

ரத்தக்குழாய்களில் ஏற்படும் விரிவுகளால் ரத்தக்குழாய் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு குழாய்களை விட்டு ரத்தம் கசிவதும் (Hemorrhagic events), ரத்தக்குழாய்களில் விரிசல் பைகள் (Aneurysm) போல தொங்குவதும் நடக்கின்றன. ரத்தக்குழாய்களில் ஏற்படும் சின்னச் சின்ன கிழிசல்களில் வடுக்கள் ஏற்பட்டு அவற்றில் கொழுப்புக் கட்டிகள் படர ஆரம்பிக்கின்றன.

இது போன்ற ரத்தக்குழாய்களில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு குழாய்கள் சுருங்கும் இடங்களில் ரத்தம் மிக மெதுவாகச் செல்லும் போது ரத்தம் உறைந்து கட்டிகளாகி, ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தி, அது செல்லும் உறுப்புகளுக்கு ஏற்ப மூளையில் (Stroke) பக்கவாதமாகவோ, இதயத்தில் (Heart Attack) மாரடைப்பாகவோ, கை, கால்களில் ரத்தம்
செல்லாமல் (Vein thrombosis) உணர்வு சுற்று செயல் இழந்து போகவோ வாய்ப்பு இருக்கிறது.

ரத்தக்கொதிப்பு நோயின் அறிகுறிகள் என்று எதுவுமே இல்லாமல் கூட நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருக்கும். பொதுவாக லேசான தலைச்சுற்று, காதுகளில் இரைச்சல், தலைக்கனம், தலைவலி, நெஞ்சு அழுத்தம், படபடப்பு, மூச்சு இரைத்தல், பெருமூச்சு மற்றும் கோபம், எரிச்சல், கை கால் நடுக்கம், தூக்கமின்மை, மூக்கில் ரத்தம் ஒழுகுதல் போன்ற சிறிய சிறிய அறிகுறிகளுடன், எந்த அறிகுறியும் இல்லாமலோ ரத்தக்கொதிப்பு இருக்கலாம்.

காரணமே இல்லாமல் 40 வயதானவர்களுக்கு வரும் ரத்தக்கொதிப்பை பிரைமரி ரத்தக்கொதிப்பு (Primary Hypertension) என்றும் சிறுநீரகம், அட்ரினல் கிளாண்ட் மற்றும் பாரம்பரிய ரத்தக்குழாய் நோய்கள் போன்ற காரணங்களோடு வருகின்ற ரத்தக்கொதிப்பை செகண்டரி ரத்தக்கொதிப்பு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ரத்தக்கொதிப்பு பருமனாலோ, அதிக உப்பு உபயோகத்தினாலோ, அதிகஆல்கஹால், புகை, மன அழுத்தம் போன்றவற்றுடன் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கையினால் ஏற்படுவதை வாழ்க்கை நடைமுறை மாற்றத்தினால் (Life Style Modification) நோயை ஓரளவு தள்ளிப்போடலாம். அல்லது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கவோ, வராமல் தள்ளிப் போடவோ முடியும்.

வயது, பாரம்பரியத்தினாலோ, வயதாவதினாலோ, இனத்தினாலோ ஆண்களுக்குஅதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு என மாற்ற முடியாத காரணங்களினால் வரும் ரத்தக்கொதிப்பை முழுக்க முழுக்க மருத்துவரின் மருந்துகளின் துணையோடு எதிர்கொள்வதே நல்லது.ரத்தக்கொதிப்பை பரிசோதிக்கும் போது மருத்து வருக்கு மருத்துவர் மாறுபடலாம்.

ஏனென்றால், ரத்தக்கொதிப்பு அதிக உடற்பயிற்சிக்கு பின்னோ, காபி, புகை (Smoking) மற்றும் அதிக உப்பு உள்ள உணவுக்கோ, வெகுநேரமாக சிறுநீரை அடக்கி வைத்து இருப்பவர்களுக்கும், மன உளைச்சலோடு தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கும், காலையில் தூக்கத்திலிருந்து எழும்பும் போது மன அழுத்தத்தினாலும், மருத்துவர் முன்பும் (White Coat Hyper tension) ரத்தக்கொதிப்பு அதிகமாக இருக்கலாம். ரத்தக்கொதிப்பை மருத்துவர் பரிசோதித்துப் பார்க்கும் முன் மேலே கண்ட காரணங்களைத் தவிர்க்கலாம்.

ரத்தக்கொதிப்பு மருந்துகள்

1. உடலிலிருந்து நீரை வெளியேற்றும்மருந்துகள் (Diuretics) Hydrochlorothiazide, Chlorthalidone, Indapamide, Furosemide இம்மருந்துகள் மிக மெதுவாக வேலை செய்யும். பொட்டாசியம் அளவுக்கு அதிகமாக வெளியேறலாம். இம்மருந்துகள் ஒரு வேளை தருவதாலும் நீர் வெளியேறுவதாலும் விலை குறைவாக இருப்பதாலும் முக்கியத்துவம்உள்ளவை. மிக குறைவான மருந்து அளவில் பக்கவிளைவு பலதை தடுக்க முடிகிறது.

2. ACE Inhibitors Enalapril, Lisionopril, Ramipril சில மருந்துகளுக்கு இரவில் வறட்டு இருமல் வரலாம். மற்றபடி மிக அருமையான ரத்தக்கொதிப்பைக் குறைக்கும் குணாதிசயம் கொண்டவை. சர்க்கரை வியாதி, சிறுநீரக நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பான ரத்தக்கொதிப்பு மாத்திரைகள்.

3. Angiotensin BlockersLosartan, Volsartan, Telmisartan இம்மருந்துகளுக்கு வறட்டு இருமல் இருப்பது இல்லை. இவை Ace Inhibitor விட நல்ல தீவிரமாக ரத்தக்கொதிப்பைக் குறைக்கின்றன. ரத்தக்கொதிப்பினால் ஏற்படும் மோசமான விளைவுகளை முழுமையாக தவிர்க்கும் மருந்து.

4. Calcium channal blockersVerapamil, Diltiazem, Nifedipine, Amlodipine
இம்மருந்துகளுக்கு மிக வேகமாக ரத்தக்கொதிப்பைக் குறைக்கும் குணாதிசயம் உண்டு. மற்ற எல்லா ரத்தக்கொதிப்பு மருந்துகளுடன் சேர்த்துத் தரப்படும் ஒரு மருந்தாகும். சில நோயாளிகளுக்கு சில பல வருடங்களுக்கு பிறகு கணுக்கால் வீக்கம் ஏற்படலாம்.

5. B.Adrenergic blockersPropranolol, Metoprolol, Atenolol இது இதய துடிப்பைக் (Heart Rate) குறைத்து, ரத்தக் கொதிப்பையும் குறைக்கும் மருந்தாகும். ஒரு காலத்தில் பரவலாக உபயோகப்படுத்தப்பட்ட இம்மருந்து இப்பொழுது இளம் வயதினரைத் தவிர்த்து இதய துடிப்பைக் குறைக்கும் ரத்தக்கொதிப்பு மருந்தாகத் தரப்படுகிறது. பரவலாக மேலே கொடுக்கப்பட்ட மருந்துகள் தவிர இன்னும் சில பழைய மருந்துகள் பக்கவிளைவுகள் காரணமாக உபயோகம் குறைந்தோ இல்லாமலோ போய்விட்டன.

ரத்தக்கொதிப்பு என்று மருத்துவரால்அறிவுறுத்தப்பட்ட பிறகு வாழ்க்கை நடைமுறை மாற்றங்கள் (அதாவது, உணவில் உப்பைக் குறைத்தல், வறுத்தது, பொரித்தது தவிர்த்தல், அசைவ உணவு குறைத்தல், மாவுச்சத்து எனப்படும் அரிசி பதார்த்தங்களை குறைத்தல், இதன் மூலமாக எடை குறைத்தல், தினசரி நடைப்பயிற்சி அல்லது நீச்சல், சைக்கிள், ஜிம் என ஏதாவது உடற்பயிற்சி, மன அழுத்தம் குறைத்து சந்தோஷமாக வாழ்தல்) தினசரி மருந்து, மாதம் ஒரு முறை மருத்துவரிடம் ரத்தக் கொதிப்பு பரிசோதனை அல்லது சுய பரிசோதனை, 6 மாதத்துக்கு ஒருமுறை இதய பரிசோதனை என வாழ்க்கையை நடைமுறைப்படுத்திக் கொள்வது அவசியம்.

இதனால் கட்டுப்படுத்தாத ரத்தக்கொதிப்பினால் திடீர் மரணம், மாரடைப்பு, கை, கால் வராத பக்கவாதம், கண்களின் பார்வை இழப்பு, சிறுநீரக நோய்கள் மற்றும் பெரிய ரத்தக்குழாய்களில் சுவர் விரிவு நோய் (Aneurysm) போன்ற விளைவுகள் இல்லாமல் மூன்றாவது முறை பள்ளிக்குச் சென்று பேரன், பேத்திகளை வளர்த்து, நான்காம், ஐந்தாம் தலைமுறையை பார்த்துச் செல்லலாம்! ரத்தக்கொதிப்புக்கான அறிகுறிகள் என்று எதுவுமே இல்லாமல் கூட நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருக்கும்!

டாக்டர் மு.அருணாச்சலம்

[/TD]
[/TR]
[/TABLE]
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.