Herbal Tea for Pregnant Women - கர்ப்பிணிகளே! மூலிகை டீ குடிங்க!

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#1
கர்ப்பிணிகளே! மூலிகை டீ குடிங்க
பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, காஃப்பைன் உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஏனெனில் அவர்கள் அதை குடிப்பது ஆரோக்கியமற்றது என்று நினைப்பதால் தான். அனைத்து மூலிகை டீ-க்களும் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல.

அதுமட்டுமின்றி, சிலருக்கு மூலிகை டீ-க்களைப் பற்றி சரியான நன்மைகளைப் பற்றி தெரியவில்லை. எந்த மூலிகை டீ குடிப்பதாக இருந்தாலும், அந்த மூலிகை டீ உடலுக்கு பாதுகாப்பானதா என்று சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

• மிளகுக்கீரை மூலிகை டீ-யை அதிகமாக குடிக்காமல், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் சோர்வு, குமட்டல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணமாகும்.

• இஞ்சி டீ-யை நிறைய மருத்துவர்கள் குடிக்க சொல்வார்கள். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் மயக்கம், வாந்தி, குமட்டல், தலைவலி மற்றும் ஒருவித சோர்வான மனநிலை போன்றவை ஏற்படும். அந்த நேரத்தில் இந்த டீயை குடித்தால், மிகவும் நல்லது.

• க்ரீன் டீ உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பானங்களுள் ஒன்று. அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போது அளவாக குடித்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், செல்கள் பாதிப்படைவதை தடுத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக கர்ப்பிணிகள் அருந்தக்கூடாது. ஏனெனில் இவை பின் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட்டை உடலில் உறிஞ்சாமல் செய்துவிடும்.

• துளசி டீயை குடித்தால், கர்ப்பிணிகளுக்கு காலையில் ஏற்படும் சோர்வு மற்றும் வாந்தி போன்றவை தடுக்கப்படும். இந்த டீயை மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் குடிக்க வேண்டியது அவசியம்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Dear Sir, very nice suggestion you have given for pregnant ladies to drink green tea. thank you very much. neenga enna Sir ippadi kalakkureenga. oru pakkam puraana idhikaasangalil irunthu merkol kaati pala tharappatta vrathangal patri ezhudhugireergal. orupakkam azhagu kurippugalum azhaginai membaduththa beauty pack recipe kodukkireergal. orupakkam samayal kalai pala tharappatta samayal recipe kodukkireergal. you are simply a versatile personality. thanks for your interesting and very valuable posts.
 

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,399
Location
puducherry
#3
Dear Sir, very nice suggestion you have given for pregnant ladies to drink green tea. thank you very much. neenga enna Sir ippadi kalakkureenga. oru pakkam puraana idhikaasangalil irunthu merkol kaati pala tharappatta vrathangal patri ezhudhugireergal. orupakkam azhagu kurippugalum azhaginai membaduththa beauty pack recipe kodukkireergal. orupakkam samayal kalai pala tharappatta samayal recipe kodukkireergal. you are simply a versatile personality. thanks for your interesting and very valuable posts.
hyperbole/exaageration/overstatement-
உயர்வு நவிற்சி
மிகைபடுத்தி கூறும் சொல்லை பயன்படுத்துகிறீர்கள் ;

நன்றி!!!! நன்றி!!! நன்றி!!!!
பாராட்டுக்கு மிக்க நன்றி ;
வாழ்க வளமுடன்
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.