Hockey News

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
106,954
Likes
22,076
Location
Germany
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி- இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

1525352414296.png

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் வருகிற 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி 13-ந் தேதி ஜப்பானையும், 16-ந் தேதி சீனாவையும், 17-ந் தேதி மலேசியாவையும், 19-ந் தேதி தென்கொரியாவையும் எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ராணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா, ஸ்வாதி, பின்களம்: தீபிகா, சுனிதா லக்ரா (கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சுமன் தேவி, நடுகளம்: மோனிகா, நமிதா, நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர், உதிதா, முன்களம்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், அனுபமா பார்லா.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
மிழ்நாடு ஹாக்கி யூனிட் தலைவராக சேகர் மனோகர் தேர்வு

1525698329422.png

தமிழ்நாடு ஆக்கி யூனிட்டின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் குற்றாலத்தில் நடந்தது. இதில் முன்னாள் ஹாக்கி வீரரான சேகர் மனோகர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தகவலை தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அமைப்பின் பொதுச்செயலாளர் எம்.ரேணுகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

Aravind parasu

Minister's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,908
Likes
816
Location
chennai
பாகிஸ்தான் ஹாக்கி வீரர் மன்சூர் அகமது மரணம்

1526223395684.png

பாகிஸ்தான் முன்னாள் பிரபல ஹாக்கி கோல்கீப்பர் மன்சூர் அகமது. 1986 ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணியில் விளையாடிய அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டார். இதயத்தில் உள்ள பேஸ்மேக்கரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

கராச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியாவிடம் சமீபத்தில் உதவி கேட்டு இருந்தார்.

மன்சூர் அகமதுவுக்கு உதவ சென்னை ஹாக்கி சங்கம் முன்வந்தது. இதே போல அவருக்கு இலவசமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய தயார் என்று இந்தியாவில் உள்ள போர்டிஸ் மருத்துவமனை அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் கராச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அகமது மரணம் அடைந்தார். அவருக்கு வயது 49.

முன்னதாக அவருக்கு பாகிஸ்தான் அரசு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய முன்வந்தது. ஆனால் மன்சூர் அதை ஏற்க மறுத்து இந்தியாவில்தான் அறுவை மாற்று சிகிச்சை செய்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் அதற்குள் இறந்து விட்டார்.

1992-ம் ஆண்டு ஓலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற போதும், 1994-ல் உலக கோப்பையை வென்ற போதும் பாகிஸ்தான் அணியில் மன்சூர் அகமது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவராக ரஜிந்தர்சிங் நியமனம்

1526821289705.png


ஆக்கி இந்தியா அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மரியம்மா கோஷி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வந்தார். அவர் அந்த பதவியில் இருந்து சமீபத்தில் பதவி விலகினார்.

இதையடுத்து ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் (59) நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர் இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

அவரது திறமையை பாராட்டும் வகையில் அவருக்கு துரோனாச்சாரியா விருது (2011), தயான் சந்த் விருது (2005), மகாராஜா ரஞ்சித் சிங் விருது (1984) ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
ஹாக்கியை பிரபலப்படுத்தும் முயற்சி - ஒடிசா முதல் மந்திரிக்கு முன்னாள் ஹாக்கி கேப்டன் பாராட்டு

1529642380350.png

இந்தியாவின் தேசிய விளையாட்டாக அனைவராலும் அறியப்படுவது ஹாக்கியாகும். ஆனால் அதற்கான அறிவிப்புகள் இதுவரையில் அரசு இதழில் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, ஹாக்கியை இந்தியாவின் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதில், அடுத்த ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் வருகிற நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. ஹாக்கி விளையாட்டை தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது அறிந்து ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஹாக்கி ரசிகர்கள் மனநிலையை புரிந்துகொள்வீர்கள் என நான் நம்புகிறேன். இந்தியாவை உலகளவில் பெருமைப்பட செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு சிறந்த மரியாதையாக இருக்கும் என கூறியுள்ளார்.



இந்நிலையில், ஹாக்கி விளையாட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக்கின் முயற்சியை முன்னாள் ஹாக்கி கேப்டன் திலிப் திர்கே பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒடிசா முதல் மந்திரியின் முயற்சிக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கியில் தான் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது, எனவே கட்டாயம் ஹாக்கியை பிரபலப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
19,106
Likes
4,064
Location
India
`இளைஞர்களுக்கு வழிவிடும் நேரம்!’ - ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன்


இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.





இளம் வயதில் இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றவர் என்ற பெருமைபெற்ற சர்தார் சிங், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணி சார்பில் 350 போட்டிகளில் பங்கேற்ற அவர், அணியின் கேப்டனாக 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஏறக்குறைய 8 ஆண்டுகள் கேப்டனாக இருந்தார். இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டைத் தொடர்ந்து, அவர் ஓய்வு முடிவை அறிவித்திருக்கிறார். நடப்புச் சாம்பியனாக தொடரில் களமிறங்கிய இந்திய அணி, வெண்கலத்தோடு திருப்திப்பட்டுக் கொண்டது. இந்த தொடரில் மிட்ஃபீல்டு வீரரான சர்தார் சிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. மேலும், இந்திய அணியின் பயிற்சி முகாமுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வீரர்கள் கொண்ட பட்டியலில் சர்தார் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே அவர் ஓய்வு முடிவை அறிவித்ததாகத் தெரிகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின்போது, `2020 ஒலிம்பிக் தொடர் வரை விளையாடுவேன்’ என்று சர்தார் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





இதுகுறித்து பேசிய சர்தார் சிங், ``சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது என நான் முடிவு செய்துவிட்டேன். என்னுடைய 12 ஆண்டுகால கெரியரில் போதுமான அளவு ஹாக்கி விளையாடிவிட்டேன் என்று நம்புகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிவிடும் நேரம் இது. சண்டிகரில் இருக்கும் எனது குடும்பத்தார், இந்திய ஹாக்கி சம்மேளனம் மற்றும் எனது நண்பர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை அறிவித்துள்ளேன். ஹாக்கியைத் தாண்டி உள்ள வாழ்க்கை குறித்து சிந்திக்க இதுவே சரியான தருணம்’’ என்று அவர் தெரிவித்தார். ஓய்வு முடிவு குறித்து நாளை (செப்டம்பர் 14) நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் முறைப்படி அறிவிக்க இருக்கிறார்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.