Home remedies for Oily skin & to remove the Scars of Pimples

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#1
எண்ணெய் பசை சருமத்தினருக்கு முகத்தில் பருக்கள் அதிகம் வருவதுடன், அதனால் தழும்புகளும் அதிகம் ஏற்பட்டிருக்கும். இத்தகைய கருமையான தழும்புகள் சருமத்தின் அழகையே கெடுத்துவிடும். ஆகவே பலர் இந்த தழும்புகளைப் போக்க பல்வேறு க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருந்தாலும் அந்த க்ரீம்கள் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும்.
ஆனால் முகத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகத்திற்கு தினமும் மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும், சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும். இப்போது தழும்புகளைப் போக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகளைப் பார்ப்போம்.கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஒரு பௌலில் கசகசா பொடி, கஸ்தூரி மஞ்சள், தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம். முக்கியமாக இந்த முறையால் சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

பாசிப்பருப்பை பொடி செய்து, அதில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்குவதுடன், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

துளசி சாறு அல்லது புதினா சாற்றை பருக்களால் வந்த தழும்புகளின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் பளிச்சென்று அழகாக இருக்கும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#2
re: Home remedies for Oily skin & to remove the Scars of Pimples

அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் தான் ஆப்பிள். பொதுவாக தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். அத்தகைய சத்துக்கள் நிறைந்த ஆப்பிளானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சரும ஆரோக்கியத்திற்கும் பெரிதும் பாதுகாப்பாக இருக்கும். அதற்கு இதனை சாப்பிட்டால் மட்டும் போதாது, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

இப்போது ஆப்பிளைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.ஆப்பிளை பேஸ்ட் போல் அரைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, முகமானது பளிசென்று இருக்கும். மேலும் இப்படி தினமும் செய்தால், சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

நல்ல புத்துணர்ச்சியான சருமம் பெற, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 25-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது அழகாக, புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மென்மையான சருமத்தைப் பெறுவதற்கு, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவி, 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#3
re: Home remedies for Oily skin & to remove the Scars of Pimples

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமா? எப்போது பார்த்தாலும் முகத்தில் எண்ணெய் வழிவது போல் உள்ளதா? அப்படியானால் சருமத்தை அவ்வப்போது ஸ்கரப் செய்யுங்கள். ஏனெனில் ஸ்கரப் செய்வதால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகத்தில் குழிகள் அதிகம் இருந்தால் மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, ஸ்கரப் செய்தால் சருமம் மென்மையாக புத்துணர்ச்சியுடன் காணப்படும்.சரி, இப்போது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கும் ஸ்கரப்களைப் பார்ப்போமா...!ஆப்பிளை அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதுடன், சருமத்துளைகளும் மறைய ஆரம்பிக்கும்.
பப்பாளியை நன்கு அரைத்து, அதில் சிறிது அரிசி மாவு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, ஈரமான சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

காபி தூளில் சர்க்கரை சேர்த்து, அத்துடன் 2 துளிகள் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

பால் பவுடருடன் சிறிது சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து கழுவினாலும், அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.
 

raji rajagopal

Friends's of Penmai
Joined
Jan 8, 2015
Messages
272
Likes
424
Location
chennai
#4
re: Home remedies for Oily skin & to remove the Scars of Pimples

முகப்பரு அகல
அம்மை வடுக்களைப் போல முகப்பருவும் அழகை பாதிக்கும். இதற்கு பப்பாளிப் பால் சிறந்த மருந்தாகும். பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாக பூசி ஊறவைத்து பின் கழுவவேண்டும். இதனால் முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.
இதேபோல் நாட்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.
 

Siva Priya

Friends's of Penmai
Joined
Aug 26, 2011
Messages
165
Likes
85
Location
chennai
#8
hi pa...thanks for the information.
My forehead alone is tanned ...due to travel.
Can u tell me some home remmedy.

I am using kadalamavu to wash my face.
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,464
Likes
148,284
Location
Madurai
#9
Hii Shilpy!

Giving you here Some Natural Remedies..

  • Make a Paste of Raw milk with turmeric powder. Apply it on forehead. Leave it for 15 minutes and scrub it off.
  • Make a paste of white bread,yogurt. Lime juice and cold milk. Apply this on the forehead. Leave it for 15 minutes. Then gently rub and wash it off.
  • Lemon juice has natural bleaching qualities which lightens the skin. Make a natural scrub by mixing sugar, lime juice and glycerine. Rub it on the forehead in a gentle motion.

This will help to get rid of the suntan from the forehead and will also make the skin softer.



hi pa...thanks for the information.
My forehead alone is tanned ...due to travel.
Can u tell me some home remmedy.

I am using kadalamavu to wash my face.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.