home remedies for pimples - முகப்பருவா..?

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள். ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும். அதுபோல் அகம் என்னும் உடலின் உட்பகுதியில் பாதிப்பு ஏதேனும் உண்டானால் அது முகத்தில் பிரதிபலிக்கும்.
[/FONT]

உதாரணமாக ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால் அதன் வெளிப்பாடு முகத்தில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வெளிப்படும். அதுபோல் புறச் சூழ்நிலை மாறுபாட்டினாலும் உடல் மற்றும் சருமம் பாதிப்படையும்.
[/FONT]

ஆகையால் முகம் மற்றும் சரும பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமாகிறது. இதனால்தான் அழகு நிலையங்கள் நோக்கி ஆண்களும், பெண்களும் படையெடுக்கின்றனர்.
[/FONT]

சிலர் ரசாயனக் கலவைகளை முகப்பூச்சுகளாகப் பயன்படுத்துகின்றனர். இது தற்காலிய நிவாரணமே யொழிய நிரந்தரத் தீர்வல்ல. காலப்போக்கில் இவை எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கிவிடும்.
[/FONT]

முகப்பரு
[/FONT]

வளரும் இளம் ஆண், பெண் இருபாலரையும் மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.
[/FONT]

முகப்பரு உள்ளவர்களுக்கு
[/FONT]

முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.[/FONT]

  • சோற்றுக்கற்றாழை - 1 துண்டு[/FONT]
  • செஞ்சந்தனம் - 5 கிராம்[/FONT]
  • வெள்ளரிக்காய் - 2 துண்டு[/FONT]
  • சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.[/FONT]
  • காரட் - 2 துண்டு[/FONT]
  • பாதாம் பருப்பு - 2[/FONT]
  • தயிர் - 1/2 கப்
    [/FONT]
இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.
[/FONT]

ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
[/FONT]

பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.
[/FONT]

அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனைக் கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.
[/FONT]

புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.

-senthilvayal
[/FONT]
 
Last edited by a moderator:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.