Home Remedies for Pre-matured Hair - நரைத்த முடிக்கான வீட்டு சிகிச்சைக

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,349
Likes
13,498
Location
Chennai
#1
நரைத்த முடிக்கான நன்கு சோதிக்கப்பட்ட 30 வீட்டு சிகிச்சைகள்!!!

மனிதர்களாக பிறந்து விட்டாலே கவலையும் உடன் பிறந்து விடும். கவலை இல்லாத மனிதன் தான் இந்த பூமியில் உண்டா என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கவலை. ஒரு கவலை முடிந்தால் மற்றொரு கவலை, சிலருக்கோ அடுக்கடுக்காக பல கவலைகள். இப்படி மனிதன் சந்திக்கும் ஆயிரம் கவலைகளில் ஒன்று தான் சீக்கிரமே வயதான தோற்றத்தை பெறுவது. கண்டிப்பாக இது பலருக்கும் இருக்க கூடியே ஒரு பெரும் கவலையே. அதுவும் ஒரு நாளை காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன் பார்க்கையில் ஒரு நரைத்த முடி தென்பட்டால் போதும், அன்றைய நாள் முழுவதும் சோகத்தில் மூழ்கி விடுவோம். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருவருக்கும் கவலை மட்டும் ஒரே அளவில் இருக்கக்கூடும். முடி நரைப்பது என்பது வயது ஏறும் போது ஏற்படும் இயல்பான ஒன்றே. சிலருக்கு பித்த நரை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் 30 வயதை தொடாத இளைஞர்களுக்கு கூட வேகமாக முடி நரைக்க தொடங்குகிறது. நிறமியின் (கருப்பு நிற மயிர்தண்டுகளுக்கு பொறுப்பாளி) உற்பத்தி நிற்கும் போது, உங்கள் முடி நரைக்க தொடங்கும். பொதுவாக அமெரிக்கர்கள் தங்களது 30-களின் மத்தியிலும், ஆசியர்கள் தங்களது 30-களின் கடைசியிலும், ஆஃப்ரிக்க-அமெரிக்கர்கள் தங்களது 40-களின் மத்தியிலும் முடியின் அசல் நிறத்தை இழக்க தொடங்குவார்கள். இருப்பினும், சில நேரங்களில் இயற்கையான முறையில் ஹைட்ரஜன் பெராக்சைடை உற்பத்தி செய்வதால், உங்கள் முடியின் நிறம் வெளுக்கும்.


சரி ஆனது ஆகட்டும். நரைத்த முடிக்கான சில வீட்டு சிகிச்சைகளையும், அதனால் கிடைக்கும் பலனையும் பார்க்கலாமா?







சீக்கிரமே நரை முடி பெறுவதற்கு சிறந்த சிகிச்சை அளித்திட நெல்லிக்காய் உதவுகிறது.


நெல்லிக்காய் துண்டுகள் சிலவற்றை தேங்காய் எண்ணெயில் போட்டு, அதன் நிறம் கருமையாகும் வரை கொதிக்க வையுங்கள். பின் நரைத்த முடிக்கு சிகிச்சையளிக்க அதனை முடியின் மீது மசாஜ் செய்யவும். நெல்லிக்காயை எண்ணெய் அல்லது பேஸ்ட் வடிவிலும் பயன்படுத்தலாம். நெல்லிக்காய் கஷாயம் உங்கள் நரைத்த முடியை 15 நாட்களுக்குள் குணப்படுத்தும். இந்த கஷாயத்தை தயார் செய்ய, நெல்லிக்காய் துண்டுகள் சிலவற்றை சில மணி நேரங்களுக்கு ஊற வைத்து, அதனுடன் 1 டீஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை இரும்பு பாத்திரம் ஒன்றில் இரவு முழுவதும் வைத்திடவும். மறுநாள் காலை முட்டை, எலுமிச்சை சாறு மற்றும் தயிருடன் சேர்த்து அந்த கஷாயத்தை தடவவும். முடியில் உள்ள நிறமியை புதுப்பிக்க சிறந்த ஆக்கக்கூறாக விளங்குகிறது நெல்லிக்காய். நெல்லிக்காய் சாறை அப்படியே பருகலாம். இது தலை முடி பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு பிற உடல்நல பிரச்சனைகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.


நறுக்கிய இஞ்சி துண்டுகளை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து தினமும் உட்கொண்டு வந்தால் உங்கள் முடி நரைப்பது தடுக்கப்படும். பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாக அறியப்படும் தேங்காய் எண்ணெய், முடி நரைப்பதையும் தடுக்கும்.


உங்கள் தலைச்சருமத்தில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறையும் சேர்த்து மசாஜ் செய்தால், கருமையான பளபளக்கும் முடியை பெறலாம். சுத்தமான நெய்யை கொண்டு வாரம் இருமுறை தலையில் மசாஜ் செய்தால், தலை முடி நரைக்கும் பிரச்சனை நிற்கும்.


கொஞ்சம் கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு, அது கருப்பாகும் வரை கொதிக்க வைக்கவும். இதனை தலை முடி டானிக்காக கருதி தலைச்சருமத்தில் தடவி வந்தால், முடி கொட்டுதல் மற்றும் நிறமி பிரச்சனை ஆகியவைகள் நீங்கும். கறிவேப்பிலையை தயிர் அல்லது மோருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.


2 டீஸ்பூன் மருதாணி பொடி, 1 டீஸ்பூன் வெந்தய பேஸ்ட், 2 டீஸ்பூன் துளசி இலை பேஸ்ட், 3 டீஸ்பூன் காபி, 3 டீஸ்பூன் புதினா சாறு மற்றும் 1 டீஸ்பூன் தயிரை கலந்து கொள்ளவும். இந்த கலவை நரைத்த முடிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்கும். இதனை சீரான முறையில் தடவி வந்தால் நல்ல பயன் கிடைக்கும். மருதாணியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தினால் கருமையான பழுப்பு நிற முடியைப் பெறலாம். மருதாணியை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் வால்நட் பசையுடன் சேர்த்து பயன்படுத்தினாலும் சிறப்பாக செயல்படும். இது நரை முடியை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முடியை பளபளவென வைத்திருக்கவும் செய்யும்.


பீர்க்கங்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு, அது கருமையாகும் வரை 3-4 மணிநேரத்திற்கு கொதிக்க வைக்கவும். இந்த எண்ணெயை தலைச்சருமத்தில் மசாஜ் செய்தால், சீக்கிரத்திலே நரைக்கும் தலை முடியை குணப்படுத்தும்.


ஒரு கப் ப்ளாக் டீயுடன் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் முடியையும், தலைச்சருமத்தையும் இதனை கொண்டு மசாஜ் செய்து, பின்பு 1 மணிநேரம் கழித்து அலசி விடவும். நரை முடி பிரச்சனைக்கு தீர்வு காண இதனை தொடர்ந்து பின்பற்றவும்.


இளம் வயதிலேயே முடி நரைத்தல், முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை விழுதல் ஆகிய பிரச்சனைகளை தடுக்க வெங்காய ஜூஸ் உதவும். 1 கிராம் கருப்பு மிளகுடன் ½ கப் தயிரை கலந்து கொள்ளவும். சீக்கிரத்திலேயே முடி நரைத்தால், இந்த கலவையை கொண்டு தலைச்சருமத்திலும், முடியிலும் மசாஜ் செய்யுங்கள். இந்த கலவையில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.


சீமைச்சாமந்தியை தண்ணீரில் போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின் அது ஆறிய பிறகு வடிகட்டவும். இந்த நீரை சீரான முறையில் தடவி வந்தால், முடி நரைத்தலுக்கு சிகிச்சையாக விளங்கும்.


ரோஸ்மேரி மற்றும் வேம்பு இலைகளை சரிசமமான அளவில் எடுத்துக் கொண்டு, அதனை ஒரு கப் தண்ணீரில் போடுங்கள். இந்த நீரை வடிகட்டி, அதனை ஒரு இயற்கையான முடி சாயமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரோஸ்மேரி எண்ணெய்யை கூட நேரடியாக தடவிக் கொள்ளலாம்.


பாதாம் எண்ணெய், எலுமிச்சை ஜூஸ் மற்றும் நெல்லிக்காய் ஜூசை சரிசமமான அளவில் கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு மசாஜ் செய்து, முடி நரைத்தலுக்கு சிகிச்சை அளியுங்கள். 3-4 துண்டு சீகைக்காயை 10-12 பூந்தி கொட்டைகளுடன் ஒரு ஜாடி தண்ணீரில் முந்தைய நாள் இரவு போட்டு விடவும். இதனை கொதிக்க வைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து ஒரு இயற்கை ஷாம்புவாகப் பயன்படுத்துங்கள். கொஞ்சம் நெல்லிக்காயை எடுத்து தனியாக ஊற வைக்கவும். இதனை கொதிக்க வைத்து கண்டிஷனராக பயன்படுத்தலாம். இந்த சிகிச்சை முடி நரைத்தல், பொழிவின்மை, முடி கொட்டுதல் போன்ற பல முடி பிரச்சனைகளை தீர்க்கும். நரைத்த முடிகளை மீண்டும் கறுப்பாக மாற்ற கொய்யாப்பழ இலைகள் உதவிடும்.


கொய்யா இலைகள் சிலவற்றை அரைத்து, அதனை உங்கள் தலைச்சருமத்தில் சீரான முறையில் தடவும். நற்பதமான அரைக்கீரை சாறை தடவினால் தலை முடியின் இயற்கையான நிறத்தை பாதுகாத்து, அப்படியே பராமரிக்கவும் செய்யலாம். மிகவும் பயனுள்ள வீட்டு சிகிச்சை இது.


சோத்துக் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் சீக்கிரத்திலேயே முடி நரைப்பதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 250 கிராம் கடுகு எண்ணெயை 60 கிராம் மருதாணி இலைகளுடன் சேர்த்து கொள்ளவும். கடுகு எண்ணெய் முழுவதுமாக எரியும் வரை அதனை கொதிக்க வைக்கவும். இந்த கலவையை தலை முடியில் தடவினால், கருமையான பளபளக்கும் முடியைப் பெறலாம்.


நரைத்த முடிக்கு சிகிச்சை அளித்திட அமுக்கிரா கிழங்கை உங்கள் தலைச்சருமத்தின் மீது தடவவும். இது முடியில் உள்ள மெலனின் உள்ளடக்கத்தை அதிகரிக்க உதவும்.


லிக்குஸ்ட்ரம் வல்கரே எனப்படும் சீன மூலிகை முடியின் இயற்கை நிறத்தை மீண்டும் பெற உதவும். பயோடின் அதிகமாக உள்ள உணவுகளை உட்கொண்டால் முடி நரைக்கும் செயல்முறை மெதுவாகும். முட்டை மஞ்சள் கரு, தக்காளி, ஈஸ்ட், சோயா பீன்ஸ், வால்நட், கேரட், பசும்பால், ஆட்டுப்பால், வெள்ளரிக்காய், ஓட்ஸ் மற்றும் பாதாம்களில் பயோடின் வளமையாக உள்ளது.


கரிசலாங்கண்ணியை எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம் அல்லது வாயில் போட்டு விழுங்கலாம். இதனை பயன்படுத்தினால் அடர்த்தியான, கருமையான மற்றும் பளபளப்பான தலை முடியை பெறலாம்.


சுரக்காய் ஜூஸை ஆலிவ் எண்ணெய் அல்லது எள் எண்ணெயுடன் சேர்த்து தடவி வந்தால், சீக்கிரமே முடி நரைக்கும் பிரச்சனை நீங்கும். முடி நரைத்தலை குணப்படுத்த கிராம்பு எண்ணெயும் மிகச்சிறந்த தேர்வாகும். முடி நரைத்தலை தடுக்க வேப்ப எண்ணெயையும் பயன்படுத்தலாம். அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பி குணங்கள் பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.


கருப்பு வால்நாட்டின் வெளிப்புற தவிட்டை இயற்கை முடி சாயமாகவும் பயன்படுத்தலாம். கருப்பு வால்நாட் மற்றும் தண்ணீரை கொண்டு கஷாயம் தயார் செய்து, அதனை உங்கள் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இது உங்கள் நரைத்த முடிக்கு நிறத்தை அளிக்கும்.


ஆர்னிகா எண்ணெய்யை நரைத்த முடியில் தடவுங்கள். காய்ந்த ஆர்னிகா பூக்களால் தயார் செய்யப்பட்டதே இந்த எண்ணெய். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பி ஆற்றல்கள், சீக்கிரத்திலேயே முடி நரைப்பதையும், முடி கொட்டுதலையும் குணப்படுத்தும்.


பிராமி முடி எண்ணெயை கொண்டு மசாஜ் செய்தால் தலை முடி நிறமூட்டல், முடியின் நுனி பிளவு படுதல் மற்றும் வழுக்கை விழுதல் ஆகியவை குணமடையும். மாங்காய் விதைகளின் பொடியை நெல்லிக்காய் பொடியுடன் கலந்து முடியின் மீது தடவுங்கள். நரைத்த முடியை குணப்படுத்த இதுவும் ஒரு சிறந்த சிகிச்சையாகும். தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால் தலைமுடி நரைக்கும் பிரச்சனை நீங்கும்.
 

sri suja

Friends's of Penmai
Joined
Oct 12, 2014
Messages
265
Likes
277
Location
coimbatore
#2
re: நரைத்த முடிக்கான வீட்டு சிகிச்சைகள் - Home Remedies fo

Arumaiyana information......Thanks for sharing............
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,483
Location
Ever green city
#3
re: நரைத்த முடிக்கான வீட்டு சிகிச்சைகள் - Home Remedies fo

neriya tips. . . . . .
usefula irukum. .. . .
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.