Home Remedies for Weight Loss-பயமுறுத்துகிறதா பருமன்?

malarbharath

Well-Known Member
#1பயமுறுத்துகிறதா பருமன்?

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது.
கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்:
அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.

உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol) ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
 

thenuraj

Penman of Penmai
Blogger
#2
Re: பயமுறுத்துகிறதா பருமன்?

பயனுள்ள தகவல்.... பகிர்வுக்கு நன்றி மலர்...
 

malarbharath

Well-Known Member
#3
Re: பயமுறுத்துகிறதா பருமன்?

உங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்


உடல் பருமன் என்பது இன்றைக்கு பெரும்பாலோனரை படுத்தி எடுக்கிறது.உடல் எடையை குறைப்பதற்காக டயட் என்ற பெயரில் உணவை குறைத்து, சுவையை குறைத்து எதையாவது செய்து இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க உணவை குறைக்கத் தேவையில்லை என்பது உணவியல் வல்லுனர்களின் ஆலோசனை சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டாலே உடல் எடை கட்டுப்படுவதோடு மன உளைச்சலும் சரியாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

வெள்ளை நிற உணவுகள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் வெள்ளைநிறப் பொருட்களை குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்ற வெள்ளை நிறப் பொருட்களை அளவை குறைத்து சேர்க்கவேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால் உபயோகிக்க வேண்டும். இது உடல் எடையை குறைப்பதோடு சத்துக்களை அப்படியே தக்கவைக்கும்.

--தோடரும்--
 
Last edited by a moderator:

malarbharath

Well-Known Member
#4
Re: பயமுறுத்துகிறதா பருமன்?

கொழுப்பை கரைக்கும் உணவுகள்
கொள்ளு பயிரை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம். அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.
வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம். இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும். சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.
சரி விகித உணவுகள்
காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆவியில் வேகவைத்த உணவு, நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள். வாரம் ஒரு முறை பொரித்த உணவு, ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புரோட்டீன், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்பு, கால்ஷியம், இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை. இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை, எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும். பருப்பு, கீரை, அவித்த முட்டை, சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள். சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

--தோடரும்--
 

malarbharath

Well-Known Member
#5
Re: பயமுறுத்துகிறதா பருமன்?

சூடான நீர்
குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும். உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பதில் வாக்கிங் மிகச்சிறந்த பயிற்சி. எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள். சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.
வீட்டு உணவுகள் சாப்பிடலாம்
3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள். அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள். இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள். அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக, நன்றாக மென்று சாப்பிடுங்கள். இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.
அதிக எண்ணெய்,மட்டன் ஸ்நாக்ஸ் போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள். மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம். டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது. அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது. பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம். முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம். முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.
பி பாசிட்டிவ்
உடற்பயிற்சி, டயட் இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. டயட் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள். நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும். தவிர உடல் எடையை குறைப்பதில் நேர்மறை எண்ணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் மெலிவிற்காக உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பிக்கும் போது இனி உடல் எடை குறையும், கொஞ்சம் குறைந்து விட்டது என்று அடிக்கடி மனதில் நினைக்க வேண்டும். இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். என்ன செய்தும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

--முற்றும்--
 

malarbharath

Well-Known Member
#7
உடல் பருமன் குறையதேவையான பொருள்கள்:
கேரட், தேன்

செய்முறை:

கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.
 

malarbharath

Well-Known Member
#9


தொப்பை குறைய…


*விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி

வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும்.

உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.


*இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க

வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில்

ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40

நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
 

malarbharath

Well-Known Member
#10


உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..

பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான

சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.


குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப்

பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால்,

அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.


எடையைக் குறைக்கும்

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக

பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது

நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.


உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும்

போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள

வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய

சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன்

இருக்கும்.

 

malarbharath

Well-Known Member
#13


தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம் :-

தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கரிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

இவைகளை பின்பற்றி உங்களது தொப்பையை குறைத்திடுங்கள்.
 

malarbharath

Well-Known Member
#20வேகமாக தொப்பையைக் குறைக்க உதவும் ஜி.எம். டயட்

(jGeneral Motors ) பற்றி தெரியுமா?

தொப்பையை நினைத்து கவலைப்படுகிறீர்களா? அதற்கு எந்த டயட் மிகவும் சிறப்பானது என்று யோசிக்கிறீர்களா? அப்படியெனில் ஜி.எம். டயட் மிகவும் சிறப்பானது. நீங்கள் விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், ஜி.எம். டயட்டை பின்பற்றுங்கள். இது நிச்சயம் உங்கள் எடையில் நல்ல மாற்றத்தை சீக்கிரம் காண்பிக்கும். மேலும் இந்த டயட் இருப்பதிலேயே மிகவும் ஆரோக்கியமானதும், எடையைக் குறைப்பதில் வேகமானதும் கூட.
உடல் எடையை குறைக்கும் 11 உணவுகள்!!!

அதுமட்டுமின்றி, இந்த புரோகிராம்மை தான் உலகில் உள்ள பலரும் பின்பற்றி வருகிறார்கள். இந்த ஜி.எம். டயட் புரோகிராமானது 7 நாட்கள் பின்பற்ற வேண்டிய ஒன்று. இந்த டயட்டின் முக்கியமான நோக்கம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பது தான். இந்த டயட்டைப் பின்பற்றுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல. அதில் சில...

* 7 நாட்களில் 5-8 கிலோ எடை குறையும்

* தொப்பை குறையும்

* சருமம் பொலிவு பெறும்

* உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி உடல் ரிலாக்ஸாக இருப்பதை உணரலாம்

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!
ஜி.எம். டயட்டை பின்பற்றுவது ஆரம்பத்தில் கடினமாகத் தான் இருக்கும். குறிப்பாக முதல் இரண்டு நாட்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால் முதல் இரண்டு நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டால், இதர நாட்களையும் எளிதில் பின்பற்றலாம். ஆனால் இந்த டயட்டை பின்பற்றும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம். சரி, இப்போது 7 நாள் பின்பற்ற வேண்டிய ஜி.எம். டயட்டைப் பற்றி பார்ப்போமா...!

முதல் நாள்

ஜி.எம். டயட்டில் முதல் நாளில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். ஆனால் இதில் வாழைப்பழம், லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சை போன்றவற்றை சேர்க்கக்கூடாது. மாறாக தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். உங்களுக்கு எவ்வளவு பசித்தாலும், பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். என்ன இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை மறக்கக்கூடாது.


இரண்டாம் நாள்

இரண்டாம் நாளில் காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் வேக வைத்த ஒரு உருளைக்கிழங்கை 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட வேண்டும். பின் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையோ சாப்பிட வேண்டும். முக்கியமாக இரண்டாம் நாள் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் தான் சாப்பிட வேண்டும். வேண்டுமானால் முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து அதிகம் சாப்பிடலாம். அத்துடன் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


மூன்றாம் நாள்

மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். ஆனால் இந்நாளில் வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை சேர்க்கக்கூடாது. முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


நான்காம் நாள்

வாழைப்பழம் மற்றும் பால் சாப்பிடவும். நான்காம் நாளில் 4 டம்ளர் பால் மற்றும் 6 வாழைப்பழங்களை சாப்பிடலாம். வாழைப்பழம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் தான். இருப்பினும் ஜி.எம். டயட்டின் போது உடலில் சோடியத்தின் அளவு குறைவதால், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். மேலும் இந்நாளில் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு கொண்டு சுவையாக சூப் செய்து குடிக்கலாம்.


ஐந்தாம் நாள்

ஜி.எம். டயட்டின் ஐந்தாம் நாள் முளைக்கட்டிய பயிர்கள், தக்காளி, பன்னீர் போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் சிக்கன் அல்லது மீல் மேக்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் ஒரு பௌல் சூப்பும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.


ஆறாம் நாள்

இந்நாளன்று ஐந்தாம் நாள் பின்பற்றியது போன்று முளைக்கட்டிய பயிர்கள், காட்டேஜ் சீஸ், சிக்கன், மீல் மேக்கர் மற்றும் இதர காய்கறிகளை சாப்பிடலாம். ஆனால் தக்காளியை சேர்க்கக்கூடாது. வேண்டுமானால் இந்நாளில் சூப் குடிக்கலாம்.


ஏழாம் நாள்

கடைசி நாளன்று நீங்கள் மிகவும் ரிலாக்ஸாக உடல் பருமனின்றி லேசாக இருப்பது போல் உணர்வீர்கள். இந்நாளில் பழச்சாறுகளையும், ஒரு பௌல் சாதம் அல்லது பாதி ரொட்டி மற்றும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். முக்கியமாக தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்.

குறிப்பு

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் குறைந்தது 12-15 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும். ஏழாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி அல்லது ஆல்கஹால் குடிக்கக்கூடாது. வேண்டுமெனில் ப்ளாக் டீ, ப்ளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

உங்களுக்கு திருமணம் நெருங்குகிறது என்றால் 2 மாதங்களுக்கு முன்பே இந்த முறையைப் பின்பற்றுங்கள். மேலும் இந்த டயட்டை ஒருமுறை பின்பற்றினால், மீண்டும் இதனை ஆறு மாதங்களுக்குப் பின்னர் தான் பின்பற்ற வேண்டும்.

 
Last edited by a moderator:

Important Announcements!