Hot water for heel pain - குதிகால் வலியை விரட்டும் வெந்நீர்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குதிகால் வலியை விரட்டும் வெந்நீர்

பரபரப்பான இன்றைய சூழலில் உடல் உழைப்பு இல்லாதவர்கள் எடையை கட்டுக்குள் வைத்து பேணிகாப்பது என்பது சவாலான விஷயம்தான். இருப்பினும் உயரத்திற்கு தகுந்த அளவில் எடையை பராமரிக்க வேண்டும். இவ்வாறு பராமரிப்பதன் மூலம் மூட்டுவலி மற்றும் குதிகால் வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலின் மொத்த எடையையும் தாங்குவது குதிகால் என்பதால் அதற்காக அதிக கவனம் செலுத்துவது அவசியம். பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தை தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகம் உள்ள இடங்களாகும்.

உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலு விழந்தால் நடக்கவோ, நிற்கவோ முடியாது. இதையடுத்து குதிகால் மற்றும் இடுப்பு வலி அதிகரிக்கும். முதலில் வலி அதிகரிக்கும்போது எலும்புகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை மருத்துவரை அணுகி எக்ஸ்ரே மூலம் கண்டறியலாம். காலை முதல் இரவு வரை ஓயாமல் நடப்பவர்களுக்கும், வீட்டு வேலைகளை செய்வோருக்கும் இரவில் குதிகால் வலி ஏற்படுவது சகஜமாகிவிட்டது. இதனால கீழ் முதுகெலும்பு பகுதியில் கடுமையான வலியும், இரவில் தூக்கமில்லாமல் தவிக்க நேரிடுகிறது.

குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள்ளன. இந்த 2 எலும்புகளுக்கிடையே உள்ள சப்தேலார் என்ற இணைப்பில்ஏற்படும்பிரச்னைகளால் குதிகால் வலி ஏற்படுகிறது. பாதத்தில் பிளான்றார் பேசியா எனப்படும் மெல்லிய பகுதிதான் பாதத்தின் முன் பகுதியையும் பின் பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை தாங்குகிறது.நாம் உட்கார்ந்து அல்லது படுத்திருக்கும் நிலையில் பாத வளைவுகளும், குறுகிய நிலையில் இருக்கும். நாம் எழுந்து நிற்கும் போது, உடல் பருமனாலோ அல்லது தவறான காலணிகளை அணிவதாலோ பாதத்தில் உள்ள வளைவுகள் இழுக்கப்படுகிறது.

இவ்வாறு இழுக்கப்படுவதால் அதனை தாங்கும் பிளான்றார் பேசியா என்ற மெல்லிய ஜவ்வு பகுதி இணைக்கப்பட்டுள்ள கேல்கேனியம் எலும்பிலிருந்து அறுக்கப்படுகிறது. இவ்வாறு அறுக்கப்பட்ட மெல்லிய ஜவ்வை இணைக்கும் நோக்கத்தில் நமது உடல் கால்சியத்தை அதன்மீது படிய செய்கிறது. அதிகமாக படிந்த கால்சியத்தால் அங்கு வீக்கம் ஏற்பட்டு நரம்புகள் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த பிரச்னையில் குதிகாலின் அடிபகுதியில் வலி உணரப்படுகிறது.

ஆஸ்டியோ - ஆர்த்தரைடீஸ் நோயாளிகளில் 80சதவீதம் பேர் குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். ரூமாடாய்ட் ஆர்த்த ரைடீஸ் நோயாளிகள் குறைந்த அளவில் குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். குதிகால் எலும்பு (Calcareus) பாதத்தில் உள்ள எலும்புகளில் பெரியது. நடக்கும்போது உடல் எடையை தாங்கும் வளைவான அமைப்பு (Arch), நாம் தடுமாறாமல் இருக்க உதவுகிறது. இதனுடன் இணைந்த நார் போன்ற பாத திசுக்கள் (Plantar fascia), தசைகள், தசை நாண்கள் எலும்புகளை இணைக்கும் நார்கள், நாம் நடக்க, உடல் எடையை தாங்க உதவுகின்றன.குதிகால் வலி பாத திசுக்கள் (Plantar fascia) மற்றும் பாத வளைவை தாங்கும், காலின் நான்கு விரல்களை வளைந்து நிமிர செய்யும் தசையை தாக்கும். குதிகால் வலிக்கு ‘’Plantar fascitis” எனப்படும் பாத திசுக்களை தாக்கும் அழற்சிதான் காரணம்.

சில வேளைகளில் ஸ்கையாட்டிகா போன்ற இடுப்பு பிரச்னைகளிலும் குதிகால் நரம்புகள் அழுத்தப்பட்டு குதிகால் வலி ஏற்படலாம். இதற்கு முதலில் இடுப்பு பிரச்னையை சரி செய்தல் அவசியம். குதிகால் வலி இடுப்பு பிரச்னையால் ஏற்படுகிறதா? அல்லது குதிகால் பிரச்னையால் ஏற்படுகிறதா என்பதை சில எளிய ஆய்வுகள் மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவு அதிகமாக இருந்தாலும் இந்த பிரச்னை வரும். யூரிக் ஆசிட் அளவை ரத்த பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம். உடல் எடை குதிகாலில் விழுந்து ரணமாவதை தடுக்க மைக்ரோ செல்லுலார் (MCR) ரப்பரால் தயாரிக்கபட்ட காலணிகளை அணிதல் நல்லது.

குதிக்கால் வலி காரணங்கள்

* கரடு முரடான பாதையில் நடப்பது.
* High heels எனப்படும் குதிகால் மேலே தூக்கியிருக்கும்படி செய்யப்பட்ட காலணிகள், அதிகமாக நடப்பது.
* அதிக குளிர், தண்ணீரில் நடப்பது.
* அதிக எடையை தூக்குதல்
* வாதத்தை அதிகரிக்கும் உணவுகள்.

அறிகுறிகள்

* நடக்க சிரமமாக இருக்கும். இரவில் ஏற்படும் வலி அல்லது ஓய்வில் இருக்கும்போது உண்டாகும் குதிகால் வலி.
* வலி பல நாட்கள் நீடிப்பது.
* குதிகால் கருமை அடைதல், வீக்கம்
* ஜுரம்.
உடல் பருமன் முக்கிய காரணம்
* அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வர காரணமாகிறது. இது ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது. இதை தடுக்க உணவில் கொள்ளு, காராமணி, கம்பு, மொச்சை, பயறு போன்ற தானியங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.

காலணிகள்

* குதிகால் வலிக்கு காலணிகளின் பங்கு அதிகம் என்பதால் மென்மையான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* ஹைஹீல்ஸ் செருப்பு அணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.
* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.
* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண் எனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.
* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசை நேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டு வலியும் ஏற்படும்.

சிகிச்சை

* குப்பை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் அதிகப்படியான உடல் எடை குறையும்.
* வராதி என்றொரு கஷாயம் ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். இவை 200 மி.லி அளவில் கிடைக்கும். 3 டீஸ்பூன் மருந்துடன் 12 ஸ்பூன் கொதித்து ஆறிய தண்ணீர் மற்றும் கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும். காலையில் மருந்து சாப்பிட்டதும் அரைமணி நேரம் இடதுபக்கமாக சரிந்து படுத்திருக்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து வாய் கழுவி, சூடாக தண்ணீரை குடிக்கவும். உடல் பருமனை குறைக்க இது நல்ல கஷாயம். தயிரை தவிர்த்து தெளிந்த மோர் அருந்தலாம்.

* கால் டீஸ்பூன் தேனை சிறிது தண்ணீரில் கலந்து அல்லது திரிபலா எனும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சூர்ணம் 1 டீஸ்பூன் (5 கிராம்) ஆகியவற்றை 80 மி.லி தண்ணீரில் சிறிது கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறியபிறகு, கால் டீஸ்பூன் தேன் கலந்து காலை, இரவு உணவிற்கு பிறகு உடனே அருந்த வேண்டும். அதன்பிறகு முன் குறிப்பிட்ட மருந்தைச் சாப்பிடலாம்.

* சோப்புக்கு பதிலாக ஏலாதி சூர்ணம் கடையில் கிடைக்கும், அதை வெந்நீருடன் குழைத்து தேய்த்துக் குளிக்க நல்ல நிறத்தைப் பெறவும், உடல் எடையை குறைக்கவும் முடியும்.

*கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

வெந்நீர் ஒத்தடம்

ஒரு பெரிய பாத்திரத்தில், தோலில் சூடு தாங்கும் பதத்தில் - பாதங்கள் மூழ்கும் அளவுக்கு - வெந்நீர் ஊற்றி அதில் பாதங்களை பத்து நிமிடங்கள் வரை வைத்திருங்கள். இதே போன்று காலை, மாலை இரண்டு வேளைகளும் செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.

*ஒத்தடம் கொடுப்பதற்கென்றே கடைகளில் தேன் மெழுகு கிடைக்கும். இந்த மெழுகை வாங்கி சிறிது நேரம் காய்ச்சி ஒரு துணியை அதில் நனைத்தால், மெழுகு அதில் ஒட்டிக் கொள்ளும். அதை அப்படியே எடுத்து குதிகாலில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
கை மருந்து

* சிற்றரத்தை, அமுக்குரா, சுக்கு ஆகியவற்றைப் பொடித்துப் பாலில் போட்டுச் சாப்பிட்டு வர வேண்டும்.
* முடக்கறுத்தான், பிரண்டைத் துவையல், முடக்கறுத்தான் ரசம் நல்லது.
* தவிடு, உப்பு ஒத்தடம் கொடுத்து வரலாம்.
* மிதமான வெந்நீரில் உப்பு போட்டு அதில் காலை வைக்கலாம்.
* வில்வக் காயைச் சுட்டு நசுக்கி, எருக்கு இலை பழுப்பை அதன் மேல் விட்டுக் குதிகாலில் ஒத்தடம் கொடுக்கலாம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.