hotel food

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[TABLE]
[TR]
[TD="colspan: 2"]
hotel food

ஒரு முன்னாள் ஓட்டல் உரிமையாளர் தனது தொழில் ரகசியங்கள்(!) பற்றி முகநூலில் எழுதியிருக்கிறார்.அப்ரூவர் ஆனவர் சொல்லும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுபவையாகத்தானே இருக்கும். அதே அதிர்ச்சி ரகம்தான் இவரது முகநூல் ஸ்டேட்டஸும். படித்துவிட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள் என்ற வேண்டுகோளோடு வந்த அந்த தகவல்களைப் பாருங்கள்...

1. ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கனை மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய சிக்கனைத்தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம். அதை வினிகரில் கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.

2. சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிவப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம். ஆனால், அது தடை செய்யப்பட்ட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிவப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும்.

3. சோயா சாஸ்... இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை. மாறாகத் தண்ணீரோ அல்லது ஒரு வாரத்துக்கு முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ கலந்து செய்கிறோம்.

4. எந்த ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.

5. ஃப்ரைடு ரைஸ் செய்யும் போது சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.

6. இன்னொன்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்... ஃப்ரைடு ரைஸ் செய்யும் சட்டியை நாங்கள் ஒரு வாரத்துக்குக் கழுவ மாட்டோம். கழுவி எண்ணெய் பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும்.

7. மோனோசோடியம் க்ளூட்டமேட்... இதை அதிகமாக பயன்படுத்துகிறோம். உடலுக்குக் கேடு உண்டாக்கும் பொருள் என்று பலரும் சொல்கிறார்கள். இதைத் தொட்டு நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்துவிடும். சோதித்துப் பாருங்கள்.

8. மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான் நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

9. காலாவதியான தக்காளி சாஸ் விலை கம்மியாகக் கிடைப்பதால் அதையே உபயோகப்படுத்துகிறோம்.

10.சில்லி சாஸ்... அதை அருகில் சென்று முகர்ந்து பார்த்தால் முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும். எல்லாம் மசாலா மணத்தில் மறந்து போய்விடும்.

5 நிமிடத்தில் 8 பிளேட் தயாராகிவிடும். ஒரு பிளேட் 50 ரூபாய் என்றால் கூட 400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் சாப்பிட்டு என் உடலும் கெட்டுவிட்டது. மற்றவர்களின் உடல் நலனையும் கெடுக்கும் இந்த வேலை வேண்டாம் என என் மனசாட்சி உறுத்திய தால், அதை மூடிவிட்டு 8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக வேறு வேலைக்குச் செல்கிறேன்!- தினேஷ் (ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)

மிளகுத் தூளில் வெண்மை நிறத்துக்காக கோல மாவு கலப்படம் செய்யப்படுகிறது!

[/TD]
[/TR]
[/TABLE]
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#3
what a confession hotel saapaadu yen serala appadingrathukku ithu oru nalla utharanam . thanks for sharing lakshmi sis :cheer:
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#5
Aanalum ippadiyaa nilama mosama irukkum....ada aandavaa athuvum fastfood kalachchaaram perugi irukkara intha maarii soozhnilaiyie. athuvum kozhanthainga virumbi saapidara itemsla kooda :(

ithai ellam vittutu pesaatha veetulaiye senju suththama sugatharama saaptudalaam pole

Palarukku Eye openera irukkattum intha msg. @Penmai Support Team inthai inga irukkara makkal ellorum therinjukkara maathiri seiya mudiyuma???

Nandri Lakshmi.
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#6
aaggaaaaa......

ippdi oru confession ah??? hmmm hotel food ipdi irukuratathuku karanam ennau ippathan theriyuthu..

aanalum namm janagalum thiruntha maatangale
 

DEEPTHI S

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Jan 22, 2015
Messages
459
Likes
1,168
Location
Chennai
#7
ada paavikalaa.. sambathikka enna ellam panraanga..
thanks for sharing lakshmi sis..
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,542
Likes
11,559
Location
Chennai
#8
Enavo enaku evlo taste ah irunthalum hotel sapdu avlo ishtam illa,
fast food no way non veg seiyarathula sutham antha pakkam thriumbi kuda paka matean road la cross panracha kuda

Kasu panam thaan business people ku oray kuri athu star hotel nalum sari fast food nalum sari
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#9
Adak kadavule.
Ivlo mosama fast food irukkumnu ethir parkave illai.
1 week sattiyai kaluva maattangalame.:pray1:
Kalapada porulala varum kashtam oru puramna, Ithu maathiri sappitta namma vayiru enna agum. Horrible :worried:
Thanks for sharing, Lakshmi.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,531
Location
Hosur
#10
பொதுவா மெகா-வா dishes செய்யற இடத்துல சுத்தத்தை எதிர்பார்க்கவே முடியாது. இதுல காசும் பார்க்க ஆசைப்பட்டா கேட்கவே வேண்டாம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி லக்ஷ்மி.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.