How a married woman should maintain her Self Esteem?-திருமண உறவில் சுயத்தைத் தொலைக்&#296

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
[h=1]இனிது இனிது வாழ்தல் இனிது![/h]
ஜனனியும் அருணும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தார்கள். காதலித்தார்கள். ஜனனி மிகவும் கலகலப்பானவள். அவளை எல்லோருக்கும் பிடிக்கும். அருண் நேரெதிர் குணம் கொண்டவன். யாருடனும் அதிகம் பேச மாட்டான். படிப்ைப முடித்ததும் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இருவருக்குமே நல்ல வேலை கிடைத்தது. வருடந்தோறும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு என அருண் மிகவும் சீக்கிரமே உயர்ந்த இடத்துக்குப் போனான். ஜனனிக்கு வேலையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றாலும், பெரிய முன்னேற்றமோ, வளர்ச்சியோ இல்லை. அதன் பின்...

லட்ச ரூபாய் சம்பளத்தைத் தாண்டியதும் அருணின் போக்கில் பெரிய மாற்றம். ஜனனியை வேலைக்குப் போக வேண்டாம் என்று கட்டுப்படுத்தினான். மெல்ல ெமல்ல ஜனனியை ஒரு வேலையாளைப் போல நடத்தத் தொடங்கினான். குழந்தை, சமையல், வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு, நான்கு சுவர்களுக்குள் முடங்கியது ஜனனியின் வாழ்க்கை. நாளுக்கு நாள் எடை கூடி, அருணுக்கு அக்கா மாதிரி மாறிப் போனாள் ஜனனி. அதில் அருணுக்கு அவள் மீது கூடுதல் வெறுப்பு. இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரத் தொடங்கின. அலுவலகத்தில் வேலை பார்க்கிற இளம்பெண்ணுடன் அருணுக்கு புது உறவு முளைத்தது. கணவன்-மனைவிக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து, ஒரு கட்டத்தில் பிரிந்தார்கள்.

காதலிக்கிற போது இருவரும் ஒரே அந்தஸ்தில் இருந்தார்கள். 10 வருடங்களில் எல்லாம் தலைகீழானது. ஜனனி தன்னைத் தொலைத்தவளாக உணர்ந்தாள். சுயம் இழந்தாள்.திருமண உறவில் தன்னைத் தொலைக்கிற பெண்கள் சகஜம். கணவன்-மனைவிக்குள் பணம், பதவி என எத்தனை விஷயங்களில் வேண்டுமானாலும் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இருவரில் ஒருவர் காணாமல் போகக் காரணமாகிவிடக் கூடாது. வேலையை விட்டோ, வேறு தியாகங்கள் செய்தோதான் தன்னை சிறந்த இணையாக நிரூபிக்க வேண்டும் எனப் பெண்கள் நினைக்க வேண்டாம். இருவரும் சமம் என நம்பி வாழ்வதில்தான்
வாழ்க்கையின் அர்த்தமே அடங்கியிருக்கிறது.

காதலிலும் கல்யாணத்திலும் கரைந்து காணாமல் போகிற பெண்களைப் பற்றிக் கடந்த இதழில் பார்த்தோம். எல்லா பெண்களும் அப்படித் தம்மைத் தொலைப்பதில்லை. அதன் பின்னணியில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது வளர்ப்புமுறை. சிறு வயது முதல் அம்மா அல்லது அப்பாவுடன் நெருக்கமில்லாமலேயே வளர்வது, பெற்றோரில் இருவரின் அல்லது ஒருவரின் அருகாமை கிடைக்காமல் வளர்வது, விவாகரத்து அல்லது இறப்பின் காரணமாக ஒற்றைப் பெற்றோருடன் வாழ்வது, பெற்றோரின் தகாத உறவு, பெற்றோர் தனக்காக நேரம் ஒதுக்காதது, அதிக உணர்ச்சிவசப்படுகிற, கொடூரமாக நடந்து கொள்கிற பெற்றோரின் அணுகுமுறை, தவறான முன்னுதாரணமாக வாழ்கிற பெற்றோரின் வளர்ப்பு, எப்போதும் குறை கண்டுபிடித்துக் கொண்டும், கடிந்து கொண்டும் இருக்கும் பெற்றோரின் மனப்போக்கு...

இப்படி வளர்ப்புமுறையில் நிகழ்கிற தவறுகள், ஒரு பெண்ணின் பிற்கால வாழ்க்கையை, உறவைப் பெரிதும் பாதிக்கலாம்.பெண்களைப் பற்றிய சமுதாயத்தின் பார்வையிலும் பாரபட்சங்களுக்குப் பஞ்சமில்லை. 50 சதவிகித பெண்கள், தங்கள் குழந்தைப் பருவத்தில் யாரேனும் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களாகவே இருக்கிறார்கள். உலக அளவில் 50 சதவிகித திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? எல்லோரையும் நம்பிவிடுவது... கண்டதும் காதல் கொள்வது... இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் பெண்கள்தான் பின்னாளில் திருமண உறவில் சிக்கலை சந்திக்கிறார்கள். இத்தகைய பெண்களிடம் சில அறிகுறிகளைக் காணலாம்.

காதல் என்பதை யதார்த்தமான உணர்வாகப் புரிந்து கொள்ளாமல், அதை ஒரு மாயையான, கற்பனையான உணர்வாகவே நினைத்துக் கொள்வார்கள்.
மோசமாக நடத்தும் பெற்றோரிடமிருந்து விடுதலையாக, கண்டதும் காதலில் விழுந்து விடுவார்கள். அதாவது, ஒரு இழப்பை ஈடுகட்ட, இன்னொரு உறவைத் தேடிக் கொள்வார்கள்.காதலோ, திருமணமோ தோல்வியடைந்திருந்தால், அந்தச் சோகத்திலிருந்து மீட்டுக் கொள்ளவும் சட்டென இன்னொரு காதலில் விழுவார்கள்.

தனிமையில் உழல்கிற பலரும், அதிலிருந்து தப்பிக்க இப்படி பொருந்தாத காதல் அல்லது உறவில் புதைந்து போவதுண்டு.சரி... இதையெல்லாம் மாற்ற முடியுமா?
முடியும். அதற்கு ஒரே தீர்வு... உங்கள் வாழ்க்கையின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வதுதான்! அதெப்படி?கண்டதும் காதல் கொள்ளத் துணியாதீர்கள். எவ்வளவுதான் அருமையான நபராக இருந்தாலும், அவர் மீது கொண்ட நல்லெண்ணத்தால் உடனே அவருடன் காதல் கொள்வதோ, உறவில்
இணைவதோ வேண்டாம்.

உங்களுக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறதா? அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுங்கள். அவர் உங்களை எப்படி நடத்துகிறார் எனப் பாருங்கள். பொதுவாக பெண்களைப் பற்றிய அவரது அபிப்ராயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பெண்களை மதிக்காதவர் என்றால், உங்களை மட்டும் மதிப்பார் எனத் தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாம். அதே நிலைதான் பின்னாளில் உங்களுக்கும் வரும்.

தான் மிகவும் அழகானவர்... மற்றவரைக் கவரக்கூடியவர் என்கிற எண்ணம் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் மிகச்சுலபமாக ஓர் உறவுக்குள் சிக்குகிறார்கள். தன்னைப் பற்றிய உயர்வு மனப்பான்மையும் அதிக நம்பிக்கையும் வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல், உடனடியாக ஒரு திருமணத்திலோ,
உறவிலோ ஈடுபடச் செய்து விடுகிறது.

ஒரு சில சந்திப்புகளிலேயே உங்களைப் பற்றிய எல்லா உண்மைகளையும் எதிராளியிடம் பகிர்ந்து கொள்வதும், நெருக்கமாவதும், பழைய காதல், உறவுகளைப்
பற்றிய விவரங்களைச் சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.நீங்கள் காதலிக்கிற அல்லது கல்யாணம் முடிக்கவிருக்கிற நபரைப் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு வர வேண்டும். அதற்கு அவகாசம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை. உங்களைப் பற்றி அவரும் அவரைப் பற்றி நீங்களும் என்ன மாதிரியான அபிப்ராயங்கள் வைத்திருக்கிறீர்கள், இருவரின் விருப்பங்கள் என்னென்ன, திறமைகள் என்னென்ன, இருவருக்கும் அபிப்ராய பேதங்கள் வருகிற விஷயங்கள் என்னென்ன, அந்த மாதிரித் தருணங்களில் இருவரும் எப்படி நடந்து கொள்வீர்கள், ஒரு பிரச்னையை இருவரும் எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள்...
இப்படி வாழ்க்கைக்கு அடிப்படையான அத்தனை விஷயங்களிலும் இருவருக்குமான பொருத்தம் தெரிந்து கொள்ள அந்த அவகாசம் அவசிய
மானதுதான்.

சரி... வேறு என்னதான் பேசலாம்?

உங்கள் விருப்பு, வெறுப்புகள், கனவுகள், லட்சியங்கள் என எல்லாவற்றையும் துணையிடம் மெல்ல மெல்லப் பகிர்ந்து கொள்ளலாம்.பொருளாதாரம், இருவருக்குமான உடல் நெருக்கம் என சீரியஸான கமிட்மென்ட்டுகளுக்குள் நுழையாமல் இருப்பது நலம்.காதலிக்கும் போ தும், கல்யாணமான புதிதிலும் இருவரும் தங்களைப் பற்றிய பாசிட்டிவ் பிம்பத்தையே துணையிடம் காட்ட முனைவார்கள். கூடிய வரையில் உங்களைப் பற்றிய தவறான பிம்பத்தைக் காட்டாதீர்கள். இந்த அணுகுமுறை நீங்கள் யார் என்பதை உங்கள் துணைக்கு உணர்த்தும். உங்கள் இயல்பு என்ன? உங்கள் விருப்பு, வெறுப்புகள் என்னென்ன என்பதையும் சொல்லும். உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும்.

இப்படியெல்லாம் இருப்பதில் என்ன பயன்? உங்களுடைய தேர்வு தவறாக இருந்தால், உங்களுடைய இந்த இயல்புகளைக் கண்டு துணை தானாக விலகி விடுவார். உங்களைப் புரிந்து கொள்கிற நபர் என்றால் உங்களுடன் பயணத்தைத் தொடர்வார். இந்த இயல்புடன் இருப்பது உங்களை பலமான ஆளுமையாக உருவாக்கும். இதே இயல்பைத் தொடரும் பட்சத்தில், நேர்மையான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவும்.

சரி... நேர்மையாக வாழ்வதால் என்ன பயன்?


வாழ்க்கையில் எப்போதும் நீங்கள் விரும்பாத எதையும் செய்யத் தேவை ஏற்படாது.ஒரே மாதிரி கருத்துகள், நம்பிக்கைகள் உள்ள துணையைக் கண்டுபிடித்து வாழ்க்கையில் இணைவது சாத்தியமாகும். நிறைவான வாழ்வு நிஜமாகும். கடைசியாக...ஒவ்வொரு பெண்ணும் தனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். திருமணமானவரோ, ஆகாதவரோ, யாருக்கும் இது பொருந்தும். யாருக்காகவும் உங்களுடைய லட்சியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.

உங்களுக்கும் உங்கள் தேவைகளுக்கும் நேரம் ஒதுக்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நட்பும் சமூக வாழ்க்கையும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம். அதற்கும் நேரம் ஒதுக்குங்கள். எக்காரணம் கொண்டும் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள்.உங்கள் துணையிடமிருந்து உங்களுக்கு ஒரு சின்ன இடைவெளி இருக்கட்டும். உங்களுக்கான ரகசியங்கள் உங்களுடனேயே இருக்கட்டும். அந்த ரகசியங்களில் நேர்மை இருக்கும்வரை அவற்றைக் கட்டிக் காப்
பதில் தவறே இல்லை.

பெண்களை மதிக்காதவர் என்றால், உங்களை மட்டும் மதிப்பார் எனத் தவறான நம்பிக்கை கொள்ள வேண்டாம். அதே நிலைதான் பின்னாளில்
உங்களுக்கும் வரும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
Re: திருமண உறவில் சுயத்தைத் தொலைக்கிற பெண்&#29

திருமண உறவில் சுயத்தைத் தொலைக்கிற பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். தொலைந்து போனவர்களுக்கும் தொலைந்துவிடாமல் இருக்க நினைப்போருக்குமான விஷயங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.திருமணத்துக்குப் பிறகும் பெண்கள் தமக்கான ரொட்டீனை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உதாரணத்துக்கு வேலையைத் தொடர்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை... ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவரையும் புகுந்த வீட்டாரையும் திருப்திப்படுத்த பெண்கள் வேலையைத் துறக்கிறார்கள். எத்தனை பெரிய பதவியில் இருக்கும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

கணவர்கள் மனைவிக்காக அப்படி எந்தத் தியாகத்தையும் செய்வதில்லை. வேலையை விடத் துணிகிற பெண், அதைத் தொடர்ந்து சந்திக்கப் போகிற பிரச்னைகளைப் பற்றி யோசிப்பதில்லை. முதல் விஷயம் பொருளாதார ரீதியாக கணவரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள். கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவர் வீடு திரும்பும் வரை திசை தெரியாத பறவை மாதிரி காத்திருக்கிறாள்.

என்ன செய்வது, யாரிடம் பேசுவது எனத் தெரியாத அந்தத் தவிப்பு மிக மோசமானது. அதற்குப் பதில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பேசி, மனைவி வேலையை விடுவதற்கு மாற்று இருக்கிறதா என யோசிக்கலாம். தியாகம் என்பது ஒருவழிப் பாதையாக இல்லாமல் இருவரும் சேர்ந்து செய்வதாக இருக்க வேண்டியது உறவுகளில் மிக முக்கியம்.திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் எனப் பல நடிகைகள் அறிக்கை விட்டு மண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கிறோம். திருமணத்துக்கு முன்பு வரை அந்த நடிகை விருதுகள் பல வென்ற, வெற்றிகரமான, முன்னணி நடிகையாக வலம் வந்திருப்பார். ஆனால், திருமணம் என வரும் போது எதைப் பற்றியும் யோசிக்காமல் அத்தனையையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடத் தயாராவார்கள்.

இது நடிகைகள் என்றில்லாமல் பிரபலமாக இருக்கிற பெரும்பாலான பெண்களுக்கும் ஏற்படுகிற பிரச்னையே. அதுவே திருமணம் என்கிற புதிய உறவு எந்த ஆணையும் அவனது பழைய வாழ்க்கையை அப்படியே தொடரச் செய்வதற்குத் தடையாக அமைவதில்லை.திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணிடம் அவளது புகழோ, திறமையோ, பிசினஸ் சாதுர்யமோ இப்படி ஏதோ ஒன்று ஈர்த்து, அவளைக் காதலித்து ஓர் ஆண் திருமணம் செய்திருப்பான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அவள் மறக்க வேண்டிய முதல் விஷயமாகவும் அந்தப் புகழும்திறமையும் சாதுர்யமுமாகவே இருப்பதுதான் கொடுமை. ஆண் தன்னை சக்தி வாய்ந்த நபராகக் கற்பனை செய்து கொள்கிறான். தான் சொல்வதுதான் விதி... வைத்ததுதான் சட்டம் என்கிற நினைப்பில் தனது ஆற்றலைத் துஷ்பிரயோகம் செய்கிறான்.

நான்கு பேர் பாராட்டும் இடத்தில் பெயரோடும் புகழோடும் ஆளுமையோடும் இருந்த தன் மனைவியை இப்படி அடக்கி வீட்டுக்குள் முடக்குவது அவளுக்கு மட்டுமல்ல தனக்குத் தானே பாதகம் ஏற்படுத்திக் கொள்கிற செயல் என்பதைப் பெரும்பாலான ஆண்கள் உணர்வதில்லை. கணவருக்கு விருப்பமில்லையென வேலையை விடுகிற பெண்கள் 50 சதவிகிதம் என்றால், கணவர் அப்படிச் சொல்லாமல் தாமாகவே முன்வந்து வேலையை விடுகிறவர்கள் 50 சதவிகிதம். இரண்டிலுமே சம்பந்தப்பட்ட பெண் தன் தனித்தன்மையைத் தொலைக்கிறாள். முழுமையான மனுஷியாக வாழ முடியாமல் தவிக்கிறாள்.

திருமணத்துக்கு முன்பு அழகிலிருந்து ஆரோக்கியம் வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிற பெண்கள், திருமணத்துக்குப் பிறகு தலைகீழாக மாறிப் போகிறார்கள். அதனால் அதிக பருமனாகிறார்கள். அந்தப் பருமன் தோற்றம் அவர்களைத் தனிமைப்படுத்துவதுடன், மனஅழுத்தத்திலும் தள்ளுகிறது.

திருமணத்துக்கு முன்பு நிறைய நட்புடன் வாழ்கிறவர்கள், திருமணமானதும் நட்பை மறக்கிறார்கள். இந்த விஷயத்திலும் ஆண்கள் விதிவிலக்கானவர்கள். திருமணம் என்கிற விஷயம் அவர்களது நட்புக்கு எந்த வகையிலும் தடையாக அமைவதில்லை.

இப்படிப் பல விஷயங்களாலும் மாறிப் போகிற பெண்ணுக்கு நாளடைவில் ஒரு குழப்பம் வருகிறது. காலையில் கணவர் வேலைக்குப் போனதிலிருந்து மாலை வீடு திரும்பும் வரை அவனுக்காகக் காத்திருக்கிறாள். வந்ததும் தன்னைக் கவனிக்க வேண்டும்... தன்னிடம் பேச வேண்டும்... தான் பேசுவதை கவனிக்க வேண்டும்... அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாள். ஆனால், கணவன் அப்படி நினைப்பதில்லை.

இருவரும் வேலைக்குப் போகிற போது இருவருக்கும் இடையில் ஓர் ஆரோக்கியமான இடைவெளி இருக்கும். ஆனால், மனைவி வேலைக்கும் போகாமல் தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிற மாதிரி எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என மனைவி காத்திருக்க, கணவனோ மனைவியிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம் என யோசிக்கிறான். வேலை அதிகம், மீட்டிங், வெளியூர் பயணம் என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, வீட்டுக்கு வருகிற நேரத்தைக் குறைக்கிறான். திருமணத்துக்குப் பிறகு தான் முழுமையாக கைவிடப்பட்டதாக உணர்கிறாள் மனைவி. தன்னை கவனிக்க ஆளில்லை எனக் குமுறுகிறாள்.

தன்னைத் தானே கவனித்துக் கொள்கிற மனநிலைக்கு வந்து விட்டால் பெண்கள் இதைத் தவிர்க்கலாம், திருமணத்துக்கு முன்பிருந்த நட்பையும் ஈடுபாடுகளையும் திருமணத்துக்குப் பிறகும் அவள் அப்படியே தொடர்வதுதான் ஒரே வழி.சாந்தினியை திருமணத்துக்கு முன்பிலிருந்தே எனக்குத் தெரியும். மிகவும் கலகலப்பானவள். பயங்கர புத்திசாலி. யாருடனும் சட்டென நட்பாகிவிடக்கூடியவள். அவள் திருமணம் செய்த விக்கியோ அவளுக்கு அப்படியே நேரெதிர் குணாதிசயம் கொண்டவன். `திருமணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணா இருந்திருக்கலாம்... இனிமே நான் சொல்றபடிதான் இருக்கணும்... இப்படி எல்லார்கூடவும் சிரிக்கிறதும் பேசறதும் எனக்குப் பிடிக்காது. ஃப்ரெண்ட்ஸ் யாரும் வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது. நீயும் அவங்களோட சுத்தக்கூடாது...’ என சாந்தினிக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் விதிக்க, விக்கியை பிடித்த காரணத்தால் அவன் கண்டிஷன்களையும் ஏற்றுக் கொண்டாள்.

சிரமமாக இருந்தாலும் தன்னை மாற்றிக் கொண்டாள். கொஞ்ச நாட்களிலேயே அவளது சிரிப்பு, கலகலப் பேச்சு, நட்பு பாராட்டுகிற மனசு என எல்லாம் காணாமல் போனதைப் பார்த்தேன். விக்கி திடீரென வெளியூரில் ஒரு பயிற்சிக்காக சென்றுவிட, பேசக்கூட ஆளில்லாமல் தனிமையில் தள்ளப்பட்டாள் சாந்தினி. தனக்கு இனி யாருமே இல்லையே...என்கிற பயம் அதிகமாகி, அது நாளடைவில் மனஅழுத்தத்தில் தள்ளி, மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, தற்போது மனநல சிகிச்சையில் இருக்கிறாள் சாந்தினி. இந்த மாதிரி ஏகப்பட்ட சாந்தினிகள் மன அழுத்தத்தில் உழன்று கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியை முழுக்க முழுக்க தனக்கேற்றபடி மாற்ற நினைக்கிற எந்தக் கணவனும் தன்னை ஒரு சதவிகிதம்கூட மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. இத்தகைய உறவுகளில் காதல் என்பதே இருக்காது.

திருமணம் என்பது ஓர் உறவு. இருவரும் சேர்ந்து வாழப் போகிற வாழ்க்கை. பெண் என்பவள் அத்தனை நாள் தன்னுடன் இருந்த அடையாளங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, முழுக்க முழுக்க வேறொரு புது மனுஷியாக புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என அவசியமில்லை.திருமணத்துக்கு முன்பு உங்களுக்கு இருந்த வங்கிக் கணக்கை அப்படியே உங்கள் பெயரிலேயே தொடருங்கள். அதை கணவரின் பெயருக்கு மாற்றி அவரைச் சார்ந்திருக்கிற நிலையை நீங்களே உருவாக்காதீர்கள்.

திருமணத்துக்கு முன்பு உங்கள் தேவைகளுக்காக நீங்கள் எப்படி செலவழித்தீர்களோ, திருமணத்துக்குப் பிறகும் அப்படியே செய்யுங்கள். உங்களது பொருளாதார சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட கணவரைக் கேட்டுக் கொண்டு செலவழிக்க நினைக்காதீர்கள். அதனால் கணவனும் மனைவியும் அவரவர் விருப்பப்படி இஷ்டத்துக்கு செலவு செய்து கொள்ளலாம்... யாரும் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தப்பர்த்தம் செய்து கொள்ள வேண்டாம்.

திருமண உறவில் ஒரு சின்ன இடைவெளி வேண்டும் என உங்கள் கணவர் நினைக்கலாம். அவர் அப்படி நினைப்பதை தவறாகப் புரிந்து கொண்டு, உங்களை அவர் ஒதுக்குவதாகவோ, உங்களுக்குத் தெரியாமல் வேறொரு தனிப்பட்ட வாழ்க்கையைத் தேடிக் கொள்ள நினைப்பதாகவோகற்பனை செய்யாதீர்கள். அந்த இடை
வெளியை அனுமதியுங்கள்.இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென ஓர் அமைதி வரலாம். அதை அப்படியே அனுமதியுங்கள். பதறியடித்துக் கொண்டு எதையாவது பேசி அந்த அமைதியைக் கலைக்காதீர்கள். மவுனமாக இருப்பது பல நேரங்களில் மாயங்கள் செய்யும்.

வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கிற எல்லா பெண்களுக்கும் 8 முதல் 10 மணி நேரம் யாருமற்ற தனிமையில் வீட்டில் இருக்கும் போது, கணவர் வந்ததும்
அவரது மொத்த நேரத்தையும் தனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைப்பது இயல்பே. ஆனால், கணவரின் இடத்திலிருந்து யோசிக்கப் பழகுங்கள். 10 மணி நேரம் வேலை பார்த்த களைப்பில் வருகிறவருக்கு வீட்டுக்கு வந்ததும் டி.வி. பார்ப்பது, பேப்பர் படிப்பது போன்ற சில விஷயங்கள் ரிலாக்ஸ் செய்யலாம். அவரது நேரத்தை அனுமதித்தால் பல பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
 

SADAIYAN

Friends's of Penmai
Joined
Feb 7, 2014
Messages
174
Likes
268
Location
RAMNAD
#3
Re: திருமண உறவில் சுயத்தைத் தொலைக்கிற பெண்&#29

"ஒரே மாதிரி கருத்துகள், நம்பிக்கைகள் உள்ள துணையைக் கண்டுபிடித்து வாழ்க்கையில் இணைவது சாத்தியமாகும். நிறைவான வாழ்வு நிஜமாகும்." இது சாத்தியமில்லை. அதுவாக அமையலாம். வாழ்கையே contrast இல் தான் சுகமாக இருக்கும். எல்லாவற்றிலும் ஒத்து போய் விட்டால் வெளி மனிதர்களுக்கு வேண்டும் என்றால் உதாரண தம்பதிகளாக தெரியலாம்.
"உங்களுக்கான ரகசியங்கள் உங்களுடனேயே இருக்கட்டும். அந்த ரகசியங்களில் நேர்மை இருக்கும்வரை அவற்றைக் கட்டிக் காப்
பதில் தவறே இல்லை." இது எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. பல சமயங்களில் வாழ்கையை கேள்வி குறியாக்கி விட சந்தர்பங்களை ஏற்படுத்தி தர எதுவாக அமையலாம். எனது கருத்து


".
ஒவ்வொரு பெண்ணும் தனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்வது அவசியம். திருமணமானவரோ, ஆகாதவரோ, யாருக்கும் இது பொருந்தும். யாருக்காகவும் உங்களுடைய லட்சியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை."மிகவும் சரி. முடியாவிட்டாலும் முயன்று செயல் படுத்த பட வேண்டும் கண்டிப்பாக.

பெரும்பாலான கருத்து வேற்றுமைகள் அனுபவத்தில் சிறந்த மூத்தவர்களின் யோசனையின் பேரில் நிச்சயம் களையப்பட்டு விடலாம். ஒன்று அவசியம், ஒவ்வொருவரும் வாழ்கை கல்வியை நேரம் கிடைக்கும்போது எல்லாம் படித்து தெரிந்து கொள்வது மிக அவசியம்.

ஆழ்ந்த அனுபவம் வாய்ந்த பயனுள்ள பதிவுகள். வாழ்க வளமுடன் . நன்றி


 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#4
Re: How a married woman should maintain her Self Esteem?-திருமண உறவில் சுயத்தைத் தொலைக்&

Very useful suggestions.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.