How should a Husband understand his Wife?-கணவன்மார்களே மனைவியின் ஆசையை புர&#

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
பெண்கள் அவர்களது கணவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பும், அக்கறையும். பிள்ளைகள் பெற்றெடுத்த பின்னும் கூட, தங்களை ஒரு குழந்தைப் போல கணவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள் பெண்கள்.

இந்த இடத்தில் தான் பல ஆண்கள், அவர்களது மனைவிகளுக்கு தவறு இழைக்கின்றனர். திருமணத்தின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த அன்பும், அக்கறையும் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் இருப்பதில்லை. கணவர் குறைந்த பட்ச நேரமாவது தங்களுடன் கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

இதனை புரிந்து கொண்டு ஆண்கள் தங்களது மனைவிகளுடன் சிறிது நேரம் செலவழிக்க வேண்டும். அதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுவிட்டு வர வேண்டும் என்பதெல்லாம் மனைவி எதிர்ப்பார்க்கவில்லை. அவர்களது எதிர்பார்ப்புகளை தெரிந்து, புரிந்து உங்கள் மனைவியின் ஆசை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்.

சமையல் செய்யும் போது காய்கறிகள் நறுக்கித் தருவது, உலை வெந்த போது இறக்கி தருவது, துணிகள் அயன் செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு கிளிப்பி விடுவது என சிறு சிறு விஷயங்களில் கணவன் உதவ வேண்டும் என மனைவிகள் ஆசைப்படுவார்கள். இதை எல்லாம் கணவன்மார்கள் முகம் சுளிக்காது செய்து தரவேண்டும்.

மாலை நேரங்களில் கணவனுடன் வாக்கிங் செல்வது மனைவிகளுக்கு பிடித்தமான விஷயம். வாரம் முழுக்க இல்லையெனிலும் வாரக்கடைசியிலாவது செல்ல வேண்டும் என்பது அவர்களது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. குழந்தை பிறந்ததில் இருந்து மனைவிகள் மட்டும் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கணவன் எண்ணக்கூடாது.

எனவே, முடிந்த வரை வீட்டில் பெண்கள் வேறு வேலைகள் செய்யும் போது, கணவன் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும் என மனைவி விரும்புவாள். கணவன் அவரது தாய் தந்தை மீது எடுத்துக் கொள்ளும் அக்கறையும், அன்பும், தங்களது தாய், தந்தை மீதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பது மனைவிகளின் ஆசை.

இதனை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்ளவதில்லை. பெண்கள் மனமுடைந்து போகும் நிலைகளில், உடல் நிலை சரியில்லாது போகும் போது அவர்களது கணவன் மனதளவில் மிகவும் ஆதரவாக இருக்க வேண்டும் என பெண்கள் நினைப்பது இயல்பு. ஆனால் அதிக வேலையின் காரணமாக ஆண்கள் மனைவியுடன் இருக்க நேரம் ஒதுக்குவதில்லை.

மனைவிகள் கணவர்களிடம் வெறுப்பது மாதவிடாய் காலத்தில் அவர்களை புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது. அவர்கள் உடலளவில் பெருமளவு மாதாமாதம் மிகவும் சோர்வடையும் நாட்கள் அவை. எனவே, ஆண்கள் அவர்களது நிலையை புரிந்துக்கொண்டு, அவர்களை அரவணைத்து, அக்கறையுடன் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: கணவன்மார்களே மனைவியின் ஆசையை புரிந்து &#29

மிகவும் நன்று சார்.:thumbsup
கணவர்களின் ஆதரவும், அரவணைப்பும் இருந்தாலே பொதுமானது. வேலை செய்து கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.
சாப்பிட்டாயா, குழந்தைகள் ரொம்பவும் தொல்லை கொடுத்தார்களா என்ற ஆறுதல் வார்த்தைகளே போதுமானது சார் மனைவிகளுக்கு.@shansun70
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: How should a Husband understand his Wife?-கணவன்மார்களே மனைவியின் ஆசையை பு&#299

Thanks for sharing.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.