How to avoid Summer diseases? - கோடை நோய்களை தடுப்பது எப்படி?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கோடை நோய்களை தடுப்பது எப்படி?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்ட தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு, என்று பல தொல்லைகளும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? மனித உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். கோடையில் வளிமண்டல வெப்பநிலை சர்வ சாதாரணமாக 40லிருந்து 45 டிகிரியை தொடுகிறது.

அப்போது உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. உடலை சுத்தமாக பராமரிக்கவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு அடைத்துக்கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். இதை தவிர்க்க தினமும் இரு வேளை குளித்தால் நல்லது. தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கிவிடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக்கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகும்.

உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக வியர்க்குருவில் இத்தொற்றும் சேர்ந்துகொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். படையை குணப்படுத்தும் களிம்பு அல்லது பவுடரை தடவிவர இது குணமாகும். கோடையில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும்.

அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம். உட்கொள்ளும் தண்ணீர் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களள் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்னை வராது.

வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிகமாக பெருகும். இந்த உணவுகளை சாப்பிட்டால் பலருக்கு வாந்தி, வயிற்றுபோக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.

இதனால் வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்திவிடுவது நல்லது. உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியதும் அவசியம். தண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டிவிடும்.


அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். தண்ணீரின் தாகம் அதிகமாக இருக்கும். இதில் தலைவலி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

வெயில் காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள். பாட்டில் குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். காரணம்? குளிர்பானங் களை வரம்பின்றி குடிக்கும்போது அவற்றில் உள்ள குளிர்ச்சியானது ரத்த குழாய்களை சுருக்கி உடலின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது.

இதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைகின்றன. இதனால் உடலில் நீரிழிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாக குறைகின்றன. எலுமிச்சை பழச்சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடுவது குறைந்த செலவில் நிறைந்த பலனை பெற உதவும்.

உணவு வகைகள்:

இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர்சாதம், கூழ், அகத்திகீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைகோஸ், வாழைத் தண்டு, வெங்காயபச்சடி, தக்காளி கூட்டு போன்றவை கோடைக்கால உணவு வகைகள்.
தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை போன்ற நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். இவற்றில் பொட்டாசியம் வியர்வையுடன் வெளியேறிவிடும்.


தவிர்க்க வேண்டியவை

கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்றவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல் சூடான, காரமான மசாலா கலந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டும் என்றால் குடையை எடுத்து செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.

குழந்தைகள், முதியோர்கள் உடல்நலம் குறைந்தோர் வெயிலில் அலைவது ஆபத்தை வரவழைக்கும். வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால் கண்களுக்கு சன்கிளாஸ் அணிந்து கொள்ளலாம். உடைகளை பொறுத்தவரை கோடைக்கு உகந்தது பருத்தி ஆடைகளே, அவற்றில் கூட இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

கருப்பு உள்ளிட்ட அடர் நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும். ஆகவே இத்தன்மையுள்ள ஆடை களை தவிர்ப்பது நல்லது. அதுபோல் செயற்கை இழை களால் ஆன ஆடை களையும் தவிர்க்க வேண்டும். வெண்மை நிற ஆடைகள் கோடைக்கு உகந்தவை என்று வேலூர் டாக்டர் எஸ்.சக்கர வர்த்தி கூறினார்.

 

Attachments

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: Caution against summer diseases - கோடை நோய்களை தடுப்பது எப்படி?

கோடை சரும நோய்களை தடுப்பது எப்படி?

டாக்டர் கு. கணேசன்

அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதுபோல், இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் உடலில் வெப்ப நோய்களும் வரத் தொடங்கிவிட்டன. கொடூரமாகக் கொளுத்தும் கோடை வெயிலின் தாக்கத்தால், சரும நோய்கள் வருவது அதிகமாகிவிட்டது. வேனல்கட்டியில் தொடங்கி வெப்பப் புண் வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. என்றாலும், நம் உணவிலும் உடையிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், இவற்றை வரவிடாமல் தடுப்பதும் எளிது.சருமம் கறுப்பாகிறது
, ஏன்?
சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாகச் சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள பி வகை புறஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களிலுள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.

சருமம் தன்னைத்தானே சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்துக்கொள்கிற தற்காப்பு நடவடிக்கை என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

சருமம் கறுப்பாவதைத் தடுக்கக் கடுமையான வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலையக் கூடாது, உச்சி வெயிலில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் என்பதால், பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பதுதான் சருமத்துக்கு நாம் தருகின்ற பாதுகாப்பு. இந்த நேரத்தில் அவசியம் வெளியில் செல்ல வேண்டுமென்றால், எஸ்.பி.எஃப். 25 ( Sun protecting factor 25) என்றுள்ள சன்ஸ்கிரீன் லோஷனை உடலின் வெளிப்பகுதிகளில் தடவிக்கொண்டு செல்லலாம்.

சருமத்தில் எரிச்சல்
அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்கமுடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக்குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்தவேளையில், CXCL5 எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சலும் வலியும் ஏற்படும். இந்தப் பாதிப்புள்ளவர்கள், மருத்துவரை அணுகி வலிநிவாரணி மாத்திரைகள், எரிச்சலைக்குறைக்கும் களிம்புகளைப் பயன்படுத்திப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.

‘வெப்பப் புண்’ ( Sun Burn) என்று அழைக்கப்படுகின்ற இந்தப் பிரச்சினையை எளிதில் தடுத்துவிடவும் முடியும். வெயிலில் செல்வதற்கு முன்பாக, உடலில் வெளியே தெரியும் பகுதிகளில் ஏற்கெனவே சொன்ன சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவி, அரை மணி நேரம் கழித்துச் செல்வது, புறஊதாக் கதிர்வீச்சிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க எளிய வழி.

மேலும், பருத்தி ஆடைகளை அணிவதும், சருமத்தை முழுமையாக மறைக்கக்கூடிய குளோஸ் நெக் மற்றும் முழுக்கை ஆடைகளை அணிவதும் சரு மத்துக்குப் பாதுகாப்பு தரும். கருப்பு நிற ஆடைகளை அணிந்தால், அவை சூரிய ஒளிக் கதிர்களை அதிகமாக உறிஞ்சும். இது சரும எரிச்சலை அதிகப்படுத்தும். ஆகவே, கோடையில் வெள்ளை நிற ஆடைகளை அணிவதே நல்லது.

சரும வறட்சி
கோடையில் நமக்கு வியர்வை அதிகமாகச் சுரந்து வெளியேறுகிறது. இதனால் சருமத்திலுள்ள நீர்தன்மை வற்றிவிடுகிறது. அதை ஈடுகட்டுமளவுக்கு அடிக்கடி நாம் தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி அருந்தாதபோது, சருமம் வறண்டுவிடும். அடுத்து, சருமத்தில் சீபம் எனும் எண்ணெய்ப் பசையுள்ள ஒரு கொழுப்புப் பொருள் சுரக்கிறது.

இதுதான் சருமத்தை வறட்சி அடையாமல் பார்த்துக்கொள்கிறது. கோடையில் நாம் குளிக்கும்போது அழுக்கு போகக் குளிக்க வேண்டும் என்று கருதி, சருமத்தை மிக அழுத்தமாகத் தேய்த்துக் குளிப்போம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றிவிடும். இதனாலும் சருமம் வறண்டுவிடுகிறது.

கோடையில் தினமும் இரண்டு முறை அழுக்கு போகக் குளிக்க வேண்டும் என்பது சரிதான். அதற்காகச் சருமத்தை அழுத்தி அழுத்தித் தேய்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும் என்பதுமில்லை. சாதாரணத் தண்ணீரில் குளித்தால் போதும். வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


சருமம் வறட்சி அடையாமலிருக்கத் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். பழங்கள், பழச்சாறுகள், இளநீர், மோர், பானகம், சர்பத் போன்றவற்றை அதிகமாகக் குடிக்க வேண்டும். வறண்ட சருமத்தில் பாரஃபின் எண்ணெய் அல்லது தரமான மாய்ஸ்சுரைசர் களிம்பைப் பூசிக்கொண்டால் பிரச்சினை தீரும்.

தலைமுடி வறண்டுபோனால் ?
கோடையில் சருமத்துக்கு அடுத்தபடியாகக் கூந்தலும் அடிக்கடி வறண்டுபோகும். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கலந்து தடவித் தலைக்குக் குளிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தடுக்கலாம். வாரத்துக்கு ஒருமுறை தரமான கண்டிஷனர் ஷாம்புவையும் பயன்படுத்தலாம்.

வெளியில் செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்வது நல்லது. தலையில் அதிகமாக வியர்த்தால், அழுக்கு சேர்ந்து அரிப்பு ஏற்படும். அப்போது சாதாரணமாக நாம் குளிக்கப் பயன்படுத்தும் சோப்பைக் கொண்டு தலைக்குக் குளித்தாலே அரிப்பு குறைந்துவிடும். இதற்கெனச் சிறப்பு ஷாம்பு எதுவும் தேவையில்லை. தலையில் பொடுகு, பூஞ்சைத் தொற்று பாதிப்புள்ளவர்கள் மருத்துவர் யோசனைப்படி கீட்டகெனசோல் மருந்து கலந்த ஷாம்புவைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் பலன் கிடைக்கும்.

பாதங்களில் வெடிப்பு
கோடையில் ஏற்படுகின்ற சரும வறட்சி காரணமாகப் பாதங்களில் வெடிப்பு தோன்றுவது அடுத்த பிரச்சினை. இதைத் தவிர்க்கத் தினமும் இரவில் பாதங்களைக் கழுவிச் சுத்தப்படுத்திவிட்டு, தரமான மாய்ஸ்சுரைசர் களிம்பைப் பூசிக்கொள்ள வேண்டும். கோடைக் காலத்தில் ஷூ அணிவதைத் தவிர்க்கவும். ஷூ அணிந்தால், காலுறைக்குள் அதிகமாக வியர்வை தேங்கி, விரல்களுக்கு இடையில் புண் உண்டாக்கும். பிளாஸ்டிக் செருப்புகளை அணிந்தால், பாதச் சருமத்தில் வெப்பம் அதிகரித்து வெடிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

சூரிய ஒளி ஒவ்வாமை
உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை என்று இருப்பதுபோல், ஒரு சிலருக்குச் சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். இவர்கள் வெயிலுக்குச் சென்றுவிட்டால் போதும், உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். ‘சோலார் அர்ட்டிகேரியா’ ( Solar Urticaria ) என்று அழைக்கப்படும் இந்தத் தொல்லையைத் தடுக்க வேண்டுமானால், கோடையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடல் முழுவதையும் மறைக்கின்ற வகையில் ஆடை அணிய வேண்டும். ‘சன் பிளாக்’ லோஷன்களைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டியதும் முக்கியம்.

-கு. கணேசன், பொது நல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com
 

Attachments

Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: Caution against summer diseases - கோடை நோய்களை தடுப்பது எப்படி?

கோடை நோய்களை விரட்ட வழிகள்

கோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பம் தான் நினைவுக்கு வரும் கோடைக்காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

பலர் பூங்கா, கடற்கரை என நிழல் தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர். இந்த கோடையின் முக்கிய கால கட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனை தான். கோடைக்காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியாமல் நம் உடலில் பல நோய்கள் வெளிப்படுகின்றன. இனி குறைந்தது மூன்று மாதங்களுக்கு இந்த வெப்ப பாதிப்புகளை நாம் சமாளித்தே ஆக வேண்டும். கோடையில் நம்மை தாக்கும் வெப்ப நோய்கள் பற்றியும் அவை வராமல் தடுப்பது எப்படி? என்பது பற்றியும் சித்த மருத்துவ நிபுணர் திருத்தணிகாசலம் விவரிக்கிறார்.

வியர்க்குரு:

வெயில் ஏற ஏற உடலில் வியர்வை அதிகமாகச் சுரக்கும் அப்போது தோலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். அதனால் `வியர்க்குரு' வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது. குளித்து முடித்த பின் உடலைத் துடைத்து விட்டு, வியர்க்குரு பவுடர் அல்லது சந்தனத்தைப் பூசலாம்.

வேனல் கட்டிகள்:

தோலின் வழியாக வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை வெளியேற முடியாமல் வியர்க்குருவில் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ளும். உடனே அந்த இடம் வீங்கிப் புண்ணாகும்.

இது தான் வேனல்கட்டி இதற்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வேனல் கட்டி வருவதைத் தடுக்க, வெயிலில் அதிகமாக அலைவதைத் தவிர்க்கவும். நிறைய தண்ணீர் பருகவும்.

காளான் படை:

வியர்குருவில் பூஞ்சை அல்லது காளான் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். உள்ளாடைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் காளான் படை நீங்கி விடும். படையைக் குணப்படுத்தும் களிம்புகளையும் மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

வியர்வை நாற்றம்:

அளவுக்கு அதிகமான வியர்வை காரணமாக உடலில் நாற்றமெடுக்கும். இதனைத் தவிர்க்க, குளித்து முடிந்ததும் அலுமினியம் குளோரைடு அல்லது ஜிங்க் கலந்த நாற்றம் போக்கும் பவுடர்களை உடலில் பூசிக் கொள்ள வேண்டும்.

மஞ்சள் காமாலை:

கோடையில் சமைத்த உணவுகள் விரைவில் கெட்டு விடும். அவற்றில் நோய் உருவாக்கும் கிருமிகள் அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை உண்பதால் பலருக்கு கோடை காலத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, சீதபேதி, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும்.

ஆகையால் கோடை காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்தி விட வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி ஆற வைத்துக் குடிக்க வேண்டும். வயிற்றுப் போக்கின் ஆரம்பநிலையிலேயே `எலெக்ட்ரால்' போன்ற பவுடர்களைத் தண்ணீரில் கரைத்துச் சாப்பிட வேண்டும்.

வெப்பத் தளர்ச்சி:

வெயிலின் ஆதிக்கம் அதிக்கும் போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு மேல் தாண்டி விடும். அப்போது உடல் வளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும், தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புகள் வெளியேறிவிடுவதால் இந்த தளர்ச்சி ஏற்படுகிறது.

வெப்ப மயக்கம்:

சுட்டெரிக்கும் வெயிலினால் தோலிலுள்ள ரத்த நாளங்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழி செய்து விடுகிறது. இதனால் இதயத்திற்கு ரத்தம் வருவது குறைந்து விடுகிறது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்த கிடைப்பதில்லை.

உடனே தலைச் சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சில சமயங்களில் மரணம் கூட நிகழலாம். வெப்ப மயக்கம் மற்றும் வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தரவேண்டியது முக்கியம். அவரைக் குளிச்சியான இடத்திற்கு அப்புறப்படுத்துங்கள்.

மின் விசிறிக்குக் கீழ் படுக்க வைத்து, ஆடைகளைத் தளர்த்தி காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள். அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும்.

இது மட்டும் போதாது அவருக்கு குளுக்கோஸ் மற்றும் தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் செலுத்த வேண்டியதும் முக்கியம். ஆகையால் உடனடியாக மருத்துவரின் உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.

ஒளி ஒவ்வாமை:

சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு `ஒளி ஒவ்வாமை' உண்டாகும். இதனால் உடலில் வெயில்படும் இடங்கள் கறுத்து விடும். சிலருக்கு வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் தோல் குன்றி சிவந்து புண்ணாகி விடும்.

இதனை `வெப்பப் புண்கள்' என்கிறோம். இதனைத் தவிர்க்க வெயிலில் செல்லும் போது `சன்ஸ்கிரீன்' களிம்புகளைத் தோலில் தடவிக் கொள்ளலாம். மேலும் வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

நீர்க்கடுப்பு:

கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு காரணம். நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை சரியாகி விடும். என்றாலும் அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் அதற்குரிய பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.

காப்பது எப்படி?

கோடை வெயிலைச் சமாளிக்கவும், வெப்ப நோய்கள் வராமல் தடுக்கவும், அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள். சாதாரணமாக தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். கோடையில் குறைந்தது 3லிருந்து 4 லிட்டர் வரை குடிக்க வேண்டும் காய்ச்சி ஆற வைத்து தண்ணீரை ஒரு மண் பானையில் ஊற்றி வைத்து ஜில்லென்று குடிக்கலாம்.

காபி மற்றும் தேநீர் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்களைக் குடிப்பதை விட இளநீர், நீர்மோர், பதநீர், பழச்சாறுகள், லஸ்சி ஆகிய இயற்கை பானங்கள் குடிப்பதை அதிகப்படுத்துங்கள். எலுமிச்சைச் சாற்றில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது நல்லது.

தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறு களையோ அடிக்கடி சாப்பிடுங்கள். கோடையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது.

இயன்றவரை நிழலில் செல்வது நல்லது. குழந்தைகளை வெயிலில் விளையாட விடாதீர்கள். உடைகளைப் பொறுத்தவரை கோடைக்கு உகந்தது. மெல்லிய பருத்தி ஆடைகளே அவற்றில் கூட தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

உணவுகள்:

கோடையில் நம் தினசரி உணவு முறைகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், எண்ணெய்ப் பலகாரங்கள், பேக்கரிப் பண்டங்கள் அசைவ உணவுகள் ஆகியவை தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால் இவ்வகை உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர்ச்சாதம், கம்பங்கூழ், வெங்காய பச்சடி, வெள்ளரி சாலட், பொன்னாங்கண்ணிக் கீரை, பீட்ரூட், காரட், முள்ளங்கி, பாகல், தக்காளி ஆகியவை சிறந்த கோடை உணவுகள். காரட் ஜுஸ், வெந்தயம், ஊறவைத்த நீர் குடித்தால் உடல் வெப்பம் குறையும். இரவு உணவில் 2 வாழைப் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளன. இவை வெயிலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுகட்ட உதவும் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.