How to bathe the Newborn?-பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எ&#29

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்படி?

பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது என்பது புதிய பூவை கையாள்வதை போன்றது. தவறாக குளிப்பாட்டுதல் குழந்தையின் ஆரோக்கியத்துக்கே ஆபத்தை தந்துவிடும். பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டும் முறை பற்றி விளக்குகிறார் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு மருத்துவர் ராதா லஷ்மி செந்தில்.

*குழந்தை பால் குடித்த உடனே குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டுவதற்கு சிறிது நேரம் முன்போ குளிப்பாட்டிய பிறகு சிறிது நேரம் கழித்தோதான் பால் புகட்ட வேண்டும்.

*பிறந்த குழந்தையை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டலாம்.

*குழந்தையை குளிப்பாட்ட சிலர் கடலை மாவு, பயத்த மாவு போன்ற வற்றைப் பயன்படுத்துவதுண்டு. அவையெல்லாம் அவசியமில்லை. மென்மையான சோப் சொல்யூஷனை பயன் படுத்தினாலே போதும்.

*குளிப்பாட்டும் ேபாது குழந்தையை உலுக்கவோ, குலுக்கவோ தேவையில்லை. காதிலும் மூக்கிலும் ஊதக் கூடாது.

*தினமும் உடல் முழுவதும் சிறிதளவு எண்ணெய் பூசி குளிப்பாட்டலாம்.

*வாரம் 2 முறை தலைக்குக் குளிப்பாட்டினால் போதுமானது. அப்போது பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்
படுத்தாமல், குழந்தைகளுக்கான ஷாம்பு அல்லது சோப் சொல்யூஷன் போட்டுக் குளிப்பாட்டலாம்.

*தண்ணீர் கொதிக்க கொதிக்கவோ, சில்லென்றோ வேண்டாம். மிதமான சூடு இருந்தால் போதும்.

*குளிப்பாட்டி முடித்ததும் துடைப்பதற்கு தூய்மையான டவலை (துண்டு) பயன்படுத்த வேண்டும்.

*குழந்தையை குளிப்பாட்டி முடித்த பின் ஈரத்தோடு இருக்கும்போதே விரல் நகங்களை வெட்டி விட்டால் சுலபமாக இருக்கும்.

*குளித்து முடித்த பின் சிலர் குழந்தைகளுக்கு பவுடரை அதிகமாக போட்டுவிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
 

rosei

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 25, 2011
Messages
6,498
Likes
21,916
Location
nederland
#2
Re: பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எப்ப&#297

குழந்தையின் தலையைப் பிடித்துக் கொள்ளும் கையினால்,

பெருவிரல் மற்றும் நடு /மோதிரவிரல் கொண்டு குழந்தையின் இருபுற காதுகளையும் லேசாக முடிக் கொண்டு குளிப்பாட்டினால் தண்ணீர் உள்ளே புகாது .
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Re: How to bathe the Newborn?-பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எ

Very useful tips, Lakshmi and Rosei.
 
Joined
Apr 6, 2015
Messages
6
Likes
2
Location
abu dhabi
#5
Re: How to bathe the Newborn?-பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எ

Great information thank you all
 

cool123gal

Friends's of Penmai
Joined
Jan 31, 2013
Messages
447
Likes
310
Location
coimbatore
#6
Re: How to bathe the Newborn?-பிறந்த குழந்தையை குளிப்பாட்டுவது எ

Very useful tip
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.