How to control Nipah Virus?-‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
#1
‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி?: மருத்துவ நிபுணர் த.ஜெகதீசன் விளக்கம்

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது. பாதிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக் கூடாது. இவ்வாறு செய் தால் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கலாம் என்று டாக்டர் த.ஜெகதீசன் கூறியுள்ளார்.

கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், குழந்தைகள் மற்றும் மரபியல் சிகிச்சை நிபுணரான டாக்டர் த.ஜெகதீசன், நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள் ளும் வகையில் கேள்வி, பதில் வடிவில் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம்:

நிபா வைரஸ் என்பது என்ன?

மலேசியாவின் நிபா என்ற ஊரில் 1998-ம் ஆண்டு முதன்முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ‘நிபா’ வைரஸ் என்று அழைக்கப்பட்டது. தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் இந்த வைரஸ் அவ்வப்போது பரவி, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் அறிகுறிகள் என்ன?

அதிக காய்ச்சல், கடும் தலைவலி, சில நாட்கள் தசை மற்றும் மூட்டுவலி, ஒருசிலருக்கு மூளை அழற்சி ஏற்பட்டு நினைவு தவறும்.

இதற்கு மருந்து இருக்கிறதா?

காய்ச்சல், உடல்வலிக்கு பொதுவான மருந்துகள் கொடுக்கலாம். அதேபோல, மூளை பாதிப்புக்கு அடிப்படையான சில சிகிச்சைகள் அளிக்கலாம். எவ்வளவுதான் சிறப்பான சிகிச்சை அளித்தாலும் 50 முதல் 70 சதவீத நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது. 1998 முதல் இதுவரை 477 பேர் இந்நோயால் பாதிக்கப்பட் டது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய் எப்படி பரவுகிறது?

முதலில் மலேசியாவில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோது, பன்றிகளை வளர்த்துவந்த ஒரு விவசாயிக்கு பன்றியிடம் இருந்து பரவியது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் பழந்தின்னி வவ்வால்களின் உமிழ்நீர், சிறுநீர், மலக்கழிவுகளில் இந்த வைரஸ் இருப்பது தெரியவந்தது. எனவே, பன்றி, பழந்தின்னி வவ்வால்கள் மூலமாக இந்நோய் பரவுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் தும்மல், உமிழ்நீர், ரத்தம், சிறுநீர் வழியாகவும் மற்றவர்களுக்குப் பரவலாம். நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளையும் இந்த நோய் பாதிக்கக்கூடும்.

எல்லா மனிதர்களையும் இந்த நோய் பாதிக்குமா?

இல்லவே இல்லை. எய்ட்ஸ் உட்பட எந்த வைரஸாலும் எல்லா மனிதர்களையும் பாதிக்க இயலாது. வைரஸ்கள் மனித செல்களுக்குள் நுழைய ‘ரிசப்டார்’ எனப்படும் ஒருவிதமான கிளைக்கோ புரோட்டீன் தேவை. இது எல்லா மனிதர்களின் செல்களிலும் இருக்காது. அதனால், எல்லா மனிதர்களையும் வைரஸால் தாக்க முடியாது.

இதை எப்படி தடுப்பது?

நிபா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். வவ்வால்கள் கடித்த பழங்கள் குறிப்பாக முந்திரி, கொய்யா, மாம்பழம் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. முழு பழமாக இருந்தால் நன்கு கழுவிய பிறகு சாப்பிடலாம். நோய் பாதித்த விலங்குகளின் மாமிசத்தை சாப்பிடக்கூடாது. நோய் பரவுவது அதிகமாக இருந்தால், மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த நோய்க்கு தடுப்பூசி இருக்கிறதா?

இந்த வைரஸ் தட்டம்மை வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது. முயற்சி செய்தால் தடுப்பூசி கண்டுபிடிக்கலாம். ஆனால், தற்போது வரை தடுப்பூசியோ, தகுந்த மருந்துகளோ இல்லை.

இந்த நோயைப் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வசதி இருக்கிறதா?

பரிசோதனைக் கூடங்களில் ரத்தம், உமிழ்நீர், மூக்கு சளி போன்றவற்றை பரிசோதனை செய்வதாலும், எலிசா பரிசோதனை மூலமாகவும் உறுதிசெய்ய முடியும். ஆனால், இந்த வசதிகள் பரவலாக இல்லை. நம் நாட்டில் மகாராஷ்டிர மாநிலம் புனே, இமாச்சலப் பிரதேசத்தின் காசோலி ஆகிய நகரங்களில் மட்டுமே இந்த ஆய்வுக் கூடங்கள் உள்ளன.

தமிழ் ஹிந்து
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
96,970
Likes
140,865
Location
Madras @ சென்னை
#3

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.