How to do meditation? - தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையான &a

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#1
தியானத்தை முறைப்படி கற்று தருவதற்கென்று பல மையங்கள் இருக்கின்றன. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இருப்பவர்கள் அங்கு சென்று கற்றுக்கொள்ளவும். மற்றவர்கள் இந்த பதிவின் இறுதியில் அளிக்கப்பட்டுள்ள எளிய முறைகளை பின்பற்றி தியானத்தை துவக்கிவிடுங்கள்.
அரசமரத்தை சுற்றிவந்து உடனே அடிவயிற்றை தடவி பார்த்த கதையாக ஓரிரு நாட்கள் தியானம் செய்துவிட்டு பலனை எதிர்பார்க்கக் கூடாது. தியானத்தின் பலன்கள் தெரிய குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகும். சிலருக்கு வருடம் கூட ஆகலாம். ஆனால் உறுதியான பலன் நிச்சயம் உண்டு. அதை நீங்களே கண்கூடாக உணர்வீர்கள்


எந்த சூழ்நிலையிலும் தியானத்தை நிறுத்தாதீர்கள். தினசரி 10 – 15 நிமிடங்கள் போதும். சாப்பிடுவது, குளிப்பது போன்று நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக தியானம் ஆகிவிடவேண்டும். 5 நிமிடத்தில் துவங்கி 10, 15, 30 நிமிடம் என்று உங்களால் எவ்வளவு நேரம் தியானத்திற்கு ஒதுக்க நேரம் ஒதுக்குங்கள். கூடுமானவரை ஒரே நேரத்தில் தியானம் செய்வது சிறந்தது. ஆனால் ஒரே நேரம் ஒதுக்க முடியாதவர்கள், போகப் போக அதாவது ஓரிரு வாரங்கள் கழித்து அதற்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்கிவிடுங்கள்.
நம்பிக்கையுடன் தியானத்தை துவக்குங்கள். உங்கள் வாழ்க்கையின் போக்கே மாறி நீங்கள் நினைத்தது யாவும் நடந்து உங்கள் தேஜஸும் அதிகரிக்கும்.
அப்புறம் இன்னொரு விஷயம்… மனம் லயித்து எந்த பணியை செய்தாலும் அது தியானம் போலத் தான்.
நம்மை பொறுத்தவரை நமக்கு தினசரி இரண்டு மணிநேரங்களுக்கு மேல் தியானம் செய்த பலன் கிடைத்துவிடுகிறது. எப்படி தெரியுமா? பதிவு எழுத இரவிலோ அதிகாலையிலோ நாம் உட்காரும்போது

நீங்கள் அன்றாடம் வீட்டில் செய்யக் கூடிய சிறு சிறு வேலையையும் மனம் லயித்து செய்தால்… உதாரணத்திற்கு வீடு பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, காய்கறி நறுக்குவது, துணி துவைப்பது போன்ற சின்னஞ்சிறு வீட்டுவேலைகளை மனம் ஒன்றிச் செய்யும்போது அவை தியானமாக மாறிவிடும்.
பகவான் ரமணர் அடிக்கடி ஆசிரம சமையல் கூடத்துக்கு வந்து அவரே காய்கறிகள் நறுக்கித் தருவது வழக்கம். அப்பளப் பாட்டு என்ற பெயரில் ஆத்ம விசாரத்தை செய்யுள்களாக இயற்றியுள்ளார் பகவான் ரமணர். இதுதான் சூட்சுமம். நாம் செய்கிற காரியங்களை எல்லாம் இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்து விட வேண்டும். இதுவே தியானம்.
கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் பொங்கல் கூடுதல் ருசியாக இருக்கும். அதே பொங்கலை வீட்டில் செய்யும்போது அவ்வளவு ருசிக்காது. இதேபோல் வாழ்க்கை ருசிக்க வேண்டுமெனில் அதை அப்படியே இறைவனுக்கு அர்ப்பணித்து விட வேண்டும். இதற்கு தியானம் துணை செய்யும்.
மனம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பலரும் எடுத்தவுடன் சொல்லும் ஒரு வைத்தியம் என்னவெனில், “தியானம்”. மேலைநாடுகளில் தியானம் செய்வோர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.
தியானம் செய்வது எப்படி ?
பலர் மனதை வெறுமையாக்கிக்கொள்வதை தியானம் என்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல. ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை, உருவத்தை, கடவுளே குறித்து நமது சிந்தினையை செலுத்துவதே தியானம்.
1. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும். (ஒரு வேளை கூட ஓ.கே. ஆனால் பிற்பாடு இரு வேளைகளுக்கு வழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும்!)
2. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.

6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் ‘ராம,ராம’ என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.
10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும். -தினமணி.

 
Last edited by a moderator:

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையான விள&

Hi Vaishnavi, super guidelines for doing meditation! thank you!
 

XXXXXX

Friends's of Penmai
Joined
Jul 23, 2011
Messages
155
Likes
98
Location
dddddd
#4
Re: தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையான விள&

i will try it
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#5
Re: How to do meditation? - தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையா&#2985

Wonderful sharing Vaishnavi, useful guidance, thanks.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Re: How to do meditation? - தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையா&#2985

பகிர்வுக்கு மிக்க நன்றி வைஷ்ணவி
 
Joined
Mar 18, 2011
Messages
60
Likes
58
Location
chennai
#7
Re: How to do meditation? - தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையா&#2985

thanks you
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#8
Re: How to do meditation? - தியானம் செய்வது எப்படி ? ஒரு எளிமையா&#2985

thanks vaishnavi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.