How to Get Chubby Cheeks? - உப்பலான கன்னம் பெற வேண்டுமா?

chan

Well-Known Member
#1
உப்பலான கன்னம் பெற வேண்டுமா?


தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னத்தில் தேய்க்க வேண்டும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை பூசி, தினமும் கீழிருந்து மேலாக 'ஃபேஷியல் ஸ்ட்ரோக்’ கொடுத்துவந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும்.

அரைத்த பப்பாளி விழுது மற்றும் தேன் ஆகியவற்றைத் தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தைப் பளபளப்பாக்கும்.