How to get rid of Thumb sucking habit? - கையை வாயில் வைத்து கொள்ளும் பழக்க&#

Joined
Jul 3, 2014
Messages
2
Likes
4
Location
tamilnadu
#1
என் மகள் இப்போது prekg படிக்கிறாள். அவள் வாயில் அடிகடி கை வைத்து கொள்கிறாள். நான் எப்படிஎல்லமோ சொல்லி பார்த்து விட்டேன் ஆனால் கேட்க மாற்ற. பேசிக்கொண்டு இருக்கும் போதே வாயில் கை வைதுகொல்கிறாள். எண் செய்வது?
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Re: How to get rid of Thumb sucking habit? - கையை வாயில் வைத்து கொள்ளும் பழக்&

Welcome to Penmai....Rama

ரமா , இதற்குப் பல தீர்வுகள் இருக்கு .

மொதல்ல , குழந்தையை இதுக்காக எப்பவும் அல்லது , வாயில் கை வைக்கும்போதோ , திட்டிட்டே இருக்காதீங்க .

குழந்தை வாயில் கை வைக்காமல் இருக்கும்போது , அவளைக் கண்ணாடியில் காமிச்சு , "இப்போ எவ்வளோ அழகா இருக்க நீ " அப்படின்னு சொல்லுங்க . அதே போல , வாயில் கை வச்சு இருக்கும்போது , அவளைக் கண்ணாடியில் காமிச்சு , "அந்த வாயில கை மட்டும் வைக்காம இருந்தா, நீ எப்பவும் அழகுதான் , கொஞ்ச நேரம் முன்னாடி நீயே பார்த்த இல்ல , எத்தனை அழகா இருந்தா , என்னோட ஏஞ்சல் ....நீ எப்பவும் அதே போல இருந்தாதான் , எல்லாரும் உன்னை அழகு ன்னு சொல்வாங்க ....இல்லாட்டி அழுக்குப் பொண்ணுன்னு யாரவது சொன்னா , அம்மாக்கும் உனக்கும் கஷ்டமாதானே இருக்கும் " அப்டின்னு கேளுங்க .

வாயில கை வைக்கும்போது , உடனே , "இப்போ அந்த விரலை மூக்குல வச்சு மோந்து பாரு " அப்டின்னு சொல்லுங்க . உடனே முகத்தை சுழிப்பா இல்லையா , அப்போ அவ கிட்ட சொல்லுங்க , "நீ தெரியாம , ரொம்ப நாள் பழக்கத்துல , வாயில கை போட்டுக்கற , இனிமே வாயில கை வச்சுக்கிட்டேன்னா , உடனே நான் இப்போ சொன்ன மாதிரி , அந்த விரலை மூக்குல வச்சுப் பாரு ....அந்த ஸ்மெல் பிடிக்கலை இல்லையா , இதே போலதான் உன் பக்கத்துல இருக்கறவங்களுக்கு தோணும் . அதனால உடனே எடுத்துடு ...செய்வியா " அப்படின்னு கேளுங்க.

அவ தூங்கி முழிக்கிற டைம்ல , (இன்னும் முழுசா முழிக்காம இருக்கும்போது ) சூப்பும் விரல்ல கொஞ்சம் வேப்ப எண்ணையை தடவி விட்டுடுங்க . இதனால , அவ விரலை வாயில் வைக்கும்போது , கசக்கும் . இதனாலையும் , இந்தப் பழக்கத்தை விட்டுட வாய்ப்பு உண்டு .

ஸ்கூல் போனாலே , கூட உள்ள பசங்க கிண்டல் பண்ணுறதால , நிறைய குழந்தைங்க இதை விட்டுடுவாங்க . ஆனா , வீட்டுல இருக்கும் போது , வச்சுப்பாங்க . அப்போ , "ஸ்கூல்ல நீ வாயில வைக்காம இருக்கறதால , உன் விரல் bad ஸ்மெல் வராம , good girl ன்னு எல்லார் கிட்டயும் பேர் வாங்கினியே ...அதே போலதான் வீட்டுலயும் இருக்கணும் " அப்டின்னு சொல்லுங்க .

அவ வாயில கை வைக்காம இருக்கற நாள் அன்னிக்கு , எதாவது ஒரு ஸ்டார் (கடையில கலர் கலரா விக்கும்- இதை நிறைய வாங்கி வச்சுக்கோங்க ) ஒரு போர்ட்ல ஒட்டி டேட் போட்டுடுங்க . ஒரு வாரத்துல எவ்வளோ ஸ்டார் வாங்கறாளோ அதுக்கு ஏத்த மாதிரி , கதை சொல்றது , வெளிய கூட்டிப் போறது ன்னு செஞ்சு ஊக்குவிங்க .

உங்க விரலைக் காமிச்சு ," நான் விரல் சூப்பாம இருந்ததால தான் , விரல் இவ்வளோ அழகா இருக்கு . அப்படி சூப்பி இருந்தா , நல்லாவே இருக்காது " அப்படின்னு சொல்லுங்க .

யாரவது வீட்டுக்கு வரப் போறாங்க ன்னா, இல்ல எங்கயாவது வெளியே போகும்போதோ , " நீ அவங்க எதிர தவறிப் போய் வாயில கை வச்சுட்டா , நான் உன்னைப் பார்த்து , எதாவது சிக்னல் செய்வேன் , அப்போ எடுத்துடணும்....அப்போதானே உன்னை யாரும் bad girl ன்னு சொல்ல மாட்டாங்க" அப்படின்னு சொல்லி ஒரு ஏற்பாடு செஞ்சுக்கோங்க .

ஒருவேளை எதாவது பயம் இல்ல தயக்கம் இந்த மாதிரி சமயத்துல மட்டும் அவ வாயில கை போடறான்னா அதைக் கவனிச்சு , மொதல்ல அதைப் போக்க முயற்சி செஞ்சா , தானே , இந்தப் பழக்கத்தை விட்டுடுவா .

To get more tips please click the below links

http://www.penmai.com/forums/preschooler/60625-getting-rid-thumb-sucking-habit-children.html


How to get rid of thumb sucking habit of my daughter?


How to get rid baby from the habit of finger sucking?

 
Last edited:
Joined
Jul 3, 2014
Messages
2
Likes
4
Location
tamilnadu
#3
Re: How to get rid of Thumb sucking habit? - கையை வாயில் வைத்து கொள்ளும் பழக்&#296

உங்களோட டிப்ஸ் ரொம்ப உபயோகம இருக்குது ஆனால் அவள் ஒரு விரல் மட்டும் சப்பவில்லை , கை முழுச இல்லைன ரெண்டு மூன்று விரல், மணிக்கட்டு பகுதி போல எதவேண்டும்னாலும் வாயில் வைக்கிற. தூங்கும் போது எல்லாம் அப்படி செயவில்லை. யாரவது புது ஆள் அவளிடம் பேசினால். இல்லைன தன்னை மறந்து டிவி பார்க்கும் போது தான் இப்படி பண்றா.

வாயில் ரொம்ப நேரமும் வைகாவில்லை சில நொடிகள் தான் எச்சில் பட்டவுடன் டிரெஸ் தொடச்சிட்டு எடுதிடரா பிறகு கொஞ்சம் நேரம் பொறுத்து அதே போல செய்யற.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#4
Re: How to get rid of Thumb sucking habit? - கையை வாயில் வைத்து கொள்ளும் பழக்&

உங்களோட டிப்ஸ் ரொம்ப உபயோகம இருக்குது ஆனால் அவள் ஒரு விரல் மட்டும் சப்பவில்லை , கை முழுச இல்லைன ரெண்டு மூன்று விரல், மணிக்கட்டு பகுதி போல எதவேண்டும்னாலும் வாயில் வைக்கிற. தூங்கும் போது எல்லாம் அப்படி செயவில்லை. யாரவது புது ஆள் அவளிடம் பேசினால். இல்லைன தன்னை மறந்து டிவி பார்க்கும் போது தான் இப்படி பண்றா.

வாயில் ரொம்ப நேரமும் வைகாவில்லை சில நொடிகள் தான் எச்சில் பட்டவுடன் டிரெஸ் தொடச்சிட்டு எடுதிடரா பிறகு கொஞ்சம் நேரம் பொறுத்து அதே போல செய்யற.
ஒ ...அப்படியா ரமா .....அப்போ அவ புது ஆட்களைக் கண்டா தயக்கம் , பயம் வருதுன்னு நினைக்கிறேன் .

இதுக்கு , நீங்க முன்னாடியே சொல்லி வச்சுடுங்க , "இப்போ நாம ஒருத்தரை (இல்ல சிலபேர் ) பார்க்கப் போறோம் இல்லையா , அவங்க எதுவும் பயமுறுத்த போறதில்ல , நம்மளோட மத்த தெரிஞ்சவங்க (இவங்க பேரைச் சொல்லுங்க ) போலதான் .அதனால உனக்கு அவங்களைப் பார்த்தா , பயமோ தயக்கமோ வேண்டாம் . அம்மாதான் உன் பக்கத்துலேயே இருக்கேனே , அதனால நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம் .அவங்களைப் பார்த்த உடனே, நீ வாயில கை வைக்காம இருந்தா , அவங்க உன்னை கெட்ட, அழுக்கு பொண்ணுன்னு நினைக்காம , எவ்ளோ அழகான பொண்ணுன்னு நினைப்பாங்க ." அப்டின்னு வெளியே போக முன்னாடியோ , இல்ல வீட்டுல யார் வந்தாலும் இப்படிதான் நடக்கணும் அப்படின்னு முன்னாடியே சொல்லுங்க .

அதுக்கு அவளுக்கு உதவி செய்ய , நான் ஏற்கனவே சொன்ன மாதிரி ,
" நீ அவங்க எதிர தவறிப் போய் வாயில கை வச்சுட்டா , நான் உன்னைப் பார்த்து , எதாவது சிக்னல் செய்வேன் , அப்போ எடுத்துடணும்....அப்போதானே உன்னை யாரும் bad girl ன்னு சொல்ல மாட்டாங்க" அப்படின்னு சொல்லி ஒரு ஏற்பாடு செஞ்சுக்கோங்க .


இது கண்டிப்பா அவளை மாத்திக்க உதவும் .இதுக்கு முன்னோடியா ,அவ டிவி பார்க்கும்போது,வாயில கை வைக்கும்போது ,சிக்னல் கொடுத்து பழக்குங்க .

அவ ஒவ்வொரு முறை ,அந்த சிக்னலை புரிஞ்சு நடக்கும்போதும் ,goodgirl அப்டின்னு உடனே பாராட்டிடுங்க.அதுக்குகாரணத்தையும்சொல்லுங்க .அப்போதான் ,அந்தபாராட்டைபெறவே ,அவ கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பழக்கத்தை விட்டுடுவா .

கொஞ்சம் மெதுவா கூட இது நடக்கலாம் .

ஸ்கூல் ரெகுலரா போனாலே ,இந்தப் பழக்கம் தானா நின்னுடும் .

நான் ஏற்கனவே சொன்னமாதிரி அந்த ஸ்டார் ஒட்டி ஊக்குவிக்கறது எல்லாம் செய்ங்க .அதுக்காகவே ,அவ இதை விட்டுடுவா .

முக்கியமா ,வாயில கைவச்சுட்டு எடுத்த உடனே ,அதை அவ மூக்குல வைங்க ,அந்த வெறுப்புலையே விட்டுடுவா .


 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.