How to Grow Taller?-உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?

வழிகாட்டி
உயரம் எப்போதும் கம்பீரத்தின் அடையாளமாக இருக்கிறது. குழந்தைகளை படிப்பாளிகளாக வளர்ப்பது மட்டும் பெற்றோரின் கடமையில்லை. அவர்கள் உடல் வளர்ச்சியிலும் அக்கறை தேவை.

‘‘குழந்தைகளைப் பாதுகாக்கிறேன் என்ற பெயரில் அவர்களை வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்து வளர்ப்பதும், ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் உடல் வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்கள்’’ என்கிற குழந்தைகள் எலும்பு நல நிபுணர் டாக்டர் ஆர்.சங்கர் உயரக் குறைப்பாட்டுக்கான காரணங்கள், தடுப்பதற்கான வழிமுறைகள்,





தேவையான உணவுகள் குறித்தும் விளக்குகிறார்...‘‘பெரும்பாலான குழந்தைகள் உயரக் குறைப்பாட்டுடன் பிறப்பதற்கு,2 காரணங்கள் முக்கியமானவை. முதலாவது ‘ஜீன் குறைபாடு’. அதாவது, பரம்பரை காரணமாக குழந்தைகள் உயரக்குறைப்பாட்டுடன் பிறப்பது. இரண்டாவதாக, நமது உடலில் உயரத்தை ஏற்படுத்தும் காரணியான ஹார்மோன் அளவு குறைவாக இருப்பதும் வளர்ச்சி நிலையை பாதிப்படைய செய்யும்.

இன்றைய இயந்திரத்தனமான, நாகரிகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளை கிருமிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறேன் பேர்வழி என்று, அசுத்தம் நிறைந்த இடங்களான தெருக்கள், மணல், திறந்தவெளிகளில் விளையாட அனுமதிக்காமல், வீட்டுக்குள்ளேயே, அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே பூட்டி வைப்பது பல பெற்றோரின் வழக்கமாக உள்ளது. இப்படி சூரிய ஒளி படாமல் வளரும் குழந்தைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக, ‘ரிக்கெட்ஸ்’ என்ற நோய் ஏற்படுகிறது.

திறந்த வெளியிடங்களில் ஓடியாடி விளையாட வாய்ப்பில்லாத குழந்தைகள் இயல்பான வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறார்கள். அடுத்து, குழந்தைகளின் உயரக்குறைப்பாட்டுக்கு முக்கிய காரணம் போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்காததுதான். குழந்தைகள் என்னதான் புரோட்டீன், நார்ச்சத்து போன்ற சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும், உயரத்தைக் கூட்டுவதற்கு தேவையான சத்துகளை சாப்பிடாவிடில் உயரக் குறைபாடு ஏற்படும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள் இயல்பான வளர்ச்சி அடையாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடுதான் முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல், தைராய்டு, முடக்குவாதம், கிட்னி பிரச்னை, குடல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் எலும்புக் கோளாறுகள் காரணமாகவும் குழந்தைகளுக்கு உயரக் குறைபாடு ஏற்படுகிறது.

பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளைவிட முன்னதாகவே பருவம் அடைந்து விடுகின்றனர். அதனால், பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது ஆண் குழந்தைகளுக்கு முன்பாகவே நின்றுவிடுகிறது. இவர்களின் வளர்ச்சி 12 வயதில் தொடங்கி 14 வயதில் குறையும். ஆண் குழந்தைகள் வளர்ச்சி அடைதல் 13 வயதில் இருந்து 15 வயதுக்குப் பிறகு குறையும். குழந்தைகளின் வளர்ச்சி விகிதம் சரியான முறையில் உள்ளதா என்று சீரான இடைவெளியில் சரிபார்த்து குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு... 9 வயதுடைய குழந்தை123 சென்டிமீட்டரிலிருந்து 140 சென்டிமீட்டர் வரை உயரம் கொண்டிருக்க வேண்டும்.

விளையாடுதல் மட்டுமே குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவாது. முறையான உடற்பயிற்சிகளோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். காய்கறிகளை நிறைய சேர்த்துக் கொள்வது வளர்ச்சிக்கு உதவும். முக்கியமாக, நூல்கோல், கோஸ், பீன்ஸ், வெண்டை, கீரை வகைகள், சோயாபீன்ஸ், காளான், வைட்டமின் ஏ நிறைந்துள்ள தக்காளி, கேரட், பீட்ரூட், பப்பாளி போன்றவற்றுடன், அசைவ உணவுகளான மீன், முட்டை சாப்பிடுவதும், பால் குடிப்பதும் குழந்தைகள் சீரான வளர்ச்சி பெறுவதற்கு உதவும்.

’’திறந்த வெளியிடங்களில் ஓடியாடி விளையாட வாய்ப்பில்லாத குழந்தைகள் இயல்பான வளர்ச்சி இல்லாமல் காணப்படுகிறார்கள். அடுத்து, குழந்தைகளின் உயரக் குறைப்பாட்டுக்கு முக்கிய காரணம் போதுமான ஊட்டச்சத்து கிடைக்காதது தான். பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி என்பது ஆண் குழந்தைகளுக்கு முன்பாகவே நின்றுவிடுகிறது.
 

kodiuma

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 29, 2013
Messages
4,662
Likes
11,339
Location
sivakasi
#3
nice info lakshmi akka :thumbsup
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.