How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோருக&#

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
[h=1]கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோருக்கு...[/h]
நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் பிள்ளைகளை சந்தேகத்துடனேயே பார்ப்பதும், ‘கர்புர்’ என கோபமாகவே பேசுவதும் வேண்டாம். சூழ்நிலைகளை சிக்கலாக்காமல், இலகுவாக்க முயற்சியுங்கள்.

குழந்தை உங்களிடம் கோபப்பட்டாலுமே, நீங்கள் அவர்களிடம் அன்பாக, மரியாதையாக நடந்து கொள்ளுங்கள். அதையும் மீறி, அவர்கள் கோபம் தொடர்ந்தால், அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

தேவை என்கிற போது, தயங்காமல் பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்கலாம்... தவறே இல்லை. இத்தனை நாளாக அதைச் செய்ததில்லை என்றால், இனி தொடங்குங்கள். முதலில் உங்கள் பிள்ளைகள் உங்களை நம்பாமல் போகலாம். நீங்கள் நடிக்கிறீர்களோ என டெஸ்ட் செய்யலாம். ஆனால், உண்மையாகவே நீங்கள் உங்களின் தவறுகளை உணர்ந்து விட்டீர்கள் என அவர்கள் நம்ப ஆரம்பித்து விட்டால், இணக்கமாகி விடுவார்கள்.

உங்களைப் போலவே உங்கள் பிள்ளைகளுக்கும் உள்ளூர பயம் இருக்கவே செய்யும். ஆக்ரோஷமாக வெளிப்படுகிற வார்த்தைகளும், வன்முறை நடவடிக்கைகளும்கூட அந்த பயத்தை மறைக்க அவர்கள் கையில் எடுக்கிற ஆயுதங்களே. உள்ளுக்குள் பயம் அதிகரிக்கிற போதுதான் ஒருவர், தன்னை பெரிய தாதா மாதிரி கற்பனை செய்து கொண்டு பேசுவார்.

உங்கள் பிள்ளை அப்படிப் பேசுவதுகூட ஒருவகையான பயத்தின் காரணமாகத்தான் இருக்கலாம் என்பதை அறிந்து செயல்படுங்கள். பிள்ளைகளின் மன அழுத்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் உடலில் ஏற்படுகிற சில வேதி மாற்றங்களின் விளைவாகவும் அந்த மன அழுத்தம் வரலாம். மனநல நிபுணரின் உதவியோடு தீர்வு காணுங்கள்.

பிள்ளைகளின் வன்முறை எல்லைமீறும் போது...

முதல் வேலையாக உங்கள் வீட்டு உறுப்பினர்களின், முக்கியமாக சின்னக் குழந்தைகளின் பாதுகாப்பின் மேல் கவனமாக இருங்கள். தேவைப்பட்டால் உதவிக்கு யாரையாவது அழைக்கத் தயங்காதீர்கள்.

அவர்களது ஆக்ரோஷம் அனுமதிக்கக் கூடியதல்ல என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். அதைக் கட்டுப்படுத்த உங்களால் முடிந்ததைச் செய்யத்
தயாராக இருப்பதையும் சொல்லுங்கள்.

அவர்களை மனநல மருத்துவரிடம் அழைத்துச்செல்ல தயங்காதீர்கள்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#2
Re: How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோரு&#296

​நல்ல மற்றும் அவசியமான தகவல்கள் சுமதி
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#3
Re: How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோரு&

​நல்ல மற்றும் அவசியமான தகவல்கள் சுமதி

நன்றி ஜெயந்தி.
 

saravanakumari

Commander's of Penmai
Joined
Jul 3, 2012
Messages
2,062
Likes
5,149
Location
villupuram
#4
Re: How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோரு&#296

Hi suma mam
thanks for ur info.
En periya paiyanukku konjam kovam varum.kettathu vangi tharailaina chut nu kovam varum.normala matha kutties mathiri azhama nerves ellam theriyara mathiri behave pannuvan.
Udane antha situation samalikka sorry solli thn convince pannuven.avan normal ayiduvan
but ippo irukkura kutties ellam kettathu venum nu ninaikkira mentality thn vachu irukkanga.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#5
Re: How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோரு&

Hi suma mam
thanks for ur info.
En periya paiyanukku konjam kovam varum.kettathu vangi tharailaina chut nu kovam varum.normala matha kutties mathiri azhama nerves ellam theriyara mathiri behave pannuvan.
Udane antha situation samalikka sorry solli thn convince pannuven.avan normal ayiduvan
but ippo irukkura kutties ellam kettathu venum nu ninaikkira mentality thn vachu irukkanga.

ஆமாம் சரவணகுமாரி... நீங்கள் சொல்வது சரி தான். இந்த காலத்து குழந்தைகளுக்கு exposure-ம் அதிகம்... பிடிவாதமும் அதிகம். அவர்களை அவர்கள் போக்கில் போய் தான் மாற்றவேண்டும்.
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#6
Re: How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோரு&#296

உபயோகமான கருத்துக்கள் ...
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#8
Re: How to handle angry child? - கோபக்காரக் குழந்தைகளின் பெற்றோரு&#296

useful sharing sumi akka
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.