How to maintain a healthy Ear?காதோடு தான் நாம் பேசுவோம்...

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
காது.. பலருக்கும் சில சமயங்களில் இது கேக்காததாகிவிடுகிறது. காரணம் நாமாகவோ, வெளிச் சூழலாகவோ இருக்கலாம்.
காதுகளை பராமரிப்பது குறித்து சில ஐடியாக்கள் நம் கைவசம் உள்ளது. அதில் சிலவற்றை உங்களுக்கும் சொல்கிறோம்....
பிறந்து ஒரு சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு அருகில் சென்று ஏதேனும் பெயர் சொல்லி அழைத்தால் குழந்தை சப்தம் வந்த திசையை நோக்கி திரும்பும். ஆனால், சப்தம் எழுந்த பக்கத்தை திரும்பிப் பார்க்காமலோ, பேச அதிக காலம் எடுத்துக் கொண்டாலோ உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
காதுகளை சுத்தம் செய்கிறேன் என்று பட்ஸ் உள்ளிட்டவற்றை காதுக்குள் திணித்து நீங்கள் எந்த ஆணியையும் புடுங்க வேண்டாம். காது தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளும் அனைத்துக் கலையையும் கற்று வைத்திருக்கிறது.
காதுக்குள் இருக்கும் அந்த பிசின் போன்ற அமைப்புதான் காதுக்குள் எந்த பொருளும், பூச்சியும் நுழையாமல் பாதுகாக்கும் அரணாகும். எனவே, காதை சுத்தப் படுத்துகிறேன் பேர்வழி என்று அந்த பிசின் போன்ற அமைப்பை காலி செய்து விடாதீர்கள்.
எனவே, எப்போதாவது காது குடைச்சல் எடுத்தால் பட்ஸை எடுத்து உங்களது காதின் சுவர் பகுதியை மட்டும் லேசாக துடைத்துவிட்டு விட்டுவிடுங்கள், போதும்.
பட்ஸ எடுத்ததும் பயந்து அலறும் உங்கள் காதும், நீங்கள் பட்ஸை எடுத்த பிறகுதான். அப்பாடா உட்டான்டா என்னன்னு நிம்மதி பெரு மூச்சு விடும்.
இப்போது காது குத்துவதைப் பற்றி பார்க்கலாம். காதின் மென்மையான பகுதியில் மட்டுமே காது குத்துவது சிறந்தது. அதை விடுத்து சாலையில் டிராபிக்கில் மாட்டிக் கொண்ட வாகனங்களைப் போல காது முழுவதும் வரிசையாக காது குத்தி விதவிதமாக கம்மல் போட்டுக் கொள்வது நகைக் கடைக்காரர்களுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம்.. உங்கள் காதுக்கு நல்லதல்ல.
சிலருக்கு இதுபோன்று காதின் குருத்தெலும்பு பகுதியில் காது குத்தி அதன் மூலமாக தொற்று நோய் பரவி ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் காது கண்ணாடி மாட்டக் கூட பயன்படாமல் போய்விடும்.
காதுக்குள் பூச்சி ஏதேனும் போய்விட்டால், உடனே காதை தரையில் படும்படி வைத்துப் படுத்துக் கொண்டால் பூச்சி தானாகவே கீழே இறங்கி அவங்க வூட்டுக்குப் போய்விடும் என்று நினைத்து கொண்டிருக்காமல், உடனடியாக உப்பு கலந்த தண்ணீரை காதுக்குள் ஊற்றி காதுக்குள் இருக்கும் பூச்சியை வெளியேற்ற வேண்டும்.
எப்போதும் காதில் வாக் மேன் அல்லது மொபைலின் ஹேன்ட் ப்ரீ போட்டு பாட்டுக் கேட்பது பார்க்க வேண்டும் என்றால் பந்தாவாக இருக்கும். இப்படியே போனால் பந்தலில் அலறும் பாடல் கூட உங்கள் காது மடலுக்கு எட்டாமல் போய்விடும்.
பிறகு உங்கள் பாடு திண்டாட்டம் தான். உங்களை கண்டபடி திட்ட நினைக்கும் எதிரிகளுக்கோ கொண்டாட்டம் தான். எனவே காதுகளை பாதுகாத்து, கேக்காத காதாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் வசதி
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
உபயோகமான பகிர்வுக்கு நன்றி .
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.