How to Manage your Better half..........!!!!!!

#1
View attachment 69583

சிடுசிடுக்கும் மனைவியைச் சமாளிப்பது எப்படி?

தொழிலாளர் உறவு பற்றிய சொற்பொழிவுக்காக ஒரு அறிஞர் சென்னை வந்திருந்தபோது அதில் கலந்து கொண்ட பல உயர் அதிகாரிகள் தொழிற்சங்கப் பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை போன்ற சப்ஜெக்ட்டுகளில் நிறையக் கேள்விகளை எழுப்பினார்கள்.

அவர் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கெர்ணடே வந்தார் .

கடைசியில் நிகழ்ச்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. எல்லோரும் போய்விட்டனர்.

ஆனால், கறுப்பு கோட்டு அணிந்த ஒருவர் மட்டும் நின்றிருந்தார்,

அந்த இடத்தில் அவரை தவிர வேறு யாருமில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, அவரே பேசத் துவங்கினார்.

சுவாமி... ஐயாயிரம் தொழிலாளர்களையும் ஐந்து தொழிற்சங்கங்களையும் சமாளிக்க வேண்டிய வேலை என்னுடையது.

கான்டீன் சாப்பாட்டில் காரம் அதிகமானாலும் சரி, அல்லது தீபாவளி போனஸில் பர்சன்டேஜ் குறைந்தாலும் சரி“... நான்தான் பிரச்னையை முன் நின்று சமாளிக்க வேண்டும்.

அதனால், முதல் ஆளாக நான்தான் ஆபீஸ் போக வேண்டும்.

பல சமயம் நான் வீடு திரும்ப இரவு பத்து மணி கூட ஆகிவிடுகிறது.

இதனால், வீட்டிலே ஒரே சண்டை... “பெண்டாட்டி, பிள்ளையைக் கவனிக்க முடியாத நீயெல்லாம் ஏன் கல்யாணம் செய்து கொண்டாய்?“ என்று மனைவி திட்டுகிறாள்.

அவளின் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் என்னால் தாங்க முடியவில்லை

நான் கஷ்டப்பட்டு கம்பெனியைத் திறம்பட நடத்தினால் எனக்கு நல்ல பெயர்.

அதிகச் சம்பளம், பதவி உயர்வு கூடுதல் அதிகாரம் எல்லாம் கிடைக்கும்.

இதனால், அவளுக்கும் பெருமைதானே?

ஆனால், இதெல்லாம் அவளுக்குப் புரியவே இல்லை.

நான் அவளை உங்களிடம் அழைத்து வருகிறேன்.

நீங்கள் தான் அவளுக்கு நல்ல புத்தி சொல்ல வேண்டும்...“என்றார்.

அவரிடம் அறிஞர் இப்படிச் சொன்னார்

“ஆபீஸ் ஐந்து மணிக்கு முடிந்தால், கணவர் ஐந்து முப்பதுக்கு வீட்டுக்கு வந்து விடுகிறார்.

வீட்டிலே வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்த வயதிலும் கணவர் என்னையே சுற்றிச் சுற்றி வருவதால் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது, என்று பல பெண்கள் குறைபட்டுக் கொள்வதை நான் பார்த்து இருக்கிறேன்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு மனைவியுமே தன் கணவன் பொழுது விடிந்து பொழுது போகும் வரை தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.

ஒரு மனைவிக்கு வேண்டியது Quality time தானே ஒழிய Quantity time கிடையாது.

நீங்கள் பிஸியான எக்ஸிகியூட்டிவஸ் மனைவியிடம் ஒரு நாளைக்குச் சாப்பிடும்போது பத்தே பத்து நிமிடம்தான் பேச முடியும் என்றால் கூடப் பரவாயில்லை,

ஆனால், அந்தப் பத்து நிமிடத்திலும் ஆபீஸ் பற்றிச் சிந்திக்காமல் கண்களைத் திறந்து மனைவியைப் பாருங்கள்,

பார்ப்பது என்றால் கடனே என்று அல்ல, திருமணம் செய்து கொண்ட புதிதில் உங்கள் மனைவியின் முகத்தை எப்படி ஆவலோடும் ரசனையோடும் பார்த்தீர்களோ அதே மாதிரி மனைவியின் அழகைக் கணவன் ரசிக்கத் தொடங்கிவிட்டால், அங்கே வாய்ச் சண்டைக்கு ஏது இடம்...?

மனைவியின் முகத்தைப் பார்த்து ரசிப்பது மட்டுமல்ல... அவள் வித்தியாசமாகத் தலைசீவியிருந்தால். அது பற்றி பேசுங்கள்,

இட்லி ருசியாக இருந்தால் என் மனைவி கைப்பட்டாலே இட்லிக்குத் தனி
ருசி வந்து விடும்...

என்பது போல வெறும் வாய் வார்த்தையாகவோ வீண் புகழ்ச்சியாகவோ தெரியாதபடி உங்கள் மனைவியின் நல்ல குணங்களை அடையாளம்
கண்டு மனதாரப் பாராட்டுங்கள்.

“கணவன் மனைவிக்கு இடையே கூட இந்த முகஸ்துதி வேண்டுமா...? அப்புறம் அந்த உறவுக்கு என்ன அர்த்தம்...?“ என்று கேட்காதீர்கள்.

இது முகஸ்துதி அல்ல... நிஜ ஸ்துதி.

இறைவனைப் பிரார்த்தனை செய்ய, நாம் சொல்லும் சகஸ்ரநாமத்துக்குக்கூட ஸ்துதி என்றுதான் பெயர்.

இறைவனுக்கே இந்த ஸ்துதி பிடிக்கிறது என்றால், மனிதப் பிறவியான
உங்கள் மனைவிக்கு எப்படிப் பிடிக்காமல் போகும்?.

உங்கள் மனைவி, உங்களோடு சண்டை போடுவதன் முதல் காரணம்...
உங்கள் கவனத்தை தன் பக்கம் இழுப்பது,

நீ எனக்குச் சொந்தம் வேலை, ஆபீஸ் அது இது என்று எதற்கும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன், என நினைக்கிறாள் என்று அர்த்தம்.

இத்தகைய அன்புமிக்க மனைவி கிடைத்ததற்காக, நீங்கள் உண்மையில் பெருமைதான் பட வேண்டும்.

இதையெல்லாம் அந்த கோட் சூட் அணிந்திருந்த உயர் அதிகாரியிடம் சொல்லிவிட்டு கடைசியாக “நான் சொல்லிய வழிமுறைகளைக் கடைபிடியுங்கள்,

இதில் எதுவுமே பலன் கொடுக்க வில்லை என்றால், உங்கள் மனைவி உங்களிடம் சண்டை பிடிக்கும் போது அதையும் ரசிக்க ஆரம்பித்து
விடுங்கள்“ என்றார்

குழப்பத்துடன் சென்ற மானேஜர் ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தார்.

“சுவாமி நீங்கள் சொன்னதெல்லாம் முற்றிலும் உண்மை.

உங்கள் அறிவுரையைக் கடைப்பிடித்ததில் ரொம்ப நளைக்குப் பிறகு
நாங்கள் இரண்டு பேரும் ஒருவர் மேல் இன்னொருவர் வெறுப்பில்லாமல்
மனம் விட்டு பேசிக் கொண்டோம். நன்றி“ என்றார்.

“கணவன் - மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?“ என்பது பற்றி காமசூத்ராவில் வார்ஸ்யாயனர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா...?“

ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை. மற்றும் இருவருக்குமிடையே மலரும் நட்பு என்று ஏன் சொன்னார் என்றால்...

தூய நட்பில்தான் சம்பந்தப்பட்ட இருவரும் சமமாக இருப்பார்கள்.

எந்த ஒருவரும் மற்றவரைவிடத் தான் உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர்
என்று எண்ண மாட்டார்கள்.

ஒருவரை ஒருவர் கவிழ்த்து விடத் திட்டமிட மாட்டார்கள்.

கணவன் - மனைவிக்கிடையே நட்பு மலரும்போது, இருவருமே தங்களின் உறவைப் புனிதமானதாக எண்ணிப் போற்றுவார்கள் காப்பாற்றுவார்கள்.

இதில் கடைசிக் கட்டம் - கருணை கருணையின் மூலாதாரப் பொருள்
மன்னிப்பு.

கணவன் - மனைவி யாராக இருந்தாலும் சின்னச் சின்னத் தவறுகள்
செய்வது இயற்கை...

ஒருவர் செய்யும் தவறை மற்றவர் மன்னிக்கும் நிலைதான் இல்லற
வாழ்வின் இறுதியான உன்னத நிலை.

இந்த நிலையை அடையும் போது தான் கணவன் - மனைவி உறவு
முழுமை பெறுகிறது.
 
sumathisrini

Super Moderator
Staff member
#2
Nice posting Uma.

//ஒரு மனைவிக்கு வேண்டியது
Quality time தானே ஒழிய Quantity time கிடையாது.// - This is 100% correct Uma.

Thanks for sharing dear.

#3
Nice posting Uma.

//ஒரு மனைவிக்கு வேண்டியது
Quality time தானே ஒழிய Quantity time கிடையாது.// - This is 100% correct Uma.

Thanks for sharing dear.

You are welcome dear

yes you are right all we want is quality time only......
 
suganthiramesh

Registered User
Blogger
#4
பார்ப்பது என்றால் கடனே என்று அல்ல, திருமணம் செய்து கொண்ட புதிதில் உங்கள் மனைவியின் முகத்தை எப்படி ஆவலோடும் ரசனையோடும் பார்த்தீர்களோ அதே மாதிரி மனைவியின் அழகைக் கணவன் ரசிக்கத் தொடங்கிவிட்டால், அங்கே வாய்ச் சண்டைக்கு ஏது இடம்...?

Exactly.. rendu perume oruthara oruthar rasika aarambichaa atha vida sweet life irukkave mudiyaathu... but the important point is kalayaanamaana puthusula eppadi paaththeengalo appadi... very nice sharing Uma.. I love to read this..
 
sumitra

Registered User
Blogger
#5
Dear Umaravi, Your post contains such a beautiful lines wherein it is applicable to all of us. Really wonderful way of depicting the minds of housewife so that they will also get sometime to discuss the family problems with their husband. In this fast moving world, the official work even invades to our personal life also because these lap-tops being carried every where in addition to mobile phones. Anyway one has to balance their work life with their family life for an amicable solution for this perennial problem. thanks
 
#6
Uma,

ரொம்ப அழகாகவும் அற்புதமாகவும் இருக்கு உங்க வரிகள்.

மனைவிமார்களும் கவனிக்க வேண்டிய விஷயம் , கணவன் வேலையிலிருந்து வந்த உடனே நச்சு பண்ணாம அவங்க வீட்டோட environment க்கு மாற time கொடுக்கனும்.

அவங்க காரணமே இல்லாம கோபப்பட்டால் பதிலுக்கு நம்மளும் கோபப்படாம அமைதியா Office tension na nu புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும்.

நம்ம லவ்ஸ் 100% express பண்ணணும் time கிடைக்கறப்ப எல்லாம் okவா.

sorry if i told anything wrong.Konjam exp kammi pa marriage life la athan adv sorry booking.

Happy life to all:)
 
#7

Thank you suga

correct pa rendu perum avangalukkune time othukki pesikkitta pothum
veen misunderstanding varave varathu
 
#8
Dear Umaravi, Your post contains such a beautiful lines wherein it is applicable to all of us. Really wonderful way of depicting the minds of housewife so that they will also get sometime to discuss the family problems with their husband. In this fast moving world, the official work even invades to our personal life also because these lap-tops being carried every where in addition to mobile phones. Anyway one has to balance their work life with their family life for an amicable solution for this perennial problem. thanks
Well said sumitra

definitely both husband and wife should balance their time and spend some quality time for themselves
 
#9
Uma,

ரொம்ப அழகாகவும் அற்புதமாகவும் இருக்கு உங்க வரிகள்.

மனைவிமார்களும் கவனிக்க வேண்டிய விஷயம் , கணவன் வேலையிலிருந்து வந்த உடனே நச்சு பண்ணாம அவங்க வீட்டோட environment க்கு மாற time கொடுக்கனும்.

அவங்க காரணமே இல்லாம கோபப்பட்டால் பதிலுக்கு நம்மளும் கோபப்படாம அமைதியா Office tension na nu புரிஞ்சிக்க முயற்சி பண்ணணும்.

நம்ம லவ்ஸ் 100% express பண்ணணும் time கிடைக்கறப்ப எல்லாம் okவா.

sorry if i told anything wrong.Konjam exp kammi pa marriage life la athan adv sorry booking.

Happy life to all:)
Hi Gayathri

Neenga yethuveme wronga sollada dear

remba correct nee sonnathu naama yethu kudukaramo athu paathiyavathu namakku theirupi kedaikumla

if you give your 100% love to your better half ...... kandippa thirumbi athula paathiyavathu varum appudiye ath develop aahi 100% aaharathukku ethana naal venum ??????

nalla karuthu sahre panninathukku thanks pa
 
#10

உங்கள் மனைவி, உங்களோடு சண்டை போடுவதன் முதல் காரணம்...
உங்கள் கவனத்தை தன் பக்கம் இழுப்பது
Hi Uma,
How true these lines are???....

I do this a lot at home....The best part is he understood my stunts and once he is done with his work, he'll say "I'm all Ur's...Ippo sollu unnoda real problem ennanu"....

Indha postla solradhu pola, naan eppadi irupadharkku nee perumai dhan padanumnu Aakash kita solren...hehehe:)

Nice sharing Uma....!!
 
Geetha A

Registered User
Blogger
#14
உமா,
கலக்கிட்டிங்க போங்க. :)
எல்லா பெண்களும் எதிர்பார்ப்பது கணவன் தன் பிரச்சினையை காது கொடுத்து கேட்கனும் என்பதுதான். பெரும்பாலான கணவங்கள் செய்யும் தவறு, அவங்க பாட்டுக்கு பேசிட்டு கெடக்கட்டும்ன்னு,தன்னோட வேலையை பாப்பாங்க. இது எவ்வளவு பாதிக்கும் ஒரு பெண்ணின் உணர்வை. செய்திதாளிலோ அல்லது வேலையிலோ மூழ்கி விட்டால், மனைவி கத்திக் கொண்டிருப்பதை காதில் கூட வாங்க மாட்டாங்க. அதேப்போல பெண்களும் இப்பொழுதெல்லாம் சீரியலில் மூழ்கி விடுவதாக புகார் :(.
இன்னொரு முக்கியமான விஷயம். பகிர்தல்(sharing) என்பது மிகவும் குறைவு. காலையில் மனைவி மட்டும் அடுப்படிக்கும், குழந்தைக்கும் இடையில் திண்டாடிக் கொண்டிருப்பாள். இவர்கள் தனி உலகத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருப்பார்கள்.
உங்களுக்கென்று ஒரு நேரம் ஒதுக்குங்கள். அது உங்களை பல மைல்களுக்கு இட்டுஸ் செல்லும்.
நன்றி!!!!
 
lashmi

Penman of Penmai
Blogger
#20
உங்கள் மனைவி, உங்களோடு சண்டை போடுவதன் முதல் காரணம்...
உங்கள் கவனத்தை தன் பக்கம் இழுப்பது,

நீ எனக்குச் சொந்தம் வேலை, ஆபீஸ் அது இது என்று எதற்கும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன், என நினைக்கிறாள் என்று அர்த்தம்.

uma intha varkal anaithum unmai.............entha oru wife intha ulagamay nallavanu sonnalum than husband enna soldrar apdinthan ethirpaarpa.............avanga namma pathi sollumpothu namm ennomo pravipayana adanjita maathiri thonum..........en lifela intha maathiri niriya nadanthiruku............naney appuram ninachu paarthu siripen...........:rolleyes: