How to Protect Your Children from Child Abuse? - நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட்&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட்ஸ் கைடு

ஐந்து வயது ஷ்ருதி கொஞ்ச நாட்களாக தன் மார்புப் பகுதியை தொட்டுக்கொண்டே இருந்திருக்கிறாள். 'அங்கே கையை வைக்காத’ என அவளது அம்மா அதட்டிய பிறகும், ஷ்ருதிக்கு ஆர்வம் தீரவே இல்லை. ஏன் என அதட்டிக் கேட்டபோது, பக்கத்து வீட்டு அங்கிள் தனக்கு அப்படிச் செய்வதாகச் சொல்லியிருக்கிறாள். அதிர்ந்துபோன அம்மா, அந்தக் குழந்தை பக்கத்து வீட்டுக்குப் போவதை உடனே தடுத்திருக்கிறார். பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தைகள் நெருங்கிய சொந்தங்கள், குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள் மூலமே தொந்தரவுக்கு உள்ளாவதாக வரும் செய்திக்கு ஓர் உதாரணம் இது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், யுனிசெஃப் மற்றும் 'சேவ் தி சில்ரன்’ (SAVE
the Children) இணைந்து நடத்திய ஆய்வு, இந்தியாவில் 53 சதவிகிதக் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. சின்னஞ்சிறிய குழந்தைகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும்போது, அவர்கள் உடல்ரீதியாக, மனரீதியாக பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள்.


குழந்தைகளை இந்த ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது எப்படி?

குழந்தைகளுக்கு எதைச் சொல்லித்தரலாம், எதைச் சொல்லித்தரக் கூடாது? குழந்தைகள் தங்கள் பிரச்னைகளில் இருந்து தாங்களே காப்பாற்றிக்கொள்ள எப்படிச் சொல்லித்தருவது? பெற்றோர்களின் இந்த எல்லாக் கேள்விகளுக்குமான விடைகளை விரிவாகப் பேசுகிறார்கள் 'துளிர் குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும் குணமளிக்கும் மையத்தின்’ திட்ட மேலாளர் நான்ஸி மற்றும் மனநல ஆலோசகர் வாசுகி சிதம்பரம்.

யாரையும் நம்பாதீர்கள்!

படித்தவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், கௌரவமான குடும்பத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள் போன்ற அடையாளங்களை மட்டுமே நம்பி, அவர்கள் மீது அதீத நம்பிக்கைகொள்வது தவறு. நல்லவர், எனக்கு மிகவும் நன்கு தெரிந்தவர், நம்பிக்கையானவர் என்று யாரிடமும் குழந்தைகளை ஒப்படைக்கக் கூடாது. குழந்தைகள் மீதான குற்றங்கள் பற்றிய ஆய்வுகள், 50 சதவிகிதம் குற்றவாளிகள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவரே என மீண்டும் மீண்டும் சொல்கிறது.

குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள்

நேரடியான பாலியல் உறவைத் தாண்டியும் குழந்தைகள் பலவிதங்களில் பாலியல் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அது பல நேரங்களில் பெற்றோருக்குத் தெரியாமலே இருக்கக்கூடும்.அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகளின் அறைக்குள் அத்துமீறி நுழைவது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, சீக்ரெட் கேம் விளையாடலாம் என அழைத்து, இருவருக்குமான விஷயங்களை மற்றவரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது போன்ற அனைத்துமே பாலியல் அத்துமீறல்கள்தான். குழந்தைகளிடம் நெருக்கமாகப் பழகுவோர் அனைவரையும் பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சந்தேகம் இருப்பின், குழந்தைகளிடம் புரியும் வகையில் பேசி, குறிப்பிட்ட அந்த நபர் எப்படிப் பழகுகிறார் எனத் தெரிந்துகொள்ளலாம். பரிசுப் பொருள்களை வாங்கிக்கொடுத்து குழந்தைகளைக் கவருவது, பெற்றோரைவிட அதிக உரிமை எடுப்பது, குழந்தைகளை விளையாடவிடாமல் தனிமைப்படுத்துவது, குழந்தைகளைக் குற்றவாளிகள் எனப் பட்டம்கட்டி பெற்றோரிடம், 'நான் உங்கள் குழந்தையைத் திருத்துகிறேன்’ என்று நடிப்பதுபோன்ற செயல்களைச் செய்பவரிடம் கவனத்துடன் இருங்கள்.


 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
re: How to Protect Your Children from Child Abuse? - நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட&#30

குழந்தைகளிடம் ஏற்படும் மாற்றங்கள்

விரல் சூப்புதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், தனிமையில் இருத்தல், பாலியலில் ஆர்வம் காண்பித்தல், படிக்க மற்றும் விளையாட முடியாமல் தவித்தல், புதிய நபர்களுடன் சேர்தல், கவனமின்மை, வன்மை குணத்துடன் காணப்படுதல் என குழந்தைகளின் போக்கில் மாற்றம் இருந்தால், அவர்களைக் கண்காணித்து என்ன பிரச்னை என்று கேளுங்கள். தயங்கினாலும் அன்பாகப் பேசி உண்மையைக் கேட்டறியுங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் மற்றும் உடல் சார்ந்த வன்முறைகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து பாதிப்பில் இருந்து காப்பாற்ற முடியும்.

நேரம் ஒதுக்குங்கள்!

குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழியுங்கள். தவிர்க்க முடியாமல் வெளியாட்களிடம் குழந்தைகளை விடும்போது நூறு மடங்கு கவனத்துடன் இருக்க வேண்டும்.

பாலியல் கல்வி

பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் பாலியல் விழிப்பு உணர்வை சொல்லித்தரலாம். கார்ட்டூன் படங்களின் மூலமாகவோ, புத்தகங்களின் மூலமாகவோ இதைச் சொல்லித்தரலாம். ''இந்த அங்கிள்கூட போ, அந்த ஆன்ட்டி சாக்லெட் வாங்கித் தருவாங்க'' என கட்டாயப்படுத்தி, குழந்தையை யாருடனும் அனுப்புதல் கூடாது. சாக்லெட் தந்தா போகலாம் என்றோ, இந்த அங்கிள் கூப்பிட்டு போகலைன்னா அம்மா திட்டுவாங்க என்றோ அந்தக் குழந்தை நினைக்க வாய்ப்பு இருக்கிறது.

சேஃப் டச்! அன் சேஃப் டச்!

குழந்தைக்கு அதன் உடல் மீது பிறர் எங்கெல்லாம் தொடலாம், எங்கெல்லாம் தொடக்கூடாது என்பதைப் புரியவையுங்கள். பாதுகாப்பான தொடுதல் (Safe Touch), பாதுகாப்பற்ற தொடுதல் (UnSafe Touch) இவற்றைச் சொல்லித்தருவது அவசியம். மறைவிட உறுப்புகளைச் சுத்தமாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பெற்றோர் மற்றும் மருத்துவர் தொடலாம். மற்றபடி கைகுலுக்குவது, கன்னம், தலை ஆகிய உறுப்புக்களைத் தொடுவது மட்டுமே சேஃப் டச்.


பாதுகாப்பான தொடுதலைத் தவிர வேறு காரணங்களுக்குத் மறைவிடங்களை தொடுவது சரியல்ல என்று புரியவையுங்கள். தொடுதலில் அசௌகரியமாக உணர்ந்தால், குழந்தை அதைத் தடுக்கும் வகையில் சொல்லித்தர வேண்டும். பொதுவாகப் பாலியல் கொடுமைகள் மறைவான இடத்தில் நடக்கும். தவறாக எவரேனும் நடந்துகொண்டால், உடனே சத்தம் போடு, கத்து எனச் சொல்லித்தரலாம். உன் உடல் உனக்கு மட்டும்தான் சொந்தம்.

எந்த வழியிலும் காயப்படுத்த, மற்றவருக்கு உரிமை இல்லை, என்பதை ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் ஆழப் பதியவைக்க வேண்டும். சிலர் பரிசு, காசு, இனிப்பு கொடுத்து ஏமாற்றி, அவர்கள் சொல்கிறபடி நடக்கவைப்பார்கள். அப்போது சங்கடமான, குழப்பமான, பாதுகாப்பு இல்லாத மாதிரி உணர்ந்தால், அவர்கள் சொல்வதைச் செய்யக் கூடாது. அவர்கள் கொடுப்பதையும் வாங்கக் கூடாது என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லித்தர வேண்டும்.
சுற்றியிருப்பவர்கள் மீது அவநம்பிக்கை வரும் விதத்தில் இல்லாமல், பாசிட்டிவாக, எதார்த்தமாக இவற்றைச் சொல்லித் தர வேண்டும்.
 
Last edited:

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#3
re: How to Protect Your Children from Child Abuse? - நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட&#30

குழந்தைகளை நம்புங்கள், பழிக்காதீர்கள்!

குழந்தைகள் என்ன பேசினாலும், பொறுமையோடு கேட்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படிக் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால், பதறாமல், அழாமல், திட்டாமல் பொறுமையாக அணுக வேண்டும். அந்தப் பிரச்னைக்குரிய நபரிடம் இருந்து குழந்தையை விலக்கும் அதே நேரத்தில், ''இது உனக்கு மட்டும் நடந்ததல்ல, மற்ற குழந்தைகளுக்கும் இப்படி நடந்திருக்கக்கூடும்'' எனக் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும்.

உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 'நீ ஏன் அங்கு போனாய், உன்னை யார் அவரிடம் விளையாடச் சொன்னது’ என்று காயப்படுத்தக் கூடாது. இதனால் தன் நிலையைப் புரிந்துகொள்ள எவரும் இல்லை என்று குழந்தை தனிமையைத் தேடத் தொடங்கும்.


எப்படி அணுகுவது?

ஆணுக்குப் பெண்ணின் மீதும், பெண்ணுக்கு ஆணின் மீதும் இயல்பாகவே ஈர்ப்பு இருக்கும். எனவே, ஆண் குழந்தைக்குப் பெண் குழந்தையை எப்படி அணுக வேண்டும் என்றும், பெண் குழந்தைக்கு ஆண் குழந்தையை எப்படி அணுக வேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள். ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளிடமோ, பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளிடமோ பேசவே கூடாது என்று சொல்லித்தரக் கூடாது. தோழமையோடு குழந்தைகள் வளர ஊக்கப்படுத்த வேண்டும்.

'வளர்ப்பில் கவனமாக இருந்தால், எந்தப் பிரச்னையையும் துணிந்து எதிர்கொள்ளும் திறன் குழந்தைகளிடம் மேம்படும் என்கிறார் 'சக்தி விடியல்
அமைப்பின்’ செயல் இயக்குநர் ஜிம் ஜேசுதாஸ்


''இருபாலினரையும் ஒன்றாகவே விளையாட அனுமதிக்கலாம், தவறு இல்லை. ஆனால் பழகுவதில் வரம்புகளைக் கற்றுத்தருவது அவசியம். வளர் இளம் பருவத்தில் வரும் மாற்றங்கள் இயல்பானவையே. பசி, தூக்கம் போல பாலுணர்வும் ஓர் இயற்கைத் தேவைதான். ஆனால் 18 வயதுக்கு முன்பு, செயல்படுத்த விரும்புவது தவறு.

சூழ்நிலையாலோ, தனிநபரின் விருப்பத்தாலோ, வலுக்கட்டாயப்படுத்தியோ, வன்முறை உணர்வுடனோ நடக்கக்கூடாது எனத் தெளிவாகப் புரியவையுங்கள். குழந்தைகளை சமூக வலைதளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

சினிமாக்களில் வரும் காட்சிகளை வைத்து, குழந்தை கேள்வி கேட்டால், தெளிவாகச் சரியான விடையை அளியுங்கள். சமாளிப்பதற்காக எதாவது பதில் சொல்ல வேண்டாம். சம உரிமை கொடுத்து குழந்தையின் விருப்பத்துக்கேற்பப் படிக்கவும், விளையாடவும் விடுங்கள்.

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அறிவுரைகள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எனச் சொல்லிக்கொடுக்காமல், தகுதி, ஆற்றல், எண்ணம், திறமை, உணர்வு, வலி, விருப்பம் ஆகியவை இருவருக்குமான உரிமைகள் என்பதை உணரச் செய்யலாம்.'

இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படும் இலவச தொலைபேசி சைல்டு ஹெல்ப் லைன் 1098மனநல மருத்துவர் கார்த்திகேயன்,
மீனாட்ஷி மிஷன், மதுரை

பாலியல் தொல்லைக்கு ஆட்படும் குழந்தை மனதளவிலும், உடல்ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கும். இந்தப் பாதிப்புகள் குழந்தையின் வயதுக்கேற்ப மாறுபடும். பெற்றோர் இதைக் கண்டுபிடிப்பது சற்று கடினம்தான். அம்மா அருகிலே எப்போதும் இருக்க வேண்டும் என நினைக்கும் குழந்தை, சிலமுறை தனிமையை விரும்பத் தொடங்கும். இந்தக் குழந்தையைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

சில குழந்தைகள் திடீரென ஆண்கள் அருகில் உட்கார விருப்பம் காண்பிக்கலாம். பழக்கம் இல்லாதவர்கள் மடியில் உட்காரவும் செய்யலாம். பொதுவாகப் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் குழந்தைகள், என்னவென்றே புரியாத மனநிலையில் குழம்பித் தவிப்பர். தன்னைப் பிறர் கவனிக்கவேண்டும் எனச் சில
செய்கைகளையும் செய்யத் தொடங்குவர்

.


சில குழந்தைகள் தங்களது உடலையும், பாலியல் உறுப்புகளையும் பாதுகாக்கும் நோக்கத்தோடு, இரண்டு கைகளையும் அணைத்தவாறு பயத்துடன் காணப்படுவர். மனப்பதற்றம், அடிக்கடி அழுதல், சாப்பிடாமல் இருத்தல் போன்ற மாற்றங்களையும் இந்தக் குழந்தைகளிடம் பார்க்கலாம்.

உடல்ரீதியாக வயிற்றுவலி, தலைவலி, வாந்தி போன்ற உபாதைகள்கூட சில குழந்தைகளுக்கு வரும். அந்தரங்க உறுப்புகளைத் தேய்த்துக்கொள்ளுவது, அவ்வப்போது அங்கு கை வைப்பது போன்ற பழக்கத்தை, குழந்தை திடீரென ஆரம்பித்தால் எச்சரிக்கை தேவை. அந்தரங்க உறுப்பில் எரிச்சல் உணர்வு, வலி போன்ற பிரச்னைகளாலும் அவதிப்படுவதாக குழந்தை சொன்னால், உடனே அவர்களைக் கவனியுங்கள். அமைதியாக உட்கார்ந்து பேசி, பிரச்னையைப் புரிந்துகொள்ளலாம்.

 
Last edited:

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#4
re: How to Protect Your Children from Child Abuse? - நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட&#30

very good info chan.
 

PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,893
Location
London
#5
re: How to Protect Your Children from Child Abuse? - நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட&#30

Thanks Chan... Every parent should read this...
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#6
Re: How to Protect Your Children from Child Abuse? - நம் குழந்தைகள் காப்போம்! பேரன்ட&#30

Very very useful and necessary sharing for today's children and parents.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.