How to protect your teeth and gums - பல் ஈறுகளை பராமரிப்பது எப்படி?

lali

Commander's of Penmai
Moderator
Joined
Aug 13, 2011
Messages
1,644
Likes
3,943
Location
villupuram
#1
பல் ஈறுகளை பராமரிப்பது எப்படி?
காலை, இரவு இருவேளையும் பல் துலக்க வேண்டும்.
இரவில் வாய்மூடி உறங்கும்போது வாய்க்குழியில் ஆக்சிஜன் இருப்பு குறைந்துவிடும். அந்த இடத்தில் அனரோபிக் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக இருக்கும். பல் மற்றும் ஈறு இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகள்களில் செயல்படும் இந்த வகை பாக்டீரியாவால், ஈறுகள் சீக்கிரத்திலேயே சீரழிந்துவிடும். ஒவ்வொரு முறை திடமான மற்றும் திரவமான உணவுகளை சாப்பிட்டவுடன், வாய்க் கொப்பளிப்பது அவசியம்.

உணவுத் துகள்கள் சிக்கிக்கொண்டால், கையில் கிடைத்த குச்சியை வைத்து சிலர் பல், ஈறுகளை பாடாய்ப் படுத்தி விடுவார்கள். அவசியமெனில், இதற்கென பிரத்யேகமாக இருக்கும் நூல் போன்ற டென்டல் ஃபிளாஸ் ( ) கொண்டு எளிமையாக பல் இடுக்குகளை தூய்மைப்படுத்தலாம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று பல், ஈறு, வாய் இவற்றை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

கர்ப்பிணிகளின் கவனத்துக்கு -

நாக்கை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு நாக்கில் எதாவது படிமானம் தேங்கி இருந்தால், அவர்கள் உட்கொள்ளும் இரும்புச் சத்து மருந்துகள் இந்தப் படிமானத்தின் தடிமனை மேலும் அதிகரிக்கச் செய்து, நாக்கின் மேல் பகுதியை கிருமிகளுக்குப் புகலிடமாக்கிவிடும்.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் சொத்தைப் பல் எடுப்பது கூடவே கூடாது.

source:facebook
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.