How to Stop the Breast milk production?-தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா? இதை முயற்சி செய்யுங்களேன்!

பிறந்த குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால்தான். குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் தாய்பாலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். குழந்தைகளுக்கு பல் முளைத்த பின்பும் தாய்ப்பால் கொடுப்பது சற்று அசவுகரியங்களை ஏற்படுத்தும். எனவே தாய்ப்பாலை நிறுத்துவதற்கு முன்னதாக குழந்தைகளுக்கு அதற்கு நிகரான சத்தான உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும். தாய்ப்பாலை நிறுத்துவது சாதாரண காரியமல்ல. வலி நிறைந்த நிகழ்வு அது. குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும். எனவே படிப்படியாகத்தான் வற்ற வைக்கவேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடுவதை விட வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தாய்பாலை வற்றச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.

மல்லிகைப்பூ, வேப்பிலை

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், மார்பகங்களில் மல்லிகைப் பூவை அரைத்து பற்றுப் போட்டால் அதன் வாசனைக்கு மார்பில் பால் சுரப்பது கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். படிப்படியாக பால் சுரப்பது நிற்பதுடன் வலியம் குணமாகும்.

முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.

துவரம்பருப்பு

குழந்தைக்கு கொடுக்கா விட்டால் பால் சுரந்து அதிகமாக மார்பில் கட்டிக்கொள்ளும். இதனால் வலி அதிகரித்து காய்ச்சலை ஏற்படுத்திவிடும். அந்த நேரத்தில் துவரம் பருப்பை ஊறவைத்து அதனை கெட்டியாக அரைத்து மார்பில் பற்றுப் போடவேண்டும். நன்றாக உலந்து இறுக ஆரம்பித்த உடன் கட்டியிருக்கும் பால் வடிய ஆரம்பித்துவிடும்.

அதேபோல் வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும். வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் கட்டாமல் வடிந்து விடும்.

ஐஸ் கியூப் ஒத்தடம்
டைட்டான பிரா போட்டால் மார்பில் பால் சுரக்காது எனவே மார்பகத்தை லூசாக விடாமல் காட்டன் ப்ரா போட்டு மார்பகத்தை டைட்டாக வைக்கலாம். பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி ஏற்பட்டால் ஐஸ் கியூப்களை பேக்கில் போட்டு ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் பால் கட்டியிருந்தால் படிப்படியாக கரையும் வலியும் குறையும்.
 

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#2
பால் சுரப்பை நிறுத்துவது எப்படி?


குழந்தை பிறந்து 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் தாய்ப்பால் சுரப்பு நிற்கவில்லை. மருந்து மாத்திரைகள்மூலம் நிறுத்த முடியுமா? மல்லிகைப்பூ வைத்தியமெல்லாம் தீர்வு தருமா?



ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் நிர்மலா சதாசிவம்... பாலூட்டும் தாய்மார்களுக்குபுரோலாக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் சுரப்பு இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஹார்மோன் கொஞ்சம்கொஞ்சமாக சுரப்பதை நிறுத்தும். ஆனால், பால் ெகாடுப்பதை நிறுத்திய உடனே பால் சுரப்பது நிற்காது. தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகு3 - 6 மாதங்கள் வரை தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அது இயல்புதான். பிரச்னை ஒன்றுமில்லை.

பொதுவாக குழந்தைக்கு ஒன்றுஅல்லது ஒன்றரை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம். அதற்குப் பிறகு பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளை குழந்தை
களுக்கும் கொடுக்கலாம்.

அதனால்அவர்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் இருக்காது. ஒரு சிலர் குழந்தைகளுக்கு இரண்டு வயதாகும் வரை பால் கொடுப்பதுண்டு. ஒருவேளை ஒன்றே முக்கால் அல்லது ஒரு வயதாகி 10 மாதங்கள் வரை பால் கொடுத்து விட்டு நிறுத்தி இருந்தால், குழந்தைக்கு 2 வயதாகும் வரை பால் சுரப்பதுண்டு. அதிலும் தவறில்லை. அது தானாகவே சில நாட்களில் குறைந்து விடும்.

அரிதாக ஒரு சிலருக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி பல ஆண்டுகளுக்குப் பின்னரும் பால் சுரப்பு இருக்கும். இதனை Galactorrhoea என்பார்கள். இது ஹார்மோன் பிரச்னை. அதாவது, புரோலாக்டின் ஹார்மோன், தைராய்டு ஹார்மோன், பிட்யூட்டரி ஹார்மோன் போன்ற ஹார்மோன்சுரப்புகளில் ஏதேனும் பிரச்னைஏற்பட்டால் தாய்ப்பால் நிறுத்திய பல வருடங்களுக்குப் பிறகும் சிலருக்கு இப்படி ஏற்படும். ஹார்மோன்களில் ஏற்படும் பிரச்னையைத் தவிர்த்து வேறு காரணங்களால் இப்பிரச்னை ஏற்படாது.

புரோலாக்டின் ஹார்மோன் மற்றும் தைராய்டு ஹார்மோன் பிரச்னை குறைபாடுகளுக்கு மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இந்தப் பிரச்னையை குணப்படுத்திவிட முடியும். பிட்யூட்டரி ஹார்மோன் சுரப்பதில் பிரச்னை இருந்தாலும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வேளை பிட்யூட்டரியில் கட்டி இருந்தால் அறுவைசிகிச்சை மூலம்தான் சரி செய்ய முடியும். இது மூளை வழியாக சிறுதுளை மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை.

ஒரு சிலர் பால் சுரப்பதை நிறுத்துவதற்காக மல்லிகைப் பூக்களை மார்பகத்தின் மீது சுற்றிக் கட்டிக்கொள்வார்கள். மல்லிகைப் பூவில் இருக்கும் ஒரு ரசாயனத்துக்கு ஓரளவு பால் சுரப்பைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. இதனால் பாதிப்போ, பக்க விளைவுகளோ இல்லை. பலனும் அதிகமாக இருக்காது. சுரப்பு குறைவாக இருக்கும் போது இம்முறையை பயன்படுத்தலாம்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.