How to take care of 2-3 months baby?-குழந்தை பிறந்த 2-3 மாதங்களில் பராமரி&#2

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
குழந்தை பிறந்த 2-3 மாதங்களில் பராமரிப்பு

டாக்டர் என். கங்கா

என்னம்மா கண்ணு! குழந்தைக்கு 30 நாட்கள் ஆகிவிட்டதா? அம்மா, பாப்பா, இரண்டு பேரும் கொஞ்சம் செட்டில் ஆகி இருப்பீர்கள் அல்லவா? அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே ஒரு புரிதல், பாசப் பிணைப்பு ஏற்பட்டு இருக்கும்! குழந்தையை எப்படி தூக்குவது, எப்படி தலையைத் தாங்கிப் பிடிப்பது, பாலூட்டும் பொசிஷன் என்ன என்று புரியாமல் விழித்து, பயந்து வியந்து நின்ற தாய் இப்போது தைரியமாகக் குழந்தையைக் கையாள ஆரம்பித்துவிடுவாள். இது இயற்கையின் வரம்! குழந்தையின் அழுகை சிறிது குறையும்! தூங்கும் நேரம் கொஞ்சம் பழகியிருக்கும். பயம் கொஞ்சம் குறைந்து அம்மா குழந்தையை ரசிக்க, அனுபவிக்க தொடங்கி இருப்பாள்!

குழந்தையை 30 நாட்களுக்குப் பிறகு தினமும் குளிக்க வைக்கலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் இருமுறை தலை குளிக்க வைக்கலாம். இந்த அட்வைஸ் மழை பனிக் காலங்களில் சிறிது மாறுபடும்.

தலைக்கு எண்ணை தேய்த்து கடலை மாவு, பயத்தம் மாவு போட்டுக் குளிக்க வைப்பது கூடாது. மாலை வேளைகளில் தலைக்கு தேங்காய் எண்ணெய்த் தடவலாம். உடம்புக்குப் போடும் சோப் அல்லது காரத்தன்மை குறைவாக உள்ள ஷாம்பு போட்டுக் குளிக்க வைக்கலாம். சாம்பிராணி போடக் கூடாது. பவுடர் அதிகம் பயன்படுத்தக் கூடாது. நாடா அல்லது முன்புறம் velero வைத்து லூசான காட்டன் சட்டை போடலாம்.

டயபர் பயன்படுத்துவதால் பிரச்னைதான். ஈரம் உறிஞ்சப்பட்டு அந்த ஈரம் பிறப்பு உறுப்பு பகுதியில் அதிக நேரம் இருப்பதால் அந்தப் பகுதியில் முக்கியமாக பெண் குழந்தைக்கு கிருமி, பூசணத்தொற்று (bacterial, fungal infection) ஏற்பட வாய்ப்பு உண்டு.

டயபர் போட்டால் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்குப் பிரித்துப் பார்த்து சுத்தம் செய்து 30-45 நிமிடங்கள் பிறப்பு உறுப்புப் பகுதியைக் காற்றாட திறந்து வைத்திருக்க வேண்டும். மறுபடி 2 மணி நேரம் போடலாம்! இது பிராக்டிகலாக முடியாதே! இரவில் டயபர் போட்டாலும் இதே அறிவுரை தான். சுத்தமான காட்டன் துணியை முக்கோணமாக மடித்து லூசாகக் கட்டிப் பயன்படுத்துவதுதான் குழந்தைக்குச் சிறந்தது. அம்மாவுக்குக் கொஞ்சம் சிரமம்தான்.

குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் தர வேண்டும். இரவில் குறைந்தது இரண்டுமுறையாவது பாலூட்ட வேண்டும். பகலில் ஆறு முறையும் இரவில் இரண்டு முறையும் தொடர்ந்து தாய்ப்பால் மட்டும் ஊட்டி வந்தால் தாய் கருத்தரிப்பு தடுக்கப்படும் வாய்ப்பு உண்டு.

குழந்தையுடன் நிறைய பேச வேண்டும். இவ்வளவு சின்ன குட்டிப் பயலுக்கு புரியுமா என்று நினைக்க வேண்டாம். வாயை நன்குத் திறந்து முக பாவனைகளைக் காட்டி மெல்லிய குரலில் பேச வேண்டும். கண் மற்றும் முக அசைவுகளைக் குழந்தை மெதுவாக கவனிக்க ஆரம்பிக்கும்.

எங்கோயோ பார்த்து சிரிக்கும் பாப்பா 60 நாட்கள் முடிந்தவுடன் நம் கண்ணோடு கண் பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிடும். Social smile எனப்படும் இதுதான் குழந்தையின் முதல் வளர்ச்சிப்படி! இதுதான் முதல் inter personal communication! வளர்ச்சிப் பாதையில் அடுத்து அடுத்துப் பல வளர்ச்சிப் படிகள் (milestones of development) வந்தாலும் முதல் படி சிரிப்பு! பேசும் போது கண்ணோடு கண் பார்த்து கதைப்பது நல்லது.

Communication and language skill! 60 நாட்கள் என்பது திட்டவட்டமானது. அல்லது 3 மாதங்கள் முடிவதற்குள் நன்கு உற்று பார்த்து குட்டிப்பாப்பா சிரிக்க வேண்டும். இல்லாவிட்டால் மூளை வளர்ச்சி பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதன் பிறகு அடுத்தபடி அம்மாவை அடையாளம் காண்பது Mothers recognition! இதுவரை யார் தூக்கினாலும் சிரிக்கும் பாப்பா அம்மாவுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் புன்னகை விடும் பாருங்கள்! இதை அம்மா கட்டாயம் அனுபவிக்க வேண்டும்.

இந்த சுவாரஸ்யத்தை ஆயாவிடம் அல்லது மற்ற உறவினர்களுக்குத் தந்துவிடாதீர்கள்! விட்டுவிட்டால் திரும்பக் கிடைக்காத உள்ளார்ந்த அனுபவம் இது! தாய்மைக்கு குழந்தை தரும் மகுடம் இந்த mother recognition. இது குழந்தையின் Cognitive / adoptive என்ற வளர்ச்சியின் முதல் படி.

பாப்பாவின் எடை மெதுவாக அதிகரிக்கும். மாதம் 500 கிராம் ஏறிவரும். கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். குழந்தை பிறந்த 45 நாட்கள் ஆனவுடன் முத்தடுப்பு ஊசி, போலியோ சொட்டு மருந்து (முதல் தவணை) தரப்பட வேண்டும்.


தொடர்புக்கு - டாக்டர் என். கங்கா : 9443123313

 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#2
Re: How to take care of 2-3 months baby?-குழந்தை பிறந்த 2-3 மாதங்களில் பராமர&#3007

Thanks for the tips.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
Re: How to take care of 2-3 months baby?-குழந்தை பிறந்த 2-3 மாதங்களில் பராமர&#3007

Useful guidance Lakshmi, thanks much for sharing.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.